திராவிட மொழிக் குடும்பம்

தென்னிந்தியாவில் முதன்மையாகப் பேசப்படும் மொழிக்குடும்பம்
(திராவிட மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திராவிட மொழிகள் (Dravidian languages) பெரும்பாலும் தென்னாசியாவில் பேசப்படும் 86 மொழிகளை உள்ளடக்கிய ஒரு மொழிக் குடும்பமாகும்.[1] இம்மொழிகளை 215 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பேசுகின்றனர்.[2] இவை தெற்கு, தென்-மத்தி, மத்தி, வடக்கு என நான்கு குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. இவற்றில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியன இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்நான்கு மொழிகளும் முறையே தமிழ் நாடு, ஆந்திரப் பிரதேசம், கருநாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் அலுவல் மொழிகளாகத் திகழ்கின்றன.

திராவிடம்
புவியியல்
பரம்பல்:
தெற்காசியா, அதிகமாக தென் இந்தியா
மொழி வகைப்பாடு: உலகிலுள்ள பெரிய மொழிக் குடும்பங்களில் ஒன்று
முதனிலை-மொழி: முதனிலைத் திராவிட மொழி
துணைப்பிரிவு:
வடக்கு
மத்தி
தெற்கு
எத்னாலாக் குறி: 17-1265
ISO 639-2 and 639-5: dra

Distribution of subgroups of Dravidian languages:

     வடக்கு
     மத்தி
     தென் மத்தி
     தெற்கு

தென்னிந்திய மொழிகள்பற்றி ஆராய்ந்து, 'திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பத்தின் ஓர் ஒப்பிலக்கணம்' என்ற நூலை 1856-இல் எழுதிய இராபர்ட்டு கால்டுவெல், இந்த நான்கு மொழிகளுடன், தென்னிந்தியாவிலிருந்த வேறு சில மொழிகளையும் சேர்த்து, அவற்றைச் சுட்டுவதற்காகத் 'திராவிட' என்ற சொல்லை உருவாக்கினார்.[3] பின்னர் வந்த ஆய்வாளர்கள், திராவிட மொழிகளைச் சேர்ந்த மேலும் சில மொழிகள், மத்திய இந்தியா, வட இந்தியா, பாகித்தானிலுள்ள பலூச்சித்தான், நேபாளம் ஆகிய இடங்களில் வழங்கி வருவதை எடுத்துக்காட்டினர்.

வரலாறு

பொ.ஊ.மு. 1500 அளவில், ஆரியர் இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன், இந்தியா முழுவதும் திராவிட மொழிகளே வழங்கி வந்தன என்பது பல ஆய்வாளர்களது கருத்து.[4] திராவிட மொழிகளில் இருந்து இந்திய ஆரிய மொழிகளுக்குச் சென்றிருக்கும் நாமடங்கு ஒலியன்கள் முதலிய மொழியியல் சான்றுகள் கிடைத்தாலும் இதை அறுதியிட்டுக் கூறும் அளவிற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. சரசுவதி - சிந்து பள்ளத்தாக்குகளில் வளர்ச்சிபெற்ற நாகரிகமும் திராவிட நாகரீகமே என்ற கருத்தும் பல முன்னணி ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.[4] அரப்பா, மொகஞ்சதாரோ முதலிய சிந்துவெளிப் பள்ளத்தாக்கு நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்ட, இன்னும் வாசிக்கப்படாத எழுத்துக்களும், அக்காலத்தில் வழங்கிய திராவிட மொழிக்கானவையே என்பதும் அவர்கள் கருத்து. ஆனால் , பல ஆய்வாளர்கள் அக்கருத்தை மறுத்தும் வருகிறார்கள். சிந்துவெளிக் குறியீடுகள் எந்த மொழிக்கு உரியவை என்பது இன்னும் அறியப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

திராவிட மொழிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் அவற்றின் புவியியற் பரம்பலைக் கருத்திற் கொண்டு ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை:

  1. தென் திராவிடம்
  2. தென்-நடுத் திராவிடம்
  3. நடுத் திராவிடம்
  4. வட திராவிடம்
  5. வகைப்படுத்தப்படாதவை

என்பனவாகும்.

இவற்றுள் தென் திராவிடப் பிரிவில் 34 மொழிகளும், தென்-நடுத் திராவிடப் பிரிவில் 21 மொழிகளும், நடுத் திராவிடப் பிரிவில் 5 மொழிகளும், வட திராவிடப் பிரிவில் 5 மொழிகளும், வகைப்படுத்தப் படாதவையாக 8 மொழிகளுமாக மொத்தம் 73 மொழிகள் கண்டறியப் பட்டுள்ளன. இவற்றுள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கும் திராவிடப் பெருமொழிகளாகும்.தமிழையும் அதன் கிளைமொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளையும் ஒரு காலத்தில் தமிளியன் அல்லது தமுலிக் என்று வழங்கினர்.

