ஸ்ரீ லங்கா டெலிகொம்

இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம் இலங்கையில் மிகப் பெரிய தொலைத் தொடர்புநிலையமாகும். இது 850, 000 மேற்பட்ட கம்பி இணைப்பு வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இதற்கு மேலதிகமாக 300, 000 இற்கும் மேற்பட்ட CDMA தொலைபேசி வாடிக்கையாளர்களைக் கொண்டு 1 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட தொலைத்தொடர்பு நிலையமாக விளங்குகின்றது. ஆரம்பத்தில் அரச முதலீட்டில் உருவாக்கப் பட்ட நிலையம் பின்னர் 1997இல் ஜப்பானிய நிறுவனம் ஒன்றிற்கு விற்கப் பட்டது. இது தனியார் மயமாக்கப் பட்டபின்னர் செல்பேசி சேவையை வழங்கிய மோபிற்றலை உள்வாங்கிக் கொண்டது. 2006 ஆம் ஆண்டில் லங்காபெல், சண்ரெல் ஆகியவற்றின் சிடிஎம்ஏ(CDMA) வெற்றியை அவதானித்த இலங்கை தொலைத் தொடர்பு நிலையம் இச்சேவையை ஆரம்பித்தது.

SLTMobitel
வகைவரையறுக்கப்பட்ட பொது நிறுவனம்
தலைமையகம்கொழும்பு, இலங்கை
முக்கிய நபர்கள்திரு.நிமால் வெல்கம (தலைவர் / இயக்குநர்)[1]
தொழில்துறைதொலைத்தொடர்பு
உற்பத்திகள்நிலையான இணைப்பு தொலைபேசி சேவைகள்
நகர்பேசி
இணைய சேவைகள்
டிஜிட்டல் தொலைக்காட்சி
தகவல் தொழில்நுட்பம்
வருமானம்
  • இலங்கை ரூபாய் 56.771 பில்லியன் (2012)[2]
  • இலங்கை ரூபாய் 50.950 பில்லியன் (2011)[3]
இயக்க வருமானம்
  • இலங்கை ரூபாய் 6.170 பில்லியன் (2012)[2]
  • இலங்கை ரூபாய் 5.645 பில்லியன் (2011)[3]
நிகர வருமானம்
  • இலங்கை ரூபாய் 4.036 பில்லியன் (2012)[2]
  • இலங்கை ரூபாய் 4.781 பில்லியன் (2011)[3]
மொத்தச் சொத்துகள்
  • இலங்கை ரூபாய் 103.073 பில்லியன் (2012)[2]
  • இலங்கை ரூபாய் 96.803 பில்லியன் (2011)[3]
மொத்த பங்குத்தொகை
  • இலங்கை ரூபாய் 54.550 பில்லியன் (2012)[2]
  • இலங்கை ரூபாய் 53.590 பில்லியன் (2011)[3]
உரிமையாளர்கள்இலங்கை அரசு (49.50%)
நெதர்லாந்து சர்வதேச தொலைத்தொடர்பு ஹோல்டிங்ஸ் என்வி (44.98%)
துணை நிறுவனங்கள்மொபிடெல்
எஸ்எல்டி விஷன்கொம் (பிரைவேட்) லிமிடெட்
எஸ்எல்டி வெளியீடுகள் (பிரைவேட்) லிமிடெட்
எஸ்எல்டி ஹாங்காங் லிமிடெட்
இலங்கை தொலைத்தொடர்பு (சேவைகள்) லிமிடெட்
எஸ்எல்டி மேன் பவர் சொல்யூஷன்ஸ் (பிரைவேட்) லிமிடெட்
ஸ்கை நெட்வொர்க் (பிரைவேட்) லிமிடெட்
இணையத்தளம்www.slt.lk

இணையசேவைகள்

டயல் அப் இணைப்புக்கள்

56கிலோபிட்ஸ்/செக்கண் வேகத்திலான டயல் அப் இணைப்புக்களை வழங்கி வருகின்றது. இது தவிர சிடிஎம்ஏ(CDMA) தொலைபேசியூடாக 115 கிலோபிட்ஸ்/செக்கண் வேகத்திலும் இணைப்பை வழங்கிவருகின்றது. பல்வேறு நிறுவனங்களும் கம்பித்தொலைபேசியயூடாக இச்சேவையினை இலங்கையில் வழங்குகின்றபோது அநேகமானவற்றின் வேகம் இதைவிடக் குறைவானது. சாதாரண தொலைபேசிகளூடாக இணைப்பை மேற்கொள்கையில் பயனர் பெயரில் பயனர்@pre.sltnet.lk என்றவாறும் சிடிஎம்ஏ(CDMA) தொலைபேசியில் பயனர்@pre.sltnet என்றவாறும் வரும் சிடிஎம்ஏ இணைப்பில் பயனர் பெயரில் .எல்.கே(.lk) என்பது தேவையில்லை என்பதைக் கவனிக்கவும்.

டயல் செய்யும் இலக்கங்கள்

  • சாதாரணதொலைபேசியில் இருந்து
    • 1250 மற்றும் 1251 (ஸ்ரீலங்கா தொலைத் தொடர்பு நிலையத் தொலைபேசியில் இருந்து மாத்திரம்), (011)2474747, (011)2383838, (011)2331130 பாவிக்கலாம் 1250 இலக்கமே விரும்பத்தக்கது.
    • #777 சிடிஎம்ஏ(CDMA) தொலைபேசி இணைப்பிற்கு.

அகன்ற அலை இணைப்புக்கள்

இலங்கையில் அகலப்பட்டை இணைப்புகள் பெரும்பாலான பகுதிகளில் வழங்கப்பட்டு வருகின்றது [4]. ஆரம்ப காலத்தில் கொழும்பு மற்றும் புறநகரப் பகுதிகளில் மட்டுமே இந்த சேவை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.

