Gcsekaran
சேலம் மாவட்டத்தில் பிறந்த இவர் விலங்கியல் துறையில் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றியவர். பின்னர் கணினி மற்றும் இணையத்தின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டி காரணமாக தம்மை முழுமையாக இணையதள வடிவமைப்பில் ஈடுபடுத்திக் கொண்டவர். 2001 ஆம் ஆண்டில் இவர் துவங்கிய 'சென்னைநெட்வொர்க்.காம்' (www.chennainetwork.com) இணையதளம் இன்று வரை தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 2006ல் இவர் துவங்கிய 'சென்னைநூலகம்.காம்' (www.chennailibrary.com) இணையதளம் இன்று உலகின் முன்னணி இணைய தமிழ் நூலகமாக விளங்குகிறது. தற்சமயம் 9 இணையதளங்களை சொந்தமாக நடத்தி வருகிறார். மேலும் பல்வேறு இணையதளங்களை வடிவமைத்தும் பராமரித்தும் வருகிறார். 2003 ஆம் ஆண்டு முதல் தமிழ் நூல்களை மின்னூல்களாக குறுந்தகடுகளிலும் வெளியிட்டு வருகிறார். இவர் வெளியிட்ட 'அமரர் கல்கியின் படைப்புக்கள்', 'புதுமைப்பித்தன் சிறுகதைகள்', 'தமிழ் புதினங்கள்-1', 'கம்பராமாயணம்' போன்றவை இன்னும் விற்பனையில் முன்னிலை வகிக்கின்றன. 2009 ஆம் ஆண்டு முதல் கௌதம் பதிப்பகத்தை (www.gowthampathippagam.com) துவங்கிய இவர் 'இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?', 'பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?', 'உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்' 'நிஜமாகா நிழல்கள்’ என்ற நான்கு நூல்களையும் எழுதியுள்ளார்.