பயனர் பேச்சு:Mayooranathan/தொகுப்பு 2

Add topic
Active discussions

கருங்கடல்‎தொகு

கருங்கடல் படம் மிகவும் நன்று மயூரநாதன். --சிவகுமார் 17:50, 24 ஆகஸ்ட் 2006 (UTC)

உங்கள் கருத்துக்கு நன்றி, சிவா. Mayooranathan 18:21, 24 ஆகஸ்ட் 2006 (UTC)

துரித நீக்கல் கட்டுரைகள்தொகு

தாங்கள் தொடங்கிய பல கட்டுரைகள் துரித நீக்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. தயவு செய்து கவனிக்கவும். பார்க்க பகுப்பு:துரிதமாக நீக்கப்பட வேண்டிய கட்டுரைகள்--ரவி 20:21, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

வாக்குச் சேகரிப்புதொகு

விக்கி மூலம் தளத் தொடக்கத்தை விரைவுபடுத்த இந்த வழு அறிக்கைக்கு வாக்களிக்கவும். நன்றி--ரவி 21:22, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

வார்ப்புரு:தகவல்கட்டம் நாடுதொகு

வார்ப்புரு:தகவல்கட்டம் நாடு என்பதில் குறைந்தளவு தகவல்களே உள்ளதாலும் எல்லா நாட்டுக்கும் ஒரே தகவல் சட்டம் என்ற விக்கி திட்டத்தி காரணமாக நீங்கள் முன்னின்று உழைத்த இந்த வார்ப்புருவை மேம்படுத்துவது அல்லது அழித்து விடுவது தொடர்பில் இங்கு உங்களது கருத்து அவசரமாக தேவைப்படுகிறது.--டெரன்ஸ் \பேச்சு 08:54, 3 செப்டெம்பர் 2006 (UTC) தங்கள் கருத்துகளுக்கு நன்றி--டெரன்ஸ் \பேச்சு 04:18, 5 செப்டெம்பர் 2006 (UTC)

கட்டுரை மேம்படுத்த கோரிக்கைதொகு

மயூரநாதன், தங்களுக்கு ஆர்வமும் திறனும் இருக்கக்கூடிய தாஜ் மஹால், மைக்கலாஞ்சலோ_புவோனரோட்டி கட்டுரைகளை மேம்படுத்தி தருமாறு வேண்டுகிறேன். இவை அண்மையில் பயனர்களால் அதிகம் பார்க்கப்படும் கட்டுரைகளாக உள்ளன. நன்றி--ரவி 19:02, 5 செப்டெம்பர் 2006 (UTC)

செய்கிறேன். Mayooranathan 19:05, 5 செப்டெம்பர் 2006 (UTC)

நீங்கள் உருவாக்கிய சிறுப்பிட்டி கட்டுரையில் அழிப்பு வார்ப்புரு இருக்கிறது. மேம்படுத்தித் தர இயலுமா? முதற்பக்கத்தில் இடத்தக்க வகையில் நல்ல கட்டிடங்களின் படங்களை கட்டுரைகளுடன் இணைத்து எனக்குத் தெரியப்படுத்தங்களேன். மோனலிசா, vitruvian man ஆகிய படங்களை முதற்பக்கத்தில் தர விரும்புகிறேன். அவற்றுக்கான சிறு குறிப்புக் கட்டுரைகளை எழுதித் தருவீர்களா? தவிர, முதற்பக்கத்தில் காட்சிப்படுத்த இன்னும் பல கட்டுரைப் பரிந்துரைகளை தந்தீர்களானால் நன்றாக இருக்கும். நன்றி--Ravidreams 22:37, 26 நவம்பர் 2006 (UTC)

botதொகு

Consider giving bot status to User:Thijs!bot. It is flooding the recent changes page. --Sivakumar \பேச்சு 07:33, 8 செப்டெம்பர் 2006 (UTC)

Please consider giving bot status for user:ravidreamsbot. I intend to use this account for mass wikifying works. Examples of such work can be found in the recent edits i made which indicate சிறப்புக் கட்டுரை வார்ப்புரு (AWB) in the edit summary.Thanks--Ravidreams 21:31, 1 டிசம்பர் 2006 (UTC)


Please consider granting bot status for user:TrengarasuBOT.I will use this account for repeted smilar cleanups like in the recent edits i made indicated வார்ப்புரு:Infobox Country, வார்ப்புரு:தகவற்சட்டம் நாடுக்கு மாற்றல் (AWB) in the edit summary.Thanks --டெரன்ஸ் \பேச்சு 13:08, 5 டிசம்பர் 2006 (UTC)

பார்க்கதொகு

Translation requestதொகு

For the front page of the Novial Test Wikipedia it would be nice to have a Tamil translation of the following 2 sentences:

<>

Welcome to the Wikipedia in the Novial language!

You can read about the international auxiliary language Novial here.

<>

See the original request at Wikimedia Incubator here.

Thank you, Nov_ialiste

நேரம் கிடைக்கும் பொழுதுதொகு

--Natkeeran 16:55, 19 செப்டெம்பர் 2006 (UTC)

Help i need some help with this wordதொகு

vaṅki: what proof is there to say vaṅki comes from banco?? i can see no connection!.

I think the word vaṅki is a pure tamil word, meaning where they take and keep your money.

i.e "vangi vaikkum iddam"

see here: http://en.wikipedia.org/wiki/Loan_words_in_Sri_Lankan_Tamil

-Suren

களப்பிரர்தொகு

உங்கள் வரலாற்று நூல்களில் களப்பிரர் தகவல்கள் இருந்தால், கட்டுரையிலோ அல்லது உரையாடல் பக்கதிலோ சேத்தால் நன்று. அவர்களைப் பற்றி மிகவும் தெளிவற்ற பார்வைகளே கிடைக்கின்றன. --Natkeeran 14:21, 3 அக்டோபர் 2006 (UTC)

சோழர்தொகு

சோழர் கட்டுரையை நீங்கள் மேம்படுத்தி வருவது கண்டு மகிழ்ச்சி. -- Sundar \பேச்சு 09:51, 13 அக்டோபர் 2006 (UTC)

நன்றி சுந்தர், கட்டுரையோடு அதிலுள்ள சிவப்பு இணைப்புக்கள் பலவற்றுக்கும் கட்டுரைகள் உருவாக்கவேண்டும். முடிந்தவரை செய்ய முயற்சிக்கிறேன். Mayooranathan 11:56, 13 அக்டோபர் 2006 (UTC)

உலகமயமாதல்தொகு

உலகமயமாதல் உலகமயமாக்கம் வேறு வேறு பொருள் தருபவை அல்லவா?--Natkeeran 17:48, 20 அக்டோபர் 2006 (UTC)

நான் தலைப்பை மாற்றும் நோக்குடன் தான் கட்டுரையை உருவாக்கினேன். ஆனால் உலகமயமாதல் கட்டுரை ஏற்கெனவே இருப்பதால் உலகமயமாக்கம் கட்டுரை நீக்கப்பட்டுவிட்டது. Mayooranathan 17:52, 20 அக்டோபர் 2006 (UTC)

ஸ்கெச்சப்தொகு

மயூரநாதன், உங்களின் இணையத்தளத்தைப் பார்வையிட்டேன் நன்றாகவுள்ளது. இப்போது கூகிள் ஸ்கெச்சப் மிகவும் பிரபலமடைந்து வருகின்றது. நீங்கள் கட்டிடக் கலைஞர் என்பதால் AutoCAD போன்றவற்றைப் பாவிக்ககூடும். நேரம் கிடைத்தால் உங்கள் இணையத்தளத்தில் எடுத்துக் காட்டாக http://www.geocities.com/rmayooranathan/village_houses.html இல் உள்ளவற்றை கூகிள் ஸ்கெச்சப் கோப்புக்களாக ஆக்கமுடியுமா? இது எனது தனிப்பட்ட விருப்பமே இதற்காக உங்கள் நேரத்தைச் செலவு செய்யவேண்டும் என்று சொல்லவில்லை. ஓர் ஆர்வத்திலேயே கேட்கின்றேன். --Umapathy 13:38, 21 அக்டோபர் 2006 (UTC)

நன்றி, உமாபதி. ஸ்கெச்சப் மென்பொருளை முன்னர் நான் பயன்படுத்தியுள்ளேன். கூகிள் அதை வாங்கியது பற்றி நான் அறிந்திருக்கவில்லை. இன்று அதைப் பதிவிறக்கம் செய்து எனது கணினியில் ஏற்றியுள்ளேன். என்னுடைய இணையத் தளம் தொடர்பில் நிறைய வேலைகள் செய்யும் எண்ணம் உள்ளது. அவற்றில் நீங்கள் கூறியபடி முப்பரிமாணப் படங்களை இணைப்பதும் ஒன்று. நாட்டுப்புற வீடுகள் தொடர்பில் இதைப் பயன்படுத்துவது சிரமம். நாற்சார் வீடுகளுக்கு இதை நிச்சயமாகப் பயன்படுத்தலாம். தளத்தைத் தமிழிலும் மொழிபெயர்க்கும் எண்ணம் உள்ளது. இப்பொழுது என்னுடைய தளம் free hosting இல் இருப்பதால் கோப்புகளைப் பதிவேற்றுவதற்கான இடவசதி, தரவுமாற்ற அளவு (Data transfer] என்பவை போதியதாக இல்லை. ஏற்கெனவே தளத்தின் சில அம்சங்களை நிறுத்தி வைத்துள்ளேன். paid hosting க்கு மாற்ற முடியும். ஆனால், நீண்ட கால அடிப்படையில் இது தொடர்பான செலவுகள் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. இதனால் எனது பல திட்டங்களைச் செயற்படுத்த முடியாமல் உள்ளது. சில முப்பரிமாணப் படிமங்களைச் சேர்ப்பதில் அதிகம் பிரச்சினை இருக்காது என்று நினைக்கிறேன். விரைவில் செயற்படுத்த முயற்சிப்பேன். Mayooranathan 15:36, 21 அக்டோபர் 2006 (UTC)
நன்றி மயூரேசன். http://sketchup.google.com/examples.html இல் சில எடுத்துக் காட்டுக்கள் உள்ளன ஆனால் பயனர்கள் அங்கே சேர்பதற்கான வசதிகள் இல்லை. http://scc.jazzle.co.uk/ தளத்தை ஆங்கில விக்கிபீடியாவூடாக அடைந்தேன் ஆனால் எனக்கு எவ்வளவு பிரபலமானது எனபது தெளிவாகத் தெரியவில்லை. சிரமமானவற்றை விட்டுவிடுங்கள் சுந்தர் யாகூ!விலேயே பணியாற்றுகின்றார் அவர் உதவுவார் என்றே நினைக்கின்றேன். கூகிள் பேஜ் கிறியேட்டரில் Banwidth பிரச்சினை கிடையாது. ஆனால் இதற்கு ஜிமெயில் கணக்கு அவசியம் தேவை என்றால் நான் அழைபொன்றை உங்கள் மின்னஞ்சலிற்கு அனுப்புவிடுகின்றேன்.நீங்கள் எந்த இணைப்பில் உள்ளீர்கள் என்று தெரிவித்தால் எடுத்துக்காட்டாக adsl ஆக இருந்தால் adsl webhosting ஐச் செய்யலாம் இதற்கு redirect page ஒன்றை யாகூவில் உருவாக்கினால் போதுமானது Bandwidth ஐப் பற்றிக் கவலைப்படவேண்டியதில்லை. நான் சோதனை முயற்சியில் சுமார் 1 வருடத்திற்கு முன்னர் உருவாக்கியிருந்தேன் ஆனால் இதிலுள்ள சிரமம் என்னவென்றால் கணினி எப்போது இயங்கிய வண்ணம் இருத்தல் வேண்டும். இது adsl webhosting நடைமுறையில் சிரமமானது ஆனால் எவ்வளவு சேமிப்பது என்பதிலும் எந்தவொரு எல்லையும் கிடையாது (ஹாட்டிஸ்கின் அளவைத் தவிர). உங்கள் இணையத்தளத்திலுள்ள தகவல்கள் பல பிரயோசனமானவை இவற்றின் மொழிபெயர்ப்புகள் தமிழ் விக்கிபீடியாவில் இருந்தால் கூடுதல் பிரயோசனமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். தமிழ் மொழிபெயர்ப்பிற்கு உங்களின் ஆங்கிலப் பக்கத்தை உசாத்துணையாகக் கொள்ளலாம். நான் வரும் திங்கட்கிழை முதல் வெள்ளிவரை விடுமுறையில் (leave) கொழும்பு வருகின்றேன் Webhosting பற்றிய வேறு சோதனைகளையும் செய்து பார்க்கின்றேன்.ஏனைய விக்கிபீடியர்களின் கருத்துக்களையும் கேட்டறிவோம்.--Umapathy 16:33, 21 அக்டோபர் 2006 (UTC)