சான்று:திராவிட மொழிகள், ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடநூல், தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம், சென்னை.

வகைப்பாடு

திராவிடம் 
 தெற்கு  
 தெற்கு (SD I)
 (தமிழ்துளு-கன்னடம்
 தமிழ் 

தமிழ்

மலையாளம்

 குடகு 

குடகு மொழி

குறும்பா மொழி

கோத்தர் மொழி

தோடா மொழி

 கன்னடம்–படுக 

கன்னடம்

படுக மொழி

 துளு 

கொற்ற கொரகா

துளுவம் (பெல்லாரி மொழி?)

குடியா

 தென்-மத்தி (SD II) 
 (தெலுங்கு–குயி) 
 கோண்டி–குயி 
 கோண்டி 

கோண்டி

மாரியா

முரியா

பர்தான்

நாகர்ச்சால்

கிர்வார்

கொண்டா

முகா டோரா

கூய் மொழி

குவி மொழி

கோயா மொழி

மண்டா மொழி

பெங்கோ மொழி

 தெலுங்கு 

தெலுங்கு

செஞ்சு

 மத்தி 
 (கொலாமி–பார்சி) 

நைக்கி

கொலாமி

ஒல்லாரி (கடபா)

துருவா மொழி

 வடக்கு 
 குடக்கு–மல்டோ 

குடக்கு (ஒரன், கிசன்)

 மல்டோ 

Kumarbhag Paharia

Sauria Paharia

பிராகுயி மொழி

பரம்பல்

மொழி வகை பேசுவோர் எண்ணிக்கை இடம்
தமிழ் தெற்கு 70,000,000 தமிழ்நாடு, புதுச்சேரி (காரைக்கால்), ஆந்திரப் பிரதேசம் (சித்தூர், நெல்லூர் பகுதிகள்), கருநாடகம் (பெங்களூர், கோலார்), கேரளம் (பாலக்காடு, இடுக்கி), அந்தமான் நிக்கோபார் தீவுகள், ஆங்காங், சீனா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவூதி அரேபியா, குவைத், ஓமான், கம்போடியா, தாய்லாந்து, மொரிசியசு, சீசெல்சு, ஆத்திரேலியா, தென்னாப்பிரிக்கா, செருமனி, கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அரபு அமீரகம், மியான்மர், ரீயூனியன், தென்னாப்பிரிக்கா.
கன்னடம் தெற்கு 38,000,000 கருநாடகம், கேரளம் (காசர்கோடு மாவட்டம்), மகாராட்டிரம் (சோலாப்பூர் மாவட்டம், சாங்கலி, மிராச்சு, லாத்தூர்), தமிழ்நாடு (சேலம், உதகமண்டலம், சென்னை), ஆந்திரப் பிரதேசம் (அனந்தபூர், கர்னூல்), தெலுங்கானா (ஐதராபாத்து (இந்தியா) மேதக், மகபூப்நகர்)
மலையாளம் தெற்கு 38,000,000 கேரளம், இலட்சத்தீவுகள், மாகே மாவட்டம் (புதுச்சேரி), தெற்கு கன்னடம் மாவட்டம், குடகு மாவட்டம் (கருநாடகம்), கோயம்புத்தூர், நீலகிரி, கன்னியாகுமரி (தமிழ்நாடு), ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்க ஐக்கிய நாடு, சவூதி அரேபியா, குவைத், ஓமான், ஐக்கிய இராச்சியம், கத்தார், பகுரைன்
துளுவம் தெற்கு 1,700,000 கருநாடகம் (தெற்கு கன்னடம் மாவட்டம், உடுப்பி), கேரளம் (காசர்கோடு மாவட்டம்)
பியரி மொழி தெற்கு 1,500,000 கருநாடகம் (தெற்கு கன்னடம் மாவட்டம், உடுப்பி), கேரளம் (காசர்கோடு மாவட்டம்)
படுக மொழி தெற்கு 400,000 தமிழ்நாடு (நீலகிரி மாவட்டம்)
குடகு மொழி தெற்கு 300,000 கருநாடகம் (குடகு மாவட்டம்)
குறும்பா மொழி தெற்கு 220,000 தமிழ்நாடு (நீலகிரி மாவட்டம்)
காணிக்காரர் மொழி தெற்கு 19,000 தமிழ்நாடு (நீலகிரி மாவட்டம்), கேரளம்
கொற்ற கொரகா தெற்கு 14,000 கருநாடகம் (தெற்கு கன்னடம் மாவட்டம், உடுப்பி மாவட்டம்), கேரளம் (காசர்கோடு மாவட்டம்)
இருளா தெற்கு 4,500 தமிழ்நாடு (நீலகிரி மாவட்டம்)
தோடா தெற்கு 1,100 தமிழ்நாடு (நீலகிரி மாவட்டம்)
கோத்தர் தெற்கு 900 தமிழ்நாடு (நீலகிரி மாவட்டம்)
அல்லர் தெற்கு 300 கேரளம்
தெலுங்கு தென் மத்தி 75,000,000 ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ஏனாம் மாவட்டம் (புதுச்சேரி), அந்தமான் நிக்கோபார் தீவுகள், தமிழ்நாடு
கோண்டி தென் மத்தி 2,000,000 மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம், சத்தீசுகர், தெலுங்கானா, ஒடிசா
முரியா தென் மத்தி 1,000,000 சத்தீசுகர், மகாராட்டிரம், ஒடிசா
கூய் தென் மத்தி 700,000 ஒடிசா
மாரியா தென் மத்தி 360,000 சத்தீசுகர், தெலுங்கானா, மகாராட்டிரம்
குவி தென் மத்தி 350,000 ஒடிசா
பெங்கோ தென் மத்தி 350,000 ஒடிசா
கோயா தென் மத்தி 330,000 ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீசுகர்
பர்தான் தென் மத்தி 117,000 தெலுங்கானா, சத்தீசுகர், மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம்
செஞ்சு தென் மத்தி 26,000 ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா
கொண்டா தென் மத்தி 20,000 ஆந்திரப் பிரதேசம், ஒடிசா
நாகர்ச்சால் தென் மத்தி 7,000 மத்தியப் பிரதேசம், சத்தீசுகர், மகாராட்டிரம்
மண்டா தென் மத்திl 4,000 ஒடிசா
கொலாமி மத்தி 115,000 தெலுங்கானா, மகாராட்டிரம்
துருவா மத்தி 80,000 சத்தீசுகர்
ஒல்லாரி மத்தி 23,000 ஆந்திரப் பிரதேசம், ஒடிசா
நைக்கி மத்தி 10,000 ஆந்திரப் பிரதேசம், மகாராட்டிரம்
பிராகுயி வடக்கு 4,200,000 பலூசித்தான் (பாக்கித்தான்)
குடக்கு வடக்கு 2,000,000 சத்தீசுகர், சார்க்கண்டு, ஒடிசா, மேற்கு வங்காளம்
சவ்ரியா பகரியா வடக்கு 120,000 பீகார், சார்க்கண்டு, மேற்கு வங்காளம்
குமார்பக் பகரிய் வடக்கு 18,000 சார்க்கண்டு, மேற்கு வங்காளம்

