பயனர் பேச்சு:உமாபதி/பரண் 1

வாருங்கள்!

வாருங்கள், உமாபதி, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Sundar \பேச்சு 06:38, 8 ஆகஸ்ட் 2005 (UTC)

பாராட்டு

தொகு

நகர்பேசி - கட்டுரையை நீங்கள் தொடர்ந்து மேம்படுத்தி வருவதைக் கண்டு மகிழ்ச்சி. மிக்க பாராட்டுக்கள். -- Sundar \பேச்சு 04:55, 22 ஆகஸ்ட் 2005 (UTC)

மீண்டும் வருக உமாபதி. உங்கள் பங்களிப்புகள் விக்கிப்பீடியாவிற்கு மிகவும் அவசியம். -- Sundar \பேச்சு 08:56, 3 செப்டெம்பர் 2005 (UTC)Reply
தொடர்ந்து நகர்பேசி மற்றும் தகவல் பறிமாற்றம் தொடர்புடைய கட்டுரைகளை உருவாக்கி மேம்படுத்தி வருவது கண்டு மகிழ்ச்சி. நன்றி. -- Sundar \பேச்சு 07:17, 26 நவம்பர் 2005 (UTC)Reply
தொழில்நுட்பம் குறித்த தங்கள் பங்களிப்புகள் கண்டு மகிழ்ந்தேன். மென்மேலும் தங்கள் பணி தொடரட்டும். -- சிவகுமார் 15:37, 7 டிசம்பர் 2005 (UTC)
மாற்றங்களை உடனே செயற்படுத்தியதற்கு நன்றி. மேலும் நீங்கள் அவர்களே என்று அழைக்காமல் பெயரிட்டே அழையுங்கள். -- சிவகுமார் 14:27, 17 டிசம்பர் 2005 (UTC)
சிவகுமார், இனி விக்கிப்பீடியர்களை பெயரிட்டே அழைக்கின்றேன். எனது கட்டுரைகளிற்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் அனைவர்க்கும் நன்றி--உமாபதி 06:42, 20 டிசம்பர் 2005 (UTC)

Sri Lanka National Anthem - Tamil

தொகு

Hello

Do you know who wrote the Sri Lankan National Anthem in Tamil?? If you do can you please update "ஸ்ரீ லங்கா தாயே" page. Thanks - Suren

Hi, Please visit http://david.national-anthems.net/lk.htm . I am sorry I don't know who wrote or interpret the Tamil version of Sri Lankan National Anthem --உமாபதி 06:36, 20 டிசம்பர் 2005 (UTC)

Hi - i'm not sure if you are commons:User:Umapathy, but as you have apperently added this image to Wikipedia:Font help, so... please have a look at commons:Template:Deletion requests#Image:Tamil Wikipedia Before Installing Indic Support Windows2000.JPG, this image is being considered for deletion.

Regards, -- commons:User:duesentrieb 13:11, 10 பெப்ரவரி 2006 (UTC)

Please respond Umapathy. Thanks. -- Sundar \பேச்சு 05:12, 13 பெப்ரவரி 2006 (UTC)
Sorry. I just notice that you've already responded. Can you please have only non-proprietary sites open in the tabs/windows while taking the screenshot? e.g., http://cpan.org, http://wikipedia.org -- Sundar \பேச்சு 05:16, 13 பெப்ரவரி 2006 (UTC)

நன்றி

தொகு

அண்மையில் நீங்கள் எழுதிவரும் தலைப்புக்கள் (உ+ம்: மிதிவெடி, உலக உணவு திட்டம்) கனம் வாய்ந்தவை. மிக்க நன்றி. --Natkeeran 19:26, 17 மார்ச் 2006 (UTC)

நன்றி நற்கீரன், விக்கிப்பீடியாவில் பங்களிப்புக்கள் மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் வண்ணம் என் பங்களிப்புத் தொடரும். --உமாபதி 17:33, 18 மார்ச் 2006 (UTC)

வாழ்த்துக்கள்

தொகு

கணனி தொடர்பான கட்டுரைகளில் உங்கள் பங்களிப்புக்கு நன்றிகள். மேலும் பங்களிக்க வாழ்த்துக்கள்.--ஜெ.மயூரேசன் 10:58, 25 மார்ச் 2006 (UTC)

ஜெ.மயூரேசன் தங்கள் ஆதரவிற்கு நன்றி, தொடர்ந்து கணினி பற்றிய கட்டுரைகளை எழுத இருக்கின்றேன். --உமாபதி 16:03, 25 மார்ச் 2006 (UTC)

நிர்வாகி பொறுப்பு

தொகு

உமாபதி, உங்களின் தொடர் பங்களிப்பு, ஈடுபாடு, பிற விக்கி திட்டங்களுடனான தொடர்பு, ஈடுபாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு உங்களை நிர்வாகியாக ஆக்கும்படி பருந்திரைக்கலாம் என்று கருதுகின்றேன். நிர்வாகி ஆவதன் மூலம் தொகுத்தல், தள பராமரித்தல் போன்ற பொறுப்புக்களை செய்ய ஏதூவாக இருக்கும். இவ் வேண்டுகோளை நீங்கள் ஏற்று கொள்கின்றீர்களா? --Natkeeran 17:15, 25 மார்ச் 2006 (UTC)

Natkeeran, எனக்கு விருப்பமே மற்றவர்களும் சரியென்றால் நான் முயன்று பார்க்கின்றேன்.--உமாபதி 17:44, 25 மார்ச் 2006 (UTC)
நன்றி உமாபதி. மயூரநாதனிடமும், சுந்தரிடமும் எனது பரிந்துரையை முன்வைக்கின்றேன். அதன் பின்னர் பிற பயனர்கள் தங்கள் ஆதரவு/எதிப்பு/கருத்து முன்வைக்க ஒரு வாரம் காலம் இருக்கும் என்று நினைக்கின்றேன். --Natkeeran 18:11, 25 மார்ச் 2006 (UTC)

உமாபதி, நீங்கள் Wikipedia:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும். Mayooranathan 15:12, 26 மார்ச் 2006 (UTC)

நன்றி Mayooranathan, Wikipedia:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் என்விருப்பதைத் தெரிவித்துள்ளேன். ஏதேனும் பிழைகள் இருப்பின் தெரிவிக்கவும்--உமாபதி 18:42, 26 மார்ச் 2006 (UTC)

நிர்வாகி தரத்துக்கான அணுக்கம்

தொகு

உமாபதி, உங்களுக்கு நிர்வாகி தரத்துக்கான அணுக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது இங்கே உங்களது செயற்பாடுகளுக்கு உரமூட்டுவதாக அமையும் என்பது எனது நம்பிக்கை. தொடர்ந்தும் சிறப்பாகச் செயற்பட்டுத் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவுங்கள். வாழ்த்துக்கள். Mayooranathan 17:33, 1 ஏப்ரல் 2006 (UTC)

மயூரநாதன் என்னை நிர்வாகியாக்கியமைக்கு நன்றி. என்னால் இயன்றவரை தமிழ் விக்கிப்பீடியாவை வளர்க்க முயல்கின்றேன்.--உமாபதி 17:37, 1 ஏப்ரல் 2006 (UTC)
தொகு

Umapathy, if I recall correctly, the Commons admins deleted the pics that contained properitory screen shots. Would you please clarify the copyright issues involved? It is best to keep in align with the official wikipedia policies regarding these issues, and most part stay clean as possible. But, I must admit the issues are unclear. Thank you. --Natkeeran 15:34, 18 ஏப்ரல் 2006 (UTC)

Natkeeran, Windows Language Interface Pack is a free ware on top of Windows XP. . I am also not very clear on this (I mean the copy right issues plus the Admin itself who deleted this article in English Wikipedia./ Interpretations from English to Tamil and is totally contributed by the volunteers including some Tamil Wikipedians. If you think that against the wikipedia policies please let me know. One of the way to computer to aware of Tamil UNCODE is to install the Windows LIP. I personally think that article should be there. I have mentioned about the deletions in Microsot's bhashaindia site in an inteview http://www.bhashaindia.com/Patrons/SuccessStories/Umapathy.aspx?lang=en

--Umapathy 05:02, 19 ஏப்ரல் 2006 (UTC)

I read your interview. It provided glimpses into various aspects of your self and your projects. You mention Wikipedia at least twice in the interview. It shows your commitment, and I am as committed as you are.
Definitely, the article about how to enable Tamil UNICODE should be there. It is very useful. More than 90% people use Microsoft OS, so letting people know how to enable Tamil in MS OS is very useful. For now, considering the importance of the article and the importance of the pics in illustrating steps we will leave it alone.
Is possible that you could contact Bhashaindia people through the forum about whether we need permission and if so whether they would provide such permission; that would be nice. But if that is too much trouble, don’t bother. --Natkeeran 06:00, 19 ஏப்ரல் 2006 (UTC)

For your reflection !

பயனர்:Natkeeran, I am on a slow link right now. I will definitely look at tomorrow if not day after tomorrow. --Umapathy 09:06, 23 ஏப்ரல் 2006 (UTC)

umapathy, i was glad to read ur interview in bahasaindia site and know ur involvement in tamil computing projects. ur motivation for this cause is highly commendable and touching. but i have one small doubt :) can contributing to ta wikipedia be considered as a development in tamil computing? I thought only technical things like unicode development, voice recognition etc are computing stuff whereas wikipedia is just a free encyclopedia in digital form..kindly enlighten ..otherwise, nice to see u often here and contributing in many ways to ta wikipedia development ;) −முன்நிற்கும் கருத்து Ravidreams (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

மீண்டும் முழுவீச்சில் பங்களிக்கத் துவங்கியுள்ளீர்கள் போலிருக்கிறது. வருக. -- Sundar \பேச்சு 09:21, 27 ஜூன் 2006 (UTC)

நன்றி சுந்தர், இலங்கையில் ஏற்பட்டுவரும் அசம்பாவிதங்களால் நான் இப்போது திருகோணமலை வேலை இடமாற்றம் கேட்டு வந்துள்ளேன். திருகோணமலையில் இருந்தும் தொடர்ச்சியான பங்களிப்பு இருக்கும். அடுத்தவாரம் முதல் பங்களிப்புகள் அதிகரிக்கும். --Umapathy 09:34, 27 ஜூன் 2006 (UTC)
ஓ, இலங்கை நிகழ்வுகள் வருத்தமளிக்கின்றன. -- Sundar \பேச்சு 09:51, 27 ஜூன் 2006 (UTC)
அப்போ நீங்க நான் படித்து வளாந்த மண்ணுக்கு வந்திட்டீங்க????

அங்கு லீவில வரேக்க உங்கள சந்திக்கலாம் தானே? உங்கட பேட்டிய பாஷா இந்தியா தளத்தில் பார்த்தேன் பாராட்டுக்கள். மிகவிரைவில் நானும் இங்கு முழு மூச்சுடன் இறங்குவதாக உத்தேசம்.....--ஜெ.மயூரேசன் 13:54, 2 ஜூலை 2006 (UTC)

ஜெ.மயூரேசன் , ஆம் திருகோணமலைக்கு வந்துவிட்டேன். CDMA தொலைபேசியையும் திருகோணமலைக்கு கொண்டுவந்துவிட்டேன். உங்களைச் சந்திக்க இயலும் எனில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. திட்டமிட்டபடி கணினிசார் வேலைகள் யாவும் துரிதப்படுத்துவதே எனது இலக்கு. இதில் விக்கிப்பீடியா முக்கியமானவற்றுள் ஒன்று. --Umapathy 14:46, 2 ஜூலை 2006 (UTC)

நச்சுநிரல்

தொகு

வைரஸ் (கணினி) என்பதற்கு தமிழ் என்ன? நச்சுநிரல் நன்றாக இருக்கின்றதா, சரியா? --Natkeeran 07:28, 14 ஜூலை 2006 (UTC)

நற்கீரன், வைரஸ் என்பது அனைவருக்கும் பரிச்சயமான் ஒன்று. நச்சுநிரல் எனபதை மீண்டும் ஆங்கிலத்திற்கு (English) இற்கு மாற்றினால் Poisonous Program என்றவாறு வருகின்றதல்லவா?. நீங்கள் வழங்கிய நச்சுநிரலை விட் வேறெந்த தமிழும் எனக்குத் தெரியவில்லை எனவே இதை சரியென்றும் எடுக்கலாம். --Umapathy 08:15, 14 ஜூலை 2006 (UTC)
மலின மென்பொருள் என்பது சரியா?--ஜெ.மயூரேசன் 05:46, 25 ஜூலை 2006 (UTC)
மயூரேசன் மன்னிக்கவும் எனக்கு சரியா என்று எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும் --Umapathy 17:39, 29 ஜூலை 2006 (UTC)
நச்சு நிரல் என்றே பயன்படுத்தலாம். ஏனெனில், வைரஸ் என்பதற்கு தமிழில் நச்சுயிரி என்றே பயன்படுத்துகிறார்கள். நேரடி மொழிபெயர்ப்பு பற்றி யோசிக்க தேவையில்லை. --மு.மயூரன் 18:35, 29 ஜூலை 2006 (UTC)
வைரஸ் என்பதற்கு இலத்தீன் மொழியில் நச்சு என்பபொருள் வந்தாலும், நச்சுயிரி அவ்வளவு சரியாகப் படவில்லை. இதற்கு முக்கியகாரணம் வைரஸ் கலங்களால் (cell) உருவாக்கப்படாததால் ஓர் உயிரி என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை பார்க்க en:Virus. ஏழத்தாழ ஒருவருடம் முன்னர் கிளிநொச்சியில் உலக சுகாதார அமைப்பு ஓர் HIV/AIDS பற்றிய கருத்தரங்கொன்றை நடத்தியிருந்தார்கள் அதில் ஏமக்குறைவு என்பதைப் பாவித்திருந்தார்கள். எனினும் ஏமக்குறைவு அதிகமாக்கப் பாவிக்கப்படாத தமிழ்சொல். எனவே நான் ஆங்கில் ஒலி பெயர்ப்பிலிருந்த கட்டுரை அவ்வாறே விட்டு ஏமக்குறைவை மீள்வழிநடத்தியிருந்தேன். விக்கிப்பீடியாவின் நோக்கம் கூடுதலானவர்களைச் சென்றடையெவேண்டும் என்றால் ஆங்கில ஒலிபெயர்ப்பிலுள்ள கட்டுரைகளைப் பயன்படுத்தலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இது சரியென்றால் வைரஸ் என்றகட்டுரை அவ்வாறே இருக்க நச்சுநிரலை மீள்வழிநடத்திவிடலாம். --Umapathy 15:44, 1 ஆகஸ்ட் 2006 (UTC)
எனது கருத்து, வைரஸ் என்ற கட்டுரையை நச்சுநிரலுக்கு மாற்ற வேண்டும் என்பது. நச்சு நிரல் என்பது பொருத்தமாகவே படுகிறது. --மு.மயூரன் 16:22, 1 ஆகஸ்ட் 2006 (UTC)--மு.மயூரன் 16:22, 1 ஆகஸ்ட் 2006 (UTC)

