கர்னூல் (ஆங்கிலம்:Kurnool), இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள கர்னூல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். இது ஆந்திராவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது துங்கபத்ரா ஆறு மற்றும் ஹந்திரி ஆறுகளின் தென்கரையில் அமைந்துள்ளது. 1953 முதல் 1956 வரை கர்னூலே ஆந்திராவின் தலைநகரமாக இருந்தது.

கர்னூல்
மாநகரம்
அடைபெயர்(கள்): இராயலசீமையின் நுழைவாயில்
கர்னூல் is located in ஆந்திரப் பிரதேசம்
கர்னூல்
கர்னூல்
ஆந்திரப் பிரதேசத்தில் இருப்பிடம்
கர்னூல் is located in இந்தியா
கர்னூல்
கர்னூல்
இந்தியாவில் இருப்பிடம்
ஆள்கூறுகள்: 15°50′N 78°03′E / 15.83°N 78.05°E / 15.83; 78.05
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
பகுதிஇராயலசீமை
மாவட்டம்கர்னூல்
அரசு
 • வகைமாநகராட்சி
 • மாவட்ட ஆட்சித் தலைவர்திரு ஜி வீரபாண்டியன்
பரப்பளவு[1]
 • மாநகரம்69.51 km2 (26.84 sq mi)
பரப்பளவு தரவரிசை107
ஏற்றம்274 m (899 ft)
மக்கள்தொகை (2011)[2]
 • மாநகரம்4,25,214
 • தரவரிசை109வது (இந்தியா)
5வது (ஆந்திரப் பிரதேசம்)
 • அடர்த்தி6,100/km2 (16,000/sq mi)
 • பெருநகர்[3]4,84,327
இனங்கள்கர்னூல்காரன்
மொழிகள்
 • அலுவள்தெலுங்கு
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அ.கு.எ.518001, 518002, 518003, 518004, 518005, 518006, 518007
வாகனப் பதிவுAP-21[4]
இணையதளம்கர்னூல் மாநகராட்சி

புவியியல் தொகு

இவ்வூரின் அமைவிடம் 15°50′N 78°03′E / 15.83°N 78.05°E / 15.83; 78.05 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 274 மீட்டர் (898 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு தொகு

கர்னூலில் எழுத்தறிவு[6]
அனைவரும்
77.37%
ஆண்
83.01%
பெண்
71.24%

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,25,214 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7][2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். குர்நூல் மக்களின் சராசரி கல்வியறிவு 77.37% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83.01%, பெண்களின் கல்வியறிவு 71.24% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 73% விட கூடியதே.

மதம் தொகு

கர்னூல் நகரில் உள்ள மதங்கள்(2011)[8]
மதம் விழுக்காடு
இந்து சமயம்
67.20%
இசுலாம்
29.20%
கிறிஸ்தவம்
2.50%
வேறு அல்லது
கூறப்படவில்லை
1.10%

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் இறுதித் தரவுகளின்படி, கர்னூல் நகர்ப்புறத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தனர். கர்னூலில் காணப்படும் பிற மதக் குழுக்கள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஜைனர்கள்[8]

மொழி தொகு




 

கர்னூல் நகரத்தின் மொழிகள் (2011)[9]

  உருது (28.17%)
  இந்தி (1.02%)
  மற்றவை (2.90%)

தெலுங்கு (67.91%) அதிகாரப்பூர்வ மற்றும் அதிகம் பேசப்படும் மொழியாகும். உருது (28.17%) மற்றும் இந்தி (1.02%) ஆகியவையும் பேசப்படுகின்றன.[9]

ஆதாரங்கள் தொகு

  1. "Kurnool Municipal Corporation |". kurnool.cdma.ap.gov.in. Archived from the original on 2019-12-03. பார்க்கப்பட்ட நாள் 2023-02-26.
  2. 2.0 2.1 "Cities having population 1 lakh and above, Census 2011" (PDF). Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 29 May 2021.
  3. "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 29 May 2021.
  4. "Registration | District Codes | Transport Department Government of Andhra Pradesh – India". aptransport.org.
  5. "Kurnool". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
  6. "Kurnool City Population Census 2011-2019 | Andhra Pradesh". www.census2011.co.in.
  7. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  8. 8.0 8.1 "Table C-01 Population by Religion: Andhra Pradesh". Census of India. Registrar General and Census Commissioner of India. 2011.
  9. 9.0 9.1 "Table C-16 Population by Mother Tongue: Andhra Pradesh (Town level)". Census of India. Registrar General and Census Commissioner of India.

வெளியிணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கர்னூல்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்னூல்&oldid=3788196" இலிருந்து மீள்விக்கப்பட்டது