ஒங்கோல்
(ஓங்கோல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒங்கோல், (ஆங்கில மொழி: Ongole,(தெலுங்கு: ఒంగోలు), இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் ஆகும். இது இம்மாவட்டத்தின் தலைமையிடம் ஆகும். ஒங்கோல் மாடுகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. இது குண்டூரிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலும்; விஜயவாடாவிற்கு தெற்கே 148 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இவ்வூரில் விஜயவாடா, விசாகப்பட்டினம், தில்லி, கொல்கத்தா நகரங்களை இணைக்கும் தொடருந்து நிலையம் உள்ளது.[1]
ஒங்கோல்
ఒంగోలు | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): ஒங்குலு கிட்டாக்களின் நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | ஆந்திரா |
மாவட்டம் | பிரகாசம் |
அரசு | |
• நிர்வாகம் | OMC |
ஏற்றம் | 10 m (30 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,02,826 |
மொழி | |
• ஆட்சி மொழி | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய நேர வலயம்) |
தொலைபேசி எண் | (+91)8592 |
வாகனப் பதிவு | AP 27 xx xxxx |
பாலின விகிதம் | 979:1000 ♂/♀ |
நகரத் திட்டமிடல் முகமை | OMC |
குண்டூரிலிருந்து | 100 கிலோமீட்டர்கள் (62 mi) S (நிலவழி) |
சென்னையிலிருந்து | 292 கிலோமீட்டர்கள் (181 mi) N (இருப்புப் பாதை) |
ஐதராபாத்திலிருந்து | 330 கிலோமீட்டர்கள் (210 mi) S (நிலவழி) |
இணையதளம் | ongolemunicipality |
புவியியல்
தொகுஇவ்வூரின் அமைவிடம் 15°30′N 80°03′E / 15.5°N 80.05°E ஆகும்.