தலை
தலை (head) என்பது உயிரியின் கண், காது, மூக்கு, வாய் ஆகிய பொறிகள் அமைந்த பகுதியாகும். இவை முறையே பார்த்தல். கேட்டல், முகர்தல், சுவைத்தல் ஆகிய புலனுணர்வுகளைத் தோற்றுவிக்கின்றன. சில எளிய விலங்குகளுக்குத் தலை இல்லாமல் இருக்கலாம்; ஆனால் இருபக்கச் சீரொருமை உள்ளவற்றில் மிகச் சிறியதாகவாவது தலை இருக்கும். தலைகள் தலையாக்கம் எனும் படிமலர்ச்சி நிகழ்வால் ஏற்படுகின்றன. இருபக்கச் சீரொருமை விலங்குகளில், நரம்பிழையங்கள் தலையின் முன்பக்கத்தில் தகவல் செயலாக்கக் கட்டமைப்புகளில் செறிவாக அமைகின்றன. உயிரியல் படிமலர்ச்சி வழியாக, பொறிகளும் (புலன் உணர்வு உறுப்புகளும்) ஊட்டுதல் கட்டமைப்புகளும் தலையின் முன்பக்கத்திலேயே அமைகின்றன; இவை ஒருங்கிணைந்ததே தலை ஆகும்.
தலை | |
---|---|
![]() மீர்பூனை தலை | |
அடையாளங்காட்டிகள் | |
MeSH | D006257 |
TA98 | A01.1.00.001 |
TA2 | 98 |
FMA | 7154 |
உடற்கூற்றியல் |
மாந்தத் தலைதொகு
மாந்தத் தலை என்பது மாந்தத் தலை எலும்புக் கூட்டையும் கவை எலும்பையும் கழுத்து முள்ளெலும்பையும் உள்ளடக்கிய உடற்கூற்று அலகாகும். தலை எலும்புக்கூடு கீழ்தாடை எலும்பையும் மூளையை உள்ளடக்கும் மண்டையோட்டையும் உள்ளடக்கும். மாறாக, தலை எலும்புக்கூடு மண்டையோடும் முக எலும்புக்கூடும் இணைந்ததாகவும் விவரிக்கப்படுவதுண்டு. மண்டையோடு மண்டையோட்டுக் குழியையும் முக எலும்புக்கூடு கீழ்த்தாடை எலும்பையும் உள்ளடக்கும். மண்டையோட்டில் எட்டு எலும்புகளும் முக எலும்புக்கூட்டில் பதினான்கு எலும்புகளும் அமைகின்றன.[1]
மாந்தத் தலையின் சிலைகள் மண்டையோட்டையும் தாடை எலும்பையும் கன்ன எலும்பையும் அடக்கிய தலை எலும்புக் கூட்டைக் காட்டுகின்றன. தலை, சிலையின் தசையெண்ணிக்கை ஒன்றினாலும், ஒவ்வொரு தசையின் வடிவம் செயல், வளர்ச்சி, முக உணர்ச்சி வெளிப்பாடு ஆகியவற்றைச் சார்ந்து ஒருவருக்கொருவர் மாறுபடும்.[2]
முற்றொருமைவாதிகள் மனம் மூளையோடு முற்றொருமித்தது என வாதிடுகின்றனர். மெய்யியலாளர் ஜான் சியர்ள் தன் முற்றொருமை வாத நம்பிக்கையை "மாந்தத் தலையில் மூளை மட்டுமே உள்ளது" என்று வெளிப்படுத்துகிறார். இதேபோல, மருத்துவர் என்றி பெனட் கிளார்க் தலை பல பில்லியன் " ஒற்றைத் தலைமை இல்லாத சிறுமுகமைகளாலும் நுண்முகமைகளாலும் ஆயது" எனக் கூறுகிறார்.[3]
பிற விலங்குகளில்தொகு
தலையின் படிமலர்ச்சி, 555 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக இருபக்கச் சீரொருமை விலங்குகளில் தலையாக்கப் படிமலர்ச்சி நிகழ்வால் ஏற்பட்டது.
