காலம் (நூல்)
இந் நூலானது, புகழ் பெற்ற ஆங்கிலேய அறிவியல் அறிஞர் ஸ்டீஃவன் ஹாக்கிங் என்பவரால் 1988இல் வெளியிடப்பட்ட "A Brief History of Time" என்னும் நூலில் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும். இதில் அண்டவியல், வெளியும் காலமும், அடிப்படைத் துகள்களும் விசைகளும், விரிவடையும் அண்டக் கொள்கைகள், குவாண்டம் கோட்பாடுகள் (கற்றை இயல் கோட்பாடுகள்), கருந்துளைகள், புழுத்துளைகள், காலக்கனை, அண்டத்தின் பிறப்பு, மாவெடிப்பு (Big Bang), மாநெரிப்பு (Big Crunch), இயற்பியலின் ஒருங்கிணைப்புக் கோட்பாடுகள் முதலிய ஆழமான அறிவியல் கருத்துக்களை அனைவரும் படித்து தெளிவாகப் புரிந்துகொள்ளுமாறு எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இதனை மிக நேர்த்தியாய் தமிழில் மொழி பெயர்த்துள்ளார் நலங்கிள்ளி மற்றும் தியாகு என்பவர்கள். இதன் பதிப்பாசிரியர் தியாகு. உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை, சிகாகோ, ஐக்கிய அமெரிக்கா வெளியீடாக இது வெளி வந்துள்ளது. இம் மொழிபெயர்ப்பு நூல் 295 பக்கங்கள் கொண்டுள்ளது. இதன் ISBN எண்: 0967621224 ஆகும்.[1][2][3]
காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் A Brief History of Time | |
---|---|
நூல் பெயர்: | காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் A Brief History of Time |
ஆசிரியர்(கள்): | ஸ்டீஃவன் ஹாக்கிங் (தமிழில் மொழி பெயர்த்தவர் நலங்கிள்ளி,தியாகு |
வகை: | அறிவியல் (பொது) |
துறை: | அறிவியல் கோட்பாடுகள் |
காலம்: | 2002 |
இடம்: | சிகாகோ, ஐக்கிய அமெரிக்கா |
மொழி: | முதல் நூல் ஆங்கிலம், மொழிபெயர்ப்பு தமிழ் |
பக்கங்கள்: | 295 |
பதிப்பகர்: | உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை |
பதிப்பு: | 2002 |
ஆக்க அனுமதி: | - |
மேற்கோள்கள்
தொகு- ↑ McKie, Robin (August 2007). "A brief history of Stephen Hawking". Cosmos. பார்க்கப்பட்ட நாள் 13 June 2020.
- ↑ Gribbin, John; White, Michael (1992). Stephen Hawking: a life in science. Viking Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0670840137.
- ↑ As Stephen Hawking puts it in his book: "Many people do not like the idea that time has a beginning, probably because it smacks of divine intervention. (The Catholic Church, on the other hand, seized on the big bang model and in 1951 officially pronounced it to be in accordance with the Bible.)"