முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்

தொகு

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு

தொகு

வருக

தொகு

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நீங்கள் மீண்டும் பங்களிக்கத் தொடங்கியிருப்பது தெம்பூட்டுகிறது. வருக வருக ! :) --இரவி 20:51, 16 பெப்ரவரி 2012 (UTC)

நன்றி இரவி. இப்பொழுது வேலைக்காக நீண்ட தூரப் பயணம் செய்யவேண்டி இருப்பதால், வார நாட்களில் ஏறத்தாழ அரை மணி நேரம் வரை தான் ஓய்வு நேரம் கிட்டுகிறது. தேங்கிக் கிடக்கும் சொந்த வேலைகளை வார இறுதி நாட்களில் செய்யவேண்டி இருப்பதால் அந்த நாட்களிலும் நேரம் அதிகம் கிடைப்பதில்லை. சென்ற இரண்டு வாரங்கள் சில தனிப்பட்ட காரணங்களுக்காக இலங்கைக்குச் சென்றிருந்தேன். எவ்வளவுதான் நேரப் பிரச்சினை இருந்தாலும் சிறிது நேரம் தமிழ் விக்கிக்கு வந்து அண்மைய மாற்றங்கள், ஆலமரத்தடி பகுதிகளையாவது பார்க்காமல் இருப்பதில்லை. நிலைமை சற்றுச் சீராகும்போது மீண்டும் பழைய வேகத்துடன் பங்களிப்பேன். --- மயூரநாதன் 06:08, 17 பெப்ரவரி 2012 (UTC)
மீண்டும் வந்தமைக்கு நன்றி. நேரம் கிடைக்காதபோதும் நீங்கள் பங்களித்து வருவது மற்றவர்களுக்கு உற்சாகம் தருகிறது. --மணியன் 10:53, 17 பெப்ரவரி 2012 (UTC)

ஆம், பணியிடத்துக்குப் போய் வருவதற்கான நேரம் குறித்து முன்பே சொல்லி இருந்தீர்கள். உங்களுக்கு வீட்டுக்கு அருகில் வேலையோ வேலையிடத்துக்கு அருகில் வீடோ அமைய எல்லாம் வல்ல விக்கியாண்டவரை வேண்டுகிறேன் :)--இரவி 11:04, 17 பெப்ரவரி 2012 (UTC)

மயூரநாதன் உங்கள் பங்களிப்புகளை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி! ஊக்கம் ஊட்டுவதாயும் உள்ளது! லூயிசு மம்ஃபோர்டு, மோபிடிக்கு எழுதிய மெல்வில் இவர்களின் கட்டுரைகளை நீங்கள் எழுதியிருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். முன்னர், வெகுகாலத்துக்கு முன்பு, மோபிடிக்கைப் படித்திருக்கின்றேன். தற்செயலாய் அதற்கு சற்று முன்பு பி. எல். சாமி எழுதிய நூலில் ("விலங்கின விளக்கம்") சங்க காலத் தமிழர்கள் இரவுநேரங்களில் செய்த திமிங்கில வேட்டையைப் பற்றியும், அவர்கள் பயன்படுத்திய எறியுளி (மோபிடிக்கில் வரும் "harpoon") (எ.கா பரதவர், "எறியுளி பொருத வேமுறு பெருமீன்" என்று அகநானூற்றில் வரும் வரிகள் போன்றவற்றை)ப் பற்றியும் படித்து வியந்திருக்கின்றேன். உங்கள் கடும் வேலைகளுக்கு இடையேயும் நீங்கள் வந்து பங்களிப்பது உண்மையிலேயே ஊக்கம் அளிக்கின்றது!--செல்வா 15:08, 17 பெப்ரவரி 2012 (UTC)

Username rename request: White Cat -> とある白い猫

தொகு

I'd like to request a username rename per SUL. -- Cat chi? 12:21, 19 பெப்ரவரி 2012 (UTC)

 Y ஆயிற்று -- சுந்தர் \பேச்சு 14:17, 19 பெப்ரவரி 2012 (UTC)

நன்றி

தொகு

மயூரநாதன், உங்கள் வாழ்த்து கண்டு மகிழ்ந்தேன். இன்னும் பொறுப்புணர்வுடனும் முனைப்புடனும் பங்களிக்கத் தூண்டுகிறது. நன்றி.--இரவி (பேச்சு) 07:16, 14 மார்ச் 2012 (UTC)

விக்கிமேனியா 2012

தொகு

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி மயூரநாதன். --செல்வா (பேச்சு) 19:56, 19 மார்ச் 2012 (UTC)

பரிந்துரை தேவை

தொகு

மயூரநாதன்,

நன்றி--இரவி (பேச்சு) 11:18, 25 மார்ச் 2012 (UTC)

நச்சுநிரல்

தொகு

உங்கள் மின்னஞ்சல் அல்லது/உடன் கணினியில் நச்சுநிரல் வந்து இருக்கலாம் என்று நினைக்கிறேன். அத்தகைய ஒரு மின்னஞ்சல் உங்கள் முகவரியில் இருந்து வந்தது. நன்றி. --Natkeeran (பேச்சு) 01:49, 27 மார்ச் 2012 (UTC)

நன்றி நற்கீரன். பார்க்கிறேன். --- மயூரநாதன் (பேச்சு) 17:48, 28 மார்ச் 2012 (UTC)

வணக்கம், நான் circular sector - வட்டக்கோணப்பகுதி என தமிழாக்கம் செய்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். உங்களது ஆரைத்துண்டு மாதிரி -கட்டுரையில் நீங்கள் ஆரைத்துண்டு என்று குறிப்பது circular sector -ஐத்தான் என்பதை உறுதி செய்தீர்கள் என்றால் வட்டக்கோணப்பகுதி கட்டுரைக்கு ஆரைத்துண்டு என வழிமாற்றம் கொடுக்க உதவியாக இருக்கும். நன்றி.--Booradleyp (பேச்சு) 14:37, 30 மார்ச் 2012 (UTC)


"circular sector" என்பதைத்தான் ஆரைத்துண்டு என்று குறித்திருக்கிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 14:49, 30 மார்ச் 2012 (UTC)

தங்கள் விளக்கத்துக்கு நன்றி.--Booradleyp (பேச்சு) 15:00, 30 மார்ச் 2012 (UTC)

வணக்கம், மயூரநாதன் WP:BOTREQ பார்க்கவும்.. நன்றி--shanmugam (பேச்சு) 18:14, 8 ஏப்ரல் 2012 (UTC)

நன்றி

தொகு
 
நன்றி!
நிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி.

-பார்வதிஸ்ரீ


-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:12, 26 மே 2012 (UTC) +1 மிக்க நன்றி--சண்முகம் (பேச்சு) 11:46, 26 மே 2012 (UTC) +1 ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:09, 30 மே 2012 (UTC)Reply

ஒரு வேண்டுகோள்

தொகு

வணக்கம்! நீங்கள் தொடங்கியுள்ள சில கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை இல்லாமல் இருக்கின்றன. இவற்றை சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பு செய்ய வாழ்த்துக்கள்! -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:49, 29 மே 2012 (UTC)Reply

உலகப் பரவல் தொற்று

தொகு

நீங்கள் ஆரம்பித்த உலகப் பரவல் தொற்று என்ற கட்டுரையைக் கவனிக்காமல் நானும் உலகம்பரவுநோய் என்ற கட்டுரையை ஆரம்பித்துவிட்டேன். இரு கட்டுரைகளையும் இணைப்பதற்காய், தங்கள் கட்டுரையில் இருந்த தகவல்களையும் இந்தக் கட்டுரையில் இணைத்துவிட்டேன். எந்தத் தலைப்பை தெரிவு செய்யலாம் என்று சொன்னீர்கள் என்றால், அந்த தலைப்புக்கு நகர்த்தி, கட்டுரைகளை இணைத்து விடுகின்றேன். --கலை (பேச்சு) 20:34, 31 மே 2012 (UTC)Reply

இதனைக் கவனிக்கத் தவறிவிட்டீர்களா?--கலை (பேச்சு) 14:54, 6 சூன் 2012 (UTC)Reply
நீங்கள் எழுதிய கட்டுரைத் தலைப்பிலேயே இணைத்துவிடுங்கள். --- மயூரநாதன் (பேச்சு) 18:29, 6 சூன் 2012 (UTC)Reply

கட்டுரைகளை வரலாற்றுடன் சேர்த்து இணைத்துவிட்டேன். உலகம்பரவுநோய் கட்டுரையைப் பார்த்துவிட்டு, மாற்றங்கள் தேவையெனில் செய்யுங்கள்.--கலை (பேச்சு) 07:14, 7 சூன் 2012 (UTC)Reply

சீரான நீள் சதுர மண் வீடு

தொகு

90களின் தொடக்கத்தில் நான் கிளிநொச்சியில் இருந்த போது சிறிது காலம் ஒரு மண் வீட்டில் தங்கி இருந்தேன். அந்த மண் வீட்டின் அமைப்பு ஒரு சீமெந்துக் கல் வீடு போலவே இருக்கும். மிகவும் சீர்மையாக, நேர்த்தியாக சுவர் எழுப்பி இருப்பார்கள். வீடு பொதுவாக நீள்சதுர வடிவில் அறைகளுடன் இருக்கும். கூரை ஓலயாலே வரைந்து இருப்பார்கள். இந்த வீடுகளைப் பார்த்து இருக்கிறீர்களா, அறிந்து இருக்கிறீர்களா? இது பற்றி மேலதிக தகவல்கள் கிடைக்குமா? --Natkeeran (பேச்சு) 03:22, 24 சூன் 2012 (UTC)Reply

நீங்கள் குறிப்பிட்ட மாதிரியான நீள்சதுர வீடுகளைப் பார்த்ததில்லை. ஆனால், அவை வட்ட வடிவமான அம்மாதிரி வீடுகளைப் பார்த்திருக்கிறேன். இவற்றை வடமராட்சி கிழக்குப் பகுதியில் உள்ள அம்பன், குடத்தனை ஆகிய ஊர்களில் பார்த்தேன். மிகச் சிலவே இருந்தன. மண்ணால் கட்டிய வீடுகள் ஆனால், சாம்பல் நிறத்தில் நேர்த்தியாகச் சீமெந்தால் கட்டியது போலவே இருந்தன. கூரைகள் கூம்பு வடிவத்தில் பனை ஓலையால் வேயப்பட்டிருந்தன. இந்த மாதிரியான வட்ட வீடுகள் 20 ஆம் நூற்றாண்டில் முற்பகுதியில் தென்மராட்சிப் பகுதியிலும் இருந்தனவாம். 80 களின் முற்பகுதி வரை முல்லைத்தீவுப் பகுதியில் தண்ணீரூற்றூப் பகுதியிலும் இத்தகைய வீடுகள் இருந்தன. தற்போது எடுத்துக்காட்டுக்குக் கூட எதுவும் இருக்காது. --மயூரநாதன் (பேச்சு) 18:03, 24 சூன் 2012 (UTC)Reply
நீள் சதுர வீடு என்ற படியாலும், அவற்றின் நேர்த்தி தன்மையாலும் பிற மண்வீடுகளில் இருந்து வேறுபடுகின்றன. மேலும் அறிய முடியுமா என்று பார்க்கிறேன். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. --Natkeeran (பேச்சு) 23:48, 24 சூன் 2012 (UTC)Reply

