தொழிற்றுறைச் சனநாயகம்
தொழிற்றுறைச் சனநாயகம் (Industrial democracy) என்பது, முடிவுகளை மேற்கொள்ளல், வேலைத்தலங்களில் பொறுப்புக்களையும் அதிகாரங்களையும் பகிர்தல் போன்றவற்றில் தொழிலாளர்களும் ஈடுபடுகின்ற ஒரு ஒழுங்குமுறை ஆகும். பங்கேற்பு மேலாண்மை, அமைப்பு வடிவமைப்புப் போன்றவற்றிலும் தொழிலாளர்களுடைய கருத்துக்கள் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவதுடன், முடிவுகள் எடுப்பதிலும் அவர்கள் பங்கெடுக்கின்றனர் எனினும், தொழிற்றுறைச் சனநாயகத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்களில், இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரமும் அவர்களுக்கு உண்டு. அத்துடன், இங்கே நிறுவன அமைப்பு வடிவமைப்பு, அதிகாரப் படிநிலை போன்ற விடயங்களையும் தொழிலாளர்கள் முடிவு செய்கின்றனர்.[1]
உற்பத்திச் சாதனங்கள் தனியாருக்கு அல்லது அரசுக்குச் சொந்தமாக இருப்பதற்குப் பதிலாக வேலை செய்பவர்களே வேலையிடத்தை நிர்வாகம் செய்யும் ஒரு மாதிரியே தொழிற்றுறைச் சனநாயகம் என்று குறிப்பிடப்பட்டாலும், இதில் பிரதிநிதித்துவ வடிவங்களும் உள்ளன. பிரதிநிதித்துவத் தொழிற்றுறைச் சனநாயகமானது, நிர்வாகம், தொழிற் சங்கம், தொழிலாளர் ஆகியோருக்கு இடையாயான தொடர்புகளுக்கு உதவு முகமாகக் குழுக்களையும், ஆலோசனைச் சபைகளையும் போன்ற முடிவுகளை எடுக்கும் அமைப்புக்களை உருவாக்குவதையும் உள்ளடக்கும்.
குறிப்புகள்
தொகு- ↑ Rayton, D. (1972). Shop Floor Democracy in Action. Nottingham: Russell Press.
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளியிணைப்புக்கள்
தொகு- Industrial Democracy பரணிடப்பட்டது 2013-05-14 at the வந்தவழி இயந்திரம் in International Endowment for Democracy
- Economic and Industrial Democracy: An International Journal பரணிடப்பட்டது 2016-12-02 at the வந்தவழி இயந்திரம்