இந்நிறுவனம் இருவகையான இணைப்புக்களை வழங்கி வருகின்றது. இவ்விணைப்புக்களானது கொழும்பில் ஏற்கனவேயிருந்த அநேகமாக எல்லா குத்தகைக்கான இணைப்புக்களை (leased lines) மாற்றீடு செய்துள்ளது

அலுவலக இணைப்பு

பதிவிறக்கம் 2 மெகாபிட்ஸ்/செக்கண், மேலேற்றம் 512 கிலோபிட்ஸ்/செக்கண்

வீட்டு இணைப்பு

பதிவிறக்கம் 512 கிலோபிட்ஸ்/செக்கண், மேலேற்றம் 128 கிலோபிட்ஸ்/செக்கண். இதில் இணையத்தைக் குறைவாகப் பாவிப்பவர்களுக்கான 1 ஜிகாபைட்டிற்குக் குறைவாகப் பாவிப்பவர்களுக்கு வசதியாக ஓர் கணக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளபோதிலும் இவை மிகையாக இணையத்தைப் பாவிப்ப்பவர்களுக்குச் செலவானது ஆகும்.

குத்தகைக்கு விடப்படும் இணைப்புக்கள்

குத்தகைக்கு விடப்படும் இணைப்புக்கள் இலங்கையில் அகலப்பட்டை அல்லது அகன்ற அலை என்கின்ற எ டீ எஸ் எல்(adsl) இணைப்பு இல்லாத இடங்களில் மிகையான கட்டணம் காரணமாக ஓரளவே பாவனையில் உள்ளது. இது 64கிலோபிட்ஸ்/செக்கண் வேகத்திலும் அதனின் முழுமட்ங்குகளிலும் இணைப்பை வழங்குகின்றது (அதாவது 128 கிலோபிட்ஸ்/செக்கண், 192 கிலோபிட்ஸ்/செக்கண்)

DNS சேவரின் முகவரிகள் 203.115.0.46 மற்றும் 203.115.0.18 ஆகும். இது கட்டாயம் என்றல்ல விரும்பினால் ஒப்பின் டிஎன்எஸ் போன்ற சேவைகளைப் பயன்படுத்தலாம். இதைப் பயன்படுத்த 208.67.222.222 மற்றும் 208.67.222.222 ஆகும்.

வை-பை இணையம்

சிறி லங்கா டெலிகொம் கம்பியற்ற இணையச் சேவை முறைகளில் ஒன்றான வை-பை முறையில் இணையச் சேவைகளை வழங்குகின்றது. இந்தச் சேவை தற்போது பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் கிடைக்கின்றது. ஒரு மணி நேரத்திற்கு ரூபா 200 என்ற வீதத்தில் கட்டணம் அளவிடப்படுகின்றது [5].

சிறி லங்கா டெலிகொம்மின் சகோதர நிறுவனங்கள்

சிறி லங்கா டெலிகொம் பல சகோதர நிறுவனங்களைக் கொண்டுள்ளது.[6]

நிறுவனத்தின் பெயர் நிறுவப்பட்ட ஆண்டு ஸ்ரீலடெ பங்கு இணையத்தளம் பிரதான செயற்பாடு
மொபிடல் (பிரைவேட்) லிமிடெட் 2002 100% www.mobitel.lk நகர்பேசி சேவை
எஸ்.எல்.டி விஷன்கொம் (பிரைவேட்) லிமிடெட் 2008 100% www.sltvisioncom.lk ஐபி டிவி செயற்பாடுகள்
SLT பப்ளிகேஷன்ஸ் (பிரைவேட்) லிமிடெட் 2006 100% www.rainbowpages.lk விபரக்கொத்து வெளியீட்டு சேவைகள்
எஸ்.எல்.டி ஹொக் கொங் 2006 100% www.slt.lk/gb/index.htm ஐபி இடைவழி சேவைகளை வழங்குதல்
ஸ்ரீ லங்கே டெலிகொம் ஸேவிசர்ஸ் (SLTS) 1993 100% www.slts.lk பெருநிறுவன மற்றும் சிறிய வணிக வாடிக்கையாளர்களுக்கு மொத்த வலையமைப்பு தீர்வுகளை வழங்கும்
எஸ்.எல்டி மான் பவர் (பிரைவேட்) லிமிடெட் 2008 100% www.manpower.lk மனிதவள உதவிகளை வழங்குதல்
ஸ்கை நெட்வேர்க் (பிரைவேட்) லிமிடெட் 2006 75% www.skynetwork.lk வைமாக்ஸ் சேவைகள்

டெலிக்கொம் நிறுவனம் 1930 முதல் தொலைபேசி விபரக்கொத்தை வெளியிடுகின்றது. 2002 ம் ஆண்டு முதல் சிறி லங்கா டெலிகொம் த ரெயின்போ பேஜஸ் எனும் விபரக்கொத்தை வெளியிடுகின்றது. இதுவே இலங்கையின் ஒரே வியாபார தகவல்களை அடக்கிய விபரக்கொத்து என்பதையும் குறிப்பிடவேண்டும்.

உசாத்துணைகள்

வெளியிணைப்புக்கள்


இலங்கையின் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள்  
லங்காபெல் | ஹட்ச் | எட்டிசலட் | ஸ்ரீ லங்கா டெலிகொம் | டயலொக் | மோபிட்டல் | எயார்டெல் | டயலொக் பிராட்பேண்ட் வலையமைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீ_லங்கா_டெலிகொம்&oldid=3573593" இருந்து மீள்விக்கப்பட்டது