பேட்ரிக் ஆலிவெல்

இந்தியவியலாளர்

பேட்ரிக் ஆலிவெல் (Patrick Olivelle) ஒரு இந்தியவியலாளர் ஆவார்.[1][2] சந்நியாசம், துறவு மற்றும் தருமம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் சமசுகிருத இலக்கியத்தின் தத்துவவியலாளரும் அறிஞருமான ஆலிவெல் 1991 முதல் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிய ஆய்வுகள் துறையில் சமசுகிருதம் மற்றும் இந்திய மதங்களின் பேராசிரியராக இருந்து வருகிறார்.[1][3]

பேட்ரிக் ஆலிவெல்
பிறப்பு1942
இலங்கை
பணி
கல்விப் பின்னணி
கல்வி
கல்விப் பணி
கல்வி நிலையங்கள்டெக்சாஸ் பல்கலைக்கழகம்

இலங்கையில் பிறந்த இவர்,[3] 1972 இல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அங்கு சமசுகிருதம், பாளி மற்றும் இந்திய மதங்களை தாமசு பறோ, ஆர்.சி. சாக்னெர் ஆகியோரிடம் பயின்றார். [3] 1974 இல் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இருந்து இலூடோ ரோச்சரின் மேற்பார்வையில் "யாதவப் பிரகாசரின் யதிதர்மப்பிரகாச"த்தின் விமர்சனப் பதிப்பு மற்றும் மொழிபெயர்ப்பு அடங்கிய ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்து தனது முனைவர் பட்டம் பெற்றார். [3] 1974 மற்றும் 1991-க்கு இடையில், புளூமிங்டனிலுள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் சமய ஆய்வுகள் துறையில் கற்பித்தார். [1]

சான்றுகள் தொகு

  • Lindquist, Steven E. (2011), "Introduction: Patrick Olivelle and Indology", in Steven E. Lindquist (ed.), Religion and Identity in South Asia and Beyond: Essays in Honor of Patrick Olivelle, Anthem Press, pp. 9–20, ISBN 978-0-85728-790-8, பார்க்கப்பட்ட நாள் 30 September 2013
  • Clark, Matthew (2007), Patrick Olivelle: A Profile, SOAS, University of London, archived from the original on 2015-09-24, பார்க்கப்பட்ட நாள் 2022-08-29
  • Jamison, Stephanie W. (2008), "Review of: Languages, Texts, and Society: Explorations in Ancient Indian Culture and Religion by Patrick Olivelle; Ascetics and Brahmins: Studies in Ideologies and Institutions by Patrick Olivelle", Journal of the American Oriental Society, 128 (2): 395–396, JSTOR 25608395

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 Lindquist 2011.
  2. Jamison 2008.
  3. 3.0 3.1 3.2 3.3 Clark 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேட்ரிக்_ஆலிவெல்&oldid=3597264" இலிருந்து மீள்விக்கப்பட்டது