வைரஸ் (கணினி) என்பதை விட நச்சுநிரல் என்பதே பொருத்தமானது. நச்சிலக்கியம் என்பது போல நாசுநிரல் என்று பயன்படுத்தலாம். நச்சு என்பதற்கு "(எரிச்சல் ஏற்படுத்தும் வகையில்) ஒவ்வொரு சிறுவிடயத்திலும் அதிக முயற்சி வேண்டுவதாக அமைவது" என்று தற்காலத் தமிழ்ல் பொருள் உண்டு. ஆதாரம் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி. ஆகையால் வைரஸ் (கணினி) என்பதைவிட நச்சுநிரல் பொருத்தமானது. --கோபி 17:54, 1 ஆகஸ்ட் 2006 (UTC)

நன்றி கோபி உங்கள் விளக்கம் மிகச்சிறப்பாக உள்ளது. நற்கீரன் மற்றும் மயூரனின் ஆலோசனைக்கமையும் கணினி வைரஸ் நச்சுநிரல் வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. --Umapathy 23:45, 1 ஆகஸ்ட் 2006 (UTC)

திருமலை நிலவரம்

தொகு

திருமலை துறைமுகம் தாக்கப்பட்டுள்ளது. நகரத்திலும் சில எறிகணைகள் வீழ்ந்ததாக அறிந்தேன். தங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று நம்புகின்றேன். எனது குடும்பத்தார் நலமே உள்ளனர். --ஜெ.மயூரேசன் 05:18, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

நன்றி மயூரேசன், நான் தற்போது அலுவலகத்திலேயேயுளேன். அப்பாவும் நலமாகவேயுள்ளார். எறிகணைகள் மற்றும் விமானத்தாக்குதல்கள் திருகோணமலையில் தொடர்ந்தவண்ணமேயுள்ளது. மூதூர்பகுதிகளில் இருந்து காயமடைந்த பொதுமக்களை வள்ளமூடாக திருகோணமலைக்குக் கொண்டுவந்து அங்கிருந்து திருகோணமலை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்கின்றார்கள். --Umapathy 06:01, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

நீங்கள் இருவரும். உங்கள் வீட்டாரும் நலமாக இருப்பதுகண்டு மகிழ்ச்சி. எச்சரிக்கையாகவே இருங்கள். -- Sundar \பேச்சு 08:17, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

நன்றி சுந்தர், எச்சரிக்கையாகவே இருக்கின்றேன். திருகோணமலை நகரத்தில் ஆள் நடமாட்டங்கள் குறைந்து காணப்படுகின்றது. --Umapathy 12:14, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

உமாபதி, மயூரேசன், திருமலைச் செய்திகளை அவதானித்துக் கொண்டிருக்கிறேன். சுடச் சுட தகவலுக்கு நன்றிகள். வேறு என்ன சொல்லுவது? அவதானமாக இருங்கள். மயூரேசனின் பதிவு பார்த்தேன்.--Kanags 12:26, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

நன்றி சிறீதரன், மயூரேசனின் வலைப்பதிவையும் பார்த்தேன். நான் ஐக்கிய நாடுகள் அமைப்பில் பணிபுரிவதால் அங்கு நடுநிலையானது பேணப்படுவதால் என்னால் இனரீதியான கருத்துக்கள் எதையும் என்னால் தெரிவிக்கவியலாது. நான் தற்போது UNDSS (United Nations Department of Safety and Security) இல் வேலை செய்கின்றேன், திருகோணமலையில் இவ்வமைப்பு உலக உணவுத்திட்ட அலுவலகத்துடன் சேர்ந்தியங்குகிறது்.. நான் தொடர்ச்சியாக கடமைக்கு சமூமளித்தே வருகின்றேன். பாதுகாப்புககாரணங்களுக்காக ஏனைய ஐக்கிய நாடுகள் அமைப்புக்களில் மிக அத்தியாவசியாமான அலுவலர் தவிர்ந்த ஏனையோரை அலுவலகத்தினுள் வரவேண்டாம் என்று இன்று அறிவித்திருந்தோம். இப்போதும் போர் விமானங்கள் திருகோணம்லையில் வட்டமிட்ட வண்ணமேயுள்ளது. --Umapathy 15:15, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

திருகோணமலை நிலவரம் கவலைகரமானது நாளை வடகிழக்கெங்கும் பரவலாம்.மட்டக்களப்பில் நிலமை வழமைபோலவே இருக்கின்றது.கிழக்கில் வசிப்பவன் என்றவகையில் தொடரும் நிலமை பற்றி நம்பிக்கையற்றுள்ளேன்.எனினும் நலமாகவும் அவதானமாகவும் இருக்குமாறு பயனர்களை கேட்டுக்கொள்கின்றேன்.த்கவல் எதும் இருப்பின் பரிமாறவும் --kalanithe

நன்றி, கலாநிதி, திருகோணமலையில் தொடர்ச்சியாக எறிகணைகள் மற்றும் Multi Barrel தாக்குதல்கள் நிகழ்ந்தவண்ணமேயுள்ளது. நிலமை இன்னமும் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. எனக்கும் இலங்கையில் அமைதி மீண்டும் ஏற்படும் என்ற நம்பிக்கை குறைந்து வருகின்றது. "ஏட்டுச் சுரைக்காய் கறிக்குவதாவது" என்று அன்றே பழமொழியாகக் கூறிவிட்டார்கள். இன்றும் இலங்கையில் போர்நிறுத்த ஒப்பந்தம் இவ்வாறுதான் இருக்கின்றது. --Umapathy 23:44, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

உமாபதி, திருகோணமலையில் நிகழும் தாக்குதல்கள் அறிய மிகவும் கவலையாக உள்ளது. நீங்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வேண்டுவதன்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை. வெறும் சொற்கள் கூறுவதில் பயனில்லை, ஆனாலும் எங்கள் நினைப்பெல்லம் அங்கே உள்ளது என்று கூறுவதற்கே எழுதுகிறேன். லெபனானிலும் உலகில் (ஆப்பிரிக்கா போன்ற) பல இடங்களிலும் நிகழும் கொடுமைகளைக்கண்டு மிகவும் வருந்துகிறேன். கடந்த 200 ஆண்டுகளில் அறிவியல், தொழில்நுட்பவியலில் முன்னேறியதில், ஆயிரத்தில் ஒரு பங்கு மனித உள்ள வளர்ச்சியிலும் முன்னேறி இருந்தால் எத்தனையோ துன்பங்களைத் தவிர்த்திருக்கலாம். நம்பிக்கை கொள்ள வேண்டியது நம் கடமை. கவனமாக இருங்கள்.--C.R.Selvakumar 02:40, 3 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா

செல்வா, இலங்கையை விட ஆபிரிக்கா போன்ற நாடுகள் பலமடங்கு சிறந்தவை. இங்கே "தான் போகேலாத மூஞ்சூறு துடப்பங்கட்டையையும் தூக்கிக் கொண்டுபோனது போல்" இலங்கை உள்நாட்டுப் பிரச்சினையையே தீர்க்கமுடியாத பல அரசியல் வாதிகள் பலர் லெபனான் பிரச்சினை பற்றிப் பல்வேறு கருத்துக்களை நாளுக்கு நாள் வெளியிட்டு வருகின்றனர். யுத்தமொன்றில் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கபடக்கூடாது என்று ஜெனிவா சாசனம் கூறினாலும் இங்கே யாராவது கடைப்பிடிக்கின்றார்களா என்பது கேள்விக்குறியே --Umapathy 07:53, 3 ஆகஸ்ட் 2006 (UTC)
உமாபதி, ஆபிரிக்கவில் ருவாண்டாவில் நிகழ்ந்த இனப்படுகொலை குருதியை உறையச்செய்யும். 1983ல் இலங்கைத் தமிழர்களின் படுகொலைக்கு பிறகே பல்வேறு இனப்படுகொலைகள், சொல்லொண்ணாக் கொடுமைகள் பற்றியும், அரசுகள் செய்யும் கொடுமைகள் பற்றியும் படிக்கவும் சிந்திக்கவும் செய்தேன். ஜெனீவா கோட்பாடு போன்றவற்றை கடைபிடித்தால் தான் உயிர்பெறும், இல்லாவிடில், ஏட்டில் உள்ள வெற்றுச் சொற்கள்தாம். 2005 ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு பெற்ற ஹரால்டு பின்ட்டர் (Harold Pintar) அவர்களுடைய பேச்சைப் பாருங்கள்: http://nobelprize.org/literature/laureates/2005/pinter-lecture-e.html

சுமார் 1/3 பகுதி தாண்டிய பின் "Political theatre presents an entirely different set of problems...". என்னும் வாசகத்தில் இருந்து படியுங்கள். என்கருத்தும் 100% இவருடையதே இதைப்பற்றி. இவருடிஅய பேச்சை நிகழ்படமாகவும் பாற்கலாம் இங்கே அடிக்கடி அங்குள்ள நிலவரங்களை பாதுகாப்பாக இருக்கும் பொழுது எழுதுங்கள். --C.R.Selvakumar 13:00, 3 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா

செல்வா தங்கள் தகவலிற்கு நன்றி அவ்விணையத்தளத்திற்குச் சென்று தகவல்களை வாசித்தேன் மிகவும் பயனுள்ளதாகவுள்ளது. மூதூரில் தொலைத் தொடர்புகள் துண்டிக்கப் பட்ட நிலையிலேயேயுள்ளது. இடர்ப்பாடன நேரத்தில் தொலைத்தொடர்பைத் துண்டித்தது மனிதநேயமற்ற செயல். விக்கிப்பீடியாவில் நீங்கள் அனைவரும் என்னுடன் தொடர்சியாகத் தொடர்பிலிருப்பது எனக்கு மன ஆறுதலைத் தருகின்றது. இப்போதும் போர் விமானங்கள் திருகோணமலையில் வட்டமிட்டவண்ணமேயுள்ளன. --Umapathy 17:52, 3 ஆகஸ்ட் 2006 (UTC)
திருகோணமலையில் இன்று அதிகாலை 1:30 மணியளவில் கடற்படையினர் நிகழ்த்திய பல்குழற் துப்ப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் பெரும்பாலும் அமைதியாகவேயுள்ளது.--Umapathy 13:27, 5 ஆகஸ்ட் 2006 (UTC)

உமாபதி, உங்களால் இயன்றபொழுது, ஒரு வரியாவது, நலமாக உள்ளேன் என எழுதுங்கள். --C.R.Selvakumar 14:51, 8 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா

செல்வா, நான் உடல் நிலை நல்லநிலையிலுள்ளபோதும் உளரீதியாச் சிறிதளவு பாதிப்படைந்துளேன். எனது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் றிச்சாட்டின் மூத்த மகன் மூதூரில் Action Faim என்னும் சர்வதேச அமைப்பில் பணிபுரிந்து அகாலமரணமடைந்திருந்தார் தமிழ் நெட். இன்று மரணச் சடங்கில் பங்குபற்றியிருந்தேன். இன்று எறிகணைத் தாக்குதல்கள் காலையில் இருந்து எதுவும் நிகழவில்லை. எது எவ்வாறெனினும் விக்கிப்பீடியாவில் எனது பங்களிப்புத் தொடர்வதாகவேயுள்ளேன்--Umapathy 17:37, 8 ஆகஸ்ட் 2006 (UTC).
நன்றி உமாபதி. அருள் கூர்ந்து றிச்சாட் அவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவியுங்கள். செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். ஈடு கட்ட முடியாத இழப்பு இது. எல்லோரும் இன்புற்றிருக்கலாம், ஏன் தானோ இன்னமும் இத்தனை கொடுமைகள் நிகழ்கின்றன. நீங்களும் கவனமாக இருங்கள். அன்புடன் --C.R.Selvakumar 18:08, 8 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா
உமாபதி, நீங்கள் ஐ.நா சேர்ந்து பணி செய்வதால் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று எண்ணியிருந்த்தேன். ஆனால், அண்மையில் ஆபத்துதவி மற்றும் பொதுநல பணியாளர்களையும் தெரிந்தும் தாக்குதலுக்கு உட்பட்டு மரணமானது கவலை தருகின்றது. இலங்கை நிலவரங்கள் விரக்தியையே தருகின்றது. சில காலம் எல்லாம் கனிந்து வருவது போன்ற மாயை ஒன்று இருந்தது, இன்று அது சற்றும் இல்லை.
வெளியில் இருக்கும் பலருக்கும் இலங்கை பல ஈடுபாடுகளில் ஒன்று. ஆனால், அங்கு இருக்கும் மக்களுக்கு அது எவ்வளவு வேதனை என்பதை பலர் உணர்வதில்லை. சாதாரண வாழ்க்கையில் இருக்ககூடிய தொய்வுகள் வேதனைகள் போர் மத்தியில் எப்படி குறிகிபோகின்றன என்பதை எண்ணி பார்க்கின்றேன். --Natkeeran 18:35, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

பணிதொடர வாழ்த்துக்கள்

தொகு

உமாபதி, நீங்கள் நிறையக் கட்டுரைகளை எழுதிவருகிறீர்கள். செய்தி அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதால் விக்கிசெய்திகள் தமிழில் தொடங்கப்பட்டதும் அங்கு அதிக பங்களிப்பீர்கள் என நினைக்கிறேன். மேலும் சில சமயம் நிறைய எழுத்துப்பிழைகள் விடுகிறீர்கள். அது தொடர்பில் கவனம் செலுத்துங்கள். ஈழத்துக் கோய்ல்கள் தொடர்பான கட்டுரைக்ளைத் தொடர்ந்து எழுதி முடித்தால் நன்று. ஏனெனில் சில குறித்த விடயங்க்ளை எடுத்துக் கொள்ளும் போது முடிந்தளௌ நிறைய விடயகளை சேர்த்துவிடுவது த. வி. க்கு நன்று. ஏனெனில் த.வி.க்கு பங்களிப்போர் குறைவு என்பதாற்றான். இது எனது தனிப்பட்ட தாழ்மையான அபிப்பிராயமே. பணிகள் தொடர வாழ்த்துக்கள். --கோபி 15:56, 5 ஆகஸ்ட் 2006 (UTC)

