ஆந்திரப் பிரதேசத்திலுள்ள நகரங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

ஆந்திரப் பிரதேசத்திலுள்ள நகரங்களின் பட்டியல் (List of cities in Andhra Pradesh) என்ற இக்கட்டுரையில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள நகரங்களின் விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பதிவாளர் மற்றும் மக்கள்தொகை கணக்கு ஆணையரின் அலுவலகம் நடத்திய 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்புகளின் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

நகரப் புள்ளி விவரங்கள்தொகு

2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 1,00,000 மற்றும் அதற்கு மேலான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் நகரங்கள் என அழைக்கப்படுகின்றன [1]. மாநிலத் தலைநகரான அமராவதி உட்பட மொத்தம் 31 நகரங்கள் ஆந்திர மாநிலத்தில் உள்ளன [2]. இந்நகரங்களில் 14 மாநகராட்சிகள், 16 நகராட்சிகள் உள்ளடங்கியுள்ளன [3]. மாநிலத்தின் பதின்மூன்று மாவட்ட தலைநகரங்களும் நகரங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. இவையாவும் மாநகராட்சி தரநிலையில் உள்ளவையாகும். , சுற்றியுள்ள கிராமங்களையும் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் இணைத்த பிறகான கணக்கெடுப்பின்படி விசாகப்பட்டினத்தின் மக்கள் தொகை 20,35,922 பேர் ஆகும். இம்மாநிலத்தில் மக்கள்தொகை அதிகம் கொண்ட நகரமாக விசாகப்பட்டினம் கருதப்படுகிறது. 1,25,939 பேரை மக்கள்தொகையாகக் கொண்ட சிறீகாகுளம், குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநகராட்சியாகவும் கருதப்படுகிறது [3] விசாகப்பட்டினம் மற்றும் அமராவதி ஆகிய இரண்டு நகரங்களும் மக்கள் தொகை மிகுந்த பெரு நகரங்களாகக் கருதப்படுகின்றன.[4]. பரப்பளவின் அடிப்படையில் கணக்கிட்டால் விசாகப்பட்டினம் 681.96 கி.மீ 2 பரப்பளவைக் கொண்டு மிகப்பெரிய மாநகராட்சியாகத் திகழ்கிறது. இதற்கு அடுத்ததாக மாநிலத்தின் தலைநகரம் அமராவதி இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது. 7.12 கி.மீ 2 பரப்பளவைக் கொண்ட புரோத்தாதூர் நகரம் மிகச்சிறிய நகராட்சியாகும்.ஆந்திரப் பிரதேசத்தில் மக்களடர்த்தி குறைந்த நகரமாக விசாகப்பட்டினமும், மக்களடர்த்தி மிகுந்த நகரமாக ஏலூரு நகரமும் கருதப்படுகின்றன. மாநகராட்சிகளில் 14.55 கி.மீ 2 பரப்பளவைக் கொண்ட ஏலூரு நகரம் சிறிய மாநகராட்சியாகக் கருதப்படுகிறது [3].

நகரங்களின் பட்டியல்தொகு

குறிப்புதொகு

மச்சிலிப்பட்டினம், விசயநகரம் முதலியன மாநகராட்சியாக மேம்படுத்தப்பட்டு நகராட்சியாகவே உள்ளன [5][6].