தகவல்களுக்கு நன்றி உமாபதி. பேஜ் கிறியேற்றருக்குச் செல்ல முயற்சித்தேன். நீங்கள் சொன்னது போல் ஜிமெயில் கணக்கு தேவை. என்னிடம் அது இல்லை. முடியுமானால் எனக்கு அழைப்பு ஒன்றை அனுப்பிவிடுங்கள். பேஜ் கிறியேற்றர் தளத்துக்குச் சென்று பார்க்கிறேன். என்னிடம் adsl இணைப்புத் தான் உள்ளது. Mayooranathan 18:14, 21 அக்டோபர் 2006 (UTC)

நன்றி அனுப்பியுள்ளேன் கிடைக்காவிட்டால் umapathyxp@gmail.com இற்கு ஓர் மின்னஞ்சல் அனுப்பிவிடுங்கள். இப்போது http://sketchup.google.com/3dwarehouse/ இத்தளத்தைப் பார்த்தேன் தவிரத் தேடியபோது http://sketchup.google.com/3dwarehouse/search?q=sri+lanka&btnG=Search பார்த்தபோது அங்கே பலமாதிரிகள் இருந்தன. --Umapathy 19:34, 21 அக்டோபர் 2006 (UTC)

க், ச்தொகு

  • தமிழ் இலக்கண கையேடு -> தமிழ் இலக்கணக் கையேடு
  • திறனாய்வு கையேடு -> திறனாய்வுக் கையேடு
  • பக்க வடிவமைப்பு கையேடு -> பக்க வடிவமைப்புக் கையேடு

என்று பல இடங்களில் க், ச் விடுபடுவதாக உணருகின்றேன். எனது பிழைதான். உங்கள் கருத்தறிய ஆவல். நன்றி. --Natkeeran 18:31, 1 நவம்பர் 2006 (UTC)

நற்கீரன், வலப்பக்கம் உள்ளவை சரியானவை. குறிப்பிட்ட இடங்களில் க் இருக்கவேண்டும், Mayooranathan 09:25, 2 நவம்பர் 2006 (UTC)

பரிசுகளை விருதுகள் பகுப்புக்குள் சேர்ப்பது பொருத்தம்...தொகு

பகுப்பு:விருதுகள்

--Natkeeran 17:03, 5 நவம்பர் 2006 (UTC)

பரிசுகளும் விருதுகளும் என குறித்த பகுப்பை மாற்றியமைத்தால் என்ன? ஏனெனில் அது prizes & awards ஐக் குறிப்பதாக அமையும். --கோபி 17:27, 5 நவம்பர் 2006 (UTC)

நானும் அப்படித்தான் நினக்கிறேன்.Mayooranathan 17:32, 5 நவம்பர் 2006 (UTC)
ஆங்கில விக்கிபீடியாவில் awards பகுப்புக்குள் prizes உபபகுப்பாகவும் prizes இனுள் awards உப பகுப்பாகவும் காணப்படுகிறது. அங்கு பெருமளவு கட்டுரைகள் காணப்படுவதால் தனித்தனிப் பகுப்புக்களாகவே வைத்திருக்க வேண்டியுள்ளது. தமிழில் அவ்வாறில்லையாதலால் ஒரே பகுப்பாகப் பேணலாம். மாற்றங்களைச் செய்து விடுகிறேன். நன்றி. --கோபி 17:34, 5 நவம்பர் 2006 (UTC)

எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆங்கில விக்கியில் இது தொடர்பான பகுப்புகள் குழப்பமாக உள்ளது. prizes, awards என்ற பகுப்பினுள்ளும், மீண்டும் awards, prizes என்னும் பகுப்பினுள்ளும் வருகின்றன. Mayooranathan 17:41, 5 நவம்பர் 2006 (UTC)

மொத்த உள்நாட்டு உற்பத்திதொகு

மயூரநாதன் தவறை விளங்கிக் கொண்டேன், குழப்பதின் காரணங்கள்

  1. தலைப்பு பற்றியது.

மொத்த தேசிய உ/தி (gross national product ) மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி(Gross domestic product) இவை இரண்டும் ஒன்றல்ல எனினும் பொதுவாக ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.கட்டுரை இரண்டில் எதைப்பற்றியது என்ற ஐயம்

  1. சமன்பாடு பற்றியது.

இலங்கையில் உற்பத்திவழியிலேதான் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிக்கப்படுகின்றது.அது தொடர்பான சமன்பாட்டினை மாத்திரமே அறிந்திருந்ததால் இச்சமன்பாடு பிழை என நினைத்தேன்.மேலும் ஆராய்ந்தபோது,மொத்த உள்நாட்டு உற்பத்தி செலவீனமுறையிலும் கணிக்கலாம் என தற்போதே அறிந்தேன்.

ஆகவே பிழை உணர்ந்தேன் வார்ப்புருவையும் நீக்கிவிட்டேன்.பேரினப்பொருளியலின் முக்கிய விடயமான இவ்விடயத்தை பற்றி பிழையாக கட்டுரை தொகுக்கப்படகூடாது என்ற உந்துதலின் அடிப்படையிலே அவ்விதம் நடந்துகொண்டேன்.--கலாநிதி 16:54, 6 நவம்பர் 2006 (UTC)

Concept, hypothesis, thought, abstract ஆகியவற்றுக்கு நல்ல தமிழ் சொற்கள் எவை?தொகு

கரு - idea
கருத்து - comment
கருத்தியம் - idealism
கருத்தியல் - ideal
கருத்துலகு - the world of idea
கருதுகோள் - hypothesis VS CONCEPT
கருதுதல் - having an opinion
கருத்துருவாக்கம் - forming or shaping an opinion
எண்ணக்கரு - thought ??
சிந்தனை - thought
சிந்தை - மனம், மூளை
சிந்தித்தல் - thinking

இங்கு கருதுகோள் என்று பொதுவாக எதைக் குறித்து நிற்கின்றது. Concept, hypothesis, thought, abstract ஆகியவற்றுக்கு நல்ல தமிழ் சொற்கள் எவை? நன்றி. --Natkeeran 20:28, 18 நவம்பர் 2006 (UTC)

கருதுகோள் என்பது hypothesis என்பது தான். Concept என்பதற்கு கருத்துரு என்பதுதான் சரியான சொல் என்று நினைக்கிறேன். idea என்பதற்கு எண்ணக்கரு என்பது சரி. Mayooranathan 17:51, 19 நவம்பர் 2006 (UTC)

நன்றி. --Natkeeran 02:39, 10 டிசம்பர் 2006 (UTC)

abstract என்ற சொல்லுக்கு 'கருத்துக்கரு' சரியான தமிழ்ச்சொல்லாகுமா? அப்படியானால் அதற்கு எதிர்மறைச்சொல்லான concrete க்கு என்ன தமிழ்?

--Profvk 15:29, 13 ஏப்ரல் 2007 (UTC)

விக்கிசெய்திகள்தொகு

மயூரநாதன், விக்கிசெய்திகள் தளம் http://ta.wikinews.org/wiki/Main_Page இல் ஆரம்பமாகியுள்ளது. எனக்கு விக்கிதளங்களை ஆரம்பித்துப் பழக்கம் இல்லை. நேரம்கிடைக்கும் போது அதில் நிர்வாக வேலைகளைச் செய்யது உதவ முடியுமா? --Umapathy 01:26, 3 டிசம்பர் 2006 (UTC)

என்னாலானதைச் செய்கிறேன். Mayooranathan 04:14, 3 டிசம்பர் 2006 (UTC)

JS transliterationதொகு

First of all thanks for your hospitality. Thank you. We have recently enabled Devnagari using this code. If you are interested, you can create a similar code for this script and incorporate it into Monobook.js as in this page. Hope you find this information useful. Thank you.--Eukesh 05:00, 16 டிசம்பர் 2006 (UTC)

TXiKiBoTதொகு

TXiKiBoT க்குத் தானியங்கித் தரம் வழங்கினால் அண்மைய மாற்றங்கள் பக்கத்தை அவதானிப்பது இலகுவாயிருக்கும். நன்றி --கோபி 16:46, 6 ஜனவரி 2007 (UTC)

ஆம் அதுவே எனது கருத்தும் இதைப் பாட்டை அவதானித்ததில் பிரயோசனமான வேலையையே செய்கின்றது சுந்தர் பணிநிமித்தம் மதுரையில் வேலையாய் உள்ளார் அவருடன் நேற்று முன்தினம் இரவு தொலைபேசியில் உரையாடியதிலும் (இடையே திருகோணம்லையில் நகரத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து இரவு தொலைபேசியை உரையாடிக் கொண்டிருக்கும் போது இடைநிறுத்தியதால் தொலைத் தொடர்பு தொலைத் தொடர்பாகிவிட்டது) தவிர மின்னஞ்சல் மூலமாகவும் அறிந்தேன். எனவே நீங்கள் இதற்கு பாட் அந்தஸ்து வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றேன் தவிர நற்கீரனுக்கும் அதிகாரி தரம் வழங்கினால் நல்லது. --Umapathy 17:27, 6 ஜனவரி 2007 (UTC)

TXiKiBoT க்குத் தானியங்கித் தகுதி வழங்கப்பட்டுள்ளது. Mayooranathan 18:08, 6 ஜனவரி 2007 (UTC)

'கட்டுரைகள் நம்பத்தகுந்தவர்களால் பதிப்பிக்கப்பட்ட உள்ளடக்கங்களையே கொண்டிருக்கவேண்டும்தொகு

இந்த வரியை, "கட்டுரைகள் நம்பத்தகுந்தவர்களால் பதிப்பிக்கப்பட்ட ஆதாரங்களை மேற்கோள் காட்டி அமைந்தல் வேண்டும்"... மாற்றியமைத்தல் வேண்டும் என்று நினைக்கின்றேன்.

இப்போது இவ்வரி பதிப்பிக்கப்பட்டதை பிரதி பண்ணி தரும்படி கேட்பது போல தெரிகின்றது.