கோபி, எனது அப்பப்பா தமிழ் பண்டிதராக இருந்தும் நான் தமிழில் எழுத்துப் பிழை விடுவற்கு எனக்கு மனவருத்தையே அளிக்கின்றது. எவ்வாறெனினும் முன்னேற முயற்ச்சிக்கின்றேன். தங்களின் வார்த்தைகள் உற்சாகமூட்டுகின்றன. இலங்கைக் கோயில்கள் தொடர்பான கட்டுரைகளைச் சில நாட்களின் பின்னர் மீண்டும் தொடரவிருக்கின்றேன். --Umapathy 16:10, 5 ஆகஸ்ட் 2006 (UTC)

நன்றி

தொகு

தங்கள் வரவேற்புக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்Mariano Anto Bruno Mascarenhas 01:12, 14 ஆகஸ்ட் 2006 (UTC)

பங்களிப்பில் சில சிரமங்கள்

தொகு

விக்கிப்பீடியா நிர்வாகியாக இருந்தும் அண்மைக் காலங்களில் எனது பங்களிப்பு குறைவடைந்தது குறித்துக் கவலையடைகின்றேன். நான் அநேகமாக CDMA தொலைபேசியூடாகவே பங்களித்து வருகின்றேன். இதுவும் திருகோணமலையில் நிறுத்தப் பட்டுவிட்டது. எது எவ்வாறாயிருப்பினும் பணியை இயன்றவரை தொடரவே முயற்சி செய்கின்றேன். --Umapathy 19:00, 27 ஆகஸ்ட் 2006 (UTC)

மீண்டும் இன்று (செப்டம்பர் 2 மாலை முதல் மீண்டும் திருகோணமலையில் தொலைபேசிகள் யாவும் வழமைக்குத் திரும்பியுள்ளது. --Umapathy 14:41, 2 செப்டெம்பர் 2006 (UTC)Reply

உமாபதி, நீங்கள் குறிப்பிட்ட பிரச்சினைகள் பற்றி எல்லோரும் அறிவார்கள். நீங்கள் தொடர்ந்தும் பங்களிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருப்பதே எங்கள் எல்லோருக்கும் ஊக்கமளிக்கும் விடயம்தான். எனவே உங்கள் வசதிக்கேற்ப பங்களிப்புச் செய்யுங்கள். நன்றி. Mayooranathan 17:17, 2 செப்டெம்பர் 2006 (UTC)Reply

நன்றி மயூரநாதன். 90களில் யாழ்ப்பாணத்தில் மின்சாரத் தடை வந்தபோது சைக்கிளில் டைனமோவில் ஆடலோட்டத்தை நெரோட்டமாக்கிப் ரேடியோவில் பாட்டுக் கேட்டேன். வாழ்க்கையில் தடைக்கற்களைப் படிக்கல்களாகவே எடுத்துக் கொள்கின்றேன். விக்கிப் பீடியர்கள் தொடர்ந்தும் தொடர்பிலிருப்பது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கின்றது. உங்கள் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் கட்டுரை அருமை. முடியுமென்றால் ஸ்கெச்சப் பாவித்துப் பாருங்கள். நீங்கள் கட்டிடக் கலைஞர் என்பதால் மிகவும் உதவும் என்று நினைக்கின்றேன். --Umapathy 18:19, 2 செப்டெம்பர் 2006 (UTC)Reply
நகர் தொலைபேசிகள் உட்பட தொலைபேசிகள் யாவும் மீண்டும் திருகோணமலையில் இயங்குகின்றமை மகிழ்சியைத்தருகின்றது. இன்று உங்களை இங்கே காண்பதில் மகிழ்ச்சி! --ஜெ.மயூரேசன் 04:12, 4 செப்டெம்பர் 2006 (UTC)Reply

google earth

தொகு

உமாபதி, திருகோணமலை மாவட்டத்தில் அமைந்த சில திட்டங்களுக்கு மட்டும் குறுகிய கால அடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து ஆங்கிலத் தலைப்புகளிலான வழிமாற்றுகள் தருவதில் பெரும் ஆட்சேபணையை யாரும் தெரிவிக்க முடியாது. ஆனால், நீண்ட கால நோக்கில் கூகிள் எர்த்தில் இருந்து தமிழிலேயே இணைப்பு தர முடிந்தால் நன்றாக இருக்கும். ஆங்கிலத் தலைப்புகளிலான வழிமாற்றுகள் பெருகுவது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நல்ல தோற்றத்தை தராது என்பது நீங்கள் அறிந்தது தான். ஒருங்குறியையும் வட்டார மொழிகளையும் ஆதரிக்கும் கூகுள் இதை விரைவில் நிறைவேற்றும் என்று நம்புகிறேன். கூகுள் எர்த்தில் உங்கள் குறிப்புகள் பார்த்தேன். உங்கள் முயற்சிகள் நன்று.--ரவி 20:24, 11 செப்டெம்பர் 2006 (UTC)Reply

ரவி, விக்கிப் பீடியர்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் ஓர் சோதனையாக திருகோணமலை அல்லது வவுனியா மாவட்டத்தில் பிரபலமான இடங்கள் பற்றிய குறுங்கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியாவில் உருவாக்கி கூகிள் ஏர்த்திலிருந்து இணைப்புக் கொடுக்கலாம். எனக்கு விக்கிப்பீடியா அறிமுகமானது கூகிள் தேடுபொறியால்தான் கூகிள் ஏர்த்தினாலும் விக்கிப்பீடியா பலரைச் சென்றடைய வாய்புள்ளது. முயன்று பார்க்கலாம். --Umapathy 08:46, 12 செப்டெம்பர் 2006 (UTC)Reply

செய்யலாம், உமாபதி--ரவி 10:10, 12 செப்டெம்பர் 2006 (UTC)Reply

ரவி வரும் ஞாயிற்றுக் கிழமை முதல் சோதனையிலீடுபடுவதாக உள்ளேன். அதுவரை குறுங்கட்டுரைகள் அல்லது கட்டுரைகளை உருவாகுவதாக உள்ளேன் --Umapathy 11:35, 13 செப்டெம்பர் 2006 (UTC)Reply

நிகழ்வுகள்

தொகு

உமாபதி, நீங்கள் நடப்புச் செய்திகளை உடனுக்குடன் விக்கிப்பீடியாவில் இணைத்து வருவது பாராட்டுக்குரியது. ஆனால் குறித்த திகதிகளுக்குரிய கட்டுரைகளில் இணைக்காமல் குறித்த மாதத்துக்குரிய கடுரைகளில் இணைப்பதே பொருத்தமானதாகும். உதாரணமாக திருக்கோணமலையில் தொலைபேசி செயழிழப்பது என்பது செப்டம்பர் 2006 கட்டுரையில் வருவது சரியானது. செப். 24 கட்டுரை அதற்கான பொருத்தமான இடமல்ல. --கோபி 15:54, 24 செப்டெம்பர் 2006 (UTC)Reply

சில மாற்றங்களைச் செய்துள்ளேன். நீங்கள்முன்னர் இணைத்த செய்திகளையும் பொருத்தமான குறித்த மாதத்துக்கான கட்டுரைகளுக்கு நகர்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --கோபி 16:02, 24 செப்டெம்பர் 2006 (UTC)Reply

windows language interface pack

தொகு

umapathy, by policy we don allow pages with english title and content and while deleting those pages we tend not to look at the "pages that link here" tool. That's the reason why i could not understand the purpose of the page and deleted. :( This page has been deleted twice, once by me and once by gopi. While gopi deleted there was just a redirect to tamil version of the page. So, his deletion is compltely justifiable. An english title with a redirect to a tamil page is unnnecessary. also, such a redirect defeats the purpose for which u actually created the page - to help people whose computer doesnt display tamil properly. We could now easily bring back the first version page which has guideline content written by you. But there is a better way than that. You could either give the external link to the tamil language pack directly from the font help page or give it as a link to en wiki page and upload your guideline content in en wiki. Thus, it will help all language people who access en wiki and your contribution has the chance to be widely read. For this purpose, you may revert the deletion, cut copy the content and paste in en wiki and then delete the page again. Thanks--ரவி 18:03, 27 செப்டெம்பர் 2006 (UTC)Reply

Ravi, Thanks for your reply I do completely agree about Gobi’s deletion since it is a useless redirection. There is no point of redirecting to Tamil article to from an English article to correct the problem while the computer doesn't display Tamil properly will not help at all. As you have suggested I will copy it to elsewhere may be in googlepages or in my site and put the link from there and that would resolve these issues. But rightnow I am not very interested to put in on English Wikipedia sorry for that. I have tested windows Vista and it is gives immediate chance to view Indic Languages with out any setup. Hopefully these issues become lesser as we move towards latest and the greatest operating systems. --Umapathy 04:13, 28 செப்டெம்பர் 2006

please let me know where i can download the test versin of vista. even now, many people in india are operating windows 98..so even if vista comes, it may take longer time for people to switch to vista.,. we still need to give clearer directions for all kinds of poeple, especially those who use non-windows OS too.--ரவி 07:15, 28 செப்டெம்பர் 2006 (UTC)Reply

Ravi, I do agree that it will take long time for an average Indian or Sri Lankan to adapt Vista as it requires expensive hardware. Right now I am typing this from Windows 2000 computer how can I expect others to move Windows Vista?. (But I also have a laptop that is using windows XP). I have installed Vista some times back the Interface is good but in my old hardware it loaded slowly. Well I have downloaded from betanews have a look at http://fileforum.betanews.com/detail/Microsoft_Windows_Vista_English_32bit/1149728719/1 and get a product key from http://www.microsoft.com/windowsvista/getready/preview.mspx By the way I am also member of Microsoft Connect and I found that they offering a latest build than the betanews few dyas back I tried to dowload it but I couldn’t. So for the time these are the links. --Umapathy 08:19, 28 செப்டெம்பர் 2006 (UTC)Reply

Hi

தொகு

I'm a passing English Wikipedian, if you want to talk to me please reply at on English wikipedia

en:User:Thamizhan glad to see you at the Tamil wikipedia. I have seen your contribution at the English Wikipedia I would be happy if you can get an account and in that way credit for making articles will reach you. --Umapathy 13:08, 1 அக்டோபர் 2006 (UTC)Reply

பிறர் கருத்துக்களில் தகவல் திருத்தம்

தொகு

உமாபதி, பிறர் கையொப்பமிட்ட கருத்துக்களில் உள்ள தகவல் மற்றும் எழுத்துப்பிழைகளை திருத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. இதற்காக மயூரனாதன் மகிழ்வாரே தவிர உங்களை மன்னிக்கத் தேவையில்லை :) இப்பொழுது நீங்கள் மீண்டும் முனைப்போடு செயலாற்றத்தொடங்கி இருப்பது மகிழ்ச்சி. திருகோணமலை இயல்பு நிலைக்கு திரும்புகிறது என்று நினைக்கிறேன். பிறகு, ஆங்கில வழிமாற்றிப்பக்கங்களை உருவாக்குவது குறித்த உங்கள் கேள்விக்கு ஆலமரத்தடியில் சில தீர்வுகள் சொல்லி இருந்தேன். அது குறித்து மறுமொழி தந்தால் நன்றாக இருக்கும்--ரவி 15:37, 6 அக்டோபர் 2006 (UTC)Reply

மூக்கை நுழைப்பதற்கு மன்னிக்கவும். எழுத்துப்பிழை திருத்தங்களில் பொதுவாக எந்தச் சிக்கலும் இல்லை. தகவல் திருத்தங்களை அடைப்புக்குறிக்குள்ளோ அல்லது பின்னூட்டமாகவோ தெரிவிக்கலாம். ஆங்கில விக்கி மரபு நம்மைக் கட்டுப்படுத்துவதில்லையென்றாலும் கவனிக்கக் கூடியது: ஒருவர் ஒரு கருத்தைத் தெரிவித்தபின் இரண்டாமவரும் அதன் அடிப்படையில் ஏதேனும் கருத்தைத் தெரிவித்திருந்தால் முதலாமவரின் கருத்தை தானே மாற்றுவதென்றாலும் சதுர அடைப்புக் குறிகளுக்குள்தான் செய்வர். இதை இந்த இடத்திற்காகச் சொல்லவில்லை, பொதுவாகச் சொல்கிறேன். தற்போதைய பயனர்களுக்கிடையா நல்ல புரிதல் உணர்வு உள்ளதால் கவலைப்படத் தேவையில்லை. -- Sundar \பேச்சு 15:49, 6 அக்டோபர் 2006 (UTC)Reply
சுந்தர், மயூரனாதன் தமிழர் மக்கள்தொகையை பிழையாக தந்திருந்தார். இதை தகவல்பிழையாகவும் கொள்ளலாம், எழுத்துப்பிழையாகவும் கொள்ளலாம். இது போன்ற விதயங்களை துணிந்து செய்யலாம் தானே. இன்னொரு பயனரின் கருத்தை திரிக்கக்கூடாது. அவ்வளவுதான்--ரவி 16:08, 6 அக்டோபர் 2006 (UTC)Reply
இது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளக்கூடியதே. (கீழே சாமியே வரம் கொடுத்த பிறகு இந்த பூசாரிக்கென்ன. :) ) -- Sundar \பேச்சு 16:20, 6 அக்டோபர் 2006 (UTC)Reply

700 மில்லியன் என்று நான் தவறுதலாகத் தான் எழுதிவிட்டேன். அதைத் திருத்தியதில் பிரச்சினை எதுவும் இல்லை. உமாபதிக்கு எனது நன்றிகள். Mayooranathan 16:18, 6 அக்டோபர் 2006 (UTC)Reply