எண்கள்

ஒன்று முதல் பத்து வரையான எண்கள் பல்வேறு திராவிட மொழிகளில் கொடுக்கப் பட்டுள்ளன.

எண் தமிழ் தெலுங்கு கன்னடம் துளு மலையாளம் குறுக் கோலமி பிராகுயி மூலத் திராவிடம்
1 ஒன்று ஒக்கட்டி ஒந்து onji onnu ஒந்நு oa okkod asi *oru(1)
2 இரண்டு ரெண்டு எரடு radu randu ரண்டு indiŋ irā irā *iru(2)
3 மூன்று மூடு மூரு mūji nnu மூந்நு mūnd mūndiŋ musi *muC
4 நான்கு நாலுகு நாலக்கு nālu nālu நாலு kh nāliŋ čār (II) *nāl
5 ஐந்து ஐது ஐது ainu añcu அண்சு pancē (II) ayd(3) panč (II) *cayN
6 ஆறு ஆறு ஆறு āji āru ஆறு soyyē (II) ār(3) šaš (II) *caru
7 ஏழு ஏடு ēlu ēlu ēzhu ஏழு sattē (II) ē(3) haft (II) *eu
8 எட்டு எணிமிதி எண்ட்டு ēma eu எட்டு ahē (II) enumadī (3) hašt (II) *eu
9 ஒன்பது தொம்மிதி ஒம்பத்து ormba onbatu ஒம்பது naiyē (II) tomdī (3) nōh (II) *to
10 பத்து பதி கத்து pattu pathu பத்து dassē (II) padī (3) dah (II) *pat(tu)

மேற்கோள்கள்

  1. Ethnologue
  2. "Overview of Dravidian languages". Encyclopædia Britannica. 
  3. Robert Caldwell (1856). A Comparative Grammar of the Dravidian Or South-Indian Family of Languages. Asian Educational Services (Reprint of 1913 3rd-edition revised by Reverend J.L. Wyatt and T Ramakrishna Pillai). pp. 3–6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-0117-8.
  4. 4.0 4.1 Trask, Robert Lawrence (2000). The Dictionary of Historical and Comparative Linguistics. Routledge. p. 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57958-218-4. It is widely suspected that the extinct and undeciphered Indus Valley language was a Dravidian language, but no confirmation is available. The existence of the isolated northern outlier Brahui is consistent with the hypothesis that Dravidian formerly occupied much of North India but was displaced by the invading Indo-Aryan languages, and the presence in the Indo-Aryan languages of certain linguistic features, such as retroflex consonants, is often attributed to Dravidian substrate influence. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)

வெளி இணைப்புகள்