--Natkeeran 18:21, 14 ஜனவரி 2007 (UTC)

நன்றி நற்கீரன். Done. Mayooranathan 18:24, 14 ஜனவரி 2007 (UTC)

ஆதாரங்களும் மேற்கோள்களும்தொகு

பல நல்ல குறுங்கட்டுரைகளை தருகின்றீர்கள். பல நூற்களைக் கற்று, கடைந்து தந்தாலும், முக்கிய நூல்களையாவது ஆதாரம் அல்லது மேற்கோள் என்று தந்தால் பின்னர் அவற்றைப் பற்றி அறிய முயலுபவர்கள் அவற்றை நாடிச் செல்ல முடியும். இதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. ஆனால் நீங்கள் சில சமயங்களில் விட்டுவிடுகின்றீர்கள். தந்தால் பலன் பெருகும். நன்றி. --Natkeeran 22:54, 17 ஜனவரி 2007 (UTC)

அதிகாரி அணுக்கம்தொகு

அதிகாரி அணுக்கத்துக்கு பரிந்துரைப்பீர்கள் ஆனால் ஏற்றுக் கொள்கிறேன். நற்கீரனும் பொருத்தமானவர். சுந்தர், தற்போது பணி நிமித்தமாக விக்கியில் இருந்து விலகி இருக்கிறார். நீங்களும் ஒரு சில நாட்கள் விக்கி பக்கம் வர இயலாமல் இருக்கலாம் என்பதால் மேலதிக அதிகாரிகள் தேவை தான்--Ravidreams 12:04, 2 பெப்ரவரி 2007 (UTC)

ஆம் அதுவே எனது கருத்தும் விக்கிபீடியாவில் தங்களின் பங்களிப்பினால் மேலும் வளர்ச்சியடையும் என்று உறுதியாக நம்புகின்றேன். நீங்கள் அதிகாரியாவதையே விரும்புகின்றேன்--Umapathy 13:24, 2 பெப்ரவரி 2007 (UTC)

மயூரனாதன், இன்று நிர்வாகிகள் தேர்தல் முடிகிறது என்பதை நினைவூட்டலாம் என்று நினைத்தேன். எனக்கும் நற்கீரனுக்கும் அதிகாரி அணுக்கம் அளித்தால் அது செயல்படுகிறதா என்று பார்க்க ஆளுக்கு ஒருவராய் கனக்சுக்கும் டெரன்சுக்கும் நிர்வாகி அணுக்கத்தை செயல்படுத்திப் பார்க்கலாம். நன்றி--Ravidreams 10:39, 9 பெப்ரவரி 2007 (UTC)

மயூரனாதன், அதிகாரி அணுக்கம் ஏற்படுத்தித் தந்ததற்கும் நீங்களும் அனைத்து விக்கிபீடியா பயனர்களும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். டெரன்சுக்கு நிர்வாக அணுக்கத்தை நிறுவியதின் மூலம், அதிகாரி அணுக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்டேன். நிலப்படம் கட்டுரையை சிறப்பாக தொடங்கித் தந்ததற்கும் நன்றி. --Ravidreams 20:24, 9 பெப்ரவரி 2007 (UTC)

இந்தியப் பயணம்தொகு

நான் டிசம்பர் 27 கோவை சென்றேன். பிறகு, ஜனவரி 4 வாக்கில் தான் சென்னை வர முடிந்தது. ஒரு வேளை நீங்கள் சென்னையில் இருந்திருப்பது தெரிந்திருந்தால் அடித்துப் பிடித்தாவது சென்னை வந்து சந்திக்க முயன்றிருப்பேன் :( சுந்தரை மட்டுமே மதுரையில் கண்டு ஒரு மணி நேரம் அளவு பொதுவாக உரையாட முடிந்தது. மற்றபடி, இந்தியப் பயணம் நலம். ஒரு சில படங்களை விக்கிக்காக எடுத்து வந்துள்ளேன். விரைவில் பதிவேற்றுகிறேன். --Ravidreams 17:16, 2 பெப்ரவரி 2007 (UTC)

பேண்தகு என்று இலங்கை பாட நூல்கள் சிலவற்றில் பயன்படுத்துகின்றார்கள்தொகு

தாங்கு திறன் என்பதை விட பேண்தகு பொருட் செறிவு மிக்கதாக படுகின்றது. உங்கள் கருத்து அறிய ஆவல். --Natkeeran 17:18, 6 பெப்ரவரி 2007 (UTC)

நல்ல சொல் போலத்தான் தெரிகிறது. சிறிய சொல்லாகவும் இருக்கிறது. Mayooranathan 17:30, 6 பெப்ரவரி 2007 (UTC)

mapதொகு

Map கட்டுரையை தமிழில் ஆக்கித் தர வேண்டுகிறேன். நன்றி.--Ravidreams 11:12, 9 பெப்ரவரி 2007 (UTC)

முயற்சிக்கிறேன். Mayooranathan 12:39, 9 பெப்ரவரி 2007 (UTC)

எப்பிடி செய்வது?தொகு

எப்பிடி ஒருவரை நிர்வாகி ஆக்குவது என்று சற்று விளக்குவீர்களா (நுட்ப விடயம் மாத்திரம்) ? --Natkeeran 19:57, 9 பெப்ரவரி 2007 (UTC)

Transliteration for Tamilதொகு

I have recently created a transliteration scheme for Tamil here with my limited knowledge of Tamil. This can be linked to monobook.js to enable direct Tamil text entry like the text entry of Devnagari in Nepal Bhasa. I think this method can be a lot more easier than asking each user to install the indic scripts and to learn the input pattern. Also, a modified form of the index given below can be placed in the front page to ease navigation.

௦-௯ அஂ
ஶ்ரேணீ க்ஷ த்ர ஜ்ஞ ஶ்ர அஃ

Thank you.--Eukesh 17:49, 14 பெப்ரவரி 2007 (UTC)

கருத்து வேண்டல்தொகு

சென்னை விக்கிப் பட்டறை குறித்த தமிழ் விக்கி அறிக்கை இங்கு உள்ளது. அதை மேம்படுத்தித் தர, கருத்துகள் தெரிவிக்க வேண்டுகிறேன்.

தவிர, அண்மையில் மொழி சார் உரையாடல்கள் பெருகி, சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்ல வேண்டி இருக்கிறது. இதை தவிர்க்க உங்கள் அனைத்து கருத்துக்களையும் இங்கு குவிக்கவும். நன்றி. --Ravidreams 14:02, 16 பெப்ரவரி 2007 (UTC)

நன்றிதொகு

சொல் தேர்வு பற்றி நீங்கள் உங்கள் கருத்துக்களை விரிவாக எழுதிப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. சில இதழ்கள் இப்படி பொறுப்பின்றி எழுதுவது மிகவும் வருந்தத்தக்கது. இது பற்றி அந்த இதழில் ஆசிரியருக்கு நாம் பலரும் எழுதலாம். அதிகப் பயன் இருக்காது என எண்ணினாலும் கடமை குறித்தேனும் எழுதலாம். வலைப்பதிவுகளிலும் இவ்வகை பொறுப்பின்மை பற்றி எதிர்ப்புக் குரல்கள் எழுப்பலாம். குறிப்பாக த.வியின் எப்படி நாம் எழுத்தாக்கங்கள் செய்ய வேண்டும் என்ரு நீங்கள் குறிப்பிட்ட கருத்துக்கள் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி.--செல்வா 14:51, 16 பெப்ரவரி 2007 (UTC)

செல்வா, உங்கள் குறிப்புக்களுக்கு எனது நன்றிகள். ஒரு காலத்தில் மறைமலையடிகள் போன்றோர் நடத்தியது போன்ற இன்னொரு பண்பாட்டு இயக்கத்துக்கான தேவை ஏற்படுகிறதோ என்னவோ? Mayooranathan 16:27, 16 பெப்ரவரி 2007 (UTC)
மிகவும் உண்மை, மயூரநாதன். தமிழர்கள் ஒன்றுபட்டு, தம் தற்கால நிலைமையையும், வளர்ச்சி வாய்ப்புகளை எண்ணிப்பார்த்து, உற்றுணர்ந்து செயற்படுவார்கள் எனில் தமிழைக் கூடியமட்டிலும் நல்ல முறையில் எழுதவும் பேசவும் செய்வர். தமிழ்வழி பெறும் அறிவு தமிழர்களுக்கு எத்தனையும் ஊட்டம் தரும் என்பதை இன்னும் மிகப்பலர் உணரவில்லை. தாய்மொழி வழிக் கல்வியின் (குறைந்த மட்டிலும் 10 ஆவது வரையாவது) அருமையையும் பலனையும் பலரும் உணரவில்லை. தமிழானது இசை அரங்குகளிலும், கோயில் வழிபாடுகளிலும், கல்விக் கூடங்களிலும், நம் வீட்டு வழிபாடுகளிலும், ஆட்சி மொழிகளிலும், திருமணம் போன்ற வீட்டு நிகழ்வுகளிலும் இல்லாமல் மிகவும் ஒடுக்கப்பட்ட நிலை இன்று. இது மாறவேண்டும். சுமார் 70-75 மில்லியன் மக்களின் மொழி, செம்மொழி என ஏற்கப்பட்ட மொழி, பன்னூற்றுக் கணக்கான கலை இலக்கிய, அறிவியல் நுட்பங்கள் செறிந்து 2000 ஆண்டுகளுக்கு மேலாக செழித்து வளர்ந்து வரும் மொழி - ஆனால் கடந்த 200 ஆண்டுகளாக சீரழிந்து வருகின்றது. மறுமலர்ச்சி இயக்கங்கள் தோன்ற வேண்டும். பயன்பெருகுமாறு ஆக்க வழிகளில் செழிப்புற வேண்டும். த.வியே இதற்கு ஒரு பெரும் முன்னோடியாக திகழவும் கூடும் :) --செல்வா 16:50, 16 பெப்ரவரி 2007 (UTC)


மயூரனாதன், ஓராண்டு காலத்தில் நீங்கள் திட்டமிட்டு உருவாக்கியுள்ள 449 செறிவுள்ள கட்டுரைகளை கண்டு வியக்கிறேன். என் நன்றிகளும் பாராட்டுக்களும். தமிழ் விக்கிபீடியாவில் முக்கியத் தலைப்புகளில் சில கட்டுரைகள் இல்லாமல் போனாலும் பல்வேறு தலைப்புகளில் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவில் article diversityக்கு உதவுகின்றன.--Ravidreams 15:56, 16 பெப்ரவரி 2007 (UTC)

நன்றி ரவி, நான் எழுதிய கட்டுரைகளிற் பல தொடக்கக் கட்டுரைகள் தான். சராசரியாக 3000 - 4000 பைட்டுகள் என்ற குறியை வைத்துத்தான் எழுதினேன். எல்லாத்துறைகளிலும் நல்ல பரிச்சயம் எனக்கு இல்லாது விட்டாலும், எனக்கு ஆர்வமுள்ள துறைகளிலுள்ள ஆங்கில விக்கிக் கட்டுரைகளை மொழி பெயர்ப்புச் செய்தேன். இவற்றிலுள்ள சிவப்பு இணைப்புக்கள் மூலம் பல துறைகளிலும் கட்டுரைகள் விரிந்து கொண்டு செல்ல இது வழிவகுக்கும் என்பது எனது நம்பிக்கை. Mayooranathan 16:27, 16 பெப்ரவரி 2007 (UTC)

அமைதியாக பல நல்ல கட்டுரைகளை ஆக்கி தந்து, தகுந்த நேரத்தில் நல்ல வழிகாட்டல்களையும் தந்து வருகின்றீர்கள். நன்றி. உங்களிடம் ஒரு சில கட்டுரைகளை கோரலாமா என்று தோன்றுகின்றது. இது உங்கள் ஈடுபாட்டு புலத்துக்குட்பட்டது என்றே நினைக்கின்றேன். உங்களின் திட்டத்துக்குள் சேர்த்துக் கொண்டால் நன்று. நன்றி.

