Profvk
இந்தப் பயனர் உயர் கணிதத்தில் பயிற்சி பெற்றவர். |
இந்த பயனர் சமயத்தில் ஆர்வமுள்ளவர். |
அனைத்து விக்கிபீடியா நேயர்களுக்கும் வணக்கம்.
நான் ஆங்கில விக்கிபீடியாவில் இந்து சமயத்தைப்பற்றி சில பக்கங்கள் எழுதியிருக்கிறேன்.
கணிதப்பேராசிரியராக 40 ஆண்டுகாலம் பணியாற்றி 1988இல் ஓய்வு பெற்றவன். BITS,பிலானியில் 1965 முதல் 1988 வரை. அதற்குமுன் அமெரிக்காவிலுள்ள இல்லினாய் பல்கலைக்கழகத்திலும்,அதற்குமுன் தமிழ்நாட்டில் மதுரை தியாகராசர் கல்லூரியிலும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் ஆசிரியராக இருந்தேன். முனைவர் பட்டம் அண்ணாமலை பல்கலையது. எனது பள்ளிப்படிப்பிலும் கல்லூரியிலும் தமிழ் படித்ததில்லை. பாடமொழியே ஆங்கிலம்தான்.1941இல் நான் 10ம் வகுப்பு (S.S.L.C)தேர்வு எழுதும்போதுதான் முதன்முதல் கேள்வித்தாள்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் கொடுக்கப்பட்டன.
நான் கணித ஆசிரியராகப்பணியாற்றியபோதுதான் நானாகவே என் தமிழ்ப்பற்றையும் தமிழ்மொழியில் உரையாற்றுவதற்கும் எழுதுவதற்கும் சிறிது தேர்ச்சி பெற்றேன்.
என் தந்தையார் என்னை வடமொழியிலும் இந்துசமய நூல்களிலும் பெருமளவு பழக்கினார். நான் பிலானியிலும் சென்னையிலும் அமெரிக்காவிலும் வேதாந்த சம்பந்தமான தலைப்புகளில் பலசொற்பொழிவுகள் ஆற்றியிருக்கிறேன். ஆங்கிலத்தில் என்னுடைய இணை யதளத்தில் (http://www.geocities.com/profvk) பல பக்கங்கள் எழுதியிருக்கிறேன். என்னுடைய புத்தகங்களில் சில: Culture, Excitement and Relevance of Mathematics The Ten Commandments of Hinduism. Science and Spirituality. Hinduism for the next Generation. கண்ணன் சொற்படி வாழ்வதெப்படி?
அனைவருக்கும் என் நல்லாசிகள்
--Profvk 03:39, 6 ஏப்ரல் 2007 (UTC)
என் பங்களிப்புகளின் பட்டியல்:
இதன் தொடர்ச்சி: பயனர்:Profvk/பக்கம் 2