முதனிலைத் திராவிட மொழி

முதனிலைத் திராவிட மொழி (Proto-Dravidian) என்பது, திராவிட மொழிகளுக்கான முதனிலை மொழி ஆகும். முதனிலை மொழிகள் என்பன கருதுகோள் அடிப்படையிலான மொழிகள்[சான்று தேவை]. இவை மொழியியலாளர்களாற் செய்யப்படுகின்ற மீளுருவாக்கங்கள். அவற்றுக்கு வரலாற்றுப் பதிவுகள் ஏதும் இருப்பதில்லை. இதனால் முதல் நிலைத் திராவிட மொழியும் ஒரு கருதுகோள் அடிப்படையிலானதும், பயன்பாட்டிலுள்ள திராவிட மொழிகளை ஆய்வு செய்து அவற்றின் அடிப்படையில் மீளுருவாக்கம் செய்யபட்டதுமான ஒரு மொழியாகும்[சான்று தேவை].

பிரிவுதொகு

இம்முதனிலைத் திராவிட மொழி, கிமு 500 அளவில் முதனிலை வட திராவிடம், முதனிலை நடுத் திராவிடம், முதனிலைத் தென் திராவிடம் எனப் பிரிந்ததாகச் சிலர்[சான்று தேவை] கூறுகின்றனர். வேறு சில மொழியியலாளர்கள், திராவிட மொழிகளின் துணைக் குடும்பங்களிடையே காணப்படும் வேறுபாடுகளின் அளவைப் பார்க்கும்போது இப் பிரிவு இன்னும் முன்னதாகவே ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதுகின்றனர்[சான்று தேவை]. எல்லாத் திராவிட மொழிகளையும் உள்ளடக்கி, முதனிலைத் திராவிட மொழி வடிவங்களைக் காட்டும் ஒரே நூல், திராவிடச் சொற்பிறப்பியல் அகரமுதலி[சான்று தேவை] ஆகும். இதுவும், அதிக விளக்கங்கள் எதுவும் கொடாமல் தொடர்புள்ள சொற்களின் பட்டியலை மட்டுமே தருகிறது.