கணுக்காலிகள்தொகு
சில கணுக்காலிகளில், சிறப்பாக முக்கணுக்காலிகளில் (வலது படம்), தலை அல்லது தலைப்பகுதி, இணைந்த துண்டங்களின் திரட்சியாக உள்ளது.[4]
பூச்சிகள்தொகு
ஒரு பூச்சியின் தலையில் கண்ணும் உணர்கொம்பும் வாயின் உறுப்புகளும் உள்ளன. இந்த உறுப்புகள் பூச்சிக்குப் பூச்சி கணிசமாக வேறுபடுவதால், இவையே பூச்சிகளுக்கான அடையாள இணைப்புகளாக அமைகின்றன. பல பூச்சிகளில் தலையில் உள்ள கண்கள் பன்முகக் கூட்டுக்கண்களாக அமைகின்றன. வேறு பல பூச்சிகளில் கூட்டுக்கண்கள் ஒரு பகுதியில் அல்லது ஒற்றைக் குழுப்பகுதியில் அமைந்துள்ளன. சிலவகைகளில், கண்கள் முதுகுப் பக்கத்தில் போலவோ அல்லது தலைக்கு நெருங்கிய இடத்தில் இரண்டு அல்லது மூன்று ஒன்றிய உறுப்புகளாக அதாவது பொட்டுக் கண்களாக உள்ளன.[5]
உணர்கொம்புகள் பூச்சித் தலையில் இணைகளாகவும் துண்ட இணைப்புகளாகவும் கண்களுக்கு நடுவில் அமைகின்றன. இவை வடிவத்திலும் அளவிலும் வேறுபட்ட படல வடிவில் பெரியதாகவோ திரண்டோ அமைகின்றன.[5]
பூச்சிகளின் வாய் உறுப்புகள், அவற்றின் உணவு கொள்ளும் வழக்கத்தைப் பொறுத்து பல வடிவங்களில் அமைகின்றன. மேலுதடு தளையின் முன்பக்கத்தில் மிகவும் வெளியே நீட்டிக்கொண்டு அமைகிறது. வாயை அணைந்தபடு மேலுதட்டுக்குப் பின்பக்கத்தில் இரு கீழ்தாடைப்பற்கள் அமைந்துள்ளன. தொடர்ந்து ஒரிணை மென்தாடைகள் அமைந்துள்ளன. இவை மென்தாடை உணர்கொம்புகள் (palp) அமைந்துள்ளன. வாயின் பின்பக்கத்தில் கீழுதடுகள் உள்ளன. சில பூச்சிகளில் வாயில் மேலும் கூடுதலாக ஓர் உறுப்பு அமைகிறது. இது அடித் தொண்டைக்குழி எனப்படுகிறது இது மென்தாடைகளுக்கு நடுவில் அமைகிறது.[5]
முதுகெலும்பிகளும் "புதிய தலை கருதுகோளும்"தொகு
சமூகத்திலும் பண்பாட்டிலும்தொகு
குலமரபியல்தொகு
மாந்த, விலங்குத் தலைகள் மீண்டும் மீண்டும் குலமரபில் உருவகங்களாக வருகின்றன.[6]
கலைகளில்தொகு
மரபுச் சொற்றொடர்களில்தொகு
மரபுச் சொற்றொடர் என்பது மரபுவழியாக பொருள் அமைந்த பேச்சு அல்லது உருவக, அணி, இலக்கியச் சொற்றொடராகும்.
- "இதன் தலையும் தெரியவில்லை வாலும் தெரியவில்லை" – இது புரியவில்லை[7]
அறிவியல் தொழில்நுட்பப் புலங்கள்தொகு
தலையின் செயலும் புறத்தோற்றமும் கலைச்சொற்களில் பலவிடங்களில் ஊடுருவியுள்ளன. (எ,கா, ) உருளைத் தலை, குடத்தலை, வானிலைத் தலைப்பு.
காட்சி மேடைதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ Halim, A. (30 December 2008). Human Anatomy:Volume Iii: Head, Neck And Brain. I. K. International Pvt Ltd. பக். 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-906566-4-1. https://books.google.com/books?id=nx0a1AIiBKQC.
- ↑ Slobodkin, Louis (1973). Sculpture: Principles and Practice. Courier Corporation. பக். 31. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-486-22960-7. https://books.google.com/books?id=ugsSRVCgkicC&pg=PA31.
- ↑ Cobb, John B. (4 February 2008). Back To Darwin: A Richer Account of Evolution. Wm. B. Eerdmans Publishing. பக். 371–375. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8028-4837-6. https://books.google.com/books?id=cuhxgMlqjbwC&pg=PA375.
- ↑ Stevenson, Angus (19 August 2010). Oxford Dictionary of English. OUP Oxford. பக். 283–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-957112-3. https://books.google.com/books?id=anecAQAAQBAJ&pg=PA283.
- ↑ 5.0 5.1 5.2 McCafferty, W. Patrick (1 January 1983). Aquatic Entomology: The Fishermen's and Ecologists' Illustrated Guide to Insects and Their Relatives. Jones & Bartlett Learning. பக். 20–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-86720-017-1. https://books.google.com/books?id=wiTq7x-fI_0C&pg=PA20.
- ↑ "H". Head. heraldsnet.org.
- ↑ Curtis, S. (2015). Connect: Stories Behind Idioms 1: Making sense of their origins and meanings. Connect. Acel Learning (S) Pte Limited. பக். 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-981-09-5822-0. https://books.google.com/books?id=LU0WCgAAQBAJ&pg=PA84.
பிழை காட்டு: <ref>
tag with name "jandzik2014" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Dolgopolov 2004 p. 104" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Palmatier 2000 p. 24" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Ammer 2013 p. 206" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Brenner 2011 p. 234" defined in <references>
is not used in prior text.
பிழை காட்டு: <ref>
tag with name "Ayto 2010 p. 45" defined in <references>
is not used in prior text.
<ref>
tag with name "Kirkpatrick Schwarz 1993" defined in <references>
is not used in prior text.மேலும் படிக்கதொகு
- Lieberman, Daniel E. (3 May 2011). Evolution of the Human Head. Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-674-05944-3. https://books.google.com/books?id=KvIDVlSExS8C&pg=PA207.