நீண்டதூரப் பயணம் ஒன்றை மேற்கொண்டதால் உடனடியாகப் பதில் போடமுடியவில்லை. அனைவரின் கருத்துக்களிற்கும் நன்றி. நான் கூட அணமையில் எழுதிய கட்டுரைஒன்றில் முன்தோற்றத்தைப் பார்க்கும் போது விண்டோஸ் 2000 இற்கு சிகப்பு இணைப்புக் காணப்பட்டது. பின்னர் நான் தான் மேலதிக 0 ஒன்றைத் தவறுதலாகத் தட்டச்சுச் செய்திருந்தோம் என்று தெரியவந்தது. இவ்வாறேதான் நிகழ்ந்திருக்கக் கூடுதலான வாய்ப்புக்கள் உண்டு.
ரவி, வழிமாற்றுப் பக்கம் குறித்து கூகிள் ஏர்த்தைத் ஐத் தயாரித்த கூகிளிடமே ஓர் bug report அனுப்பியிருந்தேன் Automated Response தவிர சரியான பதிலேதும் கிடைக்கவில்லை. எனினும் கூகிள் ஏர்த்தில் படங்களைத் தேடும்போது விக்கிப்பீடியாவில் உள்ள படங்களும் முதற்பக்கத்தில் கிடைப்பது மகிழ்ச்சிக்குரியவிடயமே. வழிமாற்றுப் பக்கம் குறித்த சில பரிசோதனைகளைச் செய்துவிட்டு எனது கருத்துக்களை ஒரு சிலநாட்களுக்குள் தெரிவிக்கின்றேன். காலதாமதத்திற்கு மன்னிக்கவும். --Umapathy 02:07, 7 அக்டோபர் 2006 (UTC)Reply

யாகூ மெசன்ஜர்

தொகு

உமாபதி, தமிழ் கூகுள் தளம் ஏற்கனவே உள்ளது. ஜிமெயில் இடைமுகப்பையும் தமிழாக்கும் பணி நடந்து வருவதை கண்டேன். ஜிமெயில் தமிழில் வராமலே போய்விடும் என்பது போல் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் தெரிவிக்கவும். msn messengerல் எ-கலப்பை கண்டு உரையாட முடியும். yahoo messengerல் இந்த வசதி இல்லை. எனினும், இதற்கு உதவும் transliteration pluginகள் ஏதும் யாகூவிடம் இருந்து வரக்கூடும். gaim போன்ற மென்பொருகள் தமிழ் இடைமுகப்புடன் விரைவில் கிடைக்க வாய்ப்புண்டு. பிற அரட்டை சேவைகள் தமிழ் இடைமுகப்போடு இல்லாத குறையை இது தீர்க்கலாம்--ரவி 15:44, 12 அக்டோபர் 2006 (UTC)Reply

ரவி கெயிமில் தமிழை ஒருங்குறியில் எழுதுவதற்கான நீட்சி வலையில் கிடைக்கின்றது. இப்போது விண்டோஸ் லைவ் மெசன்ஜர் மற்றும் யாகூ மெசன்ஜர் ஆகிய வலையமைப்புக்கள் ஒன்றிணைந்துள்ளதால் ஒருங்குறியில் ஆகக்குறைந்தது ஒருவராவது தட்டச்சுச் செய்யவியலும். இந்திய மொழிகளுக்கான ஒருங்குறி ஆதரவை யாகூ அதன் மெசன்ஜர் 7ஆவது பதிப்பிலிருந்து பீட்டாவில் அறிமுகம் செய்தது இதை நான் பாஷாஇந்தியா இணையத்தளத்தில் யாகூ மெசன்ஞ்சர் இந்தியமொழி ஆதரவு தெரிவித்திருந்தேன். ஜிமெயில் தமிழாக்கப் பணிகள் சரியாக ஒழுங்கமைக்கப் பட்டதாகத் தெரியவில்லை இதில் யார்யார் பங்குபற்றுகின்றார்கள் ஏதேனும் வட்டார மொழிச் சொற்கள் உள்ளனவா என்பதும் தெரியவில்லை. 2005 ஆம் ஆண்டு இறுதியில் ஜிமெயிலிலுள்ள எல்லாச் சொற்களையும் தமிழாக்கி முடித்திருந்தேன் பின்னர் மீண்டும் பலதடவை முயன்று 100% ஆக்கினேன் இப்போதும் பல சொற்கள் தமிழாக்கப் படாமல் உள்ளது. இதற்குக் காரணம் சரியாகத் தெரியவில்லை கூகிள் சொற்களைச் செர்கின்றார்கள் என்றே நினைக்கின்றேன். எவ்வாறெனினும் ஜிமெயில் தமிழில் வருவதற்கு என்னாலியன்ற ஆதரவை வழங்குவேன். --Umapathy 16:14, 12 அக்டோபர் 2006 (UTC)Reply

உமாபதி, ஜிமெயில் தமிழாக்கத்தில் நானும் சிறிது காலத்தில் ஈடுபட்டேன். ஆனால், அப்பணிகள் ஒரு குழுமமாகவோ திறந்த நிலையிலோ செய்யப்படாததால் ஒருங்கிணைப்பு இன்றி குழப்பம் நிலவியதால் விலகிக் கொண்டேன். தவிர, அது வணிக நிறுவனச் சேவை என்பதாலும் என் ஓய்வு நேரத்தை அதற்குச் செலவிட அவ்வளவு விருப்பமாயில்லை. ஜிமெயில் தொடர்ந்து புதுச் செய்திகளை சேர்ப்பதால் 100 விழுக்காட்டு தமிழாக்க நிலை தள்ளிப்போகலாம்.--ரவி 16:27, 12 அக்டோபர் 2006 (UTC)Reply

பெயரிடல் மரபு

தொகு

உமாபதி, ஏ. ஆர். ரஹ்மான் என்பது தான் பெயரிடல் மரபு. பிற பெயர்களில் வழிமாற்று உருவாக்குவதை தவிர்க்கலாம். முறிந்த இணைப்புக்களை காணும் இடத்தில் அவற்றை திருத்தி அமைக்கலாம். --ரவி 17:13, 18 அக்டோபர் 2006 (UTC)Reply

ரவி, கருத்துக்களுக்கு நன்றி, உங்களின் ந்கர்த்தைலையும் கண்டேன் ஆங்கில் விக்கியிலும் மாற்றத்தைச் சேமித்துள்ளேன். சுந்தர் தானியங்கியை இயக்கும் போது ஏனைய மொழிகளில் வேண்டிய மாற்றங்கள் ஏற்படும் அப்போது தேவையில்லாத வழிமாற்றங்களை அழித்துவிடுகின்றேன். --Umapathy 17:36, 18 அக்டோபர் 2006 (UTC)Reply

Town translations

தொகு

Umapathy, I noticed you are translating some town names. I created a new list, User:Ganeshbot/Translation needed. Please translate the list over there. This will help me with further bot runs. Thanks, Ganeshk 18:08, 20 அக்டோபர் 2006 (UTC)Reply

Thanks Ganeshk, I will translate it according to your suggestion--Umapathy 18:16, 20 அக்டோபர் 2006 (UTC)Reply
Umapathy, You updated the districts page. I think that is still right. I moved the town list to the user page. The district list is still at the WP:AM. I don't have a seperate district list page. For new translations of towns, goto User:Ganeshbot/Translation needed and for translations of distrits, stick to old location. Sorry for confusion. Hope that explains. Thanks, Ganeshk 18:33, 20 அக்டோபர் 2006 (UTC)Reply

Wikipedia பேச்சு:தானியங்கிகள்

தொகு

Please see: Wikipedia பேச்சு:தானியங்கிகள் --Natkeeran 19:33, 20 அக்டோபர் 2006 (UTC)Reply

ஜிமெயில்

தொகு

தகவல்களுக்கு நன்றி உமாபதி. பேஜ் கிறியேற்றருக்குச் செல்ல முயற்சித்தேன். நீங்கள் சொன்னது போல் ஜிமெயில் கணக்கு தேவை. என்னிடம் அது இல்லை. முடியுமானால் எனக்கு அழைப்பு ஒன்றை அனுப்பிவிடுங்கள். பேஜ் கிறியேற்றர் தளத்துக்குச் சென்று பார்க்கிறேன். என்னிடம் adsl இணைப்புத் தான் உள்ளது. Mayooranathan 18:14, 21 அக்டோபர் 2006 (UTC)Reply

மயூரநாதன் உங்கள் பயனர் பக்கத்தில் இருக்கும் ஹொட்மெயிலிற்கு கணக்கிற்கு அழைப்பை அனுப்பியுள்ளேன் கிடைக்காவிட்டால் எனது umapathyxp@gmail.com இற்கு மின்னஞ்சல் செய்யவும். --Umapathy 18:32, 21 அக்டோபர் 2006 (UTC)Reply

நன்றி உமாபதி, அழைப்புக் கிடைத்தது. கணக்குத் தொடங்கி விட்டேன். Mayooranathan 20:07, 21 அக்டோபர் 2006 (UTC)Reply

புதிய பயனர் பக்கம் உருவாக்கம்

தொகு

உமாபதி, சுந்தர், உங்கள் இருவருக்கும் நன்றி. அருள் கூர்ந்து (1) என் பயனர் பக்கத்தை பயனர்:செல்வா என்னும் புதிய பக்கத்துக்கு நகர்த்தி விடுங்கள். (2) பயனர்:செ.இரா.செல்வகுமார் என்னும் புதிய பக்கத்தை நீக்கி விடுங்கள். மிக்க நன்றி--C.R.Selvakumar 13:04, 3 நவம்பர் 2006 (UTC)செல்வாReply

adobe photoshop

தொகு

umapathy, an anonymous user left a request for அடோப் போட்டோஷாப் article? can u help by creating it? Thanks--Ravidreams 11:29, 9 நவம்பர் 2006 (UTC)Reply

Ravi, thanks for pointing this. JI will try to some work tonight. a By thes way some people are calling அடோபி instead of அடோப் anyway I try to create an article tonight if not tomorrow. --Umapathy 08:36, 10 நவம்பர் 2006 (UTC)Reply

Concept, hypothesis, thought, abstract ஆகியவற்றுக்கு நல்ல தமிழ் சொற்கள் எவை?

தொகு
கரு - idea
கருத்து - comment
கருத்தியம் - idealism
கருத்தியல் - ideal
கருத்துலகு - the world of idea
கருதுகோள் - hypothesis VS CONCEPT
கருதுதல் - having an opinion
கருத்துருவாக்கம் - forming or shaping an opinion
எண்ணக்கரு - thought ??
சிந்தனை - thought
சிந்தை - மனம், மூளை
சிந்தித்தல் - thinking

இங்கு கருதுகோள் என்று பொதுவாக எதைக் குறித்து நிற்கின்றது. Concept, hypothesis, thought, abstract ஆகியவற்றுக்கு நல்ல தமிழ் சொற்கள் எவை? நன்றி. --Natkeeran 20:28, 18 நவம்பர் 2006 (UTC)Reply

You didn't have to unprotect your talk page for me if it was being vandalised :) Anyway I will go through the links some time (it is getting late, I better go to sleep). I use IE mostly, occasionally firefox. There is no problem now (after Sundar's help) with the rendering of the Tamil script, it's just that I don't know how to type. I got your link and will try it out. Cheers. Cribananda 10:03, 2 டிசம்பர் 2006 (UTC)

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன

தொகு

--Natkeeran 03:39, 3 டிசம்பர் 2006 (UTC)

பாராட்டு

தொகு

உமாபதி, சத்தமில்லாமல் தமிழ் விக்கி செய்திகள் தளத்தை தொடங்கியதற்கு நன்றியும். பாராட்டுக்களும். இதை ஒரு சிறப்பான அறிவிப்பாக ஆலமரத்தடியில் நீங்களே தெரிவியுங்களேன். sister projects வார்ப்புருவையும் மாற்றி அமைக்கிறேன். விக்கி மூலம் தளத்தை தொடங்க தான் யார் தலையை உருட்ட வேண்டும் என்று தெரியவில்லை. அதுவும் முக்கியமான திட்டம். விரைவில் செய்ய வேண்டும். உமாபதி, கோபியின் பக்கத்தில் முதற் பக்கத்தை இற்றைப்படுத்துவதில் என் பங்கு கவனிக்கப்படுவதாக கூறி உள்ளீர்கள்? ஐயகோ, பாவனா, அசின் போன்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகளில் இரண்டு நாள் முன்னர் கூட கட்டுரை எழுதினேனே..;) அது யார் கண்ணிலும் படவில்லையை ;)?--Ravidreams 08:58, 3 டிசம்பர் 2006 (UTC)

விக்கி செய்திகள்

தொகு

உமாபதி, விக்கி செய்திகள் என்று பிரித்து எழுதுவது நன்று என நினைக்கிறேன். இது குறித்து பிற பயனர் கருத்தையும் வேண்டி முதலில் இருந்தே சீராகப் பயன்படுத்தலாம். குறைந்தது ஒரு பயனருக்காவது நிர்வாக அணுக்கம் இருப்பது அவசியம். நீங்கள் வாக்கெடுப்பு பக்கம் ஒன்றை துவக்கினால், உங்களை தேர்ந்தெடுக்கலாம். விக்கிப்பீடியா சமூகத்தில் நம்பிக்கை பெற்ற பயனர்கள் எவரையும் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், அவர்கள் நிர்வாக அணுக்கத்தை செம்மையாக தொடர்ந்து பயன்படுத்துபவர்களாக இருக்க வேண்டும். வெறுமனே அணுக்கத்தை பெற்றுக்கொண்டு காணாமல் போய் விடக்கூடாது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. --Ravidreams 09:16, 3 டிசம்பர் 2006 (UTC)

விக்கி செய்தியில் எவ்வாறு பங்களிப்பது என்பது பற்றி அறிய ஆவலாக உள்ளேன்.இதுபற்றிய மேலதிக தகவலை உங்களிடமிருந்தும் எனைய விடய மறிந்தவர்களிடமும் எதிர்பார்க்கின்றேன்--கலாநிதி 16:38, 3 டிசம்பர் 2006 (UTC)

ரவி, கலாநிதி, உடனடியாகப் பதில் போடமுடியாமற்போனதற்கு வருந்துகின்றேன். அலுவலகத்தில் சில வேலைப்பளுகாரணமாக உடனடியாக தகவல்களைத் திரட்டவில்லை. நாளை முதல் மீண்டும் பணிகளைத் தொடங்குவோம். மீண்டும் ஓர் விரிவான பதிலை நாளை தருகின்றேன். --Umapathy 17:36, 4 டிசம்பர் 2006 (UTC)