  • தமிழர் சோதிடம் அல்லது தமிழர் சோதிட நம்பிக்கைகள் (இவற்றை சற்று பின்புலம் தந்து எழுதினால் பயன் பெருகும். எ.கா. தமிழர்களிடம் "சாதகம்" பார்க்கும் மரபு இருக்கின்றது. இதை பல பார்வைகளில் அலசலாம். இதன் நம்பிக்கை தன்மை நன்மை/கேடுகள் குறித்து ஒரு மதிப்பீடும் தரலாம். இதைப் போலவே நல்ல காலம் பார்த்தல், கை ரேகை, எண் சோதிடம், பெயர் சம்பந்தப்பட்ட என்று பிற உண்டு. இதை ஒரு பரந்த பார்வையில் ஒரு overview தமிழர்களை முன்னிறுத்தி எழுத முடியுமா. இவற்றுள் கேடு விளைவிப்பவை, பொழுது போக்கானவை அல்லது கேடு விளைவிக்காதவை என்று வேறுபடுத்தியும் சில கருத்துக்களை தர முடியும் என்று நினைக்கின்றேன்.)
  • சோதிடம் என்னும் தலைப்பில் ஒரு சிறு கட்டுரை எழுதி்னேன். அதற்கு யாரும் ஆதரவு தரவுமில்லை; எதிர்ப்பு தெரிவிக்கவுமில்லை. அத்துடன் நண்பர் சுப்பையா தன் வலைப்பதிவில் சோதிடம் பற்றி எழுதியது இணைப்பாகக் கொடுக்கக்கண்டு ஒதுங்கிவிட்டேன். தேவையெனில் எழுதலாம்.--ஞானவெட்டியான் 19:03, 17 மார்ச் 2007 (UTC)
  • தமிழர் உறவுமுறை - தமிழரை மையமாக வைத்து ஒரு பொது அடிப்படை கட்டுரை. ஏற்கனவே பல கட்டுரைகள் இந்த புலத்தில் எழுதியுள்ளீர்கள். எனவே ஒப்பிட்டு அல்லது ஒப்பி எழுதுவது சாத்தியமா இருக்கும்.

--Natkeeran 16:19, 16 பெப்ரவரி 2007 (UTC)

செய்யலாம் நற்கீரன், மேற்குறித்த விடயங்களிலே எனக்குப் பொதுவான ஆர்வம் உண்டு. ஆனால், குறிப்பாகத் தமிழர்களுக்கு என்று எழுத முயலும்போது மேலதிக தகவல்கள் தேவைப்படும். தேடிக்கொள்ளலாம் என்றுதான் நினைக்கிறேன். Mayooranathan 16:42, 16 பெப்ரவரி 2007 (UTC)

பயன்படாப் படிமங்கள்தொகு

மயூரநாதன், பயன்படாப் படிமங்கள் பட்டியலில் [1] நீங்கள் பதிவேற்றிய சிலவும் உள்ளன. அவற்றில் தமிழ்விக்கிக்கெனவே நீங்கள் எடுத்த அல்லது உங்களிடம் பிரதிகள் இல்லாத ஆனால் முக்கியமான படிமங்கள் தவிர்ந்த ஏனையவற்றை நீக்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --கோபி 18:13, 16 பெப்ரவரி 2007 (UTC)

மாத்தளை சோமுவின் நூல்தொகு

மாத்தளை சோமுவின் வியக்க வைக்கும் தமிழர் அறிவியல் ஒரு நல்ல நூல். அதில் ஒரு பகுதி தமிழர் வானியல் பற்றி பல செய்திகளை தருகின்றது. உங்களிடம் அந்த நூல் இருக்கின்றதா. இல்லாவிட்டா வாங்குவது நன்று. நீங்கள் எழுதும் பல கட்டுரைகளுக்கு நல்ல தகவல்கள் தர வல்லது. நல்ல வாசிப்பும் கூட. தமிழ கட்டிடக்கலை பற்றியும் தகவல்கள் உண்டு. --Natkeeran 04:58, 20 பெப்ரவரி 2007 (UTC)

இது புதிய புத்தகமா? இப்பொழுது கிடைக்குமானல், இலங்கைக்குப் போகும்போது தான் வாங்கலாம். Mayooranathan 11:04, 20 பெப்ரவரி 2007 (UTC)
2005 சித்திரையில் வெளி வந்தது. இந் நூலுக்காக ஒரு வருடம் தமிழகத்தில் ஆய்வு செய்யும்பொழுது, இவற்றின் கட்டுரைகள் சில ஏற்கனவே வெளிவந்தன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. --Natkeeran 16:10, 21 பெப்ரவரி 2007 (UTC)
2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழகத்துக்குப் பலமுறை சென்றிருக்கிறேன். பல புத்தக விற்பனை நிலையங்களுக்கும் சென்று புத்தகங்களும் வாங்கியிருக்கிறேன். இது எனக்கு அகப்படவில்லை. இதை வெளியிட்டது எந்த நிறுவனம்? Mayooranathan 16:19, 21 பெப்ரவரி 2007 (UTC)
  • மாத்தளை சோமு. (2005). வியக்க வைக்கும் தமிழர் அறிவியல். திருச்சி: தமிழ்க்குரல் பதிப்பகம். --Natkeeran 19:53, 21 பெப்ரவரி 2007 (UTC)

படிமங்கள் தொடர்பாகதொகு

மயூரநாதன், நீங்கள் படிமங்களைப் பதிவேற்றும்போது பதிவேற்றப் பதிகையில் தொடர்பான தகவல்களையும் குறித்தே வந்துள்ளீர்கள். அவற்றுள் பல உங்களால் வரையப்பட்டவை, படம் பிடிக்கப்பட்டவையாக உள்ளன. அவற்றௌக்கான உரிமங்களை வழங்கி பகுக்க முடிந்தால் நல்லது. அவற்றுக்கு (உங்கள் சார்பில்) PD-self இனை நான் சேர்ப்பது தொடர்பில் உங்களுக்கு ஆட்சேபணை உண்டா? கோபி 19:10, 22 பெப்ரவரி 2007 (UTC)

என்னுடைய படங்களானால் நிச்சயம் கொடுக்கலாம். Mayooranathan 19:33, 22 பெப்ரவரி 2007 (UTC)

பாராட்டுகள்தொகு

மயூரநாதன், நீங்கள் வள்ளுவர் கோட்டம், கரிம வேதியல், கற்காலம், என்று ஏராளமான நல்ல பொருட்களில் மிக அருமையாக பல கட்டுரைகளை எழுதி எல்லோருக்கும் வழிகாட்டியாய் இருக்கின்றீர்கள். என் நெஞ்சார்ந்த பாராட்டுகள். அண்மையில் 6 நாட்களில் 110 கட்டுரைகளுக்கும் மேலாக எழுதியதை ஒட்டி கீழ்க் காணுமாறு என் பயனர் பக்கத்தில் எழுதியிருந்தேன். அதில் உங்களைப் பற்றி எழுதி இருந்ததால், இங்கே கீழே இடுகின்றேன். --செல்வா 15:56, 23 பெப்ரவரி 2007 (UTC)

110 கட்டுரைகள் 6 நாட்களில்

சுமார் 110 கட்டுரைகளை பெப்ரவரி 18 ஆம் நாள் முதல் இன்று இப்பொழுதுவரை, சுமார் 6 நாட்களில் நம் பயனர்கள் ஆக்கியுள்ளனர். இது ஒரு நல்ல முன்னேற்றம். நாம் எல்லோரும் மயூரநாதனின் வழிகாட்டுதலின் படி முழு முனைப்பாய் இயன்ற வரை புதுக் கட்டுரைகள் ஆக்க வேண்டும் என நினைக்கிறேன். ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு சராசரியாய் 3 கட்டுரைகள் எழுதி வந்தால் 10 பயனர்களே கூட் 100 நாட்களில் 3000 கட்டுரைகள் எழுதி நாம் 10,000 கட்டுரைகளின் இலக்கை அடைவோம். கோபியைப் போல களப்பணி ஆற்றிக் கொண்டே ஏராளமான கட்டுரைகளை எழுதுவது எல்லாராலும் இயலாவிடினும், மயூரநாதனைப் போல கட்டுக் கோப்பாய், அமைதியாய் கருத்து செறிந்த அருமையான கட்டுரைகளை விறுவிறு என்று எல்லோராலும் ஆக்க இயலாவிடினும், நாம் எல்லோரும் ஆளுக்கு சுமார் 3 குறுங்கட்டுரைகள் (4-5 வரி இருந்தாலே போதும் - தொடக்கத்திற்கு), எழுத இயலும் என நினைக்கிறேன். நாம் சற்று விரைவாய் முந்துவோம். பல தர அளவீடுகளில் தமிழ் விக்கி இந்திய மொழிகளுள் முன் நின்றாலும், நாம் கடந்த ஓராண்டு காலமாக பன்மொழி விக்கியில் 70-72 ஆகிய இடங்களிலேயே உள்ளோம். சற்று முனைப்பாக எல்லோரும் பணி புரிந்தால் விரைவில் 10,000 கட்டுரைகள் எட்டுவதன்றி, பன்மொழி விக்கி வரிசையில் ஒரு 4-5 இடங்களாவது முன்னேறுவோம் என நினைக்கிறேன். முன்னேற வேண்டும். இதனை பொது வேண்டுகோளாய் எல்லோருக்கும் விடுக்கின்றேன். நன்றி. --செல்வா 15:43, 23 பெப்ரவரி 2007 (UTC)

மயூரநாதன், நீங்கள் என் பக்கத்தில் இட்ட குறிப்புகளுக்கு நன்றி. உண்மைதான் கடந்த சில நாட்களாக நல்ல முன்னேற்றம் தான். இந்த விரைவை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது கூட்டவேண்டும். சுமார் 1400 பயனர்கள் பதிவு செய்து இருக்கும்பொழுது, ஒரு 20-30 பயனர்களாவது சேர்ந்து நாளொன்றுக்கு சுமார் 30-40 குறுங்கட்டுரைகள் எழுதலாம். சில புதுப்பயனர்கள் நல்ல ஆர்வத்துடன் பங்குகொள்ளுகின்றனர். நாம் முதலில் உலகமொழிகளில் 60க்குள் இருக்க முனைய வேண்டும் - விரைவாகவும் செய்தல் வேண்டும். 10,000 கட்டுரைகளை விரைவில் எட்ட வேண்டும். --செல்வா 18:50, 3 மார்ச் 2007 (UTC)

Speech synthesis systemதொகு

மயூரநாதன், கீழ்க்கண்ட மறுமொழியை மயூரனுக்கு அளித்தேன்:

மயூரன், நீங்கள் என் பேச்சுப் பக்கத்தில் "Speech Synthesis System என்பதை எப்படி தமிழாக்குவது?" எனக் கேட்டிருந்தீர்கள். தக்க சூழலில்தான் சரியான மொழிபெயர்ப்பு அமையும். இதனை speech processing பற்றி அறிந்த உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனினும், Speech synthesis system என்பது செயற்கையாய் பேச்சுமொழியை பேசுவது போலவே ஒலியுருவாய் உருவாக்கும் ஓர் அமைப்புதான். எனவே இதனை செயற்கைப் பேச்சொலி அமைப்புமுறை எனலாம்.--செல்வா 22:13, 4 மார்ச் 2007 (UTC)--செல்வா 12:35, 5 மார்ச் 2007 (UTC)

