துங்கபத்திரை ஆறு
துங்கபத்திரை ஆறு தென்னிந்தியாவின் புனித நதிகளுள் ஒன்று. இது இந்தியாவின் கர்நாடக மாநிலம், ஆந்திர மாநிலத்தின் ஒரு பகுதி என்பவற்றூடாகப் பாய்ந்து, ஆந்திராவிலுள்ள கிருஷ்ணா ஆற்றுடன் கலக்கிறது. இதுவே கிருஷ்ணா ஆற்றின் முதன்மையான துணைநதி ஆகும். இந்தியாவின் பழம்பெரும் இதிகாசமான இராமாயணத்தில், இந்த ஆறு பம்பா ஆறு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்காலத்தில் இப் பெயர் கேரள மாநிலத்தில் உள்ள இன்னொரு ஆற்றுக்கு வழங்கி வருகின்றது.
துங்கபத்திரை ஆறு | |
---|---|
அமைவு |
போக்கு
தொகுதுங்கபத்திரை ஆறு துங்கா ஆறு, பத்திரா ஆறு என்னும் இரண்டு ஆறுகளின் இணைவினால் உருவானது. இது மேற்குத் தொடர்ச்சி மலையில் கிழக்குச் சரிவிலிருந்து கர்நாடகத்தில் பாய்கின்றது. இது பின்னர் வடகிழக்குத் திசையில், தக்காணச் சமவெளியில் துருத்திக்கொண்டு இருக்கும் கருங்கற்களின் மேல் குவிந்துள்ள பாறைகளால் உருவான முகடுகளின் ஊடாகப் பாய்கின்றது. இது செல்லும் காட்டுப்பகுதி மிகவும் அழகானது. சாம்பல், இளஞ்சிவப்பு போன்ற பல நிறங்களில் அமைந்த கருங்கற் பாறைக் குவியல்கள் இந் நிலத்தோற்றத்தில் முக்கிய அம்சமாக உள்ளன.
வெளி இணைப்புகள்
தொகு- விஜயநகரத்தினூடாகப் பாயும் துங்கபத்திரை ஆறு - நிலப்படம் பரணிடப்பட்டது 2007-08-04 at the வந்தவழி இயந்திரம்
- ஹம்பியின் ஒரு பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட துங்கபத்திரை நதியில் நிழற்படம் பரணிடப்பட்டது 2007-03-11 at the வந்தவழி இயந்திரம்
- ஹம்பி அருகில் ஆற்றின் படம்
- கிருஷ்ணா ஆறு பரணிடப்பட்டது 2010-12-27 at the வந்தவழி இயந்திரம்
- நிலத்தோற்றம் பரணிடப்பட்டது 2009-07-27 at the வந்தவழி இயந்திரம்
- துங்கபத்திரை தொடர்பான நிழற்படம், நிலப்படம் மற்றும் கட்டுரை பரணிடப்பட்டது 2007-07-07 at the வந்தவழி இயந்திரம்