தமிழ்

தொகு

ஒரிரு நாட்களுக்கு பின் விசமத்தனம் தணிந்தது போல் தெரிந்தால், மறக்காமல் பூட்டை எடுத்து விடுங்கள். நன்றி. --Natkeeran 01:44, 12 டிசம்பர் 2006 (UTC)

நற்கீரன் பூட்டை நீக்கியுள்ளேன். --Umapathy 18:13, 12 டிசம்பர் 2006 (UTC)

page revert

தொகு

umapathy, to revert a page to previous edit, please see the difference in the las two edits and at the last edit summary u have a link called முன்னிலையாக்கு. this is displayed only for admins. so u can use that link to revert edits easily than manually removing the edit and adding a edit summary--Ravidreams 09:41, 17 டிசம்பர் 2006 (UTC)

Thanks Ravi. I think I have done in that way but not sure as I have done this early in the morning after realizing that somebody with an IP address have added something to Gopi's page doesn't seems to be relevant in Gopi's page from my point of view. I will also leave a message on Gopi's talk page. --Umapathy 11:51, 17 டிசம்பர் 2006 (UTC)

முன்னிலையாக்கியமைக்கு நன்றி உமாபதி. நீங்கள் செய்தது சரியே. --கோபி 15:35, 17 டிசம்பர் 2006 (UTC)

Link to my post

தொகு

விக்கிநூல்கள்

தொகு

தமிழ் விக்கிநூல்கள் தளத்தில் visual basic தொடர்பான நூல் இல்லை என்பதே சிக்கல் என நினைக்கிறேன். மேலும் வார்ப்புருவில் special என்றிருக்க வேண்டும் போலவுமுள்ளது. --கோபி 18:25, 31 டிசம்பர் 2006 (UTC)

நன்றி கோபி, http://ta.wikibooks.org/wiki முதற்பக்கத்தில் பேஸிக் பற்றிய ஆரம்ப நிலையில் இருக்கும் புத்தகத்திற்கான இணைப்பொன்றை வழங்கியுள்ளேன். இங்கேயும் விஷ்வல் பேஸிக் உள்ளது ரவி வரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம். --Umapathy 01:38, 1 ஜனவரி 2007 (UTC)

நன்றி கோபி, ஆங்கிலத்தில் எழுதுப்பிழையே காரணம். இப்போது விக்கியிடை வார்புரு வேலை செய்கின்றது. --Umapathy 02:48, 1 ஜனவரி 2007 (UTC)

சிரித்திரன் சுந்தர்

தொகு

உமாபதி, சிரித்திரன் சுந்தர் பற்றிய எனது பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள். சுந்தர் பற்றிய விக்கி கட்டுரை இல்லாதது ஒரு பெருங்குறை. அவரைப்பற்றிய முக்கிய தகவல்கள் என்னிடம் இல்லாததே கட்டுரை எழுதாததற்குக் காரணம். விருபா, மேமன்கவி போன்றவர்களிடமும் கேட்டிருக்கிறேன். அவர்களும் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறார்கள் போற் தெரிகிறது. இருப்பினும் தற்போது இருக்கும் தகவலைக் கொண்டு ஒரு குறுங்கட்டுரை (!) ஆரம்பிப்போம். பின்னர் விரிவாக்கலாம்.--Kanags 06:15, 1 ஜனவரி 2007 (UTC)

கனக்ஸ், சொன்னவுடனேயே கட்டுரையை ஆரம்பித்து அசத்திவிட்டீர்கள். இங்கேயுள்ள பல குறுங்கட்டுரைகளை விடக்கூடுதலான விடயங்கள் சிரித்திரன் சுந்தர் கட்டுரையில் உள்ளது. அவர் இறந்தது 1996 ஆம் ஆண்டாக இருக்கவேண்டும். நானும் அக்காலத்தில் இடம்பெயர்ந்து பல இடர்ப்பாடுகளைச் சந்தித்தால் என்னிடமும் தெளிவான தகவல்கள் இல்லை. பல சஞ்சிகைகள் கவர்சிப்படங்களை நம்பி கட்டுரைகளைச் சரியாக எழுதாமல் இருந்த காலத்தில் நகைச்சுவையாக வெறும் மண்ணிறப் பேப்பரில் கட்டுரைகள் கேலிச்சித்திரங்கள் என்று அசத்தியவர் சிரித்திரன் சுந்தர். --Umapathy 17:03, 1 ஜனவரி 2007 (UTC)

பயனர் :Killerbee

தொகு

உமாபதி, பயனர் பெயர்கள் தொடர்பாக பின்வரும் கையேடு ஆங்கில விக்கியில் கிடைக்கின்றது. en:Wikipedia:Username. அந்தப் பயனர் வேறு ஒரு பெயரில் ஆக்கபூர்வமாக பங்களிப்பார் என நம்புவுவோம். --Natkeeran 01:36, 2 ஜனவரி 2007 (UTC)

நற்கீரன் நான் எல்லோருடைய பங்களிப்பினையும் எதிர்பார்க்கின்றேன் என்றாலும் இவ்வாறான பெயர்களைத் தவிர்த்து நீங்கள் கூறுவதைப் போன்று சொந்தப் பெயரிலோ அல்லது ஓர் ஏற்றுக் கொள்ளக் கூடிய புனைபெயரிலோ பங்களிப்பைச் செய்வாரானால் அது எனக்கு மகிழ்ச்சியே. --Umapathy 05:04, 2 ஜனவரி 2007 (UTC)

இந்திய நகரங்கள் தொடர்பான கட்டுரைகளில் உள்ள வார்ப்புருவில் நெட்டாங்கையும் அகலாங்கையும் கொடுக்க இடத்தின் பெயருடன் புள்ளியால் இடம் குறிக்கப்படுகிறது. இதை போன்ற தொன்றை இலங்கை நகரங்களுக்கும் செய்ய வுள்ளேன். இதற்கு இலங்கைக்கான ஒரு SVG படிமம் தேவை. மேலும் படத்தின் மூலைகளின் நெட்டாங்கும் அகலாங்கும் 0.0 என்ற அளவில் தெரிய வேண்டும் இப்படி ஒன்றை பதிவேற்ற முடியாமா? இலங்கை முழுவதும் ஒரே நிறத்தில் மாகண எல்லைகள் குறிக்கபப்ட்டதாக இருந்தால் நன்று. எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு இந்திய நகரத்தை பார்க்கவும். நன்றி--டெரன்ஸ் \பேச்சு 03:14, 4 ஜனவரி 2007 (UTC)

டெரனஸ், சோதனையாக இரண்டு கோப்புக்களை மேலேற்றியுள்ளேன் http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Sri_Lanka_Disticts_coloured_by_Provience.svg http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Sri_Lanka_Districts.svg இது சரிவருமா என்று பாருங்கள் அல்லது என்னென்ன பிழைகள் அல்லது மேம்படுத்த வேண்டும் என்று சொன்னால் முயன்றுபார்க்கின்றேன். --Umapathy 15:41, 4 ஜனவரி 2007 (UTC)

மேலும் ஓர் கோப்பை மேலேற்றியுள்ளேன் http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Sri_Lanka_Proviences_Color.svg மேம்படுத்த முயற்சிப்போம். --Umapathy 15:52, 4 ஜனவரி 2007 (UTC)

நன்றி உமாபதி. ஒரு முக்கிய பிரச்சினை அதாவது இப்படத்தை சுற்றி நீங்கள் இட்டிருக்கும் செவ்வக எல்லையயும் படத்தின் உணமையான எல்லைகளும் ஒன்றாக இல்லை. மேலும் வடக்கு தெற்கு செவ்க எல்லைகளை மேலும் கடல் திசைக்கு நகர்த்த முடியுமா?படிமம்:India-locator-map-blank.svg ஐ உதாரணத்துக்குப் பாருங்கள். மேலும் முடிந்தால் படத்தின் வடமேல் தென்கிழக்கு மூலைகளின் நெட்டாங்கலாங்குகளை தரவும். (இல்லாவிட்டாலும் பரவாயில்லை சில பரிசோதனை முயற்சிகளால் கண்டு பிடிக்கலாம்)தொல்லைக்கு மன்னிக்கவும். படிமம்:Sri Lanka Disticts coloured by Provience.svg என்பது சிறந்த படம். இதில் கடலுக்கு நிறம் தீட்டி செவ்வக எல்லையை நீக்கி, மேலதிக கடல் பகுதிகளை நீக்கி தந்தால் அடுத்த கட்டத்துக்கு முயற்சிக்கிறேன். இப்போதைக்கு இப்படிதான் இருக்கிறது.

பயனர்:Trengarasu/மணல்தொட்டி

Coordinates: Unable to parse latitude as a number:{{{lat_d}}}
{{#coordinates:}}: invalid latitude

{{{நகரத்தின் பெயர்}}}
 
<div style="position:absolute;z-index:200;

top:Expression error: Unrecognized punctuation character "{".%; left:Expression error: Unrecognized punctuation character "{".%; height:0; width:0; margin:0; padding:0;">

{{{நகரத்தின் பெயர்}}}
மாகாணம்
 - மாவட்டம்

 - {{{மாவட்டம்}}}
அமைவிடம் Coordinates: Unable to parse latitude as a number:{{{latd}}}
{{#coordinates:}}: invalid latitude
பரப்பளவு
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்
{{{பரப்பளவு}}}  ச.கி.மீ

 - {{{உயரம்}}} மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
([[{{{கணக்கெடுப்பு வருடம்}}}]])
 - மக்களடர்த்தி
 - நகரம் ({{{கணக்கெடுப்பு வருடம்}}})
{{{மக்கள் தொகை}}} ({{{மக்கள்தொகை_நிலை}}})

 - {{{மக்களடர்த்தி}}}/ச.கி.மீ
 - {{{மக்கள்தொகை_நகரம்}}}
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - {{{அஞ்சல் குறியீட்டு எண்}}}
 - +{{{தொலைபேசி குறியீட்டு எண் }}}
 - {{{வாகன பதிவு எண் வீச்சு}}}
{{{பின்குறிப்புகள்}}}

--டெரன்ஸ் \பேச்சு 02:51, 5 ஜனவரி 2007 (UTC)

டெரன்ஸ், இப்போது புதிதாக ஓர் படத்தை http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Sri_Lanka_Locator.svg மேலேற்றியுள்ளேன். இதில் Upper Left Hand Corner மற்றும் Lower Right Hand Corner ஆகியவற்றின் ஆள்கூறுகளைக் குறித்துள்ளேன். மேலேயுள்ள படம் (அதாவது நீங்கள் சோதனை செய்த படத்தின் ஆள்கூறுகள் தேவையென்றால் அறையில் நேற்றிரவு போன்று ஏதாவது அசம்பாவிதங்கள் திருகோணமலையில் நடைபெறாதவிடத்து ஆள்கூறுகளைக் கொடுத்து மேலேற்றி விடுகிறேன். இந்தப் புவியற் துறைதான் எனக்கு வாழ்வளித்து வவுனியாவில் முதாவது வேலையும் கிடைத்தது இதில் சில அமைப்புக்களைப் பயிற்றியதில் வந்த பணத்திலேயே எனது மோட்டர் சைக்கிளும் வாங்கினேன். இதிலொன்றும் பிரச்சினையோ சிரமமோ இல்லை. --Umapathy 04:01, 5 ஜனவரி 2007 (UTC)

ஆம் அப்படியே செய்யலாம். காமன்சில் ஏற்ற முன்னர். canvas முழுவது படம் வருமாறு மாற்றினால் நன்றாக இருக்கும். உங்களுக்கு தொல்லை கொடுக்கிறேன் ஆனாலும் விடயம் தெரிந்த உங்களை விடுவதாக இல்லை.  :() --டெரன்ஸ் \பேச்சு 03:19, 6 ஜனவரி 2007 (UTC)

டெரன்ஸ், கன்வாஸ் (canvas) என்றால் என்ன?. சரியாக விளங்கவில்லை விளங்கப் படுத்தினால் வேண்டிய மாற்றங்கள் செய்யலாம். --Umapathy 07:08, 6 ஜனவரி 2007 (UTC)

  படத்துக்கு நீங்கள் ஒரு எல்லையை கருப்புக் கோட்டால் குறித்துள்ளீர்கள் அல்லவா? அதற்குவெளியே யும் வெற்றாக ஒருபகுதி இருக்கிறது தானே அதை நீக்கும் படிதான் கூறினேன். கன்வஸ் என்று நான் சொன்னது படிமத்தில் வட்டமிட்டு காட்டிய பகுதிகள் தான். இது படிமத்தில் வெற்றாக இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. எல்லைகளை மாற்றிய பிறகு மறவாமல் நெட்டாங்கலாங்குகளை குறிப்பிடவும்.--டெரன்ஸ் \பேச்சு 12:56, 6 ஜனவரி 2007 (UTC)

படிமம்:Sri Lanka Locator.svg இல் ஒருமாற்றமோ மீள் பதிவேற்றமோ செய்ய வேண்டாம். இப்போது இப்படிமத்தை வார்புருவில் இட்டு அதற்கான கணிப்பீடுகளையும் செய்து முடித்துவிட்டேன் இனிமேல் அதில் மாற்றம் செய்தால் மீண்டும் கணிப்பிட வேண்டும் இதற்கு ஒரு நாளுக்கு மேல் வேண்டும் மார்ச் வரை அவ்வளவு நேரம் கிடையாதபடியால் மேற்படி படிமத்தில் நான் கோரிய மாற்றங்களைச் செய்து காமன்சில் பதி வேற்றுமாறும் மேற்படி படிமத்தைஅப்படியே விட்டுவைக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.--டெரன்ஸ் \பேச்சு 15:50, 6 ஜனவரி 2007 (UTC)

நன்றி டெரன்ஸ் படிமத்தைப் புதிய மற்றும் பதிவு செய்யாத பயனர்கள் மாற்றாவண்ணம் பூட்டியுள்ளேன். ஆம் இதே பெயரில் பதிவேற்றம் செய்யாமல் வேறு ஓர் படிமத்தை ஒரு சில நாட்களுள் பதிவேற்றிவிடுகின்றேன். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். --Umapathy 16:11, 6 ஜனவரி 2007 (UTC)

டெரன்ஸ், விக்கி காமன்ஸில் இலங்கைப் படம் ஒன்றை மேலேற்றியுளேன், இதில் canvas பிரச்சினை எதுவும் கிடையாது பார்க்க http://commons.wikimedia.org/wiki/Image:Gislanka_locator.svg நீங்கள் எவ்வாறு இலங்கைக்கான வார்புருவை உருவாக்கினீர்கள் என்று தெரிவித்தால் நான் ஆங்கில விக்கிப்பீடியாவிலோ அல்லது தமிழ் விக்கிப்பீடியாவிலோ சரியாக வார்புருவில் வேண்டியமாற்றங்களைச் செய்யலாம். --Umapathy 06:38, 7 ஜனவரி 2007 (UTC)

Sri Lanka Locator map

தொகு

ஆம் அப்படியே செய்யலாம். ஒவ்வொரு மாகாணத்துக்கும் வெவ்வேறு நிறங்களைக் கொடுக்கவும். அதன்படி வார்ப்புரு:மாகாண தகவல் சட்டம்/நிறம் என்பதிலும் அந்நிறங்களிற்கான மாற்றத்தை செய்யலாம்.மேலும் ஒவ்வொரு மாகாணத்தினதும் நிறங்கள் என்று இருக்கிறதா? இருந்தால் அதனை பின்பற்றலாம் அப்படி இல்லையானால் தவி முழுவதும் நாம் ஒவ்வொரு மாகாணத்துக்கு ஒரு நிறத்தை வழங்கி அதை ஒரு சீர் தரமாக பேனலாம்.படிமம்:Sri Lanka Locator.svg நீங்கள் பயன்படுத்தியுள்ள நிறங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளன அவற்றையே பேனலாமா?

