பிராகுயி மொழி

பராஹவி மொழி (Brahui language, بروہی) அல்லது பிராவி மொழி (براوِ) பராஹவி இனத்தவரால் பேசப்படுகிறது. இது சிறிய அளவில் ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது ஆயினும், பாகிஸ்தானின், பலூச்சிஸ்தான் மாகாணத்திலேயே பெருமளவில் புழங்கி வருகிறது. 2005 ஆம் ஆண்டில் எத்னோலாக் பதிப்பில் 22 லட்சம் எனக் கணிக்கப்பட்டுள்ள இதன் பேசுவோர் தொகையில் 90 வீதமானோர் பாகிஸ்தானிலேயே உள்ளனர். சிந்து, பலூச்சிஸ்தான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முப்பதுக்கு மேற்பட்ட இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் இம்மொழியைப் பேசுகின்றனர்.

பராஹவி
بروہی
நாடு(கள்)பாகிஸ்தான்
பிராந்தியம்பலூச்சிஸ்தான்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
2,200,000 (1998 மதிப்பீடு)  (date missing)
திராவிடம்
பார்சோ-அரபி
மொழிக் குறியீடுகள்
ISO 639-3brh

திராவிட மொழி தொகு

இது திராவிட மொழிக் குடும்பத்தில் வட திராவிடப் பிரிவைச் சேர்ந்த ஒரு மொழியாகும். எனினும், பலூச்சி போன்ற ஈரானிய மொழிகளால் பெரிதும் தாக்கம் அடைந்துள்ளது.

கிளை மொழிகள் தொகு

பிராகுவியில் முக்கியமான மூன்று கிளைமொழிகள் உள்ளன. இவை சரவான், ஜலாவன், சாகி என்பவையாகும். இவற்றுள் சரவான், மஸ்துங், காலத், போலான், குவெத்தா ஆகிய இடங்களிலும், ஜலாவன், குஸ்டார், ஸாரி, வாத், முலா, ஜாஹு ஆகிய பகுதிகளிலும், சாகி, காரான், பேஸ்மா என்னும் இடங்களிலும் பேசப்படுகின்றன.

சிந்துவெளி மொழி தொகு

பொதுவாக பராஹவி, ஒரு காலத்தில் வட இந்தியப் பகுதிகளில் பெரிய அளவில் பரந்து இருந்து ஆரியக் குடியேற்றம் காரணமாக ஒதுக்கப்பட்டது எனக் கருதப்படும் ஒரு மொழியின் எச்சமாகக் கருதப்படுகிறது. மடிந்து போன சிந்துவெளி நாகரிகத்தின் நேர் வழித்தோன்றலாகவும் பராஹவி இருந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகின்றது. ஆனால் வேறு சில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி பிராகுயி இன மக்கள், 13 அல்லது 14-ஆம் நூற்றாண்டில் பலூசிஸ்தானுக்கு புலம் பெயர்ந்தவர்களாவர்.

இலக்கியம் தொகு

பிராகுவி இலக்கியம் மிகவும் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தது. முதலாம் நாசர் கான் (1750 - 1793) என்பவரின் ஆட்சிக் காலத்தில் மாலிக் தார்ட் என்பவரால் எழுதப்பட்ட துஹ்ஃபா-துல்-அஜைப் என்பதே இம்மொழியில் காணப்படும் மிகப் பழைய இலக்கியமாகும். இது 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.

எழுத்து[1] தொகு

b á p í s y ş v x e z ź ģ f ú m n l g c t ŧ r ŕ d o ð h j k a i u ń ļ

எண் தொகு

Number (Tamil) Number (Brahui)
ondru asi
iranda iraa
rmu:ndru musi

[2]

உசாத்துணைகள் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு

  1. https://sites.google.com/site/brahuilb/home
  2. Numbers in Million-Speaker Languages
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராகுயி_மொழி&oldid=3221172" இருந்து மீள்விக்கப்பட்டது