நஸ்தலீகு வரிவடிவம்

Nastaʿlīq (நஸ்தஃலீக்; பாரசீகத்தில்: نستعلیق nastaʿlīq) பாரசீக, அரபு வரிவங்களை எழுதப் பயன்படுத்தப்படும் வனப்பெழுத்துக்களில் முதன்மையான ஒன்றாகும். மரபுப்படி இது பாரசீக வனப்பெழுத்தின் பாணி ஆகும்.[1] இது எட்டாவது, ஒன்பதாவது நூற்றாண்டுகளில் ஈரானில் உருவானது. சில நேரங்களில் இது அரபு மொழியை எழுதவும் பயன்படுகின்றது. அரபு மொழியில் தலைப்புக்களை எழுதப் பயன்படுத்தப்படும் இவ்வடிவம் தஃலீக் எனப்படுகின்றது. இருப்பினும் பாரசீக, துருக்கிய, உருது, தெற்காசிய மொழிகளில் இதன் தாக்கம் மிகுந்துள்ளது. நஸ்தஃலீகு வரிவடிவம் ஈரான், பாக்கித்தான், ஆப்கானித்தான், இந்தியாவின் சம்மு காசுமீர் பகுதிகளில் கவிதைப் படைப்புக்களிலும் கலைப் படைப்புக்களிலும் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.

மீர் எமாதிலுள்ள சலிப்பா பலகை

மேற்சான்றுகள்

தொகு
  1. The Cambridge History of Islam. By P. M. Holt, et al., Cambridge University Press, 1977, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-29138-0, p. 723.

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
நஸ்தலீகு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நஸ்தலீகு_வரிவடிவம்&oldid=3359500" இலிருந்து மீள்விக்கப்பட்டது