<!-- ###### Locator map (auto-drawn using [[Template:Location map]]) -->
{{#if: {{{latd|}}}|
{{!}} colspan="2" style="text-align: center; padding-top: 0.7em; padding-bottom: 0.7em;" {{!}} <div><div style="width:270px; background:">
<div style="position:relative; width:270px">[[படிமம்:Gislanka locator.svg|270px]]<br/><div style="position:absolute;z-index:200;
top:{{#expr:100*(9.91855-{{{latd}}}) / (9.91855-5.75722) round 3}}%;
left:{{#expr:100*({{{longd}}}-79.35408) / (82.22930-79.35408) round 3}}%; height:0; width:0; margin:0; padding:0;">
<div style="position:relative; top:-4px; left:-4px; width:8px; text-align:center; z-index:201">[[Image:Red_pog.svg|7px7px]]</div>
{{#switch:{{#if:{{{locator_position|}}}|{{{locator_position}}}|right}}
|right=<div style="font-size:90%; line-height:110%; position:relative; top:-1.5em; left:0.5em; text-align:left; width:6em; z-index:202;">
|left=<div style="font-size:90%; line-height:110%; position:relative; top:-1.5em; left:-6.5em; width:6em; text-align:right; z-index:202;">
}}<span style="padding:1px;background:"><b>{{{நகரத்தின் பெயர்}}}</b></span>
</div>
</div>
</div>
</div>
}}

மேற்படி நிரலில்

top:{{#expr:100*(9.91855-{{{latd}}}) / (9.91855-5.75722) round 3}}%;
left:{{#expr:100*({{{longd}}}-79.35408) / (82.22930-79.35408) round 3}}%

என்றபகுதியின் மூலமே புள்ளி குறிக்கப்படுகிறது. அதாவது படிமத்தின் நீள அகலத்தின் சதவீதம் கணிக்கப்பட்டு மேலிருந்தான தூரமும் இடமிருந்தான தூரமும் கணிக்கப்படுகிறது. 9.91855,5.75722, 82.22930, 79.35408 என்பவை மூலைகளின் நெட்டாங்கலாங்களாகும் இதை பார்த்தவுடன் உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். பிரச்சினை என்னவென்றால் சில வேலைகளில் இந்த இலங்களோடு இடங்களை குறித்தால் சரியாக வராது அதற்கு பின்னர் இந்த இலக்கங்களை மாற்றி மாற்றி fine tuning செய்ய வேண்டும்.--டெரன்ஸ் \பேச்சு 07:39, 8 ஜனவரி 2007 (UTC)

நன்றி.

தொகு

உங்கள் வாழ்த்துக்கலுக்கு நன்றி. --Natkeeran 02:45, 10 பெப்ரவரி 2007 (UTC) வாழ்த்துகள் njaanam

பயன்படாப் படிமங்கள்

தொகு

உமாபதி, பயன்படாப் படிமங்கள் பட்டியலில் [1] நீங்கள் பதிவேற்றிய சிலவும் உள்ளன. அவற்றில் தமிழ்விக்கிக்கெனவே நீங்கள் எடுத்த அல்லது உங்களிடம் பிர்திகள் இல்லாத ஆனால் முக்கியமான படிமங்கள் தவிர்ந்த ஏனையவற்றை நீக்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி --கோபி 18:11, 16 பெப்ரவரி 2007 (UTC)

கோபி ஆம் அவை இதுவரை பயன்படாதாத படிமங்கள் இனிமேலும் பயன்படாது என்றால் நீக்கிவிடுகின்றேன். அநேகமானவற்றிடம் என்னிடம் நகல் ஏதும் கிடையாது வரும் பெப்ரவரி 21 2007 வரை பொறுத்திருக்கவும். --Umapathy 00:50, 17 பெப்ரவரி 2007 (UTC)

த.வி. இன்றைப்படுத்தல்

தொகு

உமாபதி, இயலுமானால், தமிழ் விக்கிப்பீடியா பயன்படுத்தும் விக்கிமீடியாவை எப்படி இன்றைப்படுத்தலாம் என்று அறிய முடியுமா? ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் உள்ளிடுவதற்கு பல மேலதிக வசதிகள் வந்துவிட்டன. நாம் இன்னும் பழைய பதிப்புகளையே பயன்படுத்துகின்றோம்...நன்றி. --Natkeeran 16:05, 17 பெப்ரவரி 2007 (UTC)

படிம உரிமம்

தொகு

எந்த உரிமத்தின் கீழ் இதை பகிர்கின்றீர்கள் என்று தந்தால் நன்று. windows screen shot - நியாய பூர்வமான பகிர்வு என்றால் அதை தெளிவு படுத்தவும். நன்றி.  

--Natkeeran 16:10, 17 பெப்ரவரி 2007 (UTC)

நற்கீரன் இது ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுக்கபட்டது குறிப்பிட மறந்துவிட்டேன் மன்னிக்கவும். அங்கே windows screen shot என்றவாறு குறிப்பிடப்பட்டுருந்து இங்கே இதை fairuse இல் இடுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

--Umapathy 16:12, 17 பெப்ரவரி 2007 (UTC)

fairuse -> windows screen shot என்று கருதலாம். windows screen shot தனியே சேர்ப்பது நன்று. ஏன் என்றால் அவை சில மேலதிக கட்டுப்பாடுகளை கொண்டிருக்கலாம். --Natkeeran 16:16, 17 பெப்ரவரி 2007 (UTC)

Fair use screenshots என்ற பகுப்பு பொருத்தமாக இருக்கும் இதனை எப்படி மொழிபெயர்ப்பது பொருத்தமாயிருக்கும்? --கோபி 16:25, 17 பெப்ரவரி 2007 (UTC)

திரைக்காட்சி என்பது screenshot என்பதற்குப் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகின்றேன். --ஜெ.மயூரேசன் 16:27, 17 பெப்ரவரி 2007 (UTC)

நன்றி

தொகு

உமாபதி, நீங்களும், கலாநிதி, கோபி, நான் ஆகியவர்கள் காசுப்பாய்ச்சல் கூற்று என்னும் தலைப்பைப் பற்றி உரையாடியிருந்தபோது நீங்கள் சிறீலங்கா அரசின் கல்வித்துறையைச் சார்ந்த சில வலைப்பக்கங்களைத் தந்திருந்தீர்கள். நன்றி. முன்னமே கூற மறந்து விட்டேன். அவர்களுடன் மின் அஞல் வழி தொடர்பு கொள்ள இயலவில்லை. (வலையில் உள்ள இணைப்பு சரியாக வேலை செய்யவில்லை). --செல்வா 13:19, 23 பெப்ரவரி 2007 (UTC)

தகவல்களிற்கு நன்றி செல்வா. மண்ணஞ்சல் (கடிதம்) ஒன்றை நாளை அனுப்புகின்றேன். யுனிசெவ் அதிகாரி திரு சுதர்மனை சற்றுமுன் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். வேறுசிலரையும் தொடர்புகொள்ள முயன்றேன் முடியவில்லை. நீங்கள் இவ்வளவு அக்கறையுடனும் ஆவலுடனும் தொழிற்படும் போது நான் என்னால் இயன்றதைச் செய்கின்றேன். --Umapathy 15:14, 23 பெப்ரவரி 2007 (UTC) தகவல்களுக்கு njaanam

நன்றி உமாபதி. மண்வழி அஞ்சல் விடுத்தல் நல்லதென்று நீங்கள் கருதினால், நானும் கூட ஒரு மடல் விடுக்கக் கூடும். மீண்டும் நன்றி.--செல்வா 15:22, 23 பெப்ரவரி 2007 (UTC)

மண்ணஞ்சல் njaanam

செல்போன் செயலிலப்பு

தொகு

உமாபதி இங்கு (7/3/2007)மட்டக்களப்பில் செல்போன்கள் செயலற்றுப் போய்விட்டன.மொபிடல்,டயலொக் சேவைகள் நிறுத்தப்பட்டது மட்டுமல்லாது CDMA நிறுத்தப்பட்டுள்ளது.இது தற்காலிகமானதா?நிதந்தரமானதா தெரியவில்லை? திருகோணமையில் நிலமை எவ்வாறு உள்ளது? அறிய ஆவல்--கலாநிதி 16:53, 7 மார்ச் 2007 (UTC)

கலாநிதி, திருகோணமலையில் இதுவரை எந்தப்பிரச்சினையும் இல்லை. மட்டக்களப்பில் நேற்று மார்ச் 6, 2007 மாலை 7:30 இல் இருந்து சேவைகள் துண்டிக்கபட்டதாக அறிந்தேன். இதை ஒரு Early Warning ஆகக் கொள்ளலாம் எதற்கும் எச்சரிக்கையாக இருக்கவும். "யானைவரும் பின்னே மணியோசைவரும் முன்னே" போல "செல்பேசி சேவை செயலிழக்கும் முன்னே பிரச்சினை வரும் பின்னே"--Umapathy 17:04, 7 மார்ச் 2007 (UTC)

உமாபதி சிரித்தேன்.வரலாறு காணதளவு மட்டக்களப்பு இரானுவமயப்படுத்தப்பட்டுள்ளது.இதுவரை வன்னி பெருநிலதில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட மல்ரி பரல் போன்றவை தற்போது இங்கும் பயன்படுத்தப்படுகின்றது.புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம் நோக்கி பெருமளவான செல்கள் ஏவப்படுகின்றது.மட்டக்களப்பு நகர் அதிர்கின்றது.தினப்படி 100 ற்கு குறையாமல் ஏவப்படுகின்றது.இன்றுதான் மட் வெபர் மைதனத்தில் இருந்து மல்ரிபரல் ஏவப்படுவதைக் கண்டேன் பார்கவே பயமாக இருக்கின்றது.ம் படுவாங்கரை சனம் முழுவதும் இடம்பெயர்ந்துள்ளனர்.வீதிகளில் மரநிழல்களில் உடுத்த உடுப்புடன் கையேந்தி திரியும் இவர்களை கண்டால் பரிதாபமாக இருக்கின்றது.வேறென்ன சொல்ல--கலாநிதி 16:45, 8 மார்ச் 2007 (UTC)

கலாநிதி நான் சிறுவயதில் அப்பா மட்டகளப்பில் வேலைசெய்த்தால் மட்டகளப்பிற்கு் பாடசாலை விடுமுறைக்கு வருவதுண்டு. வெபர் மைதானத்தில் நான் சிறுவயதில் விளையாடித் திரிந்த மைதானமே இப்போது இது மனிதாபிமானம் அற்ற வேலைகளுக்குப் பயன்படுவது வருத்ததை அளிக்கின்றது. நிலைமை மேலும் மோசமடையக் கூடும் எச்சரிக்கையாக இருக்கவும். --Umapathy 02:26, 9 மார்ச் 2007 (UTC)

தொடர்ந்து இங்கு இவ்விடயம் தொடர்பில் கருத்துப்பரிமாறுவது உங்களுக்கு உடன்பாடோ தெரியவில்லை .இன்றைய நிலைமை பற்றிய செய்தி பார்க்க [2] மேலும் செல்போன் செயலிழப்பு பற்றி இன்றைய வீரகேரி நாளிதழில் கட்டுரை பார்க்க கிடத்தது அதிலும் இதுபற்றி தெளிவற்றே எழுதப்பட்டுள்ளது. --கலாநிதி 17:16, 9 மார்ச் 2007 (UTC)

கலாநிதி, அம்பாறையில் இருந்து டயலாக் Signal Strength மட்டக்களப்பிற்குப் ஓரளவு வேலைசெய்யும். சுமார் இலங்கை ரூபார் 750 வரையில் விலைமதிப்பான இந்த ஆண்டனாவைப் பொருத்தினால் மட்டக்களப்பிலும் வேலைசெய்யும். இவை பொதுவாக செல்பேசிகளை விற்கும் கடைகளில் கிடைக்கும். இவை டிவி ஆண்டானாக்களைப் போலல்லாமல் 90 பாகையினால் திருப்பியடி (காட்சியளிக்கும் (Points vertically unlike TV which points Horizontally) டிவி ஆண்டனாவைப் போலல்லாமல் உள்ளே எந்தவொரு Electronic Parts உம் கிடையாது. "If you have the will there is a way".