வ.எண். பெயர் மாவட்டம் வகை மக்கள் தொகை
(2011)[7][3]
பரப்பளவு
(sq.km.)[3]
மேற்கோள்
1 விசாகப்பட்டினம்[8] விசாகப்பட்டினம் மாநகராட்சி 2,035,922 540.00
2 விசயவாடா கிருட்டிணா மாநகராட்சி (அமராவதி) 1,048,240 110.44 [9]
3 குண்டூர் குண்டூர் மாநகராட்சி (அமராவதி) 743,354 164.48 [10]
4 நெல்லூர் நெல்லூர் மாநகராட்சி 600,869 230.41 [11][12]
5 ராசமுந்திரி கிழக்கு கோதாவரி மாநகராட்சி 434,920 144.73 [13]
6 கடப்பா கடப்பா மாநகராட்சி 343,054 164.08 [14]
7 கர்னூல் கர்னூல் மாநகராட்சி 430,214 49.50
8 காக்கிநாடா கிழக்கு கோதாவரி மாநகராட்சி 312,538 30.51
9 திருப்பதி திருப்பதி மாநகராட்சி 287,482 27.44
10 அனந்தபூர் அனந்தபூர் மாநகராட்சி 261,004 47.50
11 விசயநகரம் விசயநகரம் நகராட்சி 228,025 27.90 [6]
12 ஏலூரு மேற்கு கோதாவரி மாநகராட்சி 217,876 14.50 [15]
13 ஓங்கோல் பிரகாசம் மாநகராட்சி 204,746 25.00 [16]
14 நந்தியால் கர்னூல் நகராட்சி 200,746 19.00 [17]
15 மச்சிலிப்பட்டினம் கிருட்டிணா நகராட்சி 169,892 26.67 [6]
16 ஆதோனி கர்னூல் நகராட்சி 166,537 32.71 [18]
17 தெனாலி குண்டூர் நகராட்சி 164,937 15.12
18 புரோட்டத்தூர் கடப்பா நகராட்சி 162,717 7.12
19 சித்தூர் சித்தூர் மாநகராட்சி 153,766 95.97 [19]
20 இந்துப்பூர் அனந்தபூர் நகராட்சி 151,835 24.06 [20]
21 பீமவரம் மேற்கு கோதாவரி நகராட்சி 142,280 25.60 [21]
22 மதனப்பள்ளி சித்தூர் நகராட்சி 135,669 14.20 [22]
23 குண்டக்கல் அனந்தபூர் நகராட்சி 126,270 40.87 [23]
24 சிறீகாகுளம் சிறீகாகுளம் மாநகராட்சி 125,939 20.89 [6][24]
25 தர்மவரம் அனந்தபூர் நகராட்சி 121,874 40.50
26 குடிவாடா கிருட்டிணா நகராட்சி 118,167 12.67
27 நரசராவ்பேட்டை குண்டூர் நகராட்சி 116,250 7.65 [25]
28 தாடிபத்திரி அனந்தபூர் நகராட்சி 108,171 7.46 [26]
29 காவலி நெல்லூர் நகராட்சி 104,000 61.09
30 தாடேபள்ளிகூடம் மேற்கு கோதாவரி நகராட்சி 103,906 20.71
31 அமராவதி குண்டூர் வகைப்படுத்தப்படவில்லை 103,000 217.23 [27][28]

