செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்


தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை தமிழ் மொழியின் சொல்வளத்தையும், காலப்பழமையையும், தனித்தன்மையையும் வெளிக் கொண்டு வர வேண்டுமென்பதற்காக தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி வெளியிடும் நோக்கத்துடன் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் ஒன்றை அமைத்தது.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்
உருவாக்கம்1974
வகைஅரசு
நோக்கம்அகரமுதலிகளை உருவாக்குவதுடன், கலைச்சொற்கள் உருவாக்கும் பணி
தலைமையகம்சென்னை
தலைமையகம்
சேவை பகுதி
தமிழ்நாடு
அமைச்சர்
மு. பெ. சாமிநாதன்
செயலாளர்
முனைவர் இல. சுப்பிரமணியன் இ.ஆ.ப [1] [2]
இயக்குநர்
க. பவானி
வலைத்தளம்www.sorkuvai.com

இந்த இயக்ககத்தின் சார்பில் 12 மடலங்களில் (volumes) அடங்கும் 31 தொகுதிகளும் 13,270 பக்கங்கள் கொண்ட செந்தமிழச் சொற்பிறபியல் பேரகரமுதலி என்ற நூலாக வெளியிடப் பெற்றுள்ளன. இவை மிக விரிவான முறையில் சொற்களின் வேரும் வரலாறும் காட்டியும், பட விளக்கங்கள், இலக்கண, இலக்கிய, கல்வெட்டு, நாட்டுப்புறச் சொல் விளக்கங்க மேற்கோள்களைக் கொண்டும், திராவிட மொழிகளிலும், உலக மொழிகளிலும் தமிழ்ச் சொற்களின் ஊடாட்டத்தைக் காட்டியும் அரைக்கலைக்களஞ்சிய அமைப்பில் வெளியிடப் பெற்றிருக்கின்றன. இதன் முதல் பகுதி 1985 ஆம் ஆண்டிலும், கடைசித் தொகுதியான 31 ஆம் தொகுதி 2011 ஆம் ஆண்டிலுமாக வெளியிடப் பெற்றது.[1]

தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியை எண்மப்படுத்த (கணனி மயமாக்க) நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. [3]

விருதுகள் தொகு

இந்த இயக்ககம் வழியாகக் கீழ்க்காணும் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.[4]

  1. தூய தமிழ்ப் பற்றாளர் விருது
  2. நற்றமிழ்ப் பாவலர் விருது
  3. தூய தமிழ் ஊடக விருது
  4. தேவநேயப் பாவாணர் விருது
  5. வீரமாமுனிவர் விருது
  6. சொல்லின் தாய் விருது


மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "இயக்ககத் தோற்றம - வரலாறு". பார்க்கப்பட்ட நாள் 2024-03-25.
  2. தமிழ் அகராதியியல் நாள் விழா: விருதுகள் வழங்கி கவுரவிப்பு (செய்தி)
  3. தினமணி நாளிதழ் செய்தி
  4. தினமலர் நாளிதழ் செய்தி

வெளி இணைப்புகள் தொகு