விரைவு நீக்கல் அறிவிப்புகள்

தொகு

போதிய உள்ளடக்கம் இல்லை என்று தாங்கள் உருவாக்கிய செஞ்சதுக்கம் கட்டுரை விரைவு நீக்கலுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையை விரிவாக்கி மேம்படுத்த வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 20:44, 7 சூலை 2012 (UTC)Reply

பிறந்த நாள் வாழ்த்துகள்

தொகு
  வணக்கம் Mayooranathan/தொகுப்பு 5 அவர்களே , விக்கிப்பீடியா:பிறந்தநாள் குழுமம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்  !
--மதனாகரன் (பேச்சு) 06:59, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply
 
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !! தொடர்ந்து கண்காணித்து உரிய நேரத்தில் வார்ப்புரு இடும் மதனுக்கு ஓர் தட்டல் !!--மணியன் (பேச்சு) 07:51, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மயூரநாதன்!! வாழ்க வளமுடன்.--கலை (பேச்சு) 09:00, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், மயூரநாதன்! -- சுந்தர் \பேச்சு 09:07, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply
பிறந்தநாள் வாழ்த்துகள், மயூரநாதன்! - Vatsan34 (பேச்சு) 16:21, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:39, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply

ஓஓ! நான் இன்றுதான் பார்க்கின்றேன்! மயூரநாதன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!! --செல்வா (பேச்சு) 19:50, 18 செப்டெம்பர் 2012 (UTC)Reply

தாங்கள் தொடங்கிய கட்டுரைகளை இற்றைப்படுத்த, மேம்படுத்த வேண்டுகோள்

தொகு

வணக்கம், Mayooranathan/தொகுப்பு 5! நீங்கள் தொடர்ந்து விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பது கண்டு மகிழ்கிறேன். தாங்கள் புதிதாக கட்டுரைகள் எழுதுவது, மற்ற விக்கிப்பணிகளில் பங்கு கொள்வதுடன் ஏற்கனவே நீங்கள் எழுதிய சில கட்டுரைகளையும் அவ்வப்போது மேம்படுத்த முனைந்தால் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, நீங்கள் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கிய காலத்தில் உருவாக்கிய கட்டுரைகளை இற்றைப்படுத்தலாம். இவ்வாறு செய்வது தமிழ் விக்கிப்பீடியா 50,000 கட்டுரைகளை எட்டும் நிலையில் அதன் தரத்தை உயர்த்த உதவும். பின்வரும் வழிகளில் உங்கள் கட்டுரைகளை மேம்படுத்தலாம்.

  • தகுந்த இடங்களில் உள்ளிணைப்பு தரலாம்.
  • பிற விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கு பக்கப்பட்டையில் இருந்து இணைப்பு தரலாம்.
  • எழுத்து, இலக்கணம், தகவல் முதலியவற்றில் ஏதேனும் பிழை இருந்தால் திருத்தலாம்.
  • கட்டுரைக்குப் பொருத்தமான படங்களைச் சேர்க்கலாம்.
  • தகுந்த உசாத்துணைகள், மேற்கோள்கள் சேர்க்கலாம்.
  • தகுந்த பகுப்புகளைச் சேர்க்கலாம்.
  • கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் ஏதேனும் கருத்து இருந்தால், அதைப் படித்துப் பார்த்து அதற்கு ஏற்ற மாற்றம் செய்யலாம். உரையாடல் பக்கத்தில் மறுமொழி இடலாம்.
  • கட்டுரையை விரிவாக்கலாம்.
  • கட்டுரையில் உள்ள தரவுகளை இற்றைப்படுத்தலாம்.

ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். இது என் தனிப்பட்ட வேண்டுகோள் மட்டுமே :) இன்னும் இலகுவான வழிகளில் பல்வேறு பங்களிப்பாளர்களும் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை மேம்படுத்த இயலும் எனில், அது குறித்த உங்கள் பரிந்துரைகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 14:59, 25 செப்டெம்பர் 2012 (UTC)Reply

Changing username

தொகு

Hello and Sat Sri Akaal! Neither I know the language nor where to request, so writing here. I'm changing my username globally to "itarbuttar" as per the meta request. Please check to verify and rename and oblige. Thanks a lot. --TariButtar (பேச்சு) 15:00, 7 நவம்பர் 2012 (UTC)Reply

நன்றி

தொகு
  நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:15, 14 சனவரி 2013 (UTC)Reply


நன்றிகள்
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:33, 14 சனவரி 2013 (UTC) +1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:02, 15 சனவரி 2013 (UTC)Reply

ஆவண மாநாடு

தொகு

நன்றி மயூரநாதன். கோபி உங்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறி இருந்தார். நீங்கள் இலங்கைக்கு செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார். உங்கள் பங்களிப்பு மிகவும் பயன்மிக்கதாக அமையும். நன்றிகள். --Natkeeran (பேச்சு) 01:34, 17 சனவரி 2013 (UTC)Reply

முதற்பக்கக் கட்டுரைக்கான பரிந்துரைகள்

தொகு

வணக்கம். நீங்கள் பங்களித்த சிறந்த கட்டுரை அல்லது நீங்கள் சிறந்த கட்டுரையாகக் கருதும் கட்டுரையை முதல் பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்காக இப்பக்கத்தில் தங்களின் பரிந்துரைகள் வேண்டப்படுகின்றன.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:48, 31 சனவரி 2013 (UTC)Reply

மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்

தொகு

வணக்கம், Mayooranathan/தொகுப்பு 5!

 

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 09:11, 2 பெப்ரவரி 2013 (UTC)

மேற்கோளுடன் எழுத வேண்டுகோள்

தொகு

ஐயா. பொழில் என்னும் வார்த்தை அருமையான அழகான இனிமையான சொற்குவியல் என்பதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். நீங்கள் அதை மேற்கோளுடன் எழுதினால் அதை முதற்பக்கத்தில் இட்டு அதனின் அருமையை அழகை இனிமையை அனைவரும் உணரும் படி செய்யலாம். இது என் வேண்டுகோள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:25, 19 பெப்ரவரி 2013 (UTC)

அரசு, பிற நிறுவனங்களுடன் தமிழ் விக்கிப்பீடியா உறவாட்டம் குறித்த கொள்கை

தொகு

வணக்கம், மயூரநாதன். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு அரசும் பிற அமைப்புகளும் எவ்வாறு, எந்த அளவு உதவக்கூடும் என்ற உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். உங்கள் பரிந்துரைகள், ஆதரவை இங்கு தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 16:17, 25 பெப்ரவரி 2013 (UTC)

நன்றி

தொகு

அட்டவனையை சரி செய்தமைக்கு நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:22, 9 ஏப்ரல் 2013 (UTC)

Hi, sorry for writing in English. I'm writing to ask you, as a bureaucrat of this wiki, to translate and review the notification that will be sent to all users, also on this wiki, who will be forced to change their user name on May 27 and will probably need your help with renames. You may also want to help with the pages m:Rename practices and m:Global rename policy. Thank you, Nemo 17:15, 3 மே 2013 (UTC)Reply

Hi, sorry for writing in English. I'm writing to ask you, as a bureaucrat of this wiki, to translate and review the notification that will be sent to all users, also on this wiki, who will be forced to change their user name on May 27 and will probably need your help with renames. You may also want to help with the pages m:Rename practices and m:Global rename policy. Thank you, Nemo 17:16, 3 மே 2013 (UTC)Reply

விக்கித்திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு

தொகு
விக்கித்திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு

வணக்கம், Mayooranathan/தொகுப்பு 5!

 
தமிழால் சைவமும், சைவத்தால் தமிழும் வளரட்டும்

தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் சைவம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து சைவத்தினையும் தமிழினையும் செம்மைப்படுத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

இந்த திட்டத்தை பின்வரும் வழிகளின் மூலமாக மேம்படுத்தலாம்.

  • உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளை உருவாக்கி உதவலாம். குறுங்கட்டுரையாக தொடங்கி, தக்க ஆதாரங்களைச் சேர்த்து உதவலாம். படங்களை இணைத்து கட்டுரைகளை மேம்படுத்தலாம்.

பல்சமய வித்தகராக தாங்கள் பங்களிப்பது கண்டு மகிழ்கிறேன். தங்களின் வழிகாட்டுதல்களை விக்கித்திட்டம் சைவத்திற்கு தந்து மேம்படுத்த அழைக்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:28, 5 மே 2013 (UTC)Reply

என்ன செய்யலாம்

தொகு

விக்கி ஆதாரம் அற்றதா--Sengai Podhuvan (பேச்சு) 18:33, 23 மே 2013 (UTC)Reply

மலேசிய வானொலி பேட்டி

தொகு

அன்புள்ள சகோதர்களுக்கு,

நம்முடைய விக்கிப்பீடியாவின் அதிகாரிகளில் ஒருவரான செல்வசிவகுருநாதன் Selvasivagurunathan நேற்று 30.05.2013இல் மலேசிய வானொலிக்கு ஒரு பேட்டி அளித்து இருந்தார். அதில் விக்கிப்பீடியாவின் செயலாக்கங்ளைப் பற்றி விரிவாகச் சொல்லி இருந்தார். மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பேட்டியின் இறுதியில் அவர் பயன்படுத்திய வாசகங்கள் என்னை மிகவும் பாதித்துவிட்டன.

அவர் சொன்னார் ‘மலேசியாவில் இருந்து இதுவரை யாரும் எழுதவில்லை. நிறைய பங்களிப்பாளர்கள் தேவை. நீங்களும் எழுதலாமே’ என்று பேட்டி எடுத்தவரையே கேட்டுக் கொண்டார்.

அதைக் கேட்ட போது என் மனம் நொறுங்கிப் போனது. என் பெயரைச் சொல்ல வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்க்கவும் கூடாது. ஆனால், யாருமே எழுதவில்லை என்று சொன்னதுதான் என்னையும் என் மனைவியையும் மிக மிகப் பாதித்துவிட்டது.