மேற்கோள்கள்தொகு

 1. "Census Data 2011 / Metadata". The Registrar General & Census Commissioner, India. 17 June 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 August 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி)
 2. Vadlapatla, Sribala (11 August 2015). "Amaravati among 31 AP cities selected for Amruth development". The Times of India (Hyderabad). http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Amaravati-among-31-AP-cities-selected-for-Amruth-development/articleshow/48431080.cms. பார்த்த நாள்: 18 December 2015. 
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Municipalities, Municipal Corporations & UDAs" (PDF). Directorate of Town and Country Planning. Government of Andhra Pradesh. 8 ஆகஸ்ட் 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 23 June 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 4. Kalavalapalli, Yogendra (4 September 2015). "Andhra Pradesh ready to build metro rail in Vijayawada and Vizag with JICA help". Livemint (Hyderabad). http://www.livemint.com/Politics/9XFEhkPyh4Ka7HkuHP9sRJ/Andhra-Pradesh-ready-to-build-metro-rail-in-Vijayawada-and-V.html. பார்த்த நாள்: 28 March 2016. 
 5. "Masula to remain a municipality". Hyderabad. 30 March 2016. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/masula-to-remain-a-municipality/article8260475.ece. பார்த்த நாள்: 20 February 2016. 
 6. 6.0 6.1 6.2 6.3 "Masula, Srikakulam, Vizianagaram upgraded into corporations". The Hindu. 16 April 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 June 2016 அன்று பார்க்கப்பட்டது.
 7. "Andhra Pradesh (India): Districts, Cities, Towns and Outgrowth Wards - Population Statistics in Maps and Charts".
 8. Reporter, Staff. "CM okays merger of Anakapalle and Bhimili with GVMC" (in en). The Hindu. http://www.thehindu.com/todays-paper/cm-okays-merger-of-anakapalle-and-bhimili-with-gvmc/article4851581.ece. பார்த்த நாள்: 26 May 2017. 
 9. "All you need to know about Andhra Pradesh's new capital - Vijaywada". DNA India. 5 September 2014. http://www.dnaindia.com/india/report-all-you-need-to-know-about-andhra-pradesh-s-new-capital-vijaywada-2016247. பார்த்த நாள்: 10 May 2016. 
 10. "Integrated Municipal Solid Waste (MSW) Management Project" (PDF). Swachha Andhra Corporation. Government of Andhra Pradesh. p. 20/4. 10 மே 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 31 October 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 11. "The Case of Guntur, India" (PDF). DReAMS - Development of Resources and Access to Municipal Services. p. 1. 15 June 2015 அன்று பார்க்கப்பட்டது.
 12. "Guntur city population is 743,354 as per 2011 Census". The Hindu (Guntur). 26 May 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/guntur-city-population-is-743354-as-per-2011-census/article4752495.ece. பார்த்த நாள்: 12 October 2014. 
 13. "Municipal Information". official website of Kurnool Municipal Corporation. 27 ஜூலை 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
 14. "Kadapa Municipal Corporation at a Glance" (PDF). Kadapa Municipal Corporation. 24 டிசம்பர் 2018 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 12 February 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 15. "Municipality Profile | Eluru Municipal Corporation". eluru.cdma.ap.gov.in (in ஆங்கிலம்). 11 மார்ச் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 April 2017 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 16. "About Ongole". Ongole Municipal Corporation. 17 June 2015. 1 டிசம்பர் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 ஜனவரி 2018 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 17. "Nandyal Municipality". Commissioner & Director of Municipal Administration. Municipal Administration and Urban Development Department, Government of Andhra Pradesh. 19 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
 18. "Municipal Information". Commissioner & Director of Municipal Administration. Municipal Administration and Urban Development Department, Government of Andhra Pradesh. 10 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
 19. "Chittoor Municipal Corporation". Ministry of Housing & Urban Poverty Alleviation. 22 ஜூன் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 July 2012 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 20. "Anantapur Municipality". Commissioner & Director of Municipal Administration. Municipal Administration and Urban Development Department, Government of Andhra Pradesh. 19 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
 21. "Administration". Bhimavaram Municipality. 15 அக்டோபர் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 August 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 22. "Madanapalli Municipality". Commissioner & Director of Municipal Administration. Municipal Administration and Urban Development Department, Government of Andhra Pradesh. 24 டிசம்பர் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 August 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 23. "Guntakal Municipality". Commissioner & Director of Municipal Administration. Municipal Administration and Urban Development Department, Government of Andhra Pradesh. 23 செப்டம்பர் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 August 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 24. "Srikakulam Municipality". Commissioner & Director of Municipal Administration. Municipal Administration & Urban Development Department, Government of Andhra Pradesh. 19 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
 25. "Narasaraopet Municipality". Commissioner & Director of Municipal Administration. Municipal Administration and Urban Development Department, Government of Andhra Pradesh. 10 October 2014 அன்று பார்க்கப்பட்டது.
 26. "Tadipatri Municipality". Commissioner & Director of Municipal Administration. Municipal Administration and Urban Development Department, Government of Andhra Pradesh. 24 டிசம்பர் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 August 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 27. "Declaration of A.P. Capital City Area (Revised)". Andhra Patrika. Archived from the original on 24 டிசம்பர் 2018. https://web.archive.org/web/20181224192715/http://andhrapatrika.in/te/article.php?id=7042. பார்த்த நாள்: 15 June 2015. 
 28. "CRDA eyes CSR funds to push job potential in capital city". Times of India (Guntur). 1 July 2015. http://timesofindia.indiatimes.com/city/vijayawada/CRDA-eyes-CSR-funds-to-push-job-potential-in-capital-city/articleshow/47891827.cms. பார்த்த நாள்: 18 August 2015.