ஈவ்லின் ரத்தினம் பண்பாடுகளிடை ஆய்வுகளுக்கான நிறுவனம்
ஈவ்லின் ரத்தினம் பண்பாடுகளிடை ஆய்வுகளுக்கான நிறுவனம் இலங்கை யாழ்ப்பாணக் குடாநாட்டில் திருநெல்வேலியில் உள்ள ஒரு இலாப நோக்கற்ற நிறுவனம்.[1] யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் இது அமைந்துள்ளது. பண்பாடுகளுக்கு இடையேயான தொடர்புகளுக்கு உதவுவதும் இறந்தகால, நிகழ்காலப் பண்பாடுகள் குறித்த ஆய்வுகளை ஊக்குவிப்பதும் இதன் முதன்மை நோக்கமாகும்.[2] இந்த நிறுவனத்தை 1981 மே 10 ஆம் நாள் ஜேம்சு டி. ரத்தினம்[2] தனது காலஞ்சென்ற மனைவி ஈவ்லின் விஜேரத்ன இரத்தினத்தின் (இறப்பு:13 செப்டம்பர் 1964) நினைவாக நிறுவினார்.[3]
ஈவ்லின் ரத்தினம் பண்பாடுகளிடை ஆய்வுகளுக்கான நிறுவனம் | |
---|---|
நிறுவனத்தின் முகப்புத் தோற்றம் | |
நாடு | இலங்கை |
வகை | ஆய்வு நூலகம் |
தொடக்கம் | 10 மே 1981 |
அமைவிடம் | திருநெல்வேலி, யாழ்ப்பாணக் குடாநாடு, இலங்கை |
வரலாறு
தொகுஜேம்சு டி. ரத்தினம் பல்கலைக்கழக அன்பளிப்புக்கள், ஆய்வாளர்கள், முன்னணிச் சட்டத்துறை சார்ந்தோர், வணிகத் துறையினர் போன்றோரிடமிருந்து பெற்ற ஏராளமான நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் சேகரித்து வைத்திருந்தார். ஆய்வாளர்கள் பலர் இவரது நூலகத்தைப் பயன்படுத்தி வந்தனர்.[4] இது பின்னர் அமெரிக்க மிசனின் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்நூல்களை ஆய்வுத் தேவைகளுக்காகக் களஞ்சியப்படுத்திப் பேணுவதற்காக ஒரு நிறுவனம் அமைக்கப்பட்டது. இந்த நிறுவனம் ஜேம்சு ரத்தினத்தின் மனைவியின் பெயரால் ஈவ்லின் ரத்தினம் நிறுவனம் என அழைக்கப்பட்டது.[4] இந்நிறுவனம் ஜேம்சு ரத்தினம் ஆய்வு, கல்வி என்பவற்றின்மீது கொண்டிருந்த விருப்புக்குச் சான்றாகவும், கல்விக்கான ஊக்கப்படுத்தலுக்காகவும் அமெரிக்க மிசனின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.[4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Evelyn Rutnam Institute for Intercultural Studies". Digital Library for International Research. பார்க்கப்பட்ட நாள் 15 February 2011.
- ↑ 2.0 2.1 Association for Asian Studies. Evelyn Rutnam Institute. Asian studies newsletter, Volume 28.
- ↑ Sivakumaran, K. S. (November 11, 2009). "In Memory of James Rutnam". Daily News இம் மூலத்தில் இருந்து 29 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110629044519/http://www.dailynews.lk/2009/11/11/art07.asp. பார்த்த நாள்: 15 February 2011.
- ↑ 4.0 4.1 4.2 "James T. Rutnam - a versatile servant". The Associated Newspapers of Ceylon Ltd. 2005-12-02. Archived from the original on 2011-06-29. பார்க்கப்பட்ட நாள் 2011-02-14.
- ↑ சிவகுமாரன், கே. எஸ். (November 15, 2009). "Who was James T. Rutnam?". The Nation. https://web.archive.org/web/20110722145555/http://www.nation.lk/2009/11/15/eyefea4.htm. பார்த்த நாள்: 15 February 2011.