மொபிடெல்

(மோபிட்டல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மொபிடெல் இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையத்தின் GSM மற்றும் Analog சேவையை வழங்கும் நிறுவனம் ஆகும். இது இலங்கையில் 600 இற்கும் மேற்பட்ட கோபுரங்களைக் கொண்டு ஒரு பரந்த வலையமைப்பாக விளஙகுகின்றது. மொபிட்டலின் கட்டணம் ஏற்கனவே செலுத்தப்பட்ட (Prepaid) இலக்கங்கள் 0713- என்றவாறும் அழைப்பின் பின்னர் கட்டணங்களை செலுத்தும் (post paid) இலக்கங்கள் 0714-, 0716- என்றவாறும் ஆரம்பிக்கும். இது அழைப்பு நெரிசல் ஓரளவு குறைவான வலையமைப்பாகும்.

SLTMobitel
வகைவரையறுக்கப்பட்டது.
நிறுவுகை1993
தலைமையகம்கொழும்பு
தொழில்துறைநகர்பேசி
உற்பத்திகள்நகர்பேசி வலையமைப்பு சேவைவழங்குனர்
இணையத்தளம்மோபிட்டல்

இலங்கையில் உள்ள மொத்த நகர்பேசிப் பாவனையாளர்களில் 24% மொபிடல் வாடிக்கையாளர்கள் ஆகும். மொத்த வாடிக்கையாளர்கள் தொகை 3.382 மில்லியனாகும் [1].


விழிப்பூட்டும் குறும்செய்தி

விழிப்பூட்டும் குறும்செய்தி (SMS Alert) சேவைகள் இரண்டு சேவைவழங்குனரூடாக இடம்பெறுகின்றது. ஒன்று லங்காபுவத் செய்திச்சேவை மற்றையது ஜேஎன்டபிள்யு செய்திச்சேவை. இதைப் பெறுவதற்கு இரண்டு சேவைகளைப் பெறுவதற்கு REG எனக் குறுஞ்செய்தியினைத் தட்டச்சுசெய்து 2233ஜேஎன்டபிள்யு செய்திச்சேவைக்கும் 2277 ஐ லங்காபுவத் செய்திச்சேவைக்கும் பாவிக்கலாம். இச்சேவை தேவையற்றது எனின் UNREG எனத்தட்டச்செய்து மீண்டும் அதே இலக்கத்திற்கு அனுப்புவதன் மூலம் விழிப்பூட்டும் குறுஞ்செய்திச் சேவையில் இருந்து விடுபடலாம். இச்சேவைக்கு மாதம் ஒன்றிற்கு இலங்கை ரூபாயில் 30 வரை வசூலிக்கப்படும்.

அகலப்பட்டை

மொபிடல் நிறுவனம் 3ஜி, 4ஜி தொழில் நுட்பம் மூலம் அகலப்பட்டை சேவையை வழங்குகின்றது. 3ஜி தொழில்நுட்பம் மூலம் அகலப்பட்டை வழங்க இலங்கையின் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆரம்பித்தபோது மொபிடல் நிறுவனத்தில் சேவை பலராலும் மெச்சப்பட்டது. ஆனாலும் காலப்போக்கில் சேவையின் தரம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது எனப் பயனர்கள் முறையிடத் தொடங்கியுள்ளனர் [2][3].

அதிகாலை இணைப்புக்கள்

மோபிட்டல் அதிகாலை 0 மணிமுதல் 6 மணிவரை கட்டணம் குறைந்த இணைப்புக்களை வழங்கி வருகிறது.

மாதக் கட்டணம் (இலங்கை ரூபாயில்) அதிகாலை இலவசத் தரவு அளவு உருவாக்க இல்லாமற் செய்ய
50 1 ஜிபி act op50 dct op50
140 3 ஜிபி act op140 dct op140
350 8 ஜிபி act op350 dct op350
600 15 ஜிபி act op600 dct op600

ஜிபிஆரெஸ்

  • சேவர் முகவரி (IP address) - 192.168.050.163
  • புளொக்சி சேவர்: 192.168.050.163 போட் 8080
  • பயனர் பெயர்: கிடையாது
  • கடவுச் சொல்: கிடையாது

வெளியிணைப்புக்கள்

உசாத்துணைகள்

  1. "Broadband Internet users seen at 4 milion in 4 years". Archived from the original on 2010-08-05. பார்க்கப்பட்ட நாள் 2010-08-04.
  2. Mobitel HSPA Betrayed Me! பரணிடப்பட்டது 2010-07-23 at the வந்தவழி இயந்திரம்(ஆங்கில மொழியில்)
  3. Success Kills Mobitel HSDPA


இலங்கையின் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள்  
லங்காபெல் | ஹட்ச் | எட்டிசலட் | ஸ்ரீ லங்கா டெலிகொம் | டயலொக் | மோபிட்டல் | எயார்டெல் | டயலொக் பிராட்பேண்ட் வலையமைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொபிடெல்&oldid=3569048" இலிருந்து மீள்விக்கப்பட்டது