யார் என்ன சொன்னாலும் சரி சொல்லாவிட்டாலும் சரி, நான் எழுதிக் கொண்டுதான் இருப்பேன். இது என்னுடைய விக்கிப்பீடியா.மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு) --ksmuthukrishnan 05:40, 1 சூன் 2013 (UTC)Reply

செல்வகுருநாதன் பேட்டி

தொகு

வணக்கம். selvasivagurunathan பேட்டி கொடுக்கவில்லை என்று சொல்கிறார். நல்லது. மலேசிய வானொலியின் தலைவர் பார்த்தசாரதி அவர்களுடன் பேசினேன். அவர் கொடுத்த பேட்டியை விக்கிப்பீடியாவுக்கு அனுப்பலாமா? போதுமான சான்றுகள் இல்லாமல் எதையும் எழுதக்கூடாது என்பது தொடர்ந்து வரும் நம்பிக்கை.--ksmuthukrishnan 05:39, 2 சூன் 2013 (UTC)

உதவி

தொகு

இங்கு நான் செய்த தொகுப்பை மீளமைத்துவிடவும்.தவறு நேர்ந்துவிட்டது.-- :) நிஆதவன் ( உரையாட ) 16:54, 21 சூலை 2013 (UTC)Reply

இ.த சமூகப் பண்புகள்

தொகு

மிகச் சிறப்பாக இ.த கட்டுரை வளர்ந்து வருகிறது. சமூகப் பண்புகள் பகுதியை நீங்கள் திருத்து எழுதி இருப்பது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. "யாழ்ப்பாணப் பகுதியில் தமிழ்நாட்டின் தொடர்புகள் அதிகரித்த காலத்தில் தாய்வழி மரபுக் கூறுகளையும் தந்தைவழி மரபுக் கூறுகளையும் ஒருங்கே கொண்டதொரு கலப்பு முறைமை உருவானதாக இந்த ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்", என்பது தனிப்பட்ட முறையில் சரியான அவதானிப்பு என்று நினைக்கிறேன். நடைமுறையில் சீதனம் கட்டாயம், முதுசம் கட்டாயம் இல்லை. இதனால் தான் சீதன ஒடுக்குமுறைகள் அதிகம். திருமணமான ஆண், பெண் எந்த வீட்டில் வசிப்பது தொடர்பாக இறுக்கமான மரபு இல்லை. இரண்டு முறையும் உண்டு. பெண்கள் சொத்துரிமை தொடர்பாக மரபுகளை/சட்டங்களை அறியமுடியவில்லை. பாலசுந்தரம் அவர்கள் மட்டக்களப்பில் பெண்கள் வழி சொத்துரிமை உண்டு என்கிறார். --Natkeeran (பேச்சு) 18:29, 23 சூலை 2013 (UTC)Reply

சமூகப் பண்பு தொடர்பான பகுதியை தேசவழமை தொடர்பான பலரது கட்டுரைகளையும் நூல்களையும் அடிப்படையாகக் கொண்டே எழுதிவருகிறேன். குறிப்பாக H. W. தம்பையா எழுதிய நூலில் பயனுள்ள தகவல்கள் உண்டு. மட்டக்களப்பில் ஒரு காலத்தில் வழக்கில் இருந்த "முக்குவர் சட்டம்" பெருமளவுக்குத் தாய்வழி மரபு சார்ந்தது என்றே தெரிகிறது. ஆனாலும், இச் சட்டம் தற்போது நடைமுறையில் இல்லாததால் தற்கால நடைமுறைகள் பற்றிச் சரியாகத் தெரியவில்லை. பாலசுந்தரம் இது பற்றி எங்கே குறிப்பிட்டுள்ளார் எனத் தெரிவிக்க முடியுமா? ---மயூரநாதன் (பேச்சு) 18:54, 23 சூலை 2013 (UTC)Reply
இ. பாலசுந்தரம். (2003). தமிழர் திருமண மரபுகள் - மட்டக்களப்பு மாநிலம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை பதிப்பகம். என்ற நூலில் பல தகவல்கள் கிடைக்கின்றன. கிழங்கிலகைத் தமிழரின் தாய்வழி மரபு பற்றி அவர் வேறு நூல்கள்/கட்டுரைகளையும் எழுதியுள்ளார் என்று நினைக்கிறேன். இவரது பல நூல்கள் இங்கு கிடைக்கின்றன, ஆனால் அவை இல்லை. --Natkeeran (பேச்சு) 21:25, 23 சூலை 2013 (UTC)Reply


இ.த சாதி அமைப்பு

தொகு
  • யாழில்/இலங்கையில் சாதி அமைப்புக்கு எதிராக தொடர்ச்சியாக பல போராட்டங்கள் நடைபெற்று வந்துள்ளன. குறிப்பாக இடதுசாரி இயக்கங்களாலும், ஈழ இயக்கங்களாலும் சாதியத்துக்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எ.கா பகுப்பு:இலங்கையில் சாதியத்துக்கு எதிரான போராட்டங்கள்
  • இன்று ஈழத்திலும் புலத்தில் வலுவிழந்துவிட்டதாகக் கூற முடியாது. திருமணத்தின் போது சாதி வலுவாகப் பார்க்கப்படுகிறது. நுணுக்கமாக, குடும்பம் பார்க்கிறது என்று கூறி. --Natkeeran (பேச்சு) 20:42, 25 சூலை 2013 (UTC)Reply
சாதியம் வலுவிழந்துவிட்டது அல்லது இல்லாமல்போய்விட்டது என்று கூற முடியாது. அதனால் தான் வலுவிழக்கத் தொடங்கியது என்று எழுதியிருக்கிறேன். நான் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள காரணிகள் பாகுபாட்டை முற்றாக இல்லாமல் செய்யாவிட்டாலும், பொருளாதார அடிப்படையில் சாதியத்தை நிலைநிறுத்தி வைப்பதற்கான வாய்ப்புக்கள் குறைந்துவிட்டன. ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் நிலம் வாங்குவதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத நிலை இருந்தது. இன்று அவர்களிற் பலர் நில உடைமையாளராக இருப்பதையும் காண முடிகிறது. சாதியம் வலுவிழந்து வருவதற்கான காரணங்களில் ஒன்றாக முன்னர் இடம்பெற்ற சாதி எதிர்ப்புப் போராட்டங்களையும் கட்டுரையில் குறிப்பிடலாம். ஆனாலும் இதன் மூலம் சாதிக்க முடிந்ததெல்லாம் "அடையாள" மாற்றங்கள் (எ.கா. ஆலயப் பிரவேசம்) என்று சொல்லலாமே ஒழிய அடிப்படையான மாற்றங்கள் என்று சொல்ல முடியாது. அடிப்படையான மாற்றங்கள் பொருளாதார, கல்வி வாய்ப்புக்களை முறையாகப் பயன்படுத்திக் கொண்டதனால்தான் ஏற்பட்டிருக்கின்றன. திருமண விடயத்தில் மாற்றங்கள் விரைவாக நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒரு இறுக்கமான கொள்கை அடிப்படையிலான சூழல்களில் (எகா: போராளிகள் மத்தியில் பல கலப்புத் திருமணங்கள் இடம்பெற்றன.) இத்தகைய மாற்றங்கள் விரைவாக நடைபெறக்கூடும். இல்லாவிட்டால், பொறுத்துத் தான் இருக்கவேண்டும்.---மயூரநாதன் (பேச்சு) 21:17, 25 சூலை 2013 (UTC)Reply
கருத்துக்களுக்கு நன்றி. பெரிதும் உடன்படுகிறேன். ஆனால் எதிர்ப்புப் போராட்டங்களை அடையாள மாற்றங்கள் என்று மட்டுப்படுத்த முடியாது என்று நினைக்கிறேன். சாதியம் தொடர்பாக மாற்றங்களைக் கொண்டுவரவதற்கான ஒரு சூழலை, சாதியத்துக்கு எதிரான கருத்தியல் சட்டச் சூழலை அவை ஏற்படுத்த உதவின. கோயில், பள்ளிக்கூடம், பொது இடங்களின் நிலைமைகளில் கணிசமான மாற்றங்களைக் கொண்டுவந்தன. --Natkeeran (பேச்சு) 00:53, 26 சூலை 2013 (UTC)Reply

சமூகம், பண்பாடு

தொகு
  • சமூகம் என்பதன் கீழ் சாதிய அமைப்பு, சமயம், கல்வி ஆகியவையும் பண்பாடும் கலைகளும் அல்லது பண்பாடு என்பதன் கீழ் மொழி, இலக்கியம், பிறவும் வருவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் வரலாற்றுப் பின்னணி என்றதை விட வரலாறு என்றே குறிப்பிடலாம். --Natkeeran (பேச்சு) 13:28, 29 சூலை 2013 (UTC)Reply

இலக்கியம்

தொகு

இலக்கியம் என்னும் போது இலங்கையில் பாடல் பெற்ற கோயில்கள் (கிபி 6-8 நூற்.), கல்வெட்டுக்கள் போன்றவற்றைப் பற்றிய குறிப்புக்களையும் சேர்க்கலாம் என்று நினைக்கிறேன். --Natkeeran (பேச்சு) 13:29, 29 சூலை 2013 (UTC)Reply

உணவு

தொகு

ஒடியல் கூழ், கொத்து ரொட்டி இரண்டும் ஈழத்துக்கும் சிறப்பான உணவுகள் எனலாம். கொத்து ரொட்டி மட்டக்களப்புப் பகுதியில் தோன்றியது என்பர். அப் பகுதி சற்று நீண்டு விட்டது என்று நினைக்கிறேன். --Natkeeran (பேச்சு) 18:41, 29 சூலை 2013 (UTC)Reply

Darkicebot

தொகு

Could you please remove the bot flag from my bot, User:Darkicebot? It will not beactive. Thanks, Razorflame (பேச்சு) 01:38, 25 சூலை 2013 (UTC)Reply

இந்து சமயத் தலைப்புகள் வார்ப்புரு

தொகு

தாங்கள் துவங்கிய வார்ப்புரு:இந்து சமயத் தலைப்புகள் என்பதனை மேம்படுத்த வேண்டியுள்ளது. இந்த வார்ப்புரு ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்றம் செய்யப்பட்டதா, இல்லை தாங்களாக உருவாக்கியுள்ளீர்களா என்பதை அறிய வேண்டுகிறேன். அத்துடன் தங்களுக்கு நேரமிருப்பின் தக்க மாற்றங்களை செய்து உதவ வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:38, 26 சூலை 2013 (UTC)Reply

மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்

தொகு

வணக்கம், Mayooranathan/தொகுப்பு 5!

