கொற்ற கொரகா மொழி
கொற்றக் கொரகா மொழி, துளு பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழி ஆகும். இம்மொழியை ஏறத்தாழ 15,000 மக்கள் இந்தியாவின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பேசுகிறார்கள். இதை கொரகர், கொரகரா, கொரங்கி போன்ற பெயர்களாலும் அழைக்கின்றனர். துளு, பெல்லாரி ஆகிய மொழிகளுக்கு நெருங்கிய இம்மொழியில், அண்டே, முது, ஒண்டி, தப்பு போன்ற கிளை மொழிகளும் உண்டு. இம் மொழி பேசுவோர் துளு மொழியையும் பயன்படுத்துகிறார்கள்.
கொற்றக் கொரகா | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | கேரளா, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்கள்; கர்நாடகம், தக்ஷிண கன்னடம் மாவட்டம்; தமிழ்நாடு |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 15,000 (1981) (date missing) |
திராவிடம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | kfd |