பீமவரம், மேற்கு கோதாவரி மாவட்டம்

பீமவரம் (Bhimavaram) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். நரசபுரம் வருவாய் கோட்டத்திலுள்ள பீமாவரம் மண்டலத்தின் நிர்வாக தலைமையகம் பீமாவரம் ஆகும்[1][2]. பீமாவரம் எலுரு நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஒரு பகுதியாகும். 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் இந்நகரத்தின் மக்கள் தொகை 142,184 ஆகும். மக்கள்தொகை அதிகமாகக் கொண்ட மாவட்டங்களில் பீமாவரம் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும். முக்கிய புனிதத் தலங்களில் இதுவும் ஒன்றாகும் பஞ்சராமா எனப்படும் ஐந்து இந்து கோயில்களில் சோமராமம் என்ற இந்து கோயில் இங்குதான் உள்ளது[3].

வரலாறு

தொகு

இன்றைய கடலோர ஆந்திராவின் பெரும்பகுதியுடன், பீமவரம் சோழ வம்சத்தால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. . முதலாம் குலோத்துங்க சோழனின் ஆட்சியின் கீழ் அவரது புதல்வர்கள் பீமவரத்தை ஆண்டனர். அவர்கள் வைசிராய்களாக பணியாற்றினர். அவரது ஆட்சிக் காலத்திலிருந்தே (கி.பி. 1096) இந்நகரத்தில் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன[4].

பெயர்க்காரணம்

தொகு

பீமவரம் என்ற பெயருக்கு "பீமாவின் பரிசு" என்று பொருளாகும். ஒரு தொல் புராணத்தின் படி, கி.பி 890-918 ஆண்டில் சாளுக்கிய பீமா என்ற கிழக்கு சாளுக்கிய மன்னர் ஒரு சிவன் கோவிலைக் கட்டி இந்த ஊருக்கு அடித்தளம் அமைத்தார்[5]. இது முதலில் "பீமாபுரம்" என்று அழைக்கப்பட்டது, ஆனால் பெயர் படிப்படியாக "பீமவரம்" என்று மாற்றப்பட்டது; "புரம்" என்பது ஒரு வசிப்பிடத்தை குறிக்கிறது, "வரம்" என்பது தெலுங்கில் ஒரு ஆசுத்தி என்று பொருளாகும்.

மக்கள் தொகையியல்

தொகு

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தின் மக்கள் தொகை 142,184 ஆகும். மொத்த மக்கள் தொகையில் 70,066 ஆண்களும் 72,214 பெண்களும் அடங்குவர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1031 பெண்கள் என்ற அலவில் இருந்தது. 12,157 குழந்தைகள் 0–6 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தனர். அவர்களில் 6,149 சிறுவர்கள் மற்றும் 6,008 பேர் சிறுமிகள் ஆவர். - இது 1000 சிறுவர்களுக்கு 977 பெண்கள் என்ற பாலின விகிதமாகும்.. இந்நகரின் சராசரி கல்வியறிவு விகிதம் 83.41% ஆக இருந்தது. 1,08,535 கல்வி கற்றவர்களாக உள்ளனர், இது மாநில சராசரியான 73.00% என்பதை விட கணிசமாக அதிகமாகும். நகர்ப்புறத்துடன் ஒருங்கிணைப்பு கொண்ட மக்கள் தொகை 146,961 ஆகும்.

பொருளாதாரம்

தொகு

கோதாவரி டெல்டா பிராந்தியத்தின் மையப்பகுதியில் பீமவரம் உள்ளது. இது ஆந்திர மாநிலத்தில் விளையும் நெல்லின் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றாகும். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட வணிகங்களான உணவு பதப்படுத்துதல், மீன் பிடித்தல் , அரிசி ஆலைகள் போன்றவை நகரத்தின் வருவாயின் முக்கிய ஆதாரங்களாக இருக்கின்றன. இது ஒரு விநியோக மையமாகவும், அதன் மையப்பகுதிக்கு வணிக மையமாகவும் செயல்படுகிறது. இந்த நகரம் உயர்கல்விக்கான பிராந்திய மையமாகவும், சிறப்பு சுகாதார சேவைகளுக்காகவும் அறியப்படுகிறது[4].