ஆம் வீரகேசரி பத்திரிகை பார்த்தேன். கட்டுரையை எழுதியவர் இலங்கையில் இருந்துதான் எழுதுகின்றார் என்ற சந்தேகம் எனக்கு ஏதோ செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தமாதிரிக் கட்டுரை ஒன்று. வீரகேசரியின் பத்திரிகைத் தரம் வெகுவாகக் குறைந்துவிட்டது. தினக்குரல் ஒரளவு தரமான பத்திரிகை அதையும் தடைசெய்துவிட்டார்கள். --Umapathy 17:46, 9 மார்ச் 2007 (UTC)

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என்ன சொன்னாலும் அது தப்பாக தெரியும். அமைதி. --Natkeeran 18:21, 9 மார்ச் 2007 (UTC)

நன்றி உமாபதி நான் செல்போன் பாவிப்பதில்லை எனது நண்பர்கள் பலரிடமுண்டு உங்கள் பரிந்துரைபற்றி அவர்களிடம் கூறுகின்றேன்.--கலாநிதி 16:44, 10 மார்ச் 2007 (UTC)

கலாநிதி, செல்போன் இல்லாமல் இருப்பதும் ஒருவகையில் நல்லதுதான். :) --Umapathy 16:47, 10 மார்ச் 2007 (UTC)

SVG & Arc VieW

தொகு

இலங்கை நிலமை மிக மோசமக உள்ளதை இலங்கையில் விடுமுறையை களித்தபோது கண்டேன் உணர்ந்தேன், தொடர்ந்து எப்படி தான் தமிழர்கள் இலங்கையில் இருக்க போகிறார்களோ? எப்படியாயினும் கவனமாக இருகவும். ஒரு சிறிய கேள்வி முடிந்தால் பதில் தரவும் Arc VieW3.2 இன் மூலம் எவ்வாறு SVG படிமங்களை உருவக்க முடியும்?--டெரன்ஸ் \பேச்சு 14:46, 16 மார்ச் 2007 (UTC)

ஆர்க்வியூ 3.2a இல் இந்த வசதி கிடையாது ஆர்க்ஜிஐஎஸ் SVG கோப்பாகச் சேமிக்கும் வசதியுண்டு. Internet Explorer 6 உம் அதற்கு முந்தைய பதிப்புக்களிலும் SVG ஐ ஆதரிக்காது எனினும் மீடியாவிக்கி மென்பொருளானது இதை Internet Explorer இலும் சரியாகக் காட்டக்கூடியதாக மாற்றியமைக்கும்.

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இல் அண்மையில் கலந்து கொண்டபோது ஆர்க்ஜிஐஎஸ் மென்பொருளை ஒருவருடத்திற்கு மாணவருக்கான இலவச அனுமதியைத் தருவதாக இதன் இலங்கைக்கான விநியோகஸ்தரான திரு தில்லை நடராஜா குறிப்பிட்டிருந்தார்.

நேரம்கிடைத்தால் http://gislanka.googlepages.com ஐயும் ஒருதடைபாருங்கள். http://gislanka.com ஐயும் பதிவுசெய்துள்ளேன் வேலைகள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை.

இலங்கை நிலவரம் குணப்படுத்தமுடியாத புற்றுநோய் போல பெருக்கிக்கொண்டேபோகின்றது. "வெள்ளம் தலைக்கேறிய பின்பு சாண் ஏறினால் என்ன முழம் ஏறினால் என்ன" என்றமாதிரி நிலையே இங்கு காணப்படுகின்றது.--Umapathy 15:22, 16 மார்ச் 2007 (UTC)

பாராட்டு

தொகு

உமாபதி நீங்கள் திருமணச் சடங்கு என அழகான ஒரு நீண்ட கட்டுரை எழுதியுள்ளீர்கள். என் வாழ்த்துக்கள், நன்றிகள். சில திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளன (பொது நோக்கு, வேறுபாடுகள் குறித்தல் முதலியன) ஆனால் அவைகளை எளிதாகச் செய்யலாம். மீண்டும் என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.--செல்வா 12:36, 19 மார்ச் 2007 (UTC)

நன்றி செல்வா, இக்கட்டுரையின் பெரும்பாலான் விடயங்கள் அமரர் கோணாமாமலை தங்கவேல் (1937-2005) அவர்களின் ஞாபகார்த்த மலரில் இருந்தே எடுக்கப்பட்டன. கட்டுரையின் தலைப்பையும் மாற்றவேண்டும் என்று நினைக்கின்றேன் (பேச்சுப் பக்கத்திற்கு அமைவாக). ஜிமெயில் கட்டுரைக்குப் பின்னர் இது ஓர் நீண்ட கட்டுரை :). கட்டுரை இன்னமும் முடிவடையவில்லை விரைவில் முடிக்கப் பார்க்கின்றேன். --Umapathy 23:52, 19 மார்ச் 2007 (UTC)

உமாபதி, இக்குறிப்பை தயந்து ஆரோக்கியமான முறையில் எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எழுதும் பொழுது சில இடங்களில், கால்புள்ளி முற்றுப்புள்ளி போன்ற நிறுத்தக்குறிகளை தகுந்த முறையில் இடுவதில்லை. தமிழில் இது சற்று சிக்கலானதுதான். இருப்பினும் இதில் கவனம் செலுத்தினால் உங்கள் எழுத்து மேலும் முன்னேறும். நன்றி. --Natkeeran 14:25, 23 மார்ச் 2007 (UTC)

நன்றி நற்கீரன், காற்புள்ளி முற்றுப்புள்ளி பற்றி கட்டுரை ஒன்று விக்கிப்பீடியாவில் இருந்தால் என்போன்றவர்களுக்கும் மேலும் தமிழைக் கற்பவர்களுக்கும் மிகவும் உதவியாய் இருக்கும். --Umapathy 14:32, 23 மார்ச் 2007 (UTC)

கட்டாயம் இவை பற்றியெல்லாம் கட்டுரைகள் வேண்டும். கிரேக்க மொழியில் கி.மு 500 ல் இருந்தும், இலத்தீன் மொழியில் கி.மு 100 ல் இருந்தும், ஆங்கிலத்தில் 1660 முதல் நிலைப்பெற்றும் இருப்பது பற்றிய வரலாறுகள் எழுதவும் வேண்டும். ஆல்டஸ் மனுட்டியஸ் பற்றியும் கட்டுரைகள் வேண்டும். தமிழில் எப்பொழுதிருந்து இவ்வகைக் குறிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன என்னும் செய்திகள் சேகரிக்க வேண்டும். எழுத எத்தனைக் கட்டுரைகள் உள்ளன!!--செல்வா 14:46, 23 மார்ச் 2007 (UTC)

எனது அப்பப்பா சேகரித்த (யுத்தத்தினால் இவை அழிந்து விட்டன. படிமம்:Christian prayers in tamil on palm leaves.jpg இலும் இவற்றைக்காணமுடியவில்லை) சில பனையோலையால் எழுதப்பட சுவடிகளில் நிறுத்தற் புள்ளிகள் இருந்ததாக ஞாபகம் இல்லை. அக்காலத்தில் பனையோலைகளில் எழுதும்போது குற்றினால் ஓலை கிழிந்துவிடும் என்பதற்காக அவ்வாறு எழுதவில்லை என்று கர்ணபரம்பரைக்கதைகளூடாக அறிகின்றேன். இப்புள்ளிவழக்கானது பெரும்பாலும் அச்சியந்திரங்கள் வந்ததும் வாசிப்பதை இலகுவாக்க கொண்டுவந்திருக்கவேண்டும் என்று நினைக்கின்றேன்.சிவபெருமானைப் பார்த்து "நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றம் தான்" நன்முருகாற்றுப்படையை அருளிய நற்கீரர் சொன்னதாக ஞாபகம். உமாபதியை பார்த்து இப்போது நற்கீரனும் அதைத்தான் சொல்கின்றார்.:) எழுத்துக்களை மேம்படுத்த முயற்சிக்கின்றேன்.--Umapathy 07:34, 24 மார்ச் 2007 (UTC)

தன் தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புகள் பற்றி அபிராமி விளக்குகிறார்

வருக, தமிழ் விக்கிப்பீடியாவிற்கு! நீங்கள் உங்களுக்கென்று ஒரு பயனர் கணக்கு துவக்கி தொடர்ந்து பங்களித்தால் நன்றாக இருக்கும். பயனர் கணக்கு உருவாக்குவதால் என்ன நன்மை என்று அறிய இப்பக்கத்தைப் பாருங்கள்.

விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், தயவுசெய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:-


தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். புதுக்கட்டுரை ஒன்றைத் தொடங்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள். நன்றி.


--Umapathy 07:20, 29 மார்ச் 2007 (UTC)

Thank you for your offer, but I don't speak a single word of Tamil... --200.106.209.30 01:32, 30 மார்ச் 2007 (UTC)

உரை நடை

தொகு

உமாபதி, மிதிவெடி அபாயக் கல்வி குறித்த உங்கள் கட்டுரை புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமான நிலையில் உரைநடைச் சிக்கலாக இருந்தது. தேவையான மாற்றங்களைச் செய்துள்ளேன். தயவுசெய்து மாற்றங்களைக் கவனிக்கவும். உங்களின் பிற கட்டுரைகளிலும் உரைநடையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தலாம் என்று வேண்டுகிறேன். நன்றி--ரவி 12:29, 3 ஏப்ரல் 2007 (UTC)

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ரவி. மேலும் மேம்படுத்த முயற்சிக்கின்றேன். --Umapathy 13:42, 3 ஏப்ரல் 2007 (UTC)

Tamil Language article is to be removed of its FA, even after the extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language

--Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC)

I really appreciate the work you have done for Tamil wikipedia and it’s our duty to maintain the article at FA (Featured Article) status). If possible could you please when at least approximately looked very well? This will help me to compare the differences and react according to the changes. Thanks in advance. --Umapathy 20:53, 8 ஏப்ரல் 2007 (UTC)

Umapthay, the current version is fine. If possible improve the technical aspects such as proper referencing format. --Natkeeran 22:48, 8 ஏப்ரல் 2007 (UTC)

ஆத்மாவா, ஆன்மாவா

தொகு

உமாபதி, ஆன்மா என்ற் தலைப்பில் ஒர் பக்கம் எழுதிக்கொண்டிருக்கிறேன். அது ஆத்மாவா, ஆன்மாவா? அத்வைதம் பக்கத்தை பார்க்கவும். ஆத்மாவை ஆன்மாவாக்கினால், பரமாத்மாவும் பரமான்மாவாகும். அது எனக்கு சரியாகப்படவில்லை. What do you think?

--Profvk 18:00, 10 ஏப்ரல் 2007 (UTC)

தயவு செய்து வாக்களிக்கவும்

தொகு

பார்க்க - http://meta.wikimedia.org/wiki/Requests_for_new_languages/Wikisource_Tamil --ரவி 12:50, 21 ஏப்ரல் 2007 (UTC)

ஏற்கனவே வாக்களித்துடன் சிறு திருத்தமொன்றையும் மேற்கொண்டுள்ளேன். --Umapathy 12:58, 21 ஏப்ரல் 2007 (UTC)

உங்கள் கவனிக்க மறந்து விட்டேன் :( --ரவி 13:42, 21 ஏப்ரல் 2007 (UTC)

Wikipedia:எழுத்துப் பெயர்ப்பு முறைகள்

தொகு

Wikipedia:எழுத்துப் பெயர்ப்பு முறைகள் தங்களது கவனத்தை இந்த பக்கத்துக்கு வேண்டுகிறேன். முடியுமான போது வந்து பங்களிக்கவும்.--டெரன்ஸ் \பேச்சு 02:03, 26 ஏப்ரல் 2007 (UTC)

நன்றி

தொகு

பாட் பற்றிய பாராட்டுக்கு நன்றி உமாபதி --டெரன்ஸ் \பேச்சு 04:58, 1 மே 2007 (UTC)Reply

செயற்திட்டங்கள் பற்றிய குறிப்புக்கள்

தொகு

உங்களுடைய பல தரப்பட்ட செயற்திட்டங்கள் பற்றிய குறிப்புக்கள் தொடர்ந்து கிடைக்கின்றன. இயலும் பொழுது பங்களிக்க முயல்கிறேன். நன்றி. --Natkeeran 11:42, 30 ஜூன் 2007 (UTC)

நீண்டநாட்களாக நிறைவேறாது கனவாக மாத்திரமே இருப்பது பயர்பாக்ஸ் உலாவியின் தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி. இது குறித்துப் பல உரையாடல் முன்னமும் இடம்பெற்றுள்ளன ஆயினும் நாம் இதுவரை இலக்கினை எட்டவில்லை. எட்டுவோம் என்ற நம்பிக்கையுண்டு தொடர்ந்தும் முயல்வோம். "முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்" இல்லையா. --Umapathy 13:46, 30 ஜூன் 2007 (UTC)

பெரியபுராணம் காட்டும் பெண்கள்

தொகு

காரைக்காலம்மையார் மங்கயற்கரசியார் இசைஞானியார் திலகவதியார்

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60402056&format=print

--Natkeeran 11:27, 2 ஜூலை 2007 (UTC)

பாராட்டுகள்

தொகு

உமாபதி, நீங்கள் அருமையாக நாயன்மார்களைப் பற்றிய கட்டுரைகளைத் தொகுத்து வருகின்றீர்கள்! என் நெஞ்சார்ந்த பாராட்டுகள். சிலவற்றையே படித்தேன், ஆனால் அவை நன்றாக எழுதியிருப்பது கண்டு மகிழ்ந்தேன். கட்டாயம் நம் தமிழ் விக்கியில் இருக்க வேண்டியவை. பெரிய புராணத்தில் இருந்து ஒரே ஒரு பாட்டேனும் அல்லது ஓரிரு வரிகள் ஒவ்வொரு நாயன்மாருக்கும் சேர்த்தால் நன்றாக இருக்கும். ஆனால் இது பின்னர் செய்துகொள்ளலாம். நன்றி.--செல்வா 12:34, 4 ஜூலை 2007 (UTC)

நன்றி செல்வா, நாயன்மார்களைப் பற்றிய கட்டுரை யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையத்தில் உள்ள செல்லப்பா சுவாமிகளால் எழுதப்பட்டதைத் தழுவியே எழுதப்பட்டுள்ளது. எனவே செல்லப்பாசுவாமிகளைப் பாராட்டுவதே கூடுதல் பொருத்தமாக இருக்கும். 63 நாயன்மார்கள் கட்டாயம் விக்கிப்பீடியாவில் இருக்கவேண்டிய ஒன்று. நேரங்கிடைக்கும்போது எழுதி முடிக்கப்பார்க்கின்றேன். --Umapathy 09:38, 8 ஜூலை 2007 (UTC)