 

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 08:28, 3 ஆகத்து 2013 (UTC)Reply

வலை உணங்கு குருமணல்

தொகு

வலை உணங்கு குருமணல் என்ற நூலை முடிந்தால் பெற்றுக் கொள்ளவும். ஆசியர் மிக ஆர்வம் தூண்டும் வகையில், மிகத் துல்லியமான தகவல்களுடன் ஒரு மீனவ சிற்றூரைப் பற்றி எழுதியுள்ளார். இதை ஒரு அகராதியாகவே தொகுத்து இருக்கலாம் என்கிற அளவுக்கு (பல பாகங்களில்) ஒவ்வொரு பக்கமும் விளக்கத்துடன் கலைச்சொற்கள் மிகுந்து கிடைக்கின்றன. --Natkeeran (பேச்சு) 02:46, 8 ஆகத்து 2013 (UTC)Reply

அறியத் தந்தமைக்கு நன்றி நற்கீரன். இணையத்தில் தேடிப் பார்த்தேன் நூலுக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றன. எனது ஆர்வப் புலத்துக்குள் உள்ளடங்கும் நூல். வெளியிட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. கிடைக்குமோ தெரியவில்லை. அடுத்த முறை இந்தியா செல்லும்போது தேடி வாங்க முயல்வேன். ---மயூரநாதன் (பேச்சு) 06:08, 8 ஆகத்து 2013 (UTC)Reply

கட்டுரை வேண்டுதல்

தொகு

வணக்கம். விக்கிப்பீடியா பற்றி பொது ஊடகங்களில் பரப்புரை செய்யவும், பத்தாண்டுகளை பதிவு செய்யவும் சிறப்புக் கட்டுரைகளை இதழ்களில் வெளியிடுதல் உதவும். அந்த வகையில் தொடர் பங்களிப்பாளரான நீங்கள் பின்வரும் தலைப்புக்களில் ஒன்றில் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/சிறப்பிதழ்கள்#கட்டுரைத் தலைப்புக்கள் கட்டுரை எழுதித் தர முடிந்தால் சிறப்பு. 400 அல்லது 800 சொற்கள். செப்டெம்பர் 11 2013 திகதிக்குள். குறிப்பாக பின்வரும் தலைப்புக்களில் ஒன்று:

  • தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்: வளர்ச்சியும் வாய்ப்புக்களும்
  • இலங்கையில் தமிழ் விக்கியூடகங்களின் வளர்ச்சியும் வாய்ப்புக்களும்

உங்கள் பரிசீலனைக்கும் பங்களிப்புக்கும் நன்றி. --Natkeeran (பேச்சு) 00:21, 12 ஆகத்து 2013 (UTC)Reply

நிச்சயம் செய்கிறேன். தலைப்புப் பற்றிப் பின்னர் அறிவிக்கிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 03:47, 12 ஆகத்து 2013 (UTC)Reply

விக்கியில் "விடலைப் பருவம்" கட்டுரையை தொடர்ந்து மொழிபெயர்க்கவும் --Muthuppandy pandian (பேச்சு) 12:33, 12 செப்டம்பர் 2013 (UTC)

கல்பதுக்கை உள்ளடக்கங்கள்

தொகு

உள்ளடக்கங்கள் பேச்சு:கல்பதுக்கை பக்கத்துக்கு நகர்த்தப்பட்டது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:36, 30 ஆகத்து 2013 (UTC)Reply

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு

தொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 19:57, 18 செப்டம்பர் 2013 (UTC)

உதவி தேவை...

தொகு

வணக்கம்! தமிழ் விக்கியில் பல ஆண்டுகளாக பங்களித்துவரும் பங்களிப்பாளர் எனும் முறையில், தங்களின் உதவி தேவைப்படுகிறது…

  • தமிழ் விக்கியின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களித்த / பங்களித்துவரும் பயனர்களுக்கு 'பாராட்டுச் சான்றிதல்' வழங்கிட நாம் முடிவு செய்ததை தாங்கள் அறிவீர்கள். இதற்கான தெரிவு செய்தலில் உங்களின் உதவியினை நாடுகிறோம்.
  • 'முதற்பக்க பங்களிப்பாளர் அறிமுகம்' எனும் காப்பகத்திலிருந்து பயனர்களின் பெயர்களை எடுத்து முதற்கட்ட பட்டியல், இங்கு இடப்பட்டுள்ளது. ஆனால் இது முழுமையடைந்த பட்டியலன்று… இந்தப் பட்டியலை நிறைவு செய்திட தங்களின் உதவி தேவைப்படுகிறது!
  • சிலர் 'முதற்பக்க பங்களிப்பாளர் அறிமுகத்தில்' இடம்பெறவில்லை; சிலர் அதற்குரிய தகவலை இன்னும் தரவில்லை. இன்னும் பலர் கடந்த சில மாதங்களில் நல்ல பங்களிப்புகளைத் தந்திருக்கிறார்கள். இதை அனைத்தையும் கருத்தில் கொண்டு சான்றிதழ் பெற இருப்போரின் பட்டியலை தாங்கள் முழுமை செய்து தந்தால் உதவியாக இருக்கும். தொகுப்புகள் எண்ணிக்கை, ஒட்டு மொத்தப் பங்களிப்பு என்பது போல் ஏதேனும் ஒரு வரையறையைக் கொள்ளலாம்.
  • வேறு ஏதேனும் காரணிகள் உங்கள் எண்ணத்தில் தோன்றினால்... அதனையும் கருத்தில்கொண்டு தெரிவினை செய்யலாம்.
  • மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:57, 26 செப்டம்பர் 2013 (UTC)
இக்கட்டான நேரத்தில், மிகவும் தேவையான பணியினை ஏறத்தாழ 3 மணி நேரம் செலவழித்து செய்துள்ளீர்கள்; நன்றி! எவரும் விடுபட்டுவிடாமல் இருக்கவே நாம் முயற்சிக்கிறோம்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:59, 26 செப்டம்பர் 2013 (UTC)

தலைப்பு

தொகு

முதலாம் கான்ஸ்டன்டைன் கட்டுரை தலைப்பை முதலாம் கான்சுடன்டைன் என்று மாற்றிவிடலாமா? பவுல் போன்றோர் அதுவே சரி என்று கருதுகின்றனர். தலைப்பு மாற்ற கோரிக்கைகளுக்கான வார்ப்புறு மறந்துவிட்டதால் உங்கள் பேச்சு பக்கத்தில் கேட்கிறேன்--குறும்பன் (பேச்சு) 01:41, 27 செப்டம்பர் 2013 (UTC)

மாற்றிவிடலாம்.---மயூரநாதன் (பேச்சு) 05:50, 2 அக்டோபர் 2013 (UTC)Reply

பதக்கம்

தொகு
  தமிழ் விக்கிப்பீடியாவின் தந்தை
தமிழ் விக்கிப்பீடியாவின் தந்தையாக இருந்து பத்து ஆண்டுகள் வழிநடத்திச் சென்றமைக்காக, பத்தாம் ஆண்டு விழாக் கொண்டாடும் இவ்வேளையில் தமிழ் விக்கிப்பீடியாவின் தந்தை என்னும் பட்டம் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். --Anton (பேச்சு) 01:59, 28 செப்டம்பர் 2013 (UTC)
  விருப்பம் --மணியன் (பேச்சு) 03:15, 28 செப்டம்பர் 2013 (UTC)
  விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:18, 30 செப்டம்பர் 2013 (UTC)
  விருப்பம் --கலை (பேச்சு) 07:38, 30 செப்டம்பர் 2013 (UTC)
  விருப்பம் --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 08:06, 30 செப்டம்பர் 2013 (UTC)
  விருப்பம் -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 09:33, 30 செப்டம்பர் 2013 (UTC)
  விருப்பம் --இரவி (பேச்சு) 06:18, 2 அக்டோபர் 2013 (UTC)Reply
  விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 06:32, 2 அக்டோபர் 2013 (UTC)Reply
  விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:01, 2 அக்டோபர் 2013 (UTC)Reply
  விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:16, 2 அக்டோபர் 2013 (UTC)Reply
  விருப்பம்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 16:23, 2 அக்டோபர் 2013 (UTC)Reply

இருநாள் சென்னைக் கூடல் பற்றிய கருத்து தேவை

தொகு

வணக்கம். இரு நாள் சென்னைக் கூடல் பற்றிய நிறை, குறைகள், கருத்துகளை விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/விமர்சனங்கள் பக்கத்தில் இட வேண்டுகிறேன். வருங்காலத்தில், இது போன்ற நிகழ்வுகளை இன்னும் சிறப்பாக திட்டமிட இது உதவும்.--இரவி (பேச்சு) 03:34, 1 அக்டோபர் 2013 (UTC)Reply

நன்றி

தொகு

மிக்க நன்றி ஐயா.தங்களுக்கு எப்படி தெரியும்? நந்தினிகந்தசாமி (பேச்சு) 03:02, 15 அக்டோபர் 2013 (UTC)Reply

நன்றியுரைத்தல்

தொகு
  நிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல்
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:53, 15 அக்டோபர் 2013 (UTC)Reply
 
நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:51, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

மிக்க நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி!!
--அஸ்வின் (பேச்சு) 03:29, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

 --நந்தகுமார் (பேச்சு) 08:21, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

நெற்றிக் கண் திறப்பினும்...

தொகு

உரையாடலை விக்கிப்பீடியா:ஆலமரத்தடி நகர்த்தி உள்ளேன். --Natkeeran (பேச்சு) 21:26, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

மகிந்தர்

தொகு

மயூரநாதன், மகிந்த தேரர் பற்றி மகிந்தர் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதத் தொடங்கியிருக்கிறேன். ஆங்கில விக்கியில் இருந்தே இதனை முழுமையாக மொழிபெயர்க்கிறேன். ஆனாலும், ஆங்கிலக் கட்டுரையிலும் ஆதாரங்கள் தரப்படவில்லை. இதனை உங்கள் நேர வசதிப்படி ஒரு முறை பார்வையிடுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 07:12, 23 அக்டோபர் 2013 (UTC)Reply

பார்க்கிறேன். சில வேளை என்னிடமுள்ள சில நூல்களில் சான்றுகள் இருக்கக்கூடும். இருந்தால் இணைத்து விடுகிறேன். --மயூரநாதன் (பேச்சு) 07:15, 23 அக்டோபர் 2013 (UTC)Reply
நன்றி மயூரநாதன்.--Kanags \உரையாடுக 07:19, 23 அக்டோபர் 2013 (UTC)Reply
அந்த நூலை கட்டுரையில் சேர்த்திருக்கிறேன். ஆங்கிலக் கட்டுரையிலும் சேர்த்திருக்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 09:01, 26 அக்டோபர் 2013 (UTC)Reply
நல்லது. மேலும் இக்கட்டுரையை விரிவாக்க இருக்கிறீர்களா? --மயூரநாதன் (பேச்சு) 09:13, 26 அக்டோபர் 2013 (UTC)Reply
ஆறுதலாக விரிவாக்குவேன். உங்களால் முடிந்தால் எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 09:23, 26 அக்டோபர் 2013 (UTC)Reply

கைப்பாவை தொகுப்பு

தொகு

கூடல் கருத்துகள் பக்கத்தில் நான் தொகுக்கும் போது s குறியீட்டைப் பயன்படுத்துவதில் குழப்பம் வந்ததால் தொகுப்பை மீள்வித்து விட்டேன். உங்கள் மனசாட்சிப் படி நீங்களே வேண்டிய மாற்றங்களைச் செய்து விடுங்கள் :) --இரவி (பேச்சு) 09:32, 25 அக்டோபர் 2013 (UTC)Reply