ஓவியம் ஓவியக்கலைதொகு

என இரு பகுப்புகள் தேவையில்லை என்று நினைக்கின்றேன். எது பொருத்தமோ அதை வைத்து விட்டு, மற்றதை நீக்கிவிடுங்கள். நன்றி. --Natkeeran 17:46, 6 மார்ச் 2007 (UTC)

Abstract பற்றிதொகு

உங்கள் கருத்துகளுக்கு நன்றி. கீழ்க்காணும் மறு மொழியை என் பேச்சுப் பக்கத்தில் இட்டுள்ளேன்: நான் மயூரநாதனின் கருத்துடன் உடன்படுகின்றேன். Abstract என்பது அடிப்படையாக உள்ளப் பொதுமைப் பண்புகள், அடிநுண்பண்பு எனலாம். அதாவது சிறப்பான கோணங்களிலோ, காட்சிகளிலோ அடிப்பாவு பெற்ற பொது நுட்பப் பண்புகள் எனலாம்.--செல்வா 19:09, 12 மார்ச் 2007 (UTC)

Abstract பற்றி மேலும் சிந்தித்ததில்தொகு

Abstract என்பதற்குத் தமிழில் நுண்புல அல்லது நுண்பிய என்று கருத்துப் பெயர்க்கலாம் என்று எண்ணுகிறேன். Abstract mathematics என்பதற்கு நுண்பியக் கணிதம் எனலாம். ஒன்றின் அடிப்படையாக அமைந்துள்ள பொது நுண்பண்புகளை, அடிகூறுகளை ஈர்த்து வடிப்பதை நுண்பியம் (Abstraction) எனலாம் என்பது என்கருத்து. என் பரிந்துரை- நுண்பிய, நுண்பியம் என்பன நல்ல சொற்கள்.--செல்வா 18:27, 16 ஏப்ரல் 2007 (UTC)

நன்றிதொகு

நகரமயமாக்கல், பாலைவனமாதல், காடு அழிப்பு போன்ற எனக்கு விருப்பமான சூழலியல் தலைப்புகளில் கட்டுரைகளை எழுதுவதற்கு மிக்க நன்றி மயூரநாதன்.--Sivakumar \பேச்சு 15:55, 16 மார்ச் 2007 (UTC)

சிவகுமார், உங்கள் குறிப்புக்கு நன்றி. எனக்கும் இம்மாதிரியான விடயங்களில் விருப்பம் உண்டு. தமிழ்க் கலைச்சொற்கள் பிரச்சினையால் தான் இவ்வாறான தலைப்புக்களில் அதிகம் எழுத முடிவதில்லை. Mayooranathan 16:01, 16 மார்ச் 2007 (UTC)
உண்மை தான் மயூரநாதன். எனினும் இது போன்று துவங்குவதால் தான் குறைந்தது கலைச்சொற்களை உருவாக்கவும் அது குறித்து விவாதிக்கவும் முடிகிறது.--Sivakumar \பேச்சு 16:05, 16 மார்ச் 2007 (UTC)


இலங்கை பாட நூல்களில் (உயர் வகுப்பு) இந்த தலைப்புகளில் ஓரளவு எழுதப்பட்டுள்ளன. என்னிடம் ஒரு சில உண்டு. ஆனால் பல உண்டு என்று அறிய முடிகின்றது. --Natkeeran 17:03, 16 மார்ச் 2007 (UTC)
நற்கீரன் குறிப்பிட்டது போன்ற பல்வேறு நூல்களிலிருந்தும் கிடைக்கக்கூடிய கலைச்சொற்களைத் தொகுக்கவேண்டியது அவசியம். இப்பொழுது தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் தளம் வேலை செய்வதில்லை. இதனால் இருந்த ஒரே வசதியும் இல்லாமல் போய்விட்டது. இத்தொகுப்புக்கு உரிய சரியான இடம் விக்சனரி தான். ஆனாலும் விக்கிபீடியாவிலுள்ள எல்லோரும் அங்கே செல்வதில்லை. அதனால் விக்கிபீடியாவில் ஒரு Collection point போல ஒரு பக்கத்தை உருவாக்கலாம் என எண்ணுகிறேன். முதலில் ஆங்கிலக் கலைச் சொற்களின் பட்டியல் ஒன்றைத் தாயாரித்து அதற்கான தமிழ்ச் சொற்களைத் தேடிப் பிடிக்கலாம். இங்கே விக்கிபீடியாவிலும், பேச்சுப் பக்கங்களிலும், கட்டுரைகளிலும், ஆலமரத்தடி போன்ற பக்கங்களிலும் பல கலைச் சொற்கள் பற்றிய உரையாடல்கள் நிகழ்ந்துள்ளன அவற்றிலுள்ள கலைச் சொற்களை இப்போ தேடிப்பிடிக்க முடியாதுள்ளது. அவற்றையும் அகப்படும்போது எடுத்து ஒரே இடத்தில் சேர்க்கவேண்டும் (சொற்களை மட்டும்). Mayooranathan 17:23, 16 மார்ச் 2007 (UTC)
நீங்கள் சொல்வதை நான் மனதளவில் செய்து வந்தேன். விக்சனரின் பக்க கட்டமைப்பை 'கிரியாவின் தற்கால அகராதி'யைப் பின்பற்றி அமைக்க திட்டம் உள்ளது. ஆனால் இப்பொழுது அல்ல. பார்க்க: Wikipedia:கலைச்சொல் செயல்பாடுகள் ஒருங்கிணைவு--Natkeeran 17:33, 16 மார்ச் 2007 (UTC)

நாயன்மார்கள் குறித்த கட்டுரைக்கு நன்றிகள். --Umapathy 15:51, 28 ஏப்ரல் 2007 (UTC)

Global Warming - A Myth !!!தொகு

http://video.google.ca/videoplay?docid=-4520665474899458831&q=The+Great+Global+Warming+Swindle

--Natkeeran 19:30, 18 மார்ச் 2007 (UTC)

நிறை பற்றிதொகு

மயூரநாதன், நீங்கள் நிறை பற்றிய உரையாடல்களைப் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். இது மிகவும் குழப்பம் தரும் ஒன்றாக உள்ளது. தமிழ்நாட்டில் நிறை என்பதை mass என்பதற்கும், இலங்கையில் நிறை என்பதை weight என்பதற்கும் பயன்படுத்துவது மிகவும் குழப்பமாக உள்ளது. திணிவு, பொருண்மை இரண்டும் சரியானதாக இல்லை. திணிவு-நிறை (mass-weight) என்று நெடுநாளாக இலங்கையில் வழக்கில் இருப்பது போலவே நிறை-எடை தமிழ்நாட்டிலும் நெடுநாட்களாக வழக்கில் உள்ளது. பொருண்மை என்பதை mass என்பதற்கு பயன்படுத்துவது ஒன்றுதான் வழியா? பொருண்மை, திணிவு = mass; எடை, நிறை = weight ? தமிழ்நாட்டில் நிறை என்பதை பொருண்மை என்று மாற்றுவார்களா என்பதும் விளங்கவில்லை. த.வி -யில் எப்படிச் செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஸ்டீஃவன் ஹாக்கிங்கின் புத்தகத்தை (காலம் (நூல்)) மொழி பெயர்த்த நலங்கிள்ளியும் மாஸ் என்பதற்கு நிறை என்று பயன்படுத்தியுள்ளார். அ.கி. மூர்த்தியின் அறிவியல் அகராதியிலும் மாஸ் என்பதற்கு நிறை என்பதைக் குறித்துள்ளார் (பொருண்மை என்பதையும் கொடுத்துள்ளார்). வெயிட் என்பதற்கு எடை என்றும் உள்ளது. த.நாடும், இலங்கையும், சிங்கப்பூரும், மலேசியாவும் இதில் ஒருங்கிணைந்து கலைச்சொற்கள் ஆக்கி சீர் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் - அதுவும் நல்ல பொருத்தமான பேராசிரியர் குழு போன்றவற்றைக் கொண்டு.--செல்வா 23:33, 22 மார்ச் 2007 (UTC)

நன்றி செல்வா, உங்கள் ஆர்வத்திற்கும் தொடர்ச்சியான பங்களிப்பிற்கும். சீர்தரம் ஒன்று இருப்பதே சாலச்சிறந்தது. எடுத்துக்காட்டாக தமிழர் ஒருவர் உலகின் எங்கு சென்றாலும் இன்னொருதமிழருடன் உரையாடக் கூடியதே சிறந்தது. வட்டார வழக்குகள் பாடத்திடங்களில் தவிர்க்கப்படவேண்டியவை. "கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்றில்லமல்" இவற்றை இப்போதே சீர்செய்தால் எல்லாரிற்கும் நல்லது விக்கிபீடியாவையும் சேர்த்தே சொலிகின்றேன். முன்னர் வேண்டுமானால் இணையம் இன்மை போன்றா காரணங்களைக் கூறலாம் இப்போது சொல்லமுடியாது விக்கிபீடியாவும் 8, 200 மேற்பட்ட கட்டுரைகளைத் தாண்டிவிட்டது. இது மேலும் வளர்ந்து மிகவும் பிரயோசனமான திட்டமாக வளரவேண்டும் என்றால் மாணவர்கள் இதை உசாத்துணையாகக் கொள்ளவேண்டும் தவிர மாணவர்களின் பங்களிப்பும் அவசியம் அப்போதுதான் எங்களின் வெற்றி உறுதிப்படுத்தப்படும். இப்போது பெரும்பாலும் பங்களிப்பவர்கள் தொழில்புரிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் குழுவொன்று இலங்கைப் பாடத்திட்டங்களில் பங்களிப்பார்களா? தெரியவில்லை. தற்போதைக்கு இப்பிரச்சினைகளை ஊடகங்கள் ஊடாகப் தெரியவைப்பது நன்று என்றே நினைக்கின்றேன். 2000 ஆம் ஆண்டவில் இலங்கையில் தப்புப் தப்பாக ஓர் நூல் வந்து அது பத்திரிகைகளில் வந்த பின்பே National Institute of Education கருதிற் கொண்டது. இப்பிரச்சினைகளைப் இப்போதைக்குப் பிரபலமாக்குவதே நல்லது என்று நினைக்கின்றேன். --Umapathy 04:06, 23 மார்ச் 2007 (UTC)