குடிமை நிர்வாகம்

தொகு

நகர்ப்புற ஒருங்கிணைப்பு பீமவரம் நகராட்சியை உள்ளடக்கியுள்ளது. ராயலம் (கிராமம்) மற்றும் சைனாமிராம் ஆகியவற்றின் வளர்ச்சியை ஓரளவுக்கு இப்பகுதி வெளிப்படுத்துகிறது. பீமவரத்தின் பரப்பளவு 26.14 சதுர கிலோமீட்டர்களாகும். பீமாவரம் நகராட்சி பரிணாமத்தின் சுவடுகள்[6]: 1.ஏப்ரல் 1948: பீமாவரம் நகராட்சி மூன்றாம் வகுப்பு நகராட்சியாக நிறுவப்பட்டது. 2.ஆகத்து 1963: ஆகத்து 1963 இல் இரண்டாம் வகுப்பு நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. 3.ஆகத்து 1967: ஆகத்து 1967 இல் முதல் தர நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. 4.செப்டம்பர் 1980: செப்டம்பர் 1980 இல் சிறப்பு நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. 5.செப்டம்பர் 2011: இது 2011 இல் 'தேர்வு நிலை நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. 6.1 சனவரி 2019: எலுரு நகர அபிவிருத்தி ஆணையம் உருவாக்கப்பட்டது. மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள இடங்களுடன் பீமவரம் எலுரு நகர அபிவிருத்தி ஆனையத்தின் ஒரு பகுதியாக மாறியது .

அரசியல்

தொகு

பீமவரம் ஆந்திராவில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். கிராண்டி சீனிவாசு என்பவர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

போக்குவரத்து

தொகு

நகரத்தின் மொத்த சாலை நீளம் 201.60 கிலோமீட்டர் ஆகும். இது தேசிய நெடுஞ்சாலைகளால் நாட்டின் பிற இடங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 216 இந்நகரம் வழியாக செல்கிறது[7]

ஆந்திரா மாநில சாலை போக்குவரத்துக் கழகம் பீமாவரம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவைகளை இயக்குகிறது[8]. தென் மத்திய ரயில்வே மண்டலத்தின் விசயவாடா இரயில் பிரிவில் பீமாவரம் நகர இரயில் நிலையம் 'ஏ-வகை' நிலையம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது[9][10]. குடிவாடா-பீமாவரம் பிரிவு இதை அவுரா-சென்னை பிரதான பாதையின் விசாகப்பட்டினம்-விசயவாடா பகுதியுடன் இணைக்கிறது.

நகரத்தில் போக்குவரத்து அதிகாரிகளின் கூற்றுப்படி 2,69,137 வாகன உரிமையாளர்கள் உரிமம் பெற்றுள்ளனர். இவற்றில் சுமார் 13,064 ஆட்டோக்கள், 1236 பள்ளி பேருந்துகள், 9908 லாரிகள், 11,129 கார்கள், 2,04,728 மோட்டார் சைக்கிள்கள், 2,833 முச்சக்கர வண்டிகள், 15 வாடகை கார்கள் மற்றும் 5 பேருந்து பயண வாகனங்கள் அடங்கும்[11]. பீமாவரத்திற்கு அருகிலுள்ள விமான நிலையம் ராஜமுந்திரி விமான நிலையம் ஆகும். இது 80 கி.மீ. தொலைவில் உள்ளது.

ஊர்கள்

தொகு

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.

  • அனகடேரு
  • அன்னவரம்
  • பேத்தபூடி
  • பீமவரம்
  • சினமிரம்
  • திருசுமர்ரு
  • குனுபூடி
  • கொமராடா
  • கொவ்வாடா
  • லொசரிகுட்லபாடு
  • நரசிம்மாபுரம்
  • ராயலம்
  • தாடேரு
  • துண்டுர்ரு
  • வெம்பா
  • எனமதுர்ரு

மேற்கோள்கள்

தொகு
  1. "West Godavari District Mandals" (PDF). Census of India. p. 457. பார்க்கப்பட்ட நாள் 19 January 2015.
  2. "District Census Handbook – West Godavari" (PDF). Census of India. p. 22,23–54. பார்க்கப்பட்ட நாள் 22 September 2015.
  3. "Toursim [sic]". Bhimavaram Municipality. Archived from the original on 16 March 2015. பார்க்கப்பட்ட நாள் 1 May 2015.
  4. 4.0 4.1 "About Bhimavaram Municipality". Bhimavaram Municipality. 2011. Archived from the original on 14 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 23 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Welcome to Bhimavaram Info". bhimavaraminfo.com. Archived from the original on 2007-07-06. பார்க்கப்பட்ட நாள் 2019-11-08.
  6. "Administration". Bhimavaram Municipality. பார்க்கப்பட்ட நாள் 29 March 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "Details of Roads in each ULB of Andhra Pradesh". Commissioner and Directorate of Municipal Administration. Municipal Administration and Urban Developmemt Department – Government of Andhra Pradesh. Archived from the original on 1 August 2016. பார்க்கப்பட்ட நாள் 28 March 2017.
  8. "Bus Stations in Districts". Andhra Pradesh State Road Transport Corporation. Archived from the original on 22 March 2016. பார்க்கப்பட்ட நாள் 9 March 2016.
  9. "Vijayawada Division – a profile" (PDF). Indian Railways. பார்க்கப்பட்ட நாள் 2013-02-13.
  10. "BVRM/Bhimavaram Junction Railway Station". India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 23 August 2013.
  11. "Traffic hurdles in Bhimavaram aplenty". பார்க்கப்பட்ட நாள் 12 May 2018.