மயூரநாதன், நான் அடிக்க முயன்ற கருத்து இதோ. அந்தக் கருத்தை எழுதியவர் 786haja என்பதற்கான ஆதாரம் இதோ. எனது பேச்சுப் பக்கத்தில் நீங்கள் கருத்திடும் முன்னே, அதையும் கூட நுட்பக் குழப்பத்தால் நானே மீள்வித்து விட்டேன். தேனி சுப்பிரமணியின் கருத்தை நீக்க முயன்றேன் என்று நீங்கள் கருதுவது தவறு. //அண்மைக் காலங்களில், குறிப்பாகக் கடந்த ஒரு மாத காலத்தில், தமிழ் விக்கியில் கருத்திடுபவர்கள் தாம் எழுதுபவற்றை மீண்டும் வாசித்துப் பார்க்கிறார்களா என்று தெரியவில்லை. பல கருத்துக்களை வாசிக்கும் போது அப்படியான எண்னம் தான் தோன்றுகிறது. சில வேளைகளில் அந்தந்த நேரங்களில் உள்ள மனநிலைக்கு ஏற்றபடி கருத்துக்கள் வெளிவந்திருக்கலாம். இப்பொழுது வாசித்துப் பார்த்தால் சிலவேளை அவர்களே இதை நானா எழுதினேன் என்று வெட்கப்படவும் கூடும். எனவே, அவதூறுகளும், தனி மனிதத் தாக்குதல்களும் தன்னை மட்டும் அன்றி மற்றவர்களையும் பாதிக்கும் என்று எண்ணக்கூடிய ஒவ்வொருவரும் தயவு செய்து நீங்கள் இந்த ஒரு மாத காலத்தில் எழுதியவற்றை மீண்டும் படித்துப் பார்த்து அங்கே தனிமனிதத் தாக்குதல், அவதூறுகள் என்பன இருந்தால் நடுக்கோடிட்டு அழித்து வருத்தம் தெரிவியுங்கள். அது விக்கிச் சமூகத்தில் ஒரு நல்ல, பண்பான முன்மாதிரியாக அமையும். அத்துடன் ஒவ்வொருவரும் தங்களுடைய நிலைப்பாடுகளை மீள்பரிசோதனை செய்யவும், அதற்கேற்றபடி தங்களை மாற்றிக்கொள்ளவும் உதவியாக அமையும். ஒவ்வொருவரினதும் மனச்சாட்சிதான் அவர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் முதல் நீதிபதி. இந்த நீதிபதியின் தீர்ப்பினால் உங்களுக்கு எந்த மனத்தாங்கலும் ஏற்படாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்// என்று நீங்களே இட்ட அறிவுரையைப் பின்பற்றி எனது பேச்சுப் பக்கத்தில் உரிய மாற்றத்தைச் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். கொஞ்சமாவது நல்லெண்ண நன்னம்பிக்கை கொள்ளலாம் தானே :) நன்றி. --இரவி (பேச்சு) 10:30, 25 அக்டோபர் 2013 (UTC)Reply
இரவி, இதைத்தான் "மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்று சொல்வது. 10 ஆண்டு நிறைவுக் கருத்துப் பக்கத்தில் ஏதாவது புதிதாக வந்திருக்கிறதா என்று பார்க்கத்தான் போனேன். 786haja வின் கருத்தை நீக்குவது பற்றிய கலந்துரையாடல் எனக்குத் தெரியும் அதை நீக்குவது குறித்தும் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், தேனீயின் கருத்து நீக்கப்பட்டிருப்பதைக் கண்டபோது தேனீயே அதை நீக்கியதாகத் தான் எண்ணினேன். ஆனால் வரலாற்றுப் பக்கத்தில் பார்த்தபோது உங்களுடைய தொகுப்பின்போதுதான் அது நீக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அது வேண்டுமென்று செய்யப்பட்டது என்று நான் நினைக்கவில்லை. ஆனால், அதை யாரும் பார்த்தால் தவறாக எண்ணக்கூடும் என்று மட்டுமே எண்ணினேன். அது ஒரு sensitive ஆன பகுதி. பலரை முகம் சுழிக்க வைக்கக்கூடியது. நானே சரிப்பண்ணியிருக்கலாம். ஆனால், நீங்கள் செய்ததாகவும், அதற்கு எதிராக நான் மீள்வித்ததாகவும் தோற்றம் வரும். நீங்களே உடனடியாகச் சரிசெய்தால். தவறுதலாக நடந்தது என்று எல்லோரும் புரிந்து கொள்வார்கள் என்பதற்காகவே உங்கள் பேச்சுப் பக்கத்தில் அதைத் தெரிவித்தேன். நான் எழுதியதைச் சரியாக வாசித்துப் பாருங்கள். "ஏன் நீக்கினீர்கள் என்று நான் கேட்கவில்லை", அல்லது "நீக்கியிருக்கக் கூடாது" என்றும் சொல்லவில்லை "கைப்பாவைக் கருத்துக்களுடன் தேனீயின் கருத்துக்களையும் நீக்கியிருப்பதாகத் தெரிகிறது" என்று ஒரு தகவலாகத்தான் தந்திருக்கிறேன். நீங்கள் கவனிக்காமல் இருந்திருந்தால். சரிசெய்யட்டும் என்பதற்காகவே அவ்வாறு தகவல் தந்தேன். அது உங்களைக் குற்றங் கூறுவதற்காக எழுதியது என்று நீங்கள் நினைத்திருந்தால் வருந்துகிறேன். நான் பின்பற்ற விரும்பாத அறிவுரையை மற்றவர்களுக்கு நான் கூறுவதில்லை.---மயூரநாதன் (பேச்சு) 11:14, 25 அக்டோபர் 2013 (UTC)Reply

வேதனை! வேதனை!!

தொகு

அன்புள்ள அய்யா! சென்னை கூடலுக்குப் பின் கருத்து மற்றும் கலந்துரையாடல் வேதனையளிக்கிறது. புதுப்பயனரான நான் (இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளேன்) மிகுந்த வேதனைப் படுகிறேன். தயவுசெய்து இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் அன்புடன் --யோகிசிவம் (பேச்சு) 02:22, 26 அக்டோபர் 2013 (UTC)Reply

யோகிசிவம், இது பற்றிக் கவலைப் படாதீர்கள். இப்படியான பொது முயற்சிகளில் நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளவும், நம்மை அறியாமலே நம்மிடையே புகுந்துவிடக்கூடிய பிழையான எண்ணங்களையும், செயல்பாடுகளையும் திருத்திக்கொள்வதற்கும், மீண்டும் புதிய புரிதலோடு களத்தில் இறங்குவதற்கும் இத்தகைய நிலைமைகள் உதவக்கூடியவையே. நாம் ஒவ்வொருவரும் மற்றவரைப்பற்றிப் புகழ்ந்து பேசிக்கொண்டே இருந்தால், நம்முடைய இன்னொரு பக்கம் நமக்குத் தெரியாமலே போய்விடும். நாம் பிழையான வழியில் செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம். எனவே, நம்மோடு சேர்ந்து உழைப்பவர்களிடமிருந்து நம்மைப் பற்றிய விமர்சனங்களையும் அறிந்து கொள்வது நல்லது தானே. எனினும், நீங்கள் சொல்வது போல் இதை நீண்ட காலத்துக்கு எடுத்துச் செல்லக் கூடாது. பல மூத்த பயனர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். நல்லதே நடக்கும். ---மயூரநாதன் (பேச்சு) 03:57, 26 அக்டோபர் 2013 (UTC)Reply
எனக்கு ஏற்பட்ட மனவழுத்தத்தை உங்களோடு பகிர்ந்த போது அவருக்கும் கருத்திட்டேன். தங்களின் தகவலுக்கு நன்றி--யோகிசிவம் (பேச்சு) 15:34, 26 அக்டோபர் 2013 (UTC)Reply

தானியங்கி அணுக்கம் வேண்டல்

தொகு

(இச்செய்தி அதிகாரி அணுக்கம் உடையவர்களுக்கு) எனது கணக்கின் பெயர் NeechalBOT. நான் விக்கித் திட்டங்களுக்குப் புதிது. தற்போதைக்கு எனக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ள பணிகளை என் பயனர் பக்கத்தில் காணலாம். எனக்குத் தானியங்கி அணுக்கம் வேண்டி நீச்சல்காரன் இங்கு இட்டுள்ள கோரிக்கை தொடர்பாக உங்கள் கருத்தையிட உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். --NeechalBOT (பேச்சு) 07:19, 26 அக்டோபர் 2013 (UTC)Reply

நன்றிகள்

தொகு

தானியங்கிக் கணக்கிற்கு அணுக்கம் வழங்கியமைக்கு நன்றி ஐயா. முதல் பணியாக வாரவாரம் இங்கு புள்ளிவிபரத்தைச் சேகரிக்கத் தொடங்குகிறது. இது அயர்ச்சிதரும் பணிகளைத் தொடர் தானியக்கம் செய்ய வல்லது. த.வி. வளர்ச்சிக்கு வேண்டிய தொடர்பணித் தேவைகளுக்கு இதைப் பயன்படுத்தலாம் --நீச்சல்காரன் (பேச்சு) 03:07, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

கட்டுரைப் போட்டி

தொகு
வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:54, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

புரியவில்லை

தொகு

மூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு) என்ற கட்டுரையில் ஏறத்தாழ (-55,192)‎‎ நீக்கப்பட்டுள்ளது. அது ஏன் என்று புரியவில்லை. அதனை நான் மீளமைக்க விரும்புகிறேன். உங்கள் வழிகாட்டுதல் தேவை.--≈ உழவன் ( கூறுக ) 09:26, 29 அக்டோபர் 2013 (UTC)Reply

நடவடிக்கை தேவை

தொகு

(கீழ்க்காணும் குறிப்பைப் பயனர் இராசன் (Rajan s) பக்கத்தில் இட்டுள்ளேன்)

இராசன் நீங்கள் //எனக்கு ஏற்கெனவே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அசிங்கமான மின்னஞ்சல்கள் வந்துள்ளன. பாலியல் அசிங்கமாக (ஆண் ஆணுடன் உடலுறவு கொள்ளும்) படங்கள் தாங்கிய மின்னஞ்சல்கள் வந்துள்ளன. இதைச் செய்தது யார்? தேனி சுப்பிரமணியின் மின்னஞ்சல் முகவரியில் இருந்தும் வந்துள்ளன.// என்று எழுதியுள்ளீர்கள். இவை கடுமையான குற்றச்சாட்டுகள். கொலை மிரட்டல் அனுப்பியது யாராக இருந்தாலும் அவர்கள் மீது விக்கிப்பீடியா தக்க நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும். விக்கிப்பீடியாவையும் தாண்டி காவல் துறையினரிடம் முறையீட்டை வைக்கவேண்டும். நீங்கள் முன் வைத்திருப்பது மிகவும் கவலைதரும் குற்றச்சாட்டு. தக்க ஆதாரங்களை விக்கிப்பீடியாவின் அதிகாரிளின் ஒருவரிடம் (மயூரநாதன், சுந்தர், இரவி, நற்கீரன்) சமர்ப்பியுங்கள். --செல்வா (பேச்சு) 18:55, 31 அக்டோபர் 2013 (UTC)Reply

கருத்திடல்

தொகு

பகுப்பு பேச்சு:உடற்கூற்றியல் என்பதில் தங்களது கருத்தினை எதிர்நோக்குகிறேன். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 18:59, 18 நவம்பர் 2013 (UTC)Reply

மொழிபெயர்ப்பில் பொருள் வேறுபாடு

தொகு

அருமையான ஒரு கட்டுரைய மொழிபெயர்த்து வருகிறீர்கள். நன்றி.