தமிழ்நாடு, இலங்கைக் கலைச்சொற் பயன்பாடுகள் தொடர்பிலான முரண்பாடுகள், நீங்கள் இங்கே குறிப்பிட்ட சொற்களையும் தாண்டி, நிறையவே இருக்கின்றன. இவற்றைச் சீர் செய்வதற்கான முன்முயற்சிகள் பல அனைத்துகத் தமிழ் ஆய்வரங்குகளில் எடுக்கப்பட்டிருப்பினும் எவ்வளவு தூரம் இம்முயற்சிகள் பயன் கொடுத்துள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை. இலங்கையில் அரசாங்க மட்டத்தில் கலைச்சொல் ஆக்கப்பிரிவு ஒன்று உள்ளது. இதேபோல், தமிழ் நாட்டிலும், அரச மட்டத்திலும், பல்கலைக் கழகங்கள் மட்டத்திலும் கலைச் சொல்லாக்கங்கள் நடைபெறுகின்றன என்பது எனது நம்பிக்கை. பாடநூல்களின் உருவாக்கம் போன்ற துறைகளில் நேரடியான பங்களிப்பைக் கொண்டிருப்பதால், உண்மையில் இத்தகைய நிறுவனங்களே இவ்விரு நாடுகளிலும் கலைச்சொல் பயன்பாட்டில் ஏறத்தாள 100% தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனலாம். எனவே இவ்வாறான நிறுவனங்களுக்கு வெளியே நடைபெறக்கூடிய கலைச்சொல் ஆக்கம், மாற்றங்கள் முதலியவை தமிழ்க் கலைச்சொற் பயன்பாட்டில் எவ்வளவு தூரம் நேரடியான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பது கேள்விக்கு உரியது. எனவே, ஏற்கெனவே இந்த நாடுகளில் பயன்பாட்டில் உள்ள கலைச் சொற்களுக்கு மாற்றுச் சொற்களை உருவாக்குவது இருக்கும் குழப்பத்தோடு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதே எனது கருத்து. இலங்கையிலும், தமிழ் நாட்டிலும் நூல்களை எழுதுபவர்களும் அவ்வப் பகுதிகளில், மேற்குறிப்பிட்ட நிறுவனங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சொற்களையே பயன்படுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை. இத்தகைய நூல்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட நாடுகளுக்குள் மட்டுமே பயன்படுத்தப்படுபவை என்பதால் அதிகம் பிரச்சனைகள் இருப்பதில்லை.
தமிழ் விக்கிபீடியா நாடுகளின் எல்லைகளுக்குள் கட்டுப்படுத்தப்பட்டதல்ல என்பதாலும், பங்களிப்பவர்கள் இரு நாட்டுப் பின்னணிகளையும் கொண்டவர்கள் என்பதாலும், இது எங்களுக்கு உடனடிப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஒரு இணைப்புப் பாலமாக இருக்கக்கூடிய வாய்ப்பு தவிக்கு இருப்பதாலும், பரந்த அளவில் தமிழ்மக்களிடம் தகவல்களையும் அறிவையும் எடுத்துச் செல்லக்கூடிய வசதியைக் கொண்டிருப்பதாலும், இந்தப் பிரச்சினையைக் கையாள்வதில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள கலைச் சொற்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் இரு நாட்டு நிறுவனங்களுக்கும் உள்ள பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். பழைய சொற்களுக்குப் பழக்கப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், எழுதப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான நூல்கள் என்பவை பிரச்சினைகளாக உள்ளன. இதனால், கலைச்சொல் மாற்றங்கள் பெரும் கால, பணச் செலவுகளை இந்த நிறுவனங்களுக்கு ஏற்படுத்தக்கூடியவை. இவற்றைத் தவிரவும் பரந்த அளவிலான எழுத்து உச்சரிப்பு வேறுபாடுகள் முதலியனவும் முரண்பாடுகளுக்குக் காரணமாகின்றன. இவை, மேற்படி நிறுவனங்களின் கட்டுப்பாடுகளுக்கும் கூட அப்பாற்பட்டவை. எனவே நீண்டகாலம் புழக்கத்தில் உள்ள சொற்கள் தொடர்பில் தடாலடியாக மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே மாற்றங்கள் ஏற்படக் காலம் எடுக்கும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
முனைவர் சண்முகம், இணையம் 2000 மாநாட்டுக் கருத்தரங்கில் படித்த கலைச் சொற்கள்: பன்னாட்டு நோக்கில் தரப்படுத்தல் என்ற கட்டுரையில் இது தொடர்பான சில முன்னேற்றங்களை எடுத்துக் காட்டியுள்ளார். சீராக்க முன்முயற்சிகளுக்குப் பின் உருவாக்கப்பட்ட இலங்கைச் சொற்களில் ஏற்பட்டுள்ள, சீராக்கம் நோக்கிய சில மாற்றங்களை அவர் குறித்துள்ளார். எனவே தமிழில் கலைச் சொற்களின் தரப்படுத்தல் படிப்படியாக நடைபெறும் என்பதில் ஐயமில்லை. ஆனால், இதில், தவியின் பணி என்ன என்று சிந்திக்க வேண்டும். இரண்டு வழக்குகளுக்கும் தொடர்பில்லாத மூன்றாம் வழக்கொன்றை உருவாக்க முயலாது, இரண்டையும் தழுவிச் செல்வதுதான் இப்போதைக்கு உகந்த வழி என்பது எனது கருத்து. தமிழ்நாட்டு மாணவனுக்கும், இலங்கை மாணவனுக்கும் பயன்படக்கூடிய வகையில் தவி இருக்கவேண்டும். எப்பகுதியினரிடமிருந்தும் அந்நியப்படக்கூடாது. இதற்கு ஏற்றவகையில் தவிக்கு நாம் கொள்கைகளை வகுத்துக் கொள்வது அவசியம். இதன் மூலம், எதிர்காலத்தில் கலைச் சொல்லாக்கம் முதலிய துறைகளில், பொதுக்கருத்துக்களை உருவாக்கும் ஒரு களமாகத் தவியை வளர்த்தெடுக்க முடியும். தவியின் செல்வாக்குச் சரியான திசையில் வளர்ச்சியடையுமாயின், இத்துறைகளில் நேரடியாகத் தொடர்புடைய பலர் தவியில் ஈடுபாடு காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும்.
இரண்டு வழக்குகளையும் இப்போதைக்கு விளக்கம் கொடுத்துப் பயன்படுத்த வேண்டும் என்பதே எனது கருத்து. Mayooranathan 08:02, 23 மார்ச் 2007 (UTC)
உங்கள் விரிவான கருத்துக்களுக்கு நன்றி. இரண்டு வழக்குகளையும் விளக்கம் கொடுத்து எழுதலாம் ஆனால் எப்படி எல்லா இடங்களிலும் அப்படிச் செய்வது என்பதே என் கவலை (நிறை என்பது நூற்றுக்கணகான இடங்களிலே வரக்கூடியது - தனிமங்கள், இயற்பியல் கருத்துக்கள், வேதிப் பொருட்கள். ஒரு கட்டுரை அல்லது இரண்டு கட்டுரை என்றால் இரு வழக்குகளையும் விளக்கத்தோடு கொடுக்கலாம். ஒரே சொல் இருவேறு சொற்களுக்கு குழப்பம் தரும் வகையில் இருப்பதாலேயே இது இடருகின்றது. பொதுவாக இரண்டு வழக்குகளையும் தழுவிசெல்வதுதான் சிறந்தது, மூன்றாவது வழக்கொன்றை கூடியமட்டிலும் உருவாக்காமல் இருத்தல் நலம் - இதுவே என் தனிப்பட்ட கொளகையும். என்றாலும் சில இடங்களில், இரண்டு வழக்கும் நேரடியாய் முரண்படுவதாலும், சில இடங்களில் இரண்டுமே மிகவும் பொருத்தம் இல்லாமலும் முன்னுக்கு பின் முரணாக சில ஆக்கப்பட்டிருப்பதாலும், சீரான வளர்ச்சியைக் கெடுப்பதாலும், புதிய சொல்லாட்சிகள் தேவைப் படுகின்றன (தவிர்க்கப்படவேண்டியது என்பதை ஒப்புக்கொள்கிறேன் - தவிர்க்கவியலா நிலை சில இடங்களில்). ஆனால் வழக்கில் உள்ள சொற்கள் கூடவே இடப்படுகின்றது. சில இடங்களில் மூன்றாவது சொல் என்பது இருவருக்கும் பொதுவான சொல் என்பதாகவும் (compromise) இருக்கலாம் என்னும் நோக்கில் தேவைப்படலாம் (மிகப்பொருத்தமாக வளரும் இயல்புகள் கொண்ட சொல்லாட்சிகளாய் இருப்பின்) என்பது என் கருத்து. --செல்வா 13:16, 23 மார்ச் 2007 (UTC)
மேலே உள்ள் கருத்துக்களுடன் உடன்படுகின்றேன். சில நேரடியாக முரண்படும், முக்கிய சொற்களுக்கு பொருத்தமான சொல் அல்லது பெரும்பான்மை வழக்த்தை ஏற்றுக்கொள்வது நன்று. அந்த சொல்லின் பிரதான கட்டுரையில் இந்த தெரிவைப் பற்றி விளக்கமாக விபரங்கள் தரப்படல் நன்று. ஒவ்வொரு சொல்லாகத்தான் இதை ஆயமுடியும், ஒரேயடியாக முடிவுகளை எட்ட முடியாது. --Natkeeran 14:18, 23 மார்ச் 2007 (UTC)

உரை திருத்த வேண்டல்தொகு

10, 000 கட்டுரை இலக்கை விரைவில் அடைந்து விடுவோம் என்ற நிலையில் ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் உள்ள பிழைகள் மிகவும் உறுத்தலாக இருக்கிறது. குறிப்பில்வழிப் பக்கம் மூலமோ உங்களுக்குப் பிடித்த பகுப்புகள், தலைப்புகளில் உள்ள கட்டுரைகள் ஆகியவற்றில் உள்ள பிற பயனர்களின் கட்டுரைகளை கவனித்து, குறைந்தபட்சம் எழுத்துப் பிழைகளையாவது களைந்து, உரை திருத்தித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஒரு நாளைக்கு 5 கட்டுரைகள் என்று திருத்தித் தர இயலுமானாலும் நன்று. --ரவி 11:05, 30 மார்ச் 2007 (UTC)

செய்யலாம் ரவி. கடந்த சில நாட்களாக வேலைகள் அதிகம் இருந்ததனாலும், மூன்று நாட்கள் அமீரகத்துக்கு வெளியே செல்லவேண்டி இருந்ததனாலும் அதிகம் பங்களிக்க முடியவில்லை. இனி வழக்கம்போல் தொடரும். Mayooranathan 18:22, 1 ஏப்ரல் 2007 (UTC)

த.வி இடைமுகத்தை தமிழாக்குவது எப்படி?தொகு

தயந்து உங்களுக்கு தெரிந்த தகவல்களை நுட்ப நெற்ப்படுத்தல் பக்கத்தில் சேருங்கள். நன்றி.

--Natkeeran 22:15, 3 ஏப்ரல் 2007 (UTC)

தனிமம் & வேதியியல் தனிமம்தொகு

பார்க்க பேச்சு:தனிமம். தங்களுடைய கருத்துக்களை வேண்டுகிறேன்.--Sivakumar \பேச்சு 23:36, 5 ஏப்ரல் 2007 (UTC)

FARCதொகு

Tamil Language article is to be removed of its FA, even after the extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language

--Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC)

சிங்களவர் கட்டிடக்கலைதொகு

இலங்கைக் கட்டிடக்கலை சிங்களவர் கட்டிடக்கலை இரண்டுக்கும் வித்தியாசம் காண்பது தேவையா? --Natkeeran 16:24, 9 ஏப்ரல் 2007 (UTC)

நிச்சயமாக வேறுபடுத்தல் அவசியமே காரணம் இலங்கை பல வேற்று நாடுகளின் ஆதிக்கத்தில் உட்பட்ட நாடு சோழமன்னர்கள் கட்டிய கோவில்கள் இன்றும் இலங்கையில் இருகின்றது,இதுதவிர அரபுக்கள், போத்துகேசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் கட்டிய கோட்டை கொத்தளம் பரவலாக இலங்கை முழுவதும் உண்டு இதுதவிர பாரம்பரிய தமிழர்களது திராவிடபாணி கட்டிட கலையும் உண்டு ஆகவே இவற்றிலிருந்து சிங்களவரின் கட்டிட கலைபாணியை வேறு பிரிப்பது அவசியமே.இலங்கையின் கட்டிடகலை தனித்து சிங்களவரின் கட்டிட கலையாகமாத்திரம் இருக்கவெண்டும்மென்பதை அர்த்தப்படும் கேள்வி விசர்தனமானது.--கலாநிதி 17:29, 9 ஏப்ரல் 2007 (UTC)

