அக்குரணை

இலங்கையின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்

7°22′0.0″N 80°37′0.0″E / 7.366667°N 80.616667°E / 7.366667; 80.616667

அக்குரனை

அக்குரனை
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - கண்டி
அமைவிடம் 7°22′01″N 80°37′00″E / 7.367°N 80.6167°E / 7.367; 80.6167
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 543.7632 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2001)
55366

அக்குரனை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச செயளர் பிரிவு ஆகும். அக்குரனை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து வடக்குத் திசையில் அமைந்துள்ளது.

புவியியலும் காலநிலையும்

தொகு

அக்குரனை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 543.7632 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.

மக்கள்

தொகு

இது முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச செயளர் பிரிவு ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:

பிரிவு மொத்தம் சிங்களவர் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் முஸ்லிம்கள் பரங்கியர் ஏனைய
மொத்தம் 55366 16923 2058 1473 34893 14 5
கிராமம் 54943 16911 1793 1328 34892 14 5
தோட்டப்புறம் 423 12 265 145 1 0 0

2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:

பிரிவு மொத்தம் பௌத்தர் இந்து இஸ்லாம் கத்தோலிக்கம் ஏனைய கிறிஸ்தவம் ஏனைய
மொத்தம் 55366 16903 3181 35028 220 34 0
கிராமம் 54943 16890 2781 35026 212 34 0
தோட்டப்புறம் 423 13 400 2 8 0 0

கைத்தொழில்

தொகு

இங்கு நெற்பயிர்ச் செய்கைமுக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலைப் பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது. அக்குரனை மக்கள் மொத்த வியாபாரம் மற்றும் வாகன இறக்குமதிக்கு புகழ்பெற்றவர்களாவர்.

குறிப்புகள்

தொகு


உசாத்துணைகள்

தொகு


இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள்  
மாநகரசபைகள் கண்டி | மாத்தளை | நுவரெலியா
நகரசபைகள் நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன
சிறு நகரங்கள் அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்குரணை&oldid=3058532" இலிருந்து மீள்விக்கப்பட்டது