"Leftist economic beliefs range from Keynesian economics and the welfare state through industrial democracy and the social market to nationalization of the economy and central planning,[21] to the anarchist/ syndicalist advocacy of a council- and assembly-based self-managed anarchist communism."

இடதுசாரிப் பொருளாதாரக் கொள்கைகள் கீனீசியப் பொருளாதாரம், பொதுநல அரசு போன்றவற்றில் தொடங்கி தொழிற்றுறைச் சனநாயகம், சமூகச் சந்தை என்பவற்றினூடாகப் பொருளாதாரத்தைத் தேசியமயமாக்கல், மையத் திட்டமிடல் என்பவைவரை பல்வேறுபட்டவையாக இருந்தன.

என்று மொழிபெயர்த்துள்ளீர்கள். மொழிபெயர்ப்பில் பொருள் மாறி உள்ளது என்று கருதுகிறேன். to the anarchist/ syndicalist advocacy of a council- and assembly-based self-managed anarchist communism என்பதன் பொருள் விடப்பட்டுள்ளது. இக் கொள்கைகள் முக்கியமானவை, மற்ற துருவத்தில் இருந்து வேறுபட்டவை, இடதுசாரிக் கருத்தியலில் கருத்துவேறுபாட்டை சுட்டி நிற்பவை. எனவே இதைச் சற்றுக் கவனமாக எடுத்தாள வேண்டும். நன்றி. --Natkeeran (பேச்சு) 21:12, 19 திசம்பர் 2013 (UTC)Reply

நற்கீரன், இடதுசாரி அரசியல் கட்டுரை தொடர்பாக நீங்கள் உன்னிப்பாகக் கவனம் செலுத்தி வருவதையிட்டு நன்றி. நீங்கள் கூறிய பகுதியில் மாற்றம் செய்திருக்கிறேன் பார்க்கவும். இன்னும் அது சரியான பொருளைத் தரவில்லை என்றால், நீங்களே தேவையான மாற்றங்களைச் செய்துவிடுங்கள். ஏற்கெனவே நீங்களும், சுதீரும் சில மாற்ரங்களைச் செய்து கட்டுரையை மேம்படுத்தியுள்ளீர்கள். இவ்வாறுதான் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் வளர்ச்சியடைகின்றன. எனவே இந்தத்தலைப்பில் கூடிய அறிவு கொண்ட நீங்கள் இருவரும் இன்னும் கூடுதலாக "நேரடி"யாகவே கட்டுரையில் பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. ---மயூரநாதன் (பேச்சு) 06:10, 20 திசம்பர் 2013 (UTC)Reply
தமிழ்ச் சூழலில் பொதுவாக பொதுவுடமை,, சமூகவுடைமை, மார்சிய இடதுசாரி இயக்கள்களே பெரிதும் இயங்குகின்றன. அதனால் இடதுசாரி அரசியல் என்றால் இதனையே பலர் தமிழ்ச் சூழலிக் குறிக்கின்றனர். ஆனால் உலகப் பார்வையில், அரசின்மையின் பல பிரிவுகள் (ஒன்றுக்கொன்றியம், அரசின்மை தொழிற்சங்கவாதம், அரசின்மைப் பொதுவுடமை), இடதுசாரிச் சுதந்திரவாதம், மூன்றாம் வழி நடு-இடதுசாரிகள் ஆகியோரின் கொள்கைகள், செல்வாக்குக்கள் முக்கியம் பெறுகின்றன. இந்த இரண்டாம், மூன்றாம் தரப்புகள் முதலாம் தரப்பின் கடுமையான விமர்சகர்கள் ஆவர். அந்த வகையிலும் இவர்களைப் பற்றிய தகவல்கள் முக்கியம் பெறுகின்றன. ஆங்கில விக்கிக் கட்டுரை ஒரளவு இவர்களின் பார்வையை சரிவரப் பதிவு செய்துள்ளது என்றே நினைக்கிறேன். குறிப்புக்கே. --Natkeeran (பேச்சு) 05:25, 24 திசம்பர் 2013 (UTC)Reply


விக்கித் திட்டம் வானியல்

தொகு
 
திரைகடலோடித் திரவியம் தேடு

வணக்கம், Mayooranathan/தொகுப்பு 5!

  • தமிழ் விக்கிப்பீடியாவில் வானியல் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தமிழ் விக்கிப்பீடியாவில் வானியல் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க ஓர் அரிய திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தில் இணைந்து வானியல் துறையில் பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
  • நீங்கள் இத்திட்டத்தை வளர்த்தெடுக்க பெரிதும் உதவுவீரகள் என நம்புகிறேன், ஆகவே இத்திட்டதிற்காக முன்னின்று உழைத்துச் செயற்பட உங்களை வேண்டுகிறேன்.
  • பங்காற்றும் வழிகளைப்பற்றி அறிய இப் பக்கத்தில் உள்ள பங்காற்றும் வழிகளில் உள்ள விடங்களைப் பற்றி வாசித்து பங்களிக்கும் முறைகளைப்பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 06:42, 20 திசம்பர் 2013 (UTC)Reply

ஆசிரியர், மொழி, காலம், இடம்,

தொகு

நீங்கள் எழுதும் நூல்கள் பற்றிய கட்டுரைகளில் அந்த நூல்கள் எந்த மொழியில் எழுதப்பட்டது என்று குறிப்பிடுதல் உதவியாக இருக்கும். தமிழ் மொழிபெயர்ப்பு உண்டு என்றால், அல்லது தமிழில் உள்ள தழுவல்/மொழிபெயர்ப்பு நூல்கள் என்றால் அந்தத் தகவல்களையும் குறிப்பிட்டால் உதவியாக இருக்கும். நன்றி. --Natkeeran (பேச்சு) 19:41, 20 சனவரி 2014 (UTC)Reply

நற்கீரன், இங்கே கட்டுரைத் தலைப்புக்களில் அடைப்புக் குறிகளுக்குள் உள்ள "சிற்பநூல்" என்பது புத்தகத்தைக் குறிக்கவில்லை. சிற்பநூல்களில் கையாளப்படும் துறையைக் குறிக்கிறது (மொழிநூல் Philology ஐக் குறிப்பதுபோல). நான் எழுதிய கட்டுரைகள் சிற்ப நூல்களில் கூறப்படும் 32 வகையான தள அமைப்புக்கள் (Plans) பற்றியது. சிற்பநூல் என்பது குழப்பம் தருவதாக இருந்தால் அதை மாற்றவேண்டும். பொருத்தமான சொல் இருந்தால் சொல்லவும். --மயூரநாதன் (பேச்சு) 03:35, 21 சனவரி 2014 (UTC)Reply

தமிழ் தட்டச்சு

தொகு

ஆலமரத்தடியில் நடக்கும் உரையாடலை சற்றுக் கவனியுங்கள்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:11, 24 சனவரி 2014 (UTC)Reply

இலங்கைத் தமிழ்

தொகு

இலங்கைத் தமிழ் வழக்குச் சொல், மட்டக்களப்புத் தமிழ், யாழ்ப்பாணத் தமிழ் ஆகிய கட்டுரைகள் முறையே இலங்கைத் தமிழ் பேச்சு வழக்குகள், மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ், யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் கட்டுரைகளுடன் இணைக்கலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 02:39, 25 சனவரி 2014 (UTC)Reply

இல்லை அன்டன், இவை ஒவ்வொன்றிலும் தனித்தனியாக நீண்ட கட்டுரைகள் எழுத முடியும். எழுத வேண்டும். இவை குறித்து நிறைய ஆய்வுகள் உள்ளன. அவற்றைத் தேடி இக்கட்டுரைகளை விரிவாக்க வேண்டும். தற்போது இவை தொடக்கக் கட்டுரைகளே இவ்வாறான சிறிய கட்டுரைகள் இது பற்றி அறிந்தவர்களை அவற்றை விரிவாக்கத் தூண்டுகின்றன. சிறிய கட்டுரைகளைக் கண்டவுடன் அவற்றை நீக்குவது அல்லது இணைப்பது என்பது சரியான அணுகுமுறையாக இருக்காது. ---மயூரநாதன் (பேச்சு) 06:14, 25 சனவரி 2014 (UTC)Reply

எனது கருத்து சிறிய கட்டுரைகள் பற்றியதல்ல. குறித்த கட்டுரைகள் ஏற்கெனவே உள்ள கட்டுரைகளுடன் ஒத்துப்போவதாகவே தெரிகிறது. அதனால்தான் இணைக்கலாமா எனக் கேட்டிருந்தேன். யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழில் உள்ள கருத்துக்கள்தான் யாழ்ப்பாணத் தமிழில் பிரதிபலிக்கின்றன. அல்லது யாழ்ப்பாண எழுத்துத் தமிழ் பற்றியும் இங்கு எழுத விரும்புகிறீர்களா? குறிப்பு: உங்கள் கருத்துக்களை இங்கேயே இடுங்கள். இப்பேச்சுப்பக்கம் என் கவனிப்புப் பட்டடியலில் இருக்கும். --Anton·٠•●♥Talk♥●•٠· 04:30, 26 சனவரி 2014 (UTC)Reply

வன்னித்தமிழ் எனும் கட்டுரையினையும் முடிந்தால் விரிவாக்கம் செய்யுமாறு வேண்டுகிறேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:42, 28 சனவரி 2014 (UTC)Reply

ஆலோசனை வேண்டும்

தொகு

வணக்கம் மயூரநாதன்

தமிழ் விக்கியில் மூத்த பங்களிப்பாளர் எனும் முறையில் தங்களின் உங்கள் வழிகாட்டுதல் தேவை இராமாயணத்தில் சீதையைச் சிறைவைத்தாக கூறப்படும் அசோகவனம் பற்றிய பல அறிய ஆய்வு தகவல்கள் என்னிடம் உள்ளது. இதனை எவ்வாறு நான் விக்கிபீடியாவுக்கு பயனுள்ளதாக மாற்றுவது உங்களால் முடிந்தால் ஏதாவது ஒரு ஆலோசனை சொல்லுங்கோ .நன்றி ----- Mohamed ijazz laft

தமிழ் எளிது

தொகு

சொடுக்கிப் பாருங்கள் --Sengai Podhuvan (பேச்சு) 21:28, 3 ஏப்ரல் 2014 (UTC)

பார்த்தேன் மிகவும் பயனுள்ள பதிவு. பயன்படுத்திக்கொள்வேன். நன்றிகள். -- மயூரநாதன் (பேச்சு) 17:48, 9 மே 2014 (UTC)Reply

நன்றி!

