பலுச்சிசுத்தானம்

பலோச்சிசுத்தான் (Balochistan) அல்லது பலுச்சிசுத்தான் (Baluchistan)[1] (வார்ப்புரு:Lang-bal, பொருள்: பலூச்சிய மக்களின் நாடு) தெற்கு-தென்மேற்கு ஆசியாவில் ஈரானியப் பீடபூமியில் அரபிக் கடலின் வடமேற்கே அமைந்துள்ள வறண்ட பாலைவன, மலைப்பாங்கான நிலப்பகுதியாகும். இது பலூச்சிய மக்கள் வாழும் இயல்பிடமாகும்.

பாக்கித்தானின் முதன்மையான இனக்குழுக்கள் (1980). வெளிர்சிவப்பு வண்ணத்தில் பலூச்சிய இனத்தினர் வாழ்விடங்கள் காட்டப்பட்டுள்ளது.

இது தென்மேற்கு பாக்கித்தான், தென்கிழக்கு ஈரான் மற்றும் ஆப்கானித்தானின் தென்மேற்கு பகுதியில் சிறு பகுதியும் அடங்கியது. பலுச்சிசுத்தானின் தெற்கு பகுதி மேக்ரான் எனப்படுகின்றது.

இப்பகுதியில் மிகுந்த மக்களால் பேசப்படும் இரண்டாவது மொழியாக பஷ்தூன் மக்களின் பஷ்தூ மொழி உள்ளது. பிராகுயி மக்கள் பிராகுயி மொழி பேசுகின்றனர். பஞ்சாபியும் சிந்தியும் பாக்கித்தானிய பலுச்சிசுத்தானில் முதன்மை மொழியாகவும் இந்திகி மொழி ஆப்கானித்தானில் முதன்மை மொழியாகவும் விளங்குகின்றது. பாக்கித்தானில் உருது இரண்டாம் மொழியாக உள்ளது. ஈரானிலும் ஆப்கானித்தானிலும் பாரசீக மொழி இரண்டாவது மொழியாக உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Other variations of the spelling, especially on French maps, include: Beloutchistan, Baloutchistan.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலுச்சிசுத்தானம்&oldid=3131424" இலிருந்து மீள்விக்கப்பட்டது