குடிவாடா
குடிவாடா (Gudivada) ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் அமைந்த நகரமும், நகராட்சியும் ஆகும். குடிவாடா நகரம் குடிவாடா மண்டலம் மற்றும் குடிவாடா வருவாய் கோட்டத்தின் தலைமையிடம் ஆகும்.[2][3] ஆந்திரப் பிரதேசத்தின் புதிதாக கட்டுமானத்தில் உள்ள ஆந்திரப் பிரதேசத் தலைநகர் வலயத்தில் அமைந்த நகரங்களில் குடிவாடா நகரமும் ஒன்றாகும்.[4]
குடிவாடா
விதர்பபுரி | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 16°26′N 80°59′E / 16.43°N 80.99°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | கிருஷ்ணா |
மண்டலம் | குடிவாடா |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | குடிவாடா நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 12.67 km2 (4.89 sq mi) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 1,18,167 |
• அடர்த்தி | 9,300/km2 (24,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 521301 |
தொலைபேசு குறியீடு எண் | +91-08674 |
வாகனப் பதிவு | AP 16 |
இணையதளம் | gudivada |
குடிவாடா நகரம் விஜயவாடாவிலிருந்து 43 கிமீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு தெற்கே 283 கிமீ தொலைவிலும் உள்ளது.
வரலாறு
தொகுதெலுங்கு மொழியில் குடி என்பதற்கு கோயில் என்றும், வாடா என்பதற்கு குடியிருப்பு அல்லது நகரம் என்றும் பொருள்படும். இந்நகரத்தின் குடியிருப்புகள் சாதவாகனர் காலத்தில், கிமு 3 அல்லது 2ம் நூற்றாண்டு முதல் தொடர்ந்து உள்ளது.[6] Archaeological excavations[7] குடிவாடா தொல்லியல் களத்தின் அகழாய்வில் பௌத்த தூபிகளும், சமண தீர்த்தங்கரர் பார்சுவநாதர் நினைவுச்சின்னங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[8]
புவியியல்
தொகுகுடிவாடா நகரம் கடற்கரை ஆந்திராப் பகுதியில் அமைந்துள்ளது. கிருஷ்ணா மாவட்டத் தலைநகரான மச்சிலிபட்டினத்திற்கு கிழக்கே 41 கிமீ (25.5 மைல்) கிழக்கேயும், ஆந்திரப் பிரதேசத் தலைநகர் வலயத்திலிருந்து 45 கிமீ (36.7 மைல்) தொலைவிலும் உள்ளது.[9] குடிவாடா நகரம், வங்காள விரிகுடா கடற்கரையிலிருந்து 35 கிமீ மேற்கே உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, 30,834 வீடுகள் கொண்ட குடிவாடா நகரத்தின் மக்கள்தொகை 1,18,167 ஆகும். அதில் ஆண்கள் 59,062 ஆகவும், பெண்கள் 59,105 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1001 பெண்கள் வீதம் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டோர் 10,509 ஆக உள்ளனர். எழுத்தறிவு 81.64% ஆகவுள்ளது. குடிவாடா மக்கள்தொகையில் இந்துக்கள் 86.37%ம், இசுலாமியர் 9.23%ம், கிறித்தவர்கள் 3.63%ம், மற்றவர்கள் 0.77% ஆகவுள்ளனர்.[10]
குடிவாடா நகராட்சி நிர்வாகம்
தொகு1937ல் நிறுவப்பட்ட குடிவாடா நகராட்சி, தற்போது 12.67 சகிமீ பரப்பளவுடன், 36 உறுப்பினர்களுடன் சிறப்பு நகராட்சி தகுதி பெற்றுள்ளது.[1] [11]
போக்குவரத்து
தொகுதொடருந்துகள்
தொகுமூன்று நடைமேடைகள் கொண்ட குடிவாடா தொடருந்து நிலையத்திலிருந்து, விஜயவாடா வானூர்தி நிலையம் 24 கிமீ தொலைவில் உள்ளது.[12] குடிவாடாவிருந்து, விசாகப்பட்டினத்திற்கு நாள்தோறும் தொடருந்துகள் செல்கிறது.[13]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Municipalities, Municipal Corporations & UDAs" (PDF). Directorate of Town and Country Planning. Government of Andhra Pradesh. Archived from the original (PDF) on 28 January 2016. பார்க்கப்பட்ட நாள் 29 January 2016.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ 2.0 2.1 "District Census Handbook – Krishna" (PDF). Census of India. pp. 16–17, 48. பார்க்கப்பட்ட நாள் 18 January 2015.
- ↑ "Krishna District Mandals" (PDF). Census of India. pp. 504, 528–529. பார்க்கப்பட்ட நாள் 17 July 2015.
- ↑ "Declaration of A.P. Capital Region" (PDF). Andhra Nation. Municipal Administration and Urban Development Department. 22 September 2015. Archived from the original (PDF) on 10 ஆகஸ்ட் 2021. பார்க்கப்பட்ட நாள் 23 September 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ British Museum Collection
- ↑ Spectrum, Digital (2008-06-05). "Gudivada: Gudivada History". Livegudivada.blogspot.in. பார்க்கப்பட்ட நாள் 2013-05-01.
- ↑ "Archaeological Survey of India". Asihyd.ap.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2013-05-01.
- ↑ "Shri Gudivada Tirth – Jain Temples in Rest of India". www.Jinalaya.com. பார்க்கப்பட்ட நாள் 2013-05-01.
- ↑ "Gudivada Municipality". Archived from the original on 2018-08-19. பார்க்கப்பட்ட நாள் 2018-08-13.
- ↑ Gudivada City Census 2011 data
- ↑ "About Us | Gudivada Municipality". gudivada.cdma.ap.gov.in. Archived from the original on 5 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 5 November 2016.
- ↑ குடிவாடா தொடருந்து நிலைய கால அட்டவணை
- ↑ VISAKHAPATNAM to GUDIVADA JN Trains