தொகு

வணக்கம்! 'நீக்கல் கோரிக்கை' விடப்பட்டுள்ள கட்டுரைகளை நல்லமுறையில் வளர்த்தெடுத்து வருவதற்கு மிக்க நன்றி! கடந்த 2 வார காலமாக நீங்கள் எடுத்துள்ள கட்டுரைகளைக் கையாள எவ்வளவு பொறுமை வேண்டும் என்பதை நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:53, 9 மே 2014 (UTC)Reply

நன்றி செல்வா. இப்பொழுது புதிதாக எழுதுவதைக் குறைத்துக்கொண்டு நீக்கல் கோரிக்கைக் கட்டுரைகளை கூடிய அளவுக்கு விரிவுபடுத்தும் வேலைகளையே செய்து வருகிறேன். ஐந்து, ஆறு கட்டுரைகளாகப் பார்வைக்கு வருவதால் இலகுவாகச் செய்ய முடிகிறது. --- மயூரநாதன் (பேச்சு) 17:43, 9 மே 2014 (UTC)Reply
அண்மைய மாற்றங்களில் பலரும் பங்களிக்கக்கூடிய கட்டுரைகளை மட்டும் தான் காட்சிப்படுத்துகிறோம். தமிழ்நாட்டில் மலைக்கோயில்கள், குடிவழக்கு, வெட்டுமானக் கோயில், பெல் சமன்பாடு, புவியுரு வரைபடம் போன்ற கட்டுரைகள் உங்கள் ஆர்வப்புலத்துக்கு உட்பட்டு இருக்கலாம். இவற்றையும் மேம்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 12:44, 16 மே 2014 (UTC)Reply
செய்கிறேன். --- மயூரநாதன் (பேச்சு) 15:07, 16 மே 2014 (UTC)Reply
நன்றி :) ! --இரவி (பேச்சு) 15:09, 16 மே 2014 (UTC)Reply

பதக்கம்

தொகு
  சிறப்புப் பதக்கம்
குறித்த கால நீக்கல் வேண்டுகோளை எதிர்கொண்ட பல குறுங்கட்டுரைகளை மிகச் சிறப்பான முறையில் விரிவாக்கித் தந்தமையைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். நன்றி. இரவி (பேச்சு) 12:45, 16 மே 2014 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:40, 16 மே 2014 (UTC)Reply
  விருப்பம் நீண்ட நாட்களுக்குப் பின்பு விக்கியன்பினைக் காண இயலுகிறது. வாழ்த்துகள் நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:47, 16 மே 2014 (UTC)Reply
  விருப்பம் தமிழ் விக்கியின் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்! குறித்த கால நீக்கல் வேண்டுகோள்களை எதிர்கொண்ட கட்டுரைகள் சிலவற்றை (20 கட்டுரைகள்) விரிவாக்கியுள்ளேன். அவற்றை எனது மணல்தொட்டியில் பட்டியலாக இட்டுள்ளேன். அவற்றைப் பற்றிய கருத்துக்களை அல்லது மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை எனது பேச்சுப்பக்கத்தில் பயன கருத்துக்கள் எனும் பகுதியில் இடுமாறு தங்களையும் மற்றும் அனைத்துப் பயனர்களையும் கேட்டுக்கொள்கின்றேன். தங்கள் கருத்துக்கள் ஒவ்வொன்றும் எனது பங்களிப்பை மேம்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை!!! இப்படிக்கு விக்கிக்கு இளையோன்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 06:06, 17 மே 2014 (UTC)Reply

ஒரு வேண்டுகோள்

தொகு
 

வணக்கம் Mayooranathan! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 02:59, 17 மே 2014 (UTC)Reply

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு

தொகு


சந்தேகம்...

தொகு

வணக்கம்! கட்டடம் என்பது சரியா கட்டிடம் என்பது சரியா? புழக்கத்தில் இரண்டையும் பார்க்கிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:27, 4 சூலை 2014 (UTC)Reply

நீங்கள் சொல்வதுபோல் இரண்டும் பயன்பாட்டில் உள்ளன. இது குறித்து வேறுபட்ட கருத்துக்களும் இருக்கின்றன. "அடம்" என்பது அடுக்கப்படுவது என்ற பொருளுடையது என்றும் அதனால் அடுக்கிக் கட்டப்படுவதால் "கட்டடம்" என்பதே சரி என்பது சிலரது வாதம். அதேவேளை "கட்டிடம்" என்னும்போது அது கட்டுவதற்கான இடத்தையே குறிக்கும் என்கின்றனர் அவர்கள். ஆனால், கட்டப்பட்ட "இடம்" என்பதால் "கட்டிடம்" என்பதே சரி என்பது இன்னொரு சாராரின் கருத்து. தமிழில் "இடம்" என்பதற்கான பொதுவான பொருள் தெரிந்ததே. ஏரிக்கரை, ஆற்றங்கரை, மலை முகடு, பாலைவனம் என்பன இயற்கையாக அமைந்த இடங்கள். வீடு வசிப்பதற்கான இடம், அலுவலகம் வேலை செய்யும் இடம், தோட்டம் பயிர் செய்யும் இடம், கோயில் இறைவன் இருக்கும் இடம் அல்லது வணக்கத்துக்கான இடம். இவை செயற்கையாக உருவாக்கப்பட்டவை அல்லது கட்டப்பட்டவை. வீடு, அலுவலகம், கோயில் முதலியவை பயன்பாடு கருதிக் கட்டப்பட்ட "இடங்கள்". எனவே கட்டப்பட்ட இடம் என்ற பொருள் தருவதுடன், கட்டப்படாத ஏரிக்கரை முதலிய இடங்களில் இருந்து கட்டப்பட்ட வீடு முதலிய இடங்களைப் பிரித்துக் காட்டக்கூடிய "கட்டிடம்" என்பதே கூடிய பொருத்தம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
கட்டடம் (கட்டு = அடம்) என்பதில் உள்ள அடம் என்பது தெலுங்கில் இருந்து பெறப்பட்டது என்ற கருத்தையும் சிலர் முன்வைக்கின்றனர். இங்கே பார்க்கவும். இதிலிருந்து ஒரு பகுதியைக் கீழே காண்க:
"For your information, "-aDam" is much more productive as a suffix in everyday Telugu - used even today in conversational language. All the Tamil instances are vague, non-literary or straight away identifiable as relatively late loans esp. from Telugu."

--- மயூரநாதன் (பேச்சு) 09:48, 4 சூலை 2014 (UTC)Reply

இதை மலையாளத்தில் கெட்டிடம் என்கின்றனர். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:24, 4 சூலை 2014 (UTC)Reply
இது குறித்து முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றையும் பேச்சு:இந்தியக் கட்டிடக்கலை பக்கத்தில் காண்க. ---மயூரநாதன் (பேச்சு) 10:27, 4 சூலை 2014 (UTC)Reply
இணையத்திலிருந்து மேலும் சில உரையாடல்கள். விக்கிப்பீடியாவின் கலந்துரையாடல்களும் மேற்கோள் காட்டப்படுகின்றன. --- மயூரநாதன் (பேச்சு) 10:36, 4 சூலை 2014 (UTC)Reply

எனது ஐயத்திற்கு பதிலளிக்க தாங்கள் செலவிட்ட நேரத்திற்கு மிக்க நன்றி, மயூரநாதன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:07, 5 சூலை 2014 (UTC)Reply

10 ஆண்டுகள் பங்களிப்பு பதக்கம்

தொகு
  10 ஆண்டுகள் பங்களிப்பு பதக்கம்
நவம்பர் 20, 2003 தொடங்கி பத்து ஆண்டுகளாக தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருவதைப் பாராட்டி தமிழ் விக்கிப்பீடியர்கள் அனைவர் சார்பாகவும் இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். தொடக்கம் முதலே சீரான பல்துறைக் கட்டுரைகளைத் தருவதில் நீங்களே இங்கு பலருக்கும் முன்மாதிரி. வாழ்த்துகள் !--இரவி (பேச்சு) 09:46, 2 ஆகத்து 2014 (UTC)Reply
  விருப்பம்-- mohamed ijazz(பேச்சு) 09:48, 2 ஆகத்து 2014 (UTC)Reply
மயூரநாதன், வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் கூறிவந்துள்ளேன். இருந்தாலும் போதாது. உங்கள் இடத்தில் வேறு யார் இருந்திராந்தாலும் தமிழ் விக்கிப்பீடியா இவ்வளவு வலுவான பண்பாட்டு அடித்தளத்துடன் எழும்பியிருக்க வாய்ப்பில்லை. தமிழ்மொழியின் வரலாற்றிலேயே நீங்காப்புகழ் பெறவேண்டிய அரிய பங்களிப்பைச்செய்துவிட்டு விக்கிப்பண்பாட்டுக்கேற்ப அமைதியாக தன்னைத்தானே முன்னிறுத்தாமல் பங்காற்றிக்கொண்டிருப்பதற்கு எனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 10:49, 2 ஆகத்து 2014 (UTC)Reply
வாழ்த்துகள் மயூரநாதன்.--Kanags \உரையாடுக 11:21, 2 ஆகத்து 2014 (UTC)Reply
  விருப்பம் வாழ்த்துகள் மயூரநாதன் அவர்களே.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:14, 2 ஆகத்து 2014 (UTC)Reply
வாழ்த்துக்கள் மயூரநாதன்.--கலை (பேச்சு) 12:01, 4 ஆகத்து 2014 (UTC)Reply
  விருப்பம் வாழ்த்துகள் மயூரநாதன்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:50, 4 ஆகத்து 2014 (UTC)Reply
பதக்கம் வழங்கிய இரவிக்கும், வாழ்த்துக்கள் தெரிவித்த இஜாஸ், சுந்தர், சிறீ, ஸ்ரீகர்சன், கலை, பார்வதிஸ்ரீ ஆகியோருக்கு எனது நன்றிகள். உங்கள் எல்லோருடனும் இணைந்து தமிழ் விக்கிப்பீடியா மிகச் சிறப்பான அறிவுக்களஞ்சியம் ஆவதற்கு உழைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். -- மயூரநாதன் (பேச்சு) 17:52, 4 ஆகத்து 2014 (UTC)Reply

An important message about renaming users

தொகு

Dear Mayooranathan, My aplogies for writing in English. Please translate or have this translated for you if it will help. I am cross-posting this message to many places to make sure everyone who is a Wikimedia Foundation project bureaucrat receives a copy. If you are a bureaucrat on more than one wiki, you will receive this message on each wiki where you are a bureaucrat.

As you may have seen, work to perform the Wikimedia cluster-wide single-user login finalisation (SUL finalisation) is taking place. This may potentially effect your work as a local bureaucrat, so please read this message carefully.

Why is this happening? As currently stated at the global rename policy, a global account is a name linked to a single user across all Wikimedia wikis, with local accounts unified into a global collection. Previously, the only way to rename a unified user was to individually rename every local account. This was an extremely difficult and time-consuming task, both for stewards and for the users who had to initiate discussions with local bureaucrats (who perform local renames to date) on every wiki with available bureaucrats. The process took a very long time, since it's difficult to coordinate crosswiki renames among the projects and bureaucrats involved in individual projects.

