விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா மற்றும் தமிழ்க் கணினிப் பயிலரங்கம், சேலம், செப்டம்பர் 11, 2012
அறிமுகம்
தொகுசேலம் மாவட்டத்தில், தமிழ் விக்கிப்பீடியா மற்றும் தமிழ்க் கணினியில் மேல்நிலைப்பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் உரிய விழிப்புணர்வு பெற உறுதுணை செய்யும் வகையிலும் தமிழ் விக்கிப்பீடியா பயனர்களை அதிகப்படுத்துதல், ஊக்குவித்தல், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்களில் பங்குபெறச்செய்தல் என்னும் நோக்கங்களின் அடிப்படையிலும் தமிழ் விக்கிப்பீடியா மற்றும் தமிழ்க் கணினிப் பயிலரங்கு ஒரு நாள் 11, செப்டம்பர்,2012 செவ்வாய்க் கிழமை, அன்று காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விவேகானந்தர் நகர், பெரிய களம், நெய்க்காரப்பட்டி, சேலம்-63610 –இல் நிகழ்ந்தது.
பயிலரங்கத் தொடக்கவிழா
தொகுஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சு. சண்முகம் இப்பயிலரங்கினைத் வரவேற்புரையுடன் தொடங்கி வைத்தார்.
-
முனைவர் சு. சண்முகம்
பயிலரங்கக் கருத்தாளர்
தொகுசேலம் பெரியார் பல்கலைக்கழக, இதழியல், மக்கள் தொடர்பியல் துறைப் பேராசிரியர்.பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி பயிலரங்க நோக்கங்களை அறிமுகம் செய்து பயிலரங்கப் பயிற்சிகளைத் தொடங்கினார்.
பயிலரங்கப் பொருண்மைகள்
தொகுதமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் மற்றும் தமிழ் விக்கிப்பீடியாவத் தொகுத்தல், தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறி பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் போன்றவற்றை பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி செயல்முறையாக விளக்கி மாணாக்கர்கள் உடனுக்குடன் கேட்ட ஐயங்களை விளக்கினார்.
பயிலரங்கில் பங்கேற்றோர்
தொகுஇப்பயிலரங்கில், பெரியார் பல்கலைக்கழக, இதழியல், மக்கள் தொடர்பியல் துறை மாணாக்கர்கள் 18 பேரும் ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்கள் 135 பேரும் மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்கள் 12 பேரும் மற்றும் ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆசிரியர்கள் 16 பேரும் பங்கேற்றனர்.
மதிய அமர்வு
தொகுபயிலரங்கின் மதிய அமர்வில் பார்வதிஸ்ரீ கலந்துகொண்டு, விக்கிப்பீடியா, விக்சனரி மற்றும் பிற விக்கித் திட்டங்கள் பற்றிய அறிமுகம் செய்தார். நற்கீரன் அவர்கள் பகிர்ந்த தமிழ் விக்கியூடகங்கள், கூட்டு மதிநுட்ப மாதிரி விக்கிப்பீடியாவை அறிமுகம் செய்தார். மாணவர்களுக்கு விக்கியில் பங்கெடுப்பது பற்றி விளக்கிக் கூறினார்.
விக்கி தொகுத்தல் பயிற்சி
தொகுபேராசிரியர்.மா. தமிழ்ப்பரிதி மற்றும் பார்வதிஸ்ரீ ஆகியோர் பயிலரங்கப் பங்கேற்பாளர்களை அணி அணியாகப்பிரித்து விக்கி தொகுத்தல் பயிற்சியை அளித்தனர். இப்பயிலரங்கில் 15-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் விக்கிப்பீடியாவில் புதிய கணக்கினைத்தொடங்கினர்.
பயிலரங்க நிறைவு விழா
தொகுஇரா. மணிகண்டன், கணினி அறிவியல் துறைத்தலைவரின் நன்றியுரையுடன் பயிலரங்கம் நிறைவடைந்தது.
பயிலரங்க ஒருங்கிணைப்பு
தொகுஇப்பயிலரங்கின் ஒருங்கிணைப்புப் பணிகளை கணினி அறிவியல் துறைத்தலைவர் இரா. மணிகண்டன், தமிழ்த் துறைத்தலைவர் முனைவர் அ. அறிவழகன், , இணைப் பொறுப்பாளர் சி. நந்தகுமார் ஆகியோர் மேற்கொண்டனர்.
வெளி இணைப்புகள்
தொகு
- தமிழகம்.வலை அறிவிப்பு
- The Hindu, Dated: 11.09.2012, Page:3, Coimbatore Edition, Tamil Nadu, India. Event Announcement.
- மாலை மலர், நாள்:12.09.2012, பக்கம் 3, சேலம் பதிப்பு, தமிழ் நாடு,இந்திய ஒன்றியம், ஒளிப்படச் செய்தி.