தென் திராவிட மொழிகள்
தென் இந்தியமொழிகள் (South indian languages) ("முதலாம் தென் இந்தியமொழி" என்றும் அழைக்கப்படுகிறது) என்பது தமிழ் மழிக் குடும்பத்தின் நான்கு முக்கிய கிளைகளில் ஒன்றாகும். இதில் தமிழ்,(தாய்மொழி),க ன்னடம், மலையாளம் மற்றும் துளு ஆகிய இலக்கிய மொழிகளும், படுகா, இருளா, கோத்தர், குறும்பா, தோடா மற்றும் குடகு போன்ற பல இலக்கியமற்ற மொழிகளும் அடங்கும்.[1]
தென் திராவிட மொழிகள் முதலாம் தென் திராவிட மொழிகள்
| ||
---|---|---|
புவியியல் பரம்பல்: |
தென்னிந்தியா, இலங்கை, புலம்பெயர்ந்தோர் | |
மொழி வகைப்பாடு: | திராவிடர்கள் தென் திராவிட மொழிகள் | |
முதனிலை-மொழி: | பண்டைய தென் திராவிட மொழி | |
துணைப்பிரிவு: |
தமிழ்–கன்னடம்
|
கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம் ஆகியவை இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் அவை முக்கியமாக தென்னிந்தியாவில் பேசப்படுகின்றன. இந்த மூன்றும் சமசுகிருதம், தெலுங்கு மற்றும் ஒடியா ஆகியவற்றுடன் இந்திய அரசால் பாரம்பரிய மொழிகளாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[2]
உலக மொழிக் குடும்பத்தில் 47 மொழிகள் இந்த உட்பிரிவுகளில் உள்ளன. தென் இந்தியமொழிகள் பெரும்பாலும் இந்தியாவில் தான் அதிகமாகப் பேசப்படுகின்றது. இருப்பினும் 2007 கணக்கின்படி இலங்கையில் தமிழ் மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை 3,770,000. மற்ற நாடுகளில் குடியேறிய மக்களில் சரும் தென் இந்திய மொழிகளைப் பேசுகிறார்கள். குறிப்பாக தமிழ் மொழி பேசுபவர்கள் மலேசியா, சிங்கப்பூர், கனடா போன்ற நாடுகளில் வசிக்கிறார்கள். மலையாள மொழி பேசுபவர்கள் அமெரிக்காவில் வசிக்கிறார்கள்.
- 15,000 க்கு மேல் பேசும் மக்கள் உள்ள மொழிகள்: (1997)
- தமிழ் - 65,675,200
- மலையாளம் - 35,893,990
- கன்னடம் - 35,327,600
- துளு - 1,950,000
- எருக்கூலம் - 300,000
- 15,000 க்கு மேல் பேசும் மக்கள் உள்ள மொழிகள்: (2003)
- இருளா - 200,000
மேற்கோள்கள்
தொகு- ↑ Steever (2019), ப. 5–7.
- ↑ "Odia gets classical language status – The Hindu". The Hindu. 20 February 2014. http://www.thehindu.com/news/national/odia-gets-classical-language-status/article5709028.ece.
உசாத்துணை
தொகு- Kolichala, Suresh (2016). "Dravidian Languages". In Hans Henrich Hock; Elena Bashir (eds.). The Languages and Linguistics of South Asia: A Comprehensive Guide. Berlin/Boston: De Gruyter Mouton. pp. 73–107. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-042715-8.
- Krishnamurti, B. (2003). The Dravidian Languages. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-77111-0.
- Steever, Sanford (2019). "Introduction to the Dravidian languages". In Steever, Sanford (ed.). The Dravidian Languages (2nd ed.). Routledge. pp. 1–44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-138-85376-8.
- Subrahmanyam, P.S. (1983). Dravidian Comparative Phonology. Annamalai University.
- Zvelebil, Kamil (1990). Dravidian Linguistics: An Introduction. PILC (Pondicherry Institute of Linguistics and Culture).