வற்றாப்பளை மகா வித்தியாலயம்
வற்றாப்பளை மகா வித்தியாலயம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. தமிழ் வழிக் கல்வி வழங்கும் மாகாண மட்டப் பாடசாலையான இது இரு பாலாரும் கல்வி பயிலுகின்ற கலவன் பாடசாலை ஆகும். முல்லைத்தீவு கல்வி வலயத்தின் கரைதுறைப்பற்றுக் கல்விப் பிரிவின் கீழ் இயங்கும் இப்பாடசாலை இலங்கையின் பாடசாலைகளுக்கான தர வகைப்பாட்டில் "1C" வகைக்குள் அடங்குகிறது. கலைத்துறையிலும், வணிகத்துறையிலும் க. பொ. த (உயர்தரம்) வகுப்புக்கள் வரையான கல்வியை இப்பாடசாலையில் பெற்றுக்கொள்ளலாம் என்பதை இது குறிக்கிறது.
2005ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 725 மாணவர்கள் இப்பாடசாலையில் கல்வி கற்றனர். இதன் பின்னர் உள்நாட்டுப் போர் இப்பகுதிகளில் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து மணவர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது. ஆசிரியர் பற்றாக்குறையும் ஏற்பட்டது. 2010 ஆம் ஆண்டின் நிலவரப்படி இங்கு பயிலும் மாணவர்கள் தொகை 354 ஆக இருந்தது. அதே வேளை அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் எண்ணிக்கை 42 ஆக இருக்க 2010ல் 29 ஆசிரியர்களே அங்கு பணியாற்றினர்.[1]
குறிப்புகள்
தொகு- ↑ Schools Basic Data as at 01.10.2010, பக். 41
வெளியிணைப்புக்கள்
தொகு- Schools Basic Data as at 01.10.2010. வட மாகாண சபை. 2010. Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2014-05-27.