எட்டிசலட்

Sri Lankan Experience to Mobile Telecommunications


எட்டிசலட் (Etisalat இலங்கை) (2007 வரை செல்டெல் (Celltel) என்றும், 2007 மற்றும் 2010 இடையே டிகோ (Tigo) என்றும் அழைக்கப்பட்டது) இலங்கையில் இயங்கும் ஒரு மொபைல் தொலைத்தொடர்பு நெட்வொர்க் ஆகும். அது தற்போது ஐக்கிய அரபு எமிரேட்டில் சார்ந்த தொலை தொடர்பு நிறுவனம் எடிசலட் இக்கு சொந்தமானது. எட்டிசலட் இலங்கையில் பிப்ரவரி 2012 இறுதியில் 4.2 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருந்தனர். இந்த நிறுவனம் தெற்கு ஆசியாவில் முதல் முறையாக எச்எஸ்பிஏ+ (HSPA+) சேவைகள் 15 ஆகஸ்ட் 2012 முதல் வழங்க போவதாக அறிவித்தது.

எட்டிசலட் லங்கா (பிரைவேட்) லிமிடெட்.
தலைமையகம்கொழும்பு, இலங்கை
தொழில்துறைதொலைத்தொடர்பு
உற்பத்திகள்மொபைல் தொலைத்தொடர்பு,இணைய சேவை
தாய் நிறுவனம்எமிரேட்ஸ் தொலைத்தொடர்புகள் கார்ப்பரேஷன் - எட்டிசலட்
இணையத்தளம்http://www.etisalat.lk

செல்டெல் மற்றும் டீகோ

தற்போது எடிசலட் ஆக கருதப்படும் மொபைல் நெட்வொர்க் ஜூன் 1989 இல் செல்டெல் (Celltel) எனும் பெயருடன் மோட்டோரோலா டிஏசிஎஸ் (TACS) நிறுவனத்தால் இலங்கையின் முதலாவது செல்லுலர் வலையமைப்பகாக ஆரம்பிக்கப்பட்டது[1] பின்னர் 2007 ஆம் ஆண்டு மில்லிகாம் இன்டர்நேஷனல் (Millicom International) நிறுவனத்திற்கு கை மற்றம் செய்யப்பட்டு டிகோ என பெயர் மாற்றபட்டது.

சந்தை விரிவாக்கம்

மார்ச் 2006 இல் இருந்து அக்டோபர் 2006 வரையிலான 8 மாதகாலப் பகுதியில் 500 தொலைத்தொடர்பாடற் கோபுரங்களை நிர்மாணித்துள்ளது. இதுவரை மொத்தம் 1100 தகவல் கோபுரங்களைக் கொண்டுள்ள எடிசலாட் எதிர் காலத்தில் $138 மில்லியனை செலவு செய்து மேலும் 480 தகவல் கோபுரங்களை அமைக்குவுள்ளது [2]. எட்டிசலட் 2.325 மில்லியனுக்கும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளதுடன் இது நகர்பேசி சந்தையில் 17% என்பதையும் குறிப்பிடவேண்டும்[3].

எடிசலாட் இலங்கையில் கூகிள் காலண்டரூடாகக் குறுஞ்செய்திகள் அனுப்பும் வசதியுள்ள வலையமைப்புக்களுள் ஒன்றெனினும் இதில் இடத்தைக் காட்டும் (அதாவது எந்தக்கோபுரத்திற்கு அருகில் நிற்கின்றீர்கள் எடுத்த்துக் காட்டாக திருகோணமலை) என்னும் வசதி இன்னமும் கிடையாது.

சேவைகள்

எட்டிசலாட் நிறுவனம் சாதாரண குரல் அழைப்பு, குறுஞ்செய்தி, ஜி.பி.ஆர்.எஸ், 3ஜி,இணையதளம்[4] போன்ற சேவைகளை வழங்குகின்றது.

உசாத்துணைகள்

  1. http://en.wikipedia.org/wiki/Etisalat_%E2%80%93_Sri_Lanka#cite_note-2
  2. Etisalat to invest $163m in Sri Lanka(ஆங்கில மொழியில்)
  3. "Broadband Internet users seen at 4 milion in 4 years". Archived from the original on 2010-08-05. பார்க்கப்பட்ட நாள் 2010-08-04.
  4. "Etisalat - 3G this April (2011) | Mobyle". Archived from the original on 2011-03-25. பார்க்கப்பட்ட நாள் 2011-04-12.

வெளியிணைப்புக்கள்


இலங்கையின் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள்  
லங்காபெல் | ஹட்ச் | எட்டிசலட் | ஸ்ரீ லங்கா டெலிகொம் | டயலொக் | மோபிட்டல் | எயார்டெல் | டயலொக் பிராட்பேண்ட் வலையமைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்டிசலட்&oldid=3545619" இலிருந்து மீள்விக்கப்பட்டது