தாடிபத்திரி

தாடிபத்திரி (Tadipatri or Tadpatri) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும்.[2] தாடிபத்திரி நகரம், கர்னூல் மாவட்டம் மற்றும் கடப்பா மாவட்டம் ஆகியவற்றின் எல்லையில் அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ளது.

தாடிபத்திரி
தாடிபத்திரி நகராட்சி அலுவலக கட்டிடம்
தாடிபத்திரி நகராட்சி அலுவலக கட்டிடம்
அடைபெயர்(கள்): Tadpatri
தாடிபத்திரி is located in ஆந்திரப் பிரதேசம்
தாடிபத்திரி
தாடிபத்திரி
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் தாடிபத்திரி நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 14°55′N 78°01′E / 14.92°N 78.02°E / 14.92; 78.02
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்அனந்தபூர்
பரப்பளவு
 • மொத்தம்7.46 km2 (2.88 sq mi)
ஏற்றம்
229 m (751 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்1,08,171
 • அடர்த்தி15,000/km2 (38,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிதெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
515411
ஐஎசுஓ 3166 குறியீடுIN-AP
வாகனப் பதிவுAP - 25
இணையதளம்tadipatri.cdma.ap.gov.in/en

மாவட்டத் தலைமையிடமான அனந்தபூருக்கு வடகிழக்கே 56 கிமீ தொலைவில் தாடிப்பத்திரி நகரம் அமைந்துள்ளது.[3] தாடிபத்திரி நகரத்தில் பெண்ணாற்றின் தென்கரையில், ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த தொன்மை வாய்ந்த சிந்தல வெங்கடரமணர் கோயில் புகழ்பெற்றது.

மக்கள்தொகையியல்

தொகு

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தாடிபத்திரி நகரத்தின் மொத்த மக்கள்தொகை 1,08,171 ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 54,015 ஆகவும், பெண்கள் 54,156 ஆகவும் உள்ளனர். மக்கள்தொகையில் எழுத்தறிவு பெற்றவர்கள் 68,750 (71.39 %) ஆகவுள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டோர் 11,869 அகவுள்ளனர்.

தாடிபத்திரி நகர மக்கள்தொகையில் இந்துக்கள் 78,102 (72.20%) ஆகவும், இசுலாமியர் 28,757 (26.58%) ஆகவும், மற்றவர்கள் 1.22% ஆகவும் உள்ளனர்.[4]

உள்ளாட்சி நிர்வாகம்

தொகு

7.46 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட முதல் நிலை நகராட்சியான தாடிபத்திரி நகராட்சி 1920ல் நிறுவப்பட்டது. இந்நகராட்சி 34 நகராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்டது.[5]

போக்குவரத்து

தொகு

மூன்று நடைமேடைகள் கொண்ட தாடிபத்திரி தொடருந்து நிலையத்தில் நாள்தோறும் 43 தொடருந்துகள் நின்று செல்கிறது.[6] [7]

 
சிந்தல வெங்கடரமணர் கோயில்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Municipalities, Municipal Corporations & UDAs" (PDF). Directorate of Town and Country Planning. Government of Andhra Pradesh. Archived from the original (PDF) on 7 June 2016. பார்க்கப்பட்ட நாள் 29 January 2016.
  2. "Anantapur District Mandals" (PDF). Census of India. p. 378. பார்க்கப்பட்ட நாள் 6 June 2017.
  3. https://www.google.co.in/search?client=opera&q=distance+from+anantapur+to+tadipatri&sourceid=opera&ie=UTF-8&oe=UTF-8
  4. Tadpatri City Census 2011 data
  5. "Municipalities, Municipal Corporations & UDAs" (PDF). Directorate of Town and Country Planning. Government of Andhra Pradesh. Archived from the original (PDF) on 8 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. https://indiarailinfo.com/search/atp-anantapur-to-tu-tadipatri/139/0/840
  7. Tadipatri Railway Station
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tadipatri
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாடிபத்திரி&oldid=4139796" இலிருந்து மீள்விக்கப்பட்டது