சாக்த உபநிடதங்கள்
சாக்த உபநிடதங்கள் ( Shakta Upanishads) என்பது இந்து மதத்தின் சிறிய உபநிடதங்களின் ஒரு தொகுப்பாகும். இது ஒரு தேவியின் சக்தியின் இறையியலுடன் தொடர்புடையது.[1][2] 108 உபநிடதங்களின் முக்திகா தொகுப்பில் 8 சாக்த உபநிடதங்கள் உள்ளன.[3] அவை, மற்ற சிறிய உபநிடதங்களுடன், பொதுவாக பண்டைய வேத பாரம்பரியத்திலிருந்து கருதப்படும் பதின்மூன்று பெரிய முதன்மை உபநிடதங்களிலிருந்து தனித்தனியாக வகைப்படுத்தப்படுகின்றன. [4]
சாக்த உபநிடதங்கள், பொதுவான இயல்புடைய சாமான்ய உபநிடதங்கள், இந்து சமயத் துறவு மற்றும் துறவற நடைமுறையில் கவனம் செலுத்தும் சந்நியாச உபநிடதங்கள், யோகக் கலை தொடர்பான யோக உபநிடதங்கள், அம்சங்களை எடுத்துரைக்கும் சைவ உபநிடதங்கள், சைவம் மற்றும் வைணவத்தை சிறப்பிக்கும் வைணவ உபநிடதங்கள் போன்ற சிறிய உபநிடதங்களின் மற்ற குழுக்களில் இருந்தும் வேறுபடுகின்றன.[5][6]
இடைக்கால இந்தியாவில் இயற்றப்பட்ட, சாக்த உபநிடதங்கள் மிகச் சமீபத்திய சிறிய உபநிடதங்களில் ஒன்றாகும். மேலும் தேவி வழிபாடு மற்றும் தந்திரம் தொடர்பான இறையியல் பற்றிய தகவல்களின் முக்கிய ஆதாரமாக உள்ளது. [7] [8] சில சாக்த உபநிடதங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிப்புகளில் உள்ளன. [9] [10]
சாக்த உபநிடதங்கள் பெண்மையை உச்சம் என்றும், இந்து மதத்தில் மனோதத்துவக் கருத்துக்களாகக் கூறப்படும் பிரம்மம், ஆன்மா ஆகியவற்றின் முதன்மையான காரணமென்றும் போற்றுவதில் குறிப்பிடத்தக்கவை. [11] [12] பல சாக்த உபநிடதங்களில் உள்ள தத்துவ வளாகம், சாங்கியம் மற்றும் இந்து தத்துவத்தின் அத்வைத வேதாந்தப் பள்ளிகளின் ஒத்திசைவு என்று ஜூன் மெக்டேனியல் கூறுகிறார். இது சாக்தாத்தைவதம் (அதாவது, துறவற சக்தியின் பாதை) என்றும் அழைக்கப்படுகிறது. [13]
காலம்
தொகுசாக்த உபநிடதங்களின் தொகுப்பு தேதிகள் மற்றும் ஆசிரியர்கள் பற்றி தெரியவில்லை. அதர்வண் வேதத்துடன் இணைக்கப்பட்ட மதவாத உபநிடதங்கள் இரண்டாம் மில்லினியத்தில், சுமார் 16 ஆம் நூற்றாண்டு வரை இயற்றப்பட்டிருக்கலாம் என்று பேட்ரிக் ஆலிவெல் கூறுகிறார்.[14] சாக்த உபநிடதங்கள், கிபி 12 மற்றும் 15 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இயற்றப்பட்டது என தேனிசு குஷ் கூறுகிறார்.[15]
8 சாக்த உபநிடதங்களின் பட்டியல்
தொகுதலைப்பு | முக்திகா வரிசை எண் | இணைக்கப்பட்ட வேதம் | படைப்பின் காலம் |
---|---|---|---|
சீதா உபநிடதம் | 45 | அதர்வண வேதம் | குறைந்தது 10,000 ஆண்டுகளுக்கு முன் |
திரிபுரதாபினி உபநிடதம் | 80 | அதர்வண வேதம் | குறைந்தது 10,000 ஆண்டுகளுக்கு முன் |
தேவி உபநிடதம் | 81 | அதர்வண வேதம் | குறைந்தது 10,000 ஆண்டுகளுக்கு முன் |
திரிபுரா உபநிடதம் | 82 | இருக்கு வேதம் | குறைந்தது 10,000 ஆண்டுகளுக்கு முன் |
பாவனா உபநிடதம் | 84 | அதர்வண வேதம் | குறைந்தது 10,000 ஆண்டுகளுக்கு முன் |
சௌபாக்யலட்சுமி உபநிடதம் | 105 | இருக்கு வேதம் | குறைந்தது 10,000 ஆண்டுகளுக்கு முன் |
சரசுவதி-ரகசிய உபநிடதம் | 106 | யசுர் வேதம் | குறைந்தது 10,000 ஆண்டுகளுக்கு முன் |
பகவ்ரிச்ச உபநிடதம் | 107 | இருக்கு வேதம் | குறைந்தது 10,000 ஆண்டுகளுக்கு முன் |
இதனையும் பார்க்கவும்
தொகுசான்றுகள்
தொகு- ↑ Brooks 1992, ப. 76–80.
- ↑ McDaniel 2004, ப. 90.
- ↑ Deussen 1997, ப. 556.
- ↑ Mahony, ப. 271.
- ↑ Mahony 1998, ப. 271.
- ↑ Winternitz & Sarma 1996, ப. =217–224 with footnotes.
- ↑ Brooks 1990, ப. xiii–xiv.
- ↑ Mahadevan 1975, ப. 235.
- ↑ Gudrun Buhnemann (1996), Review: The Secret of the Three Cities: An Introduction to Hindu Śakta Tantrism, Journal of the American Oriental Society, Volume 116, Number 3, page 606
- ↑ Brooks 1990.
- ↑ McDaniel 2004, ப. 89-90.
- ↑ Brooks 1990, ப. 77–78.
- ↑ McDaniel 2004, ப. 89–91.
- ↑ Olivelle 2008, ப. xxxiii.
- ↑ Cush 2007, ப. 740.
உசாத்துணை
தொகு- Brooks, Douglas Renfrew (1990). The Secret of the Three Cities. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0226075693.
- Brooks, Douglas Renfrew (1992). Auspicious Wisdom. State University of New York Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0791411452.
- Cush, Denise; et al. (2007). Encyclopedia of Hinduism. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0700712670.
- Deussen, Paul (1997). Sixty Upanishads of the Veda. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1467-7.
- Mahadevan, T. M. P. (1975). Upaniṣads: Selections from 108 Upaniṣads. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1611-4.
- Mahony, William K. (1998). The Artful Universe: An Introduction to the Vedic Religious Imagination. State University of New York Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-3579-3.
- McDaniel, June (2004). Offering Flowers, Feeding Skulls: Popular Goddess Worship in West Bengal. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-534713-5.
- Olivelle, Patrick (2008). Upanisads. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-954025-9.
- Winternitz, Moriz; Sarma, V. Srinivasa (1996). A History of Indian Literature. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0264-3.