சிங்களக் கட்டிடக்கலை, இலங்கைக் கட்டிடக்கலை, இலங்கையில் பௌத்த கட்டிடக்கலை என்பன எல்லாம் சில சமயங்களில் ஒன்றுக்கொன்று மாற்றீடாகப் பயன்படுத்தப்பட்டாலும், இவற்றுக்கிடையில் வேறுபாடுகள் உண்டு. இலங்கையில் காணப்படும் மிகப்பழைய காலத்துக் கட்டிடக்கலை பெரும்பாலும் சிங்களவர் கட்டிடக்கலையே எனலாம். இவற்றில் பெரும்பாலானவை பௌத்த சமயம் சார்ந்தவையே ஆனாலும், சில சமயச்சார்பற்ற கட்டிடங்களும் இருந்துள்ளன. தமிழ்நாட்டில் பல்லவருடைய ஆதிக்கம் நிலைபெற்றிருந்த காலத்திலிருந்தே தமிழ் நாட்டுத் திராவிடக் கட்டிடக்கலையின் தாக்கம் இலங்கையின் சில கட்டிடங்களில் தலைகாட்டத் தொடங்கிவிட்டன. இவை திராவிடக் கட்டிடக்கலையின் தாக்கம் கொண்ட சிங்களக் கட்டிடக்கலையாகவும், பௌத்த கட்டிடக்கலையாகவும் விளங்கின. 10 ஆம் நூற்றாண்டை அண்டி பொலொன்னறுவை போன்ற இடங்களில் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த சிங்களக் கட்டிடக்கலையையோ, பௌத்த கட்டிடக்கலையையோ சாராத கட்டிடங்களும் காணப்படுகின்றன. ஐரோப்பியர் ஆட்சிக்காலத்திலும் அதன் பின்னரும் கட்டப்பட்ட கட்டிடங்களில், சமயச் சார்பானவை தவிர்ந்த பலவற்றை இலங்கைக் கட்டிடக்கலையென்ற பகுப்பிலேயே சேர்க்கமுடியும். Mayooranathan 18:03, 9 ஏப்ரல் 2007 (UTC)

தயவு செய்து வாக்களிக்கவும்தொகு

பார்க்க - http://meta.wikimedia.org/wiki/Requests_for_new_languages/Wikisource_Tamil --ரவி 12:48, 21 ஏப்ரல் 2007 (UTC)

சைவ சமயம்தொகு

செய்யப்பட்ட மாற்றங்களைக் கவனித்து திருத்தினால் நன்று. நன்றி. --Natkeeran 14:17, 21 ஏப்ரல் 2007 (UTC)

விக்சனரிக்கு வருகதொகு

தமிழ் விக்கிபீடியாவில் 10, 000 கட்டுரை இலக்கை அடைந்துள்ள வேளையில் வெகு நாட்களாகத் தேங்கிக் கிடக்கும் தமிழ் விக்சனரி பணிகளை முன்னெடுக்க கூடிய பங்களிப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள். அவ்வப்போது அங்கு வந்து புதுச் சொற்களைச் சேர்த்தல், துப்புரவு, பக்க வடிவமைக்கு குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் ஆகியவற்றில் ஈடுபட வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு 5 புது சொற்களேனும் நீங்கள் சேர்க்க இயன்றால் நன்றாக இருக்கும்.--ரவி 12:03, 2 மே 2007 (UTC)

VolkovBotதொகு

பயனர்:VolkovBot-க்கு 'பாட் தகுதி வழங்கலாம். கடந்த சில நாட்களாகவே இதன் பணி நன்றாகவே உள்ளது.--Sivakumar \பேச்சு 19:35, 3 மே 2007 (UTC)

செய்யப்பட்டது--ரவி 20:08, 3 மே 2007 (UTC)

படிமத்தில் மாற்றத்திற்கு நன்றிதொகு

மயூரநாதன், வெண்பா தொடர்பான படிமத்தைத் திருத்தி அமைத்ததற்கு நன்றி. -- Sundar \பேச்சு 06:42, 17 மே 2007 (UTC)

நன்றிதொகு

கருத்துகளுக்கு நன்றி, மயூரநாதன். என்னால் இயன்றளவு முடுக்கத்துடன் தொடருகின்றேன். ஒரு 50-60 தமிழர்கள் கூட சற்று முனைப்பாக பங்களிக்க வராமல் இருப்பது வியப்பாக உள்ளது. ஆனால் கட்டாயம் 200-300 தமிழர்கள் பங்களிக்க வருவார்கள் என்று நம்புகிறேன். இன்றில்லை என்றாலும் விரைவில் வருவார்கள்! எத்தனை தமிழ் ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், கற்றவர்கள் இருகின்றார்கள்! --செல்வா 18:52, 6 ஜூலை 2007 (UTC)

முக்கிய ஆதார நூலைதொகு

விஜநாயக்க பேரரசு போன்ற தொடர் கட்டுரைகளுக்கு, முக்கிய ஆதார நூலை அல்லது நூற்களை தந்தால் மேலும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள உதவியாக இருக்கும். நன்றி. --Natkeeran 16:47, 6 ஆகஸ்ட் 2007 (UTC)

இப்பொழுது நான் ஆங்கில விக்கியை அடிப்படையாகக் கொண்டுதான் இவற்றை எழுதிவருகிறேன். இந்த ஆங்கிலக் கட்டுரைகளில் பல முரண்பாடுகள் இருப்பதாகத் தெரிகிறது. எழுதி முடிந்தவுடன், வேறு ஆதாரங்களையும் தேடி உள்ளிடுகிறேன். Mayooranathan 17:01, 6 ஆகஸ்ட் 2007 (UTC)

சைவ சித்தாந்தம்தொகு

14 நூல்கள் சைவ சித்தாந்தத் தத்துவ விளக்க நூல்களின் பட்டியலைத் தரமுடியுமா. நன்றி. --Natkeeran 20:21, 11 ஆகஸ்ட் 2007 (UTC)

இந்த நூல்களின் பட்டியல் ஏற்கெனவே தமிழ் விக்கியில் உள்ளது இங்கே பார்க்கவும். Mayooranathan 02:28, 12 ஆகஸ்ட் 2007 (UTC)

Please change my nameதொகு

Please change my name from Edmundkh to EdmundEzekielMahmudIsa, then leave me a message in the English Wikipedia. Thank you! --Edmundkh 09:04, 18 ஆகஸ்ட் 2007 (UTC)

சமயம்தொகு

சமயத்தை ஒரு தாய்ப்பகுப்பு ஆக்கலாமா. சமயத்துக்கு எமது சிந்தனையில், எமது வாழ்வில் ஒரு மிக முக்கிய இடம் உண்டு. உங்கள் கருத்து அறிய ஆவல். --Natkeeran 01:01, 20 ஆகஸ்ட் 2007 (UTC)

ஆம், சமயத்திற்கென்று ஒரு தாய்ப்பகுப்பு வேண்டும்.

--Profvk 14:09, 24 ஆகஸ்ட் 2007 (UTC)

கணிதத்தில் புதுப்பகுப்புகள்தொகு

எண் கோட்பாடு, குலக்கோட்பாடு, போன்ற முக்கிய கணிதப்பகுப்புகள் ஆக்கப்படவேண்டும்.

'இராமானுசன்' என்றே ஒரு பகுப்பு உண்டாக்கலாம் என்று தோன்றுகிறது. மற்ற விக்கிகளில் இல்லாவிட்டாலும் த.வி.இல் இராமானுசனுக்கு ஒரு பகுப்பு இருப்பது தமிழுக்கும் கணிதத்துக்கும் பெருமை தரும் என்பது எனது எண்ணம்.

இன்னும் சில கணிதப்பகுப்புகளில் கட்டுரைகள் வந்துவிட்டன. எ.கா.: சார்புப்பகுவியல், நுண்புல இயற்கணிதம், முதலியவை. இவைகளுக்கும் பகுப்புகள் உண்டாக்கப்படவேண்டும். --Profvk 14:09, 24 ஆகஸ்ட் 2007 (UTC)

மயூரநாதன், நன்றி. நான் 'சார்புப் பகுவியல்' என்ற பகுப்பை உண்டாக்கும் நோக்கத்தில் ஒரு தவறு செய்துவிட்டேன். ஏற்கனவே சார்புப்பகுவியல் என்ற ஒரே சொற்றொடரில் ஒரு பகுப்பு உள்ளதைப் பர்க்காமல் நான் 'சார்புப் பகுவியல்' என்று ஒரு பகுப்பை உண்டாக்கி விட்டேன். தயவு செய்து இரண்டையும் merge பண்ணவும். ஒன்றில் ஒரே ஒரு கட்டுரையும் மற்றொன்றில் 5 கட்டுரையும் உள்ளன. இவைகளை ஏதாவதொரு வழியில் consistent ஆக இருக்கும்படி நேர் செய்யவும். சிரமத்திற்கு மன்னிக்கவும். நீங்கள் இதைச்செய்து முடிக்கும் வரையில் நான் இந்தப் பகுப்பு விஷயத்தில் parallel ஆக ஒன்றும் செய்யமாட்டேன்.--Profvk 18:57, 25 ஆகஸ்ட் 2007 (UTC)


ஊக்கத்திற்க்கு நன்றி!தொகு

Mayooranathan, தங்களின் ஊக்கத்திற்க்கு நெஞ்சார்ந்த நன்றிகள், ஆனால், கடலோடு கலப்பதால் பெருமை ஓடைக்கே அன்றி கடலுக்கல்ல, விக்கிபீடியா கடல் நான் சிறு ஒடையே என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் :-) -நரசிம்மவர்மன்10 07:12, 24 செப்டெம்பர் 2007 (UTC)

மொழிகள் திட்டம்தொகு

கட்டாயம் நாம் இதனைத் தொடங்கி செய்வோம். நீங்கள் திட்டத்தை சற்று விளக்கிச் சொல்லுங்கள், மற்றவர்களுடன் நானும் கட்டாயம் பங்கு கொண்டு எழுதுகிறேன். மொழிகளின் இனக்கிளைத் தொடர்புகள் வரன்முறை தருவதோடு, அம்மொழிகளின் அகரவரைசை, அடிப்படை சொற்கள் (நான், நீ, நாம், நீங்கள், அவன், அவள், அது, 4-5 வினாச்சொற்கள், 4-5 வினைச்சொற்கள், 4-5 பெயர்ச்சொற்கள் (ஏறத்தாழ 20-25 சொற்கள் தமிழ் எழுத்தில்), அடிப்படை இலக்கணக் குறிப்புகள் அல்லது சிறப்பான இயல்புகள், மொழி வரலாறு (2-3 வரிகளாவது), முக்கியமான படைப்புகள் அல்லது எழுத்தாளர்கள் என்றவாறு செய்திகள் சேர்க்கவேண்டும். எல்லா மொழிகளுக்கும் இவை அனைத்தும் சேகரிப்பது கடினமாக இருக்கலாம், ஆனால் இயன்றவரை செய்வோம். பின்னர் விரிவாகலாம். இது நாம் நன்றாகச் செய்ய வேண்டிய ஒரு திட்டம். நான் என்னால் ஆன பங்களிப்பைக் கட்டாயம் செய்கிறேன்--செல்வா 16:05, 1 அக்டோபர் 2007 (UTC)