The SUL finalisation will be taking place in stages, and one of the first stages will be to turn off Special:RenameUser locally. This needs to be done as soon as possible, on advice and input from Stewards and engineers for the project, so that no more accounts that are unified globally are broken by a local rename to usurp the global account name. Once this is done, the process of global name unification can begin. The date that has been chosen to turn off local renaming and shift over to entirely global renaming is 15 September 2014, or three weeks time from now. In place of local renames is a new tool, hosted on Meta, that allows for global renames on all wikis where the name is not registered will be deployed.

Your help is greatly needed during this process and going forward in the future if, as a bureaucrat, renaming users is something that you do or have an interest in participating in. The Wikimedia Stewards have set up, and are in charge of, a new community usergroup on Meta in order to share knowledge and work together on renaming accounts globally, called Global renamers. Stewards are in the process of creating documentation to help global renamers to get used to and learn more about global accounts and tools and Meta in general as well as the application format. As transparency is a valuable thing in our movement, the Stewards would like to have at least a brief public application period. If you are an experienced renamer as a local bureaucrat, the process of becoming a part of this group could take as little as 24 hours to complete. You, as a bureaucrat, should be able to apply for the global renamer right on Meta by the requests for global permissions page on 1 September, a week from now.

In the meantime please update your local page where users request renames to reflect this move to global renaming, and if there is a rename request and the user has edited more than one wiki with the name, please send them to the request page for a global rename.

Stewards greatly appreciate the trust local communities have in you and want to make this transition as easy as possible so that the two groups can start working together to ensure everyone has a unique login identity across Wikimedia projects. Completing this project will allow for long-desired universal tools like a global watchlist, global notifications and many, many more features to make work easier.

If you have any questions, comments or concerns about the SUL finalisation, read over the Help:Unified login page on Meta and leave a note on the talk page there, or on the talk page for global renamers. You can also contact me on my talk page on meta if you would like. I'm working as a bridge between Wikimedia Foundation Engineering and Product Development, Wikimedia Stewards, and you to assure that SUL finalisation goes as smoothly as possible; this is a community-driven process and I encourage you to work with the Stewards for our communities.

Thank you for your time. -- Keegan (WMF) talk 18:24, 25 ஆகத்து 2014 (UTC)Reply

--This message was sent using MassMessage. Was there an error? Report it!

பெண்ணியம் தொடர்பான வலைவாசல்

தொகு

வணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு வலைவாசல் துவங்கப்பட்டுள்ளது . இதன் வடிவமைப்பு , உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கலாம் என்று தங்களுக்கு ஏதேனும் கருத்து இருப்பின் , வலைவாசல் பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ தெரிவிக்கவும் .நன்றி .--Commons sibi (பேச்சு) 08:48, 27 அக்டோபர் 2014 (UTC)Reply

வணக்கம்

தொகு

வணக்கம் மயூரநாதன். இலங்கையில் எப்போது வரை இருப்பீர்கள். இங்கு தொடர்புகொள்ளக்கூடிய தொலைபேசி எண்ணை தந்துதவவும்.நன்றிகள்.--192.248.66.6 04:07, 28 அக்டோபர் 2014 (UTC)இது --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:08, 28 அக்டோபர் 2014 (UTC)Reply

நன்ற்கள்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:33, 31 அக்டோபர் 2014 (UTC)Reply

சிகரம்:பிலிப்பீன்சு

தொகு
சிகரம் என்ற ஒரு புதிய திட்டத்தினூடாக பிலிப்பீன்சு கட்டுரையை முழுமையாக விரிவாக்கியுள்ளேன். இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக்க முன்மொழிவதற்காகச் சில உதவிகளை உங்களிடத்தில் நாடி நிற்கின்றேன். உங்களுக்கு நேரமிருப்பின் பிலிப்பீன்சு கட்டுரையைச் சரிபார்த்து பிழைகள் இருப்பின் திருத்தி உதவுங்கள். மேலதிக தகவல்களுக்கு திட்டத்தின் பக்கத்தைப் பாருங்கள்.

--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 04:10, 28 திசம்பர் 2014 (UTC) Reply

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

தொகு
 
அனைவரும் வருக

வணக்கம் Mayooranathan/தொகுப்பு 5!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:21, 30 திசம்பர் 2014 (UTC)Reply
வணக்கம் மயூரநாதன், பாதி மாதம் முடிந்த நிலையில் ஒரு சின்ன நினைவூட்டல் :) உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும்.--இரவி (பேச்சு) 08:30, 16 சனவரி 2015 (UTC)Reply

ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

தொகு

ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறீர்களா? ஆம் எனில், தமிழ் விக்கிப்பீடியர்களில் ஒருவரேனும் கலந்து கொள்வது குறித்து மிக்க மகிழ்ச்சி. --இரவி (பேச்சு) 14:33, 1 பெப்ரவரி 2015 (UTC)

ஆம் இரவி, நான் கலந்து கொண்டேன். இன்றுடன் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்தன. சுந்தருடைய சுருக்கமும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனாலும் அவரால் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. ஆனால், நிகழ்ச்சி நிரலில், விக்கிப்பீடியா பற்றிய அவரது கட்டுரையும் இடம்பெற்றிருந்தது. --மயூரநாதன் (பேச்சு) 15:04, 1 பெப்ரவரி 2015 (UTC)

சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு:பிலிப்பீன்சு

தொகு

சிகரம் திட்டத்தினூடாக விரிவாக்கப்பட்ட பிலிப்பீன்சு கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக நியமிப்பதற்கு இப்பக்கத்தில் முன்மொழிந்துள்ளேன். உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவியுங்கள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 12:01, 5 பெப்ரவரி 2015 (UTC)

மயூரநாதன் அவர்களே பிலிப்பீன்சு கட்டுரையை உரைதிருத்தி உதவிவருவதற்கு நன்றி. கட்டுரையின் பராமரிப்புப் பணிக்காக இப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் கட்டுரையின் ஏதாவது ஒரு பகுதி நீங்கள் உரைதிருத்திச் சரிபார்க்கப்பட்டதாகக் கருதினால் இங்கு கையொப்பமிட்டு உதவுங்கள். இவ்வாறு செய்வது அனைத்து விக்கிப்பீடியர்களும் ஒன்றிணைந்து உரைதிருத்தத்தை மேற்கொள்ள வசதியாக இருக்கும்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 05:42, 8 பெப்ரவரி 2015 (UTC)

பொதுவகத்திற்கு நகர்த்தியுள்ளேன்

தொகு

மயூரநாதன், நீங்கள் ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கட்டுரைக்காக தமிழ்விக்கியில் தரவேற்றியிருந்த ஆரம்ப விழாப் படிமத்தை பொதுவகத்துக்கு நகர்த்தியுள்ளேன். உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லையே?--Kanags \உரையாடுக 01:39, 7 பெப்ரவரி 2015 (UTC)

நன்றி சிறீதரன் எனக்கு ஆட்சேபனை இல்லை. -- மயூரநாதன் (பேச்சு) 05:32, 7 பெப்ரவரி 2015 (UTC)

பொதுவகத்தில் கோலம்

தொகு

File:Kolam-Pulli oodu-Tamil-culture.jpg என்ற இப்படத்தினை பொதுவகத்திலும் பதிவேற்றியுள்ளேன். ஆனால், அங்குள்ள விதியின் படி, இதுபோன்ற சிறிய அளவிலான படங்களைத் தவிர்க்கும் படி கூறியுள்ளனர். அதிக செறிவுள்ள படங்கள் இருப்பின், பிறமொழிகளிலும், நன்றாகத் தெரியும் என்பதே அவர்களின் நோக்கம். எனவே, நீங்கள் கோலம் கட்டுரையில் இருக்கும் உங்களின் முக்கிய படங்களை அனைத்தும் ஒரே படமாக மாற்றித் தந்தால், அதனை காலம் தாண்டியும் நிலைபெறும். எனவே, ஆவண செய்க. உங்களின் புதிய படத்தை, பொதுவகத்தில் உள்ள அக்கோப்பின் கீழ்புறம் உள்ள Upload a new version of this file என்ற வசதி வழியாகவும் பதிவேற்றலாம். ஆவலுடன்.. --≈ உழவன் (உரை) 02:23, 13 பெப்ரவரி 2015 (UTC)

தகவலுழவன், தமிழ் விக்கியில் உள்ள படிமங்களை பொதுவகத்திற்கு நகர்த்துவதற்கு இக்கருவியைப் பயன்படுத்துங்கள். இதன் மூலம் படிமத்தின் மூல அனுமதி, ஆக்குனர் ஆகியவை முறைப்படி பொதுவகத்தில் சேமிக்கப்படும். உதவிக்கு en:User:This, that and the other/For the Common Good ஐப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 03:23, 13 பெப்ரவரி 2015 (UTC)
கனகு! இக்கருவிக்கான குறிப்பளித்தமைக்கு நன்றி. குறித்து வைத்துக் கொண்டேன். நமது நீச்சல்காரன் தானியங்கி முறையில் பொதுவகத்தில் பதிவேற்ற கருவியொன்றை செய்தார். எனினும், கோப்புகளின் முக்கியத்துவத்துவத்தை அறிந்த பிறகே, அதனை செயற்படுத்துவாரென்று எண்ணுகிறேன். கட்டைவிரல் அளவிலான படங்களைப் பதிவேற்றுவதைத் தவிர்க்க எனக்கு வழிகாட்டல் தந்தமையால், இங்கு மேற்கூறிய கோரிக்கையை வைத்துள்ளேன்.--≈ உழவன் (உரை) 03:56, 13 பெப்ரவரி 2015 (UTC)
இரண்டாவதாகத் தந்த உதவிப்பக்கத்தில் உள்ள கருவியையே நான் பயன்படுத்துகிறேன். முதலாவதாகத் தந்ததல்ல. நீச்சல்காரனின் கருவியின் இணைப்பு என்ன?--Kanags \உரையாடுக 04:31, 13 பெப்ரவரி 2015 (UTC)
செய்கிறேன், தகவல் உழவன். இது நான் வரைந்ததுதான். பழைய வரைபடம். இதன் மூலப்படி இருக்கிறதா என்று பார்க்கிறேன். இல்லாவிட்டால் வேறு ஏதாவது செய்யலாம். -- மயூரநாதன் (பேச்சு) 08:56, 13 பெப்ரவரி 2015 (UTC)

புதிய நிருவாகிகள் பரிந்துரை

தொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த தலைமுறை நிருவாகிகளை இனங்காண உங்கள் பரிந்துரைகள் தேவை. ஒவ்வொருவரும் ஒருவரை இனங்கண்டு வழிகாட்டி மெருகேற்றி வந்தால் கூட நாம் இன்னும் பல புதிய பொறுப்பாளர்களைப் பெற முடியும். நன்றி. --இரவி (பேச்சு) 07:33, 28 மார்ச் 2015 (UTC)

Return to the user page of "Mayooranathan/தொகுப்பு 5".