சுழிதிசைகாட்டி
சுழிதிசைகாட்டி என்பது சுழல் காட்டியைப் போன்றது. ஆனால் இது உண்மை வடக்கைக் காட்டும் ஒரு திசைகாட்டி ஆகும். சுழிதிசைகாட்டி, மின்னாற்றலில் இயங்கும் வேகமாகச் சுழலும் சில்லொன்றைப் பயன்படுத்துகிறது. பெரும்பாலும் கப்பல்களில் பயன்படும் இச் சுழிதிசைகாட்டிகள் காந்தத் திசைகாட்டிகளை விட இரண்டு சாதகமான அம்சங்களைக் கொண்டுள்ளன.
- இவை உண்மை வடக்கைக் காட்டுகின்றன. காந்தத் திசைகாட்டி காந்த வடக்கைக் காட்டுகிறது.
- சுழிதிசைகாட்டிகள் வெளிக் காந்தப் புலங்களினால் அதிகம் பாதிக்கப்படுவது இல்லை.
இயக்கம்
தொகுசுழிதிசைகாட்டி உண்மையில் ஒரு சுழல் காட்டியே. இது கட்டாத்தாங்கி ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள சில்லொன்றைக் கொண்டது. கட்டாத்தாங்கியில் பொருத்தப்பட்டிருப்பதால், சில்லின் அச்சு எந்தத் திசையிலும் திரும்புவதற்கு முடியும். இதன் அச்சு விண்துருவம் அல்லாத இன்னொரு திசையை நோக்கி இருக்கும்படி வேகமாகச் சுலழச்செய்யும்போது கோண உந்தக் காப்பு விதிக்கு அமைய அச்சின் திசை மாறாமல் இருக்கும். ஆனால் புவி சுழல்வதனால், புவியில் நிலையாக நின்று பார்க்கும் ஒருவருக்கு சுழிதிசைகாட்டியின் அச்சு 24 மணிகளுக்கு ஒருமுறை சுழல்வதுபோலக் காட்சி தரும். இவ்வாறு சுழலும் சுழிதிசைகாட்டி வழிகாட்டுவதற்குப் பயன்படாது. எனவே, இதன் அச்சு வடக்கைக் காட்டாமல் இருக்கும்போது அதன்மீது ஒரு முறுக்கு விசையைக் கொடுக்கக்கூடிய ஒரு பொறிமுறை தேவைப்படுகிறது.
ஒரு முறையில் உராய்வு விசை பயன்படுத்தப்படுகிறது. இம்முறையில், சுழிதிசைகாட்டியில் இருக்கும் சுழல் காட்டி வேண்டியபடி அதன் திசையை மாற்றிக்கொள்ள முடியாது.