நன்றி செல்வா. ஆங்கில விக்கிபீடியாவில் நிறையத் தகவல்கள் இருக்கின்றன. இதைவிட எத்னோலாக், ஆம்னிகுலாட் போன்ற தளங்களிலும் தகவல்கள் உள்ளன. திராவிட மொழிகள் என எத்னோலாக்கினால் அடையாளம் காணப்பட்ட 70 மேற்பட்ட மொழிகள் தொடர்பில் ஏற்கெனவே குறுங்கட்டுரைகள் உள்ளன. இணைப்புடன் கூடிய பட்டியலை இங்கே பார்க்கவும். இந்திய-ஆரிய மொழிகளிலும் சுமார் 25 மொழிகள் வரை குறுங்கட்டுரைகள் உள்ளன. இவை அனைத்தும் விரிவாக்கப்பட வேண்டும். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் ஒரு மொழி பற்றிய கட்டுரையில் கட்டாயம் இருக்கவேண்டியவை. இவை தவிர ஒவ்வொரு மொழிக்குடும்பத்தில் இருந்தும் முக்கியமான மொழிகளை இனங்கண்டு அவற்றில் கட்டுரைகளைத் தொடங்கலாம். Mayooranathan 17:34, 1 அக்டோபர் 2007 (UTC)
இருப்பவை உட்பட 250 என்றும், அத்தோடு 20 முக்கிய மொழிகள் பற்றி நல்ல அல்லது சிறப்புக் கட்டுரைகள் ஆக்குவதையும் இலக்காக கொள்ளலாமா? ஒரு மொழிக் கட்டுரைக்குரிய சிறப்பு மாதிரியாகளாக (Prototype) அந்த 20 வதில் 5 யாவது ஆக்குவதும் நன்று. தமிழ் ஏற்கனவே ஒரு நல்ல மாதிரி சிறப்புக் கட்டுரை. முடிவுள்ள திட்டம் என்றால் ஆர்வம் பெருக்கும் என்பது என் உள் கணிப்பு. நன்றி. --Natkeeran 23:21, 1 அக்டோபர் 2007 (UTC)
அப்படியே செய்யலாம். Mayooranathan 02:55, 2 அக்டோபர் 2007 (UTC)
Wikipedia:விக்கித் திட்டம் மொழிகள் விபரிக்கப்பட்ட முதல் இலக்கை எப்பொழுது எட்டலாம் என்று ஊகிக்க முடியுமா?

இதுவரை தமிழ் விக்கியில் உள்ள மொழிகளின் கட்டுரைகளின் எண்ணிக்கை பற்றி எங்காவது அறியமுடியுமா?...--Natkeeran 21:48, 6 அக்டோபர் 2007 (UTC)

இதுவரை எழுதப்பட்ட மொழிகள் பற்றிய கட்டுரைகளை மொழிகள் பகுப்பிலும், அதன் துணைப் பகுப்புக்களான திராவிட மொழிகள், இந்திய-ஆரிய மொழிகள், நைகர்-கொங்கோ மொழிகள் பகுப்பிலும் காணமுடியும். தவிர வேறு பல துணைப்பிரிவுகளிலும் மொழிகள் பற்றிய கட்டுரைகள் இருப்பதைக் காண முடிகிறது இவற்றை ஒழுங்கு படுத்த வேண்டும். மொழிக் குடும்பங்களின் அடிப்படையில் இவற்றை வகைப்படுத்துவது நல்லது. ஏற்கெனவே இருக்கும் கட்டுரைகள் 125 க்கு மேல் இருக்கும் (பெரும்பாலும் குறுங் கட்டுரைகளே). எடுத்துக்கொண்ட முதல் இலக்கை அடைவதற்கு மூன்று மாதங்கள் ஒதுக்கலாம் என்பது எனது கருத்து. உண்மையில் இதற்கு முன்னதாகவும் அடைய முடியும். Mayooranathan 18:31, 8 அக்டோபர் 2007 (UTC)

Tamil namesதொகு

Could you move this to a title in Tamil? (or delete if not notable). 70.51.186.177 13:40, 9 நவம்பர் 2007 (UTC)

நேர்-நேரம்தொகு

மயூரநாதன், நீங்கள் என் பேச்சுப் பக்கத்தில் இது பற்றி கருத்து எழுதியிருந்தீர்கள். என் கருத்தை இங்கே இட்டுள்ளேன். என் பேச்சுப் பக்கத்திலும் இதனை இட்டுள்ளேன்.

சுந்தர், மயூரநாதன், இந்த நேரம் என்பது நேருவது, நிகழ்வது என்னும் அடிப்படையிலேயே உருவானது. அது லெஸ்லி லாம்போர்டின் கருத்துடன் ஒரு கோணத்தில் ஒத்ததே (அவர் போல் துல்லியமாய் நிறுவிக்கொண்டதாகக் கொள்ள இயலாதெனினும், அடிப்படைக் கருத்தில் ஒற்றுமை உண்டு. பார்க்கவும்: 'சூலை 1978 ஆம் ஆண்டு Communications of the ACM என்னும் ஆய்விதழில் லெஸ்லி லாம்போர்ட் எழுதிய "Time, Clocks, and the Ordering of Events in a Distributed System" என்னும் தலைப்பிட்ட கட்டுரையில் கூறுவது போல "However, we have taken the more pragmatic approach of only considering messages that actually are sent. We should be able to determine if a system performed correctly by knowing only those events which did occur, without knowing which events could have occurred."))

நேர்தல், நேர்வு, நேரல் என்னும் சொற்களுக்கு "உடன்பாடு" "எதிர்தல்" "கூடுதல் அல்லது கிட்டல், பொருந்துதல்" என்னும் பொருட்கள் நடுவானவை. "சம்பவித்தல்" என்பதும் குறிக்கப்படும் பொருள். எனவே நிகழ்தல். கூடுதல், கிட்டுதல், பொருந்துதல் என்பனவும் உடன்படுதல் என்னும் அடிக்கருத்ததே. எதிர்தல் (=கிட்டுதல்). தமிழில் நேர்பு என்றால் ஒன்றிப்பு (ஒற்றுமை கொள்ளுதல், ஒன்றாதல்). இதுவும் "உடன்படுதல்" என்னும் அடிப்படை கொண்டதே. (நேர்பு என்பதை symmetry என்னும் சொல்லுக்கும் தமிழில் ஆளலாம் - இது பற்றி பின்னர் எழுதுகிறேன்). நேர் என்பதற்கு உண்மை என்று ஒரு பொருள் உண்டு - அதாவது மாறுபாடு இல்லாமல் "உள்ளதுடன்" ஒன்றி இருப்பதால் உண்மை. ஒற்றுமை இருப்பதால் உவமை என்னும் ஒரு பொருளும் உண்டு. இப்படியாக நேர் என்னும் சொல்லுக்குத் தமிழில் உள்ள 17 பொருட்களுக்கும் உள்ள அடிப்படை வேர்ப்பொருள் ஒற்றுமையை ("நேர்மை"யை) உணரலாம். கழக அகராதி தரும் பொருள்களாவன: "உடன்பாடு, உண்மை, உவமை, ஒப்புரவு, கற்பு, சரி, செவ்வை, தகுதி, நீதி, நீளம், நுட்பம், நேரசை, நேரென்னேவல், பாதி, முன், மேல்வரிசை" பாதி என்னும் பொருள் எப்படி வந்ததென்றால், ஒரு சீரான பொருளை எப்படி வெட்டினால் இரு பகுதிகளும் ஒன்றாக இருக்கும் என்னும் கருத்தில் எழுந்தது. வட்டத்தை நடுவே வெட்டினால் இரு பகுதிகளும் ஒன்று போலவே இருப்பதால், பாதி என்னும் பொருள் பெற்றது. நேரம் என்பதற்கு பகலில் பாதி என்றும் ஒரு பொருள் உண்டு. அதில் இருந்தே, காலை நேரம், மாலை நேரம் என்னும் வழக்கும் வந்தது. காலை நேரம் என்பது morning time அல்ல, "first half of the the day". கால் என்றால் தொடக்கம் என்று பொருள். கால் கொள்ளுதல் என்றால் தொடங்குதல். நேர்க்கோடு (நேர்கோடு) என்பது முன் பகுதிக் கோட்டுடன் ஒன்றிய திசையிலேயே (ஒன்றிப்புடன்) விரியும் கோடு. நேர் என்பதற்கு நீளம் என்று ஒரு பொருள் உண்டு. இப் பொருள் நேரான திசையில் உள்ள இடைத் தொலைவு என்னும் பொருளும் கொள்ளும், வளைந்து உள்ள ஒரு வடிவின் நீளம் எனில், அந்த வளைந்த வடிவுடன் ஒன்றி இருந்து பெற்று, ஒரு நீட்ட அளவுடன் ஒப்பிட்டுப் பெற்றது என்பது பெறப்படும். நேர் என்பதை primary standard of comparison என்றும் கொள்ளலாம். நேர் என்னும் சொல்லின்வழி பிறந்த சொற்களையும், அது உணர்த்தும் பொருட்களையும், அச்சொற்கள் ஆளப்பெற்ற சொல்லாட்சிகளையும் விரித்தால் பெருகிவிடும். நேர்த்திக் குறிப்பு, நேர்சீர், நேர்த்திக்கடன், நேர்நிறை, நேர் சொல்லுதல் போன்ற சொற்களையும் அவற்றின் பொருட்களையும் கண்டு தேர்க. நேர்மை என்பது ஆங்கிலத்திலும் "straight forward" என்று குறிப்பிடப்படுவதையும் நோக்குக. நேர், நேர்த்தி, நேர்மை, நேர்ச்சி, நேர்வு, நேரல், நேர்தல், நேர்பு என பல சொற்கள் உள்ளன.--செல்வா 03:31, 26 நவம்பர் 2007 (UTC)

மயூரநாதன், உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. உண்மையிலேயே நீங்கள் கூறுவது போல சொற்களுக்குள் ஏராளமான அருமையான கருத்துக்கள், நம் முன்னோர்களின் அறிவார்ந்த பார்வைகள், புதைந்து கிடக்கின்றன. நடு-நடுதல்-நடுக்கம் பற்றி முன்னர் எழுதியது நினைவிருக்கலாம். தமிழ்ச்சொற்களின் ஆழம் வியப்பூட்டுவதாகும். சிறுகச் சிறுக அவரவர் தாங்கள் கண்டுணர்ந்ததைப் பகிர்ந்து கொள்வதன்வழி, ஒரு சிறிதாகிலும் பதிவாகும், ஆவணப்படுத்தலாம்.--செல்வா 16:28, 27 நவம்பர் 2007 (UTC)

கட்டுரை உருவாக்க வேண்டுகோள்தொகு

கல்வெட்டு --ரவி 22:21, 28 நவம்பர் 2007 (UTC)

மலையாளமும் ஈழவழக்கும்தொகு

மலையாள எழுத்துக்கள் கட்டுரையில் வினோத் மலையாள எழுத்துக்களின் உச்சரிப்பை ஈழத் தமிழ் வழக்குடன் ஒப்பிட்டுள்ளார். அதனைச் சரிபார்க்கக் கோரியுள்ளார். அதனைச் சர்பார்த்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். கோபி 20:07, 3 டிசம்பர் 2007 (UTC)

Merry Winter Mayhooranathan!தொகு

Hi Mayooranathan!

Could you please help me preparing a brief version of this article that is still not yet available in the Tamil-language wikipedia? If you could, that would be so great and I will be very thankful! Only a one or two sentences would be more than great, since that way there will be a stub which could later expand.

If you need any help with other wikipedias, please let me know.

This is the version that could help as a source for the Tamil '.ta wikipedia version of this article

Nanri!

Cute History Girla :) 17:05, 28 டிசம்பர் 2007 (UTC)

Return to the user page of "Mayooranathan/தொகுப்பு 2".