R
R (ஆர்) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் 18ஆவது எழுத்து ஆகும்.[1]
பெயர்
தொகுஎவ்வு (F), எல் (L), எம் (M), என் (N) போன்ற எழுத்துகளின் பெயரை ஒத்ததாக, இலத்தீனில் rஇன் பெயர் ஏர் (er) ஆகும்.[2] நடு ஆங்கிலத்தில் இதன் பெயர் ஆராக (ar) மாறியது.
பயன்பாடு
தொகுஆங்கிலத்தில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் எட்டாவது எழுத்து r ஆகும்; கூடுதலாகப் பயன்படுத்தப்படும் நான்காவது மெய்யொலியும் (t, n, s ஆகியவற்றுக்கு அடுத்து) r ஆகும்.[3]
கணிதத்திலும் அறிவியலிலும்
தொகுஇயற்கணிதத்தில், மெய்யெண்களின் தொடை ℝஆல் குறிக்கப்படும்.[4] வடிவவியலில், ஆரையைக் குறிப்பதற்கும் radius என்பதன் முதலெழுத்தான r பயன்படுத்தப்படுகின்றது.
வேதியியலில், வளிம மாறிலியானது Rஆல் குறிக்கப்படும்.[5]
இயற்பியலில், தடைக்கான குறியீடாக R பயன்படுத்தப்படுகின்றது.[6]
ஒருங்குறியில்
தொகுஒருங்குறியில் rஐ ஒத்த பின்வரும் வரியுருக்கள் காணப்படுகின்றன.
- 𝐑𝐫 𝑅𝑟 𝑹𝒓 𝖱𝗋 𝗥𝗿 𝘙𝘳 𝙍𝙧 ℛ𝓇 𝓡𝓻 ℜ𝔯 𝕽𝖗 𝚁𝚛 ℝ𝕣 கணிதக் குறியீடுகளாகப் பயன்படும் ஒருங்குறி வரியுருக்கள்
- ʀ சிறிய பேரெழுத்து R, சிறுநாக்கொலி உருட்டொலிக்கான (Uvular trill) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு
- Ꝛ ꝛ சுற்றிய r (r rotunda)
- Ꞃ ꞃ கேலிய R
- Ʀ இலத்தீன் எழுத்து YR (U+01A6), விரிவாக்கப்பட்ட இலத்தீன் பீயில் ʀஇன் பேரெழுத்தாக அறிமுகப்படுத்தப்பட்டது.
- ɹ பன்முகட்டுப் உயிர்ப்போலிக்கான (alveolar approximant) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு
- ɾ பன்முகட்டு வருடொலிக்கான (alveolar flap) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு
- ɻ மேலண்ண உயிர்ப்போலிக்கான (retroflex approximant) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு
- ɽ மேலண்ண வருடொலிக்கான (retroflex flap) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு
- ʁ ஒலிப்புடை பன்முகட்டு உரசொலிக்கான (voiced uvular fricative) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு
- ˞ R-நிற உயிரொலியைக் குறிக்கும் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் கொக்கி ஒலித்திரிபுக் குறி
- ® பதிவுசெய்யப்பட்ட வணிகக்குறிக்கான குறியீடு
- ℟ கிறித்தவ வழிபாட்டு முறையில் பதிலுரைக்கான குறியீடு
- ₽ உரூபிள் நாணயக் குறியீடு
மேற்கோள்கள்
தொகு- ↑ "English Alphabet". EnglishClub. பார்க்கப்பட்ட நாள் 31 ஆகத்து 2015.
- ↑ "Abecedarivm Latinæ-The Latin alphabet". Phonetica Latinæ. பார்க்கப்பட்ட நாள் 31 ஆகத்து 2015.
- ↑ "English Letter Frequency (based on a sample of 40,000 words)". Cornell University. பார்க்கப்பட்ட நாள் 31 ஆகத்து 2015.
- ↑ "Common Number Sets". Math is Fun. பார்க்கப்பட்ட நாள் 1 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Molar gas constant". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 1 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ R. Nave. "Resistance". HyperPhysics. பார்க்கப்பட்ட நாள் 1 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
வெளியிணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் R பற்றிய ஊடகங்கள்