பகுப்பு பேச்சு:உடற்கூற்றியல்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Mayooranathan
உடல் பகுதியை கூறு போட்டு பார்க்கும் இயல், உடற்கூறியல் ஆகும். ஆனால், இங்கு உடல் பகுதியை 'கூற்றுகளாக' என்றால், 'விவரங்களாக' என்ற பொருளை மட்டுமே குறிக்கிறது. அது பகுப்பு: தாவர அமைப்பியல் என்பதாகும். கூறுபோட்டு பார்த்தல் என்றால், உள்ளே அறுத்து பார்த்து விவரித்தல். எனவே, உடற்கூறியில் என்பதே பொருந்தும்.மேலும், காண்க : வார்ப்புரு:உடற்கூறியல் --≈ த♥உழவன் ( கூறுக ) 17:57, 18 நவம்பர் 2013 (UTC)
- இது உடலின் கூறுகளைப் பற்றிய இயல். எனவே உடற்கூறு + இயல். இங்கே வல்லொற்று இரட்டித்தல் என்பதற்கு அமைவாக "உடற்கூற்றியல்" என்றே வரும். வரலாறு + இல் --> வரலாற்றில், சோறு + இல் ---> சோற்றில் போன்றவையும் இப்படியே. வரலாறில், சோறில் என்று வராது. ---மயூரநாதன் (பேச்சு) 19:25, 18 நவம்பர் 2013 (UTC)