மின்னஞ்சல்

தொகு

விரைவில் தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன். அலுவலகத்தில் எனக்கு மற்ற மின்னஞ்சல்களுக்கு அணுக்கம் இல்லை.--Sivakumar \பேச்சு 17:20, 12 ஜூலை 2007 (UTC)

அவசரம் இல்லை, செல்வா அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றில் உங்களின் மின்னஞ்சல் இல்லை என்று தெரிவித்திருந்தார். --Umapathy 00:51, 13 ஜூலை 2007 (UTC)

Greetings,

Could you please help me write a stub http://ta.wikipedia.org/wiki/Back_To_Jerusalem_movement - just a few sentences based on http://en.wikipedia.org/wiki/Back_To_Jerusalem_movement ? Just 2-5 sentences would be sufficient enough. Please. --Jose77 09:53, 13 ஜூலை 2007 (UTC)

My mobile (மோபிட்டல்)is out of order from yesterday. The only working line is the my CDMA Phone. Probably some one able to help you than me. Right now not in a position to help you --Umapathy 14:49, 13 ஜூலை 2007 (UTC)

பிரித்தானியா கலைக்களஞ்சியத்தில் பிழைகள்

தொகு

உமாபதி, நீங்கள் ஆலமரத்தடியில் கொடுத்திருந்த பிரித்தானியா கலைக்களஞ்சியத்தில் உள்ள பிழைகள் பற்றிய தகவல் மிகவும் பயனுடையது. நன்றி.--செல்வா 13:19, 25 ஜூலை 2007 (UTC)

நன்றி செல்வா, இதுபோன்ற தகவல்கள் நாம் செய்யும் முயற்சி மிகவும் பயனுள்ளது என்பதனை உறுதிப்படுத்துகின்றது. "ஆயிரம் வேரைக் கண்டவன் அரை வைத்தியன்" என்ற பழமொழிபோல விக்கிப்பீடியாவிலும் தொடர்ச்சியாகப் பங்களிப்பதன் மூலம் ஆர்க்கபூர்வமாக முன்னேறலாம் என்று நினைக்கின்றேன். பொறுத்திருந்து பார்ப்போம். --Umapathy 16:58, 28 ஜூலை 2007 (UTC)

விடாப் பிடியாக நின்று, பூர்த்தி நிலைக்கு வந்துகொண்டிருக்கின்றீர்கள். விரைவில் படங்கள் :- ) . இவர்கள் பலரின் கதைகளை சிறுவயதில் சைவநெறி பாடத்தில் படித்தேன். த.வி வில் இப்படி தொகுப்புகள் முழுமையாக இடம்பெறுவது சிறப்பு. நன்றி. --Natkeeran 15:26, 28 ஜூலை 2007 (UTC)

நன்றி நற்கீரன், விடாப்பிடியாக எந்த இக்கட்டிலும் நின்று இறைவனை வழிபட்டு நாயன்மார்கள் ஆகிய மாதிரித்தான் நாமும் விடாப்பிடியாக இருந்தால்தான் வெல்லமுடியும் இல்லையா :). நாயன்மார்களின் விக்கிரகங்கள் ஈழத்துச் சிதம்பரமான காரைநகர் சிவன்கோயிலில் உண்டு. சில படங்கள் இணையத்திலும் உண்டும் fairuse அடிப்படையில் பதிவேற்றுவதாக எண்ணம். 63 நாயன்மார்களைப் போன்றே இதுவும் எனது பேச்சுப்பக்கத்தில் 63 ஆக அமைவது ஒரு சிறப்பு :)--Umapathy 16:48, 28 ஜூலை 2007 (UTC)
63 நாயன்மார்களின் விக்கிரகங்கள் நயினா தீவு ஆலயத்திலே உண்டு காரைநகர் சிவன் கோயிலில் அல்ல. நன்றி உமாசுதன் மேற்படி தகவலை பனாராமியா தளத்தினூடகத் பகிர்ந்தற்கு நன்றி. விக்கிப்பீடியா தளத்தில் படத்தைப் பதிவேற்றினால் நன்று--Umapathy 02:42, 4 ஆகஸ்ட் 2007 (UTC)
இங்கும் ஒரு கோயில் உண்டு. ஆனால் படம் எடுக்க விட மாட்டார்கள். அது ஒரு தனியார் கோயில். ஆமாம், அப்படியும் இங்கு கோயில்கள் உண்டு. மேலும் அதைப் பற்றி இங்கு பேச விரும்பவில்லை. சைவ சமயம் பற்றி ஒரு தனிமடல் இடுகின்றேன். --Natkeeran 17:01, 28 ஜூலை 2007 (UTC)
2002 ஆம் ஆண்டளவில் நாயன்மார்களின் விக்கிரங்களைச் சாதாரண கமராவில் படம் எடுத்தேன் படம் அவ்வளவாக வாய்க்கவில்லை தவிர புகைப்படம் இப்போது என்னிடம் இல்லை. படம் எடுக்கும் பாம்பையே தலையில் வைத்திருக்கும் சிவபெருமானின் கோயிலில் புகைப்படம் எடுப்பதற்குத் தடையா?. இங்கும் சில கோயில்களில் தடை உண்டு ஆயினும் இப்படங்கள் பொதுமக்கள் நலனிற்காகக் எழுதும் கட்டுரைக்காக என்பதனால் எனக்கு அனுமதி தந்தார்கள். எடுத்துக்காட்டாக வற்றாப்பளை அம்மன். நீங்களும் முயன்று பாருங்கள் அனுமதி கிடைக்கக்கூடும். --Umapathy 17:11, 28 ஜூலை 2007 (UTC)
அடுத்த முறை சோழவந்தான் செல்லும்போது அருகிலுள்ள ஏடகநாதர் கோயிலில் படம் எடுக்க முயல்கிறேன். ஏடகநாதர் கோயில் சிறப்பு பெற்றது, மாணிக்கவாசகர் அருளிய நமச்சிவாய வாழ்க, நாதன் தாழ் .." என்று துவங்கும் பாடலை சமணர்களுடனான போட்டியில் மதுரையில் வைகையில் விட்டதும் அது ஆற்றை எதிர்த்து இங்கு வந்து கரை சேர்ந்ததால் இவ்வூர் "திரு ஏடு அகம்" எனப் பெயர் பெற்றது என்பர். -- Sundar \பேச்சு 09:01, 30 ஜூலை 2007 (UTC)
நன்றி சுந்தர் இயலுமென்றால் எடுக்கவும், நானும் மீண்டும் புகைப்படம் எடுக்கும் பணிகளைத் தொடங்குவதாக இருக்கின்றேன். --Umapathy 04:03, 31 ஜூலை 2007 (UTC)

Artur Balder

தொகு

Maybe u can help me to traslate this article, its very easy for u, good for Wiki. Thanks!!--Luitan 14:03, 5 ஆகஸ்ட் 2007 (UTC)

http://www.thevaaram.org/default.asp --Natkeeran 15:47, 12 ஆகஸ்ட் 2007 (UTC)

நன்றி நற்கீரன், மிகவும் பயனுள்ளதோர் இணைப்பு, --Umapathy (உமாபதி) 16:20, 12 ஆகஸ்ட் 2007 (UTC)

படங்கள் அருமை

தொகு

ஈழத்தில் கோயில்கள் நல்லூர் போன்றே மூன்று வளைவுகள் அல்லது கோணங்களுடன் வரவேற்ப்பு மண்டபங்கள் அமையும் பாணி ஈழத்துக் குரியதா, அல்லது அனைத்து கோயில்லகளுக்கும் பொதுவா? மயுரநாதனிடம் கேட்கவேண்டும்...--Natkeeran 16:07, 8 செப்டெம்பர் 2007 (UTC)Reply

ஊக்கத்திற்க்கு நன்றி!

தொகு

நன்றி உமாபதியவர்களே! எனக்கும் சிறுவயதிலிருந்தே இயற்பியல் பிடித்தவொன்றுதான், இங்கு (விக்கிப்பீடியாவில்) இயற்பியலை கற்கவும் கற்றதை பிறருக்குணர்த்தவும் ஆகிய இரண்டு வாய்ப்புகளுமே கிடைத்ததில் எனக்கும் பெருமகிழ்சிதான் :-) -நரசிம்மவர்மன்10 06:13, 25 செப்டெம்பர் 2007 (UTC)Reply

உழுத்தங்களி?

தொகு

பூப்புனித நீராட்டு விழா இக்கட்டுரையில் உழுத்தங்களி எனக் குறிபிடப்பட்டுள்ளது உளுந்தில் செய்யப்படும் களியையா? -நரசிம்மவர்மன்10 09:12, 2 அக்டோபர் 2007 (UTC)Reply

மேலும் சிலத் தெளிவுகள்

தொகு

உணவு முறை என்ற உபதலைப்பில் உள்ள நான்காம் சொற்றொடரை சற்று நோக்க:

இக்காலத்தில் இலகுவாக சமிபாடடையக் (ஜீரணிக்கக்) கூடிய ஊட்டநலன் (போசாக்கு) உள்ள சத்துள்ள உணவுகளைக் கொடுக்கவேண்டும்.

சத்துள்ள, ஊட்டநலன் உள்ள இரண்டும் ஒரே பொருள் தருபவை தானே? சத்துள்ள என்பதை மட்டும் குறிப்பிட்டால் போதுமல்லவா?

சாமர்த்தியச் சடங்கு -இவ்வுபதலைப்பு சரியா? அல்லது இஃது சமார்த்தியச் சடங்கா?

கட்டுரையில் சிலவிடங்களில் மாமியார் என்றும் மாமி என்றும் குறிக்கப்பட்டுள்ள உறவுகள் வேறுவேறா அஃதில் மாமன் மனைவி என்ற ஒரே முறையைதானா? (பொதுவில் மாமன் மனைவியை மாமி என்றும், கனவனின் தாயை மாமியார் என்றும் குறிப்பிடுவது இங்கே வழக்கு) -நரசிம்மவர்மன்10 09:48, 2 அக்டோபர் 2007 (UTC)Reply

முதற் பக்கம்

தொகு

மாற்றம் நன்றாக படுகின்றது. விக்கிப்பீடியாவிற்கு நல்வரவு. என்று மாற்றலாமா.--Natkeeran 23:50, 6 அக்டோபர் 2007 (UTC)Reply

ஆம் நற்கீரன் நிச்சயமாக :) --Umapathy (உமாபதி) 00:10, 7 அக்டோபர் 2007 (UTC)Reply
I could read அண்ணாமலைப் பல்கலைக்கழகம் = annamalai palkalaikkazhakam isnt?? Vssun --Vssun 05:38, 15 அக்டோபர் 2007 (UTC)Reply
yeah . I have a left a messge in your Malayaram wikipeida Talk pages as well.  :) --Umapathy (உமாபதி) 09:02, 15 அக்டோபர் 2007 (UTC)Reply

இணையத்தில் தமிழில் (தலைமைப்) பகுப்புப் பெயர்கள் (IDN)

தொகு

உமாபதி என்னுடையதும் கோபி என் பேச்சுப் பக்கத்தில் சொன்ன அதே அமைப்புகள் கொண்டவைதான். நான் விஸ்ட்டாவை இன்னும் ஏற்றவில்லை. --செல்வா 12:12, 17 அக்டோபர் 2007 (UTC)Reply

தகவலுக்கு நன்றி --Umapathy (உமாபதி) 18:24, 17 அக்டோபர் 2007 (UTC)Reply

மறு: சுந்தர்பாட்

தொகு

சுந்தர்பாட் தொடர்பிலும் பிற நுட்ப விடயங்களிலும் விழிப்புடன் இருப்பதற்கு நன்றி.

சுந்தர்பாட் ஒருங்குறித்தரத்தில் அகரமுதலி வரிசையில் த.வி. கட்டுரைகளை அணுகி புதிய விக்கியிடை இணைப்புக்களை அறிகிறது. பின்னர் ஆ.வி. கட்டுரைகளிலிருந்து இணைப்பு தருகிறது. (பிற விக்கிக்களிலிருந்து இணைப்பு தருவது அதன் செயல்வேகத்தைக் குறைத்துவிடும் என்பதால் தற்போது இருக்கும் இணைப்புக்களில் பெரிய விக்கியில் இருந்து மட்டும் இணைப்பு தருமாறு செய்துள்ளேன். அங்கிருந்து மற்று தானியங்கிக்கள் த.வி. இணைப்பைப் பெற்றுக் கொள்ளும்.)

இவ்வாறு அகரவரிசையில் பல நாட்கள் வரை கட்டுரைகளை அணுகி ஒரு சுழற்சி முடிகிறது. மீண்டும் முதலில் இருந்து துவங்க வேண்டும். என்னால் இதை விட்டு விட்டு தான் இயக்க முடிகிறது. அதனால் ந்கர வரிசையில் அது இயங்கிக் கொண்டிருக்கையில் உருவாக்கப்பட்ட நோர்ட்டன் கட்டுரை முதலில் கையாளப்பட்டு விட்டது. இனிதான் லகரத்திற்கு வரும். நான் நாளை முழுவதும் அதை இயக்குகிறேன், ஒரு சுழற்சி முடிகிறதா எனப் பார்ப்போம். -- Sundar \பேச்சு 13:30, 22 அக்டோபர் 2007 (UTC)Reply

த. வி.

தொகு
  • http://sathiyak.blogspot.com/2007/10/blog-post_29.html இந்தக் கட்டுரையிலும் த.வி வின் தாக்கம் கண்கூடு. தமிழ் கருத்துப்புலத்தில் த.வி பங்களிப்பும் பொறுப்பும் கவனிப்பு பெற்று வருவதையே இவை காடுகின்றன. எனவே, எமது நடுநிலைமை, விடய நோக்கு, அறிவுசார் மதிப்பீடு போன்ற கொள்கைகளை நாம் இயன்றவரை பேணவேண்டும். பக்க சார்பினை, கருத்து இழுப்பறியை இயன்றவரை தவிர்க்க வேண்டும். மேலும், எமது கண்ணோட்டங்களைப் பற்றிய தெளிவு வேண்டும். நன்றி. --Natkeeran 16:19, 4 நவம்பர் 2007 (UTC)Reply

en:User:Thamizhan

Return to the user page of "உமாபதி/பரண் 1".