T (தீ அல்லது டி அல்லது ரீ) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் 20ஆவது எழுத்து ஆகும்.[1] ஆங்கில உரைப் பகுதிகளில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் இரண்டாவது எழுத்து t ஆகும்; கூடுதலாகப் பயன்படுத்தப்படும் மெய்யொலியும் t ஆகும்.[2]

Tஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை

கணிதத்திலும் ஏரணத்திலும் அறிவியியலிலும்

தொகு

கணிதத்தில், தொடர் ஒன்றின் nஆவது உறுப்பு Tnஆல் குறிக்கப்படும்.

ஏரணத்தில், உண்மைக்கான குறியீடாக T பயன்படுத்தப்படுவதுண்டு.

இயற்பியலில், வெப்பவியக்கவியல் வெப்பநிலையைக் குறிக்க T பயன்படுத்தப்படும். காந்தப்பாய அடர்த்தியின் அனைத்துலக முறை அலகான தெசுலாவின் குறியீடும் T ஆகும். திணிவின் அலகான தொன்னைக் குறிக்க t பயன்படுத்தப்படும். நேரத்தைக் குறிக்கவும் t பயன்படுத்தப்படும்.

வேதியியலில், நீரியத்தின் ஓரிடத்தானாகிய திரித்தியத்தின் குறியீடு T ஆகும்.

தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "English Alphabet". EnglishClub. பார்க்கப்பட்ட நாள் 31 ஆகத்து 2015.
  2. Lewand, Robert. "Relative Frequencies of Letters in General English Plain text". Central College. Archived from the original on 2008-07-08. பார்க்கப்பட்ட நாள் 25 சூன் 2008. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-07-08. பார்க்கப்பட்ட நாள் 2015-09-01.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=T&oldid=3578413" இலிருந்து மீள்விக்கப்பட்டது