அன்னமய்யா மாவட்டம்

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்

அன்னமய்யா மாவட்டம் (Annamayya district) ஆந்திரப் பிரதேசத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.[4] இதன் நிர்வாகத் தலைமையிடம் ராயச்சோட்டி நகரம் ஆகும். சித்தூர் மாவட்டத்தின் மதனப்பள்ளி வருவாய் கோட்டம், ஒய் எஸ் ஆர் கடப்பா மாவட்டத்தின் ராயச்சோட்டி வருவாய் கோட்டம் மற்றும் புதிதாக நிறுவப்பட்ட ராஜம்பேட் வருவாய் கோட்டத்தின் பகுதிகளைக் கொண்டு 4 ஏப்ரல் 2022 அன்று அன்னமாச்சாரியார் நினைவாக அன்னமய்யா மாவட்டம் நிறுவப்பட்டது.[5]

அன்னமய்யா
Location of அன்னமய்யா
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
பகுதிஇராயலசீமை
நிறுவப்பட்ட நாள்4 ஏப்ரல் 2022
தோற்றுவித்தவர்ஆந்திரப் பிரதேச அரசு
பெயர்ச்சூட்டுஅன்னமாச்சாரியார்
தலைமையிடம்ராயச்சோட்டி
அரசு
 • மாவட்ட ஆட்சித் தலைவர்ஸ்ரீ பி.எஸ்.கிரிஷா, இ.ஆ.ப
 • காவல்துறைக் கண்காணிப்பாளர்ஸ்ரீ வி ஹர்ஷவர்தன் ராஜு, இ.கா.ப
பரப்பளவு
 • மொத்தம்7,951 km2 (3,070 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்16,97,308
 • அடர்த்தி213/km2 (550/sq mi)
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
அஞ்சல் குறியீட்டு எண்
516 XXX, 517 XXX
தொலைபேசி+91
வாகனப் பதிவு[[இந்திய அனுமதி இலக்கத்தகடுகள் |AP 39]][3]
இணையதளம்annamayya.ap.gov.in

7,951 சதுர கிலோ மீட்டர்[1] பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 16,97,308,[2] ஆகும்.

மண்டல்கள்

மாவட்ட நிர்வாகம்

தொகு
 
மண்டல்கள்
 
தெலுங்கு இசை கவிஞர் அன்னமாச்சாரியார் சிற்பம்

இம்மாவட்டம் 3 வருவாய் கோட்டங்களையும், 30 மண்டல்களையும், 462 வருவாய் கிராமங்களைக் கொண்டது. மேலும் இம்மாவட்டம் ராஜம்பேட், ராயச்சோட்டி மற்றும் மதனப்பள்ளி என 3 நகராட்சிகளையும் கொண்டது.

மண்டல்கள்

தொகு
# ராஜம்பேட் வருவாய் கோட்டம் ராயச்சோட்டி வருவாய் கோட்டம் மதனப்பள்ளி வருவாய் கோட்டம்
1 பி. கோடூரு ராயச்சோட்டி மதனப்பள்ளி
2 பெனகளூர் சம்பெபள்ளி நிம்மனப்பள்ளி
3 சித்வேலு சின்னமண்டயம் ராமசமுத்திரம்
4 புள்ளம்பேட்டை காளிவீடு தம்பளளபள்ளி
5 ஓபுளாவாரிபள்ளி லக்கிரெட்டிப்பள்ளி மூலக்கலசெருவு
6 ராஜம்பேட் ராமாபுரம் பெத்தமண்டயம்
7 நந்தலூரூ பிலெரூ குரபாலகோட்டை
8 வீரப்பள்ளி குர்ரம்கொண்டா பெத்த திப்பசமுத்திரம்
9 டி. சுந்துப்பள்ளி களக்காடா பி. கொத்தகோட்டை
10 கம்பம்வாரிப்பள்ளி காளிகிரி
11 வால்மீகிபுரம்

அரசியல்

தொகு
 
சட்டப் பேரவையின் தொகுதிகள் (2008-2014)
 
மக்களவை தொகுதிகள் (2008-2014)
 
சட்டப் பேரவையின் தொகுதிகள் (2014-)
 
மக்களவை தொகுதிகள் (2014-)

இம்மாவட்டம் ராஜம்பேட்டை மக்களவைத் தொகுதி மற்றும் 7 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.

தொகுதி எண் தொகுதி பழைய எண் சட்டப் பேரவையின் தொகுதிகள் ( SC / ST / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது தொகுதி எண் தொகுதி பழைய எண் மக்களவை தொகுதிகள் ( SC / ST / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது
125 244 ராஜம்பேட்டை சட்டமன்றத் தொகுதி எதுவுமில்லை 24 41 ராஜம்பேட்டை மக்களவைத் தொகுதி எதுவுமில்லை
127 246 கோடூர் சட்டமன்றத் தொகுதி SC
128 247 ராயச்சோட்டி சட்டமன்றத் தொகுதி எதுவுமில்லை
162 281 தம்பள்ளப்பள்ளி சட்டமன்றத் தொகுதி
163 282 பீலேறு சட்டமன்றத் தொகுதி
164 283 மதனபள்ளி சட்டமன்றத் தொகுதி

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 https://annamayya.ap.gov.in/demography/
  2. 2.0 2.1 https://annamayya.ap.gov.in/about-district/
  3. "AP 39 registration number series for all vehicles in Andhra Pradesh". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-06-27.
  4. A.P. to have 26 districts from 04 April 2022
  5. Andhra Pradesh adds 13 new districts

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னமய்யா_மாவட்டம்&oldid=3525001" இலிருந்து மீள்விக்கப்பட்டது