விக்கிப்பீடியா பேச்சு:இன்றைய சிறப்புப் படம்
இங்கிருந்த பரிந்துரைகளை விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பரிந்துரைகள் பக்கத்துக்கு நகர்த்தியுள்ளேன். இன்றைய சிறப்புப் படம் திட்டம் குறித்த கலந்துரையாடல்களுக்கு இப்பேச்சுப்பக்கத்தைப் பயன்படுத்தலாம்.--இரவி (பேச்சு) 05:40, 17 மே 2012 (UTC)
சிறப்புப் படங்களுக்கான வரையறைகள்
தொகுசிறப்புப் படங்களைத் தேர்ந்தெடுக்க சிறப்பான விதிகளை உருவாக்கினால் என்ன? பார்க்க விக்கி பொது.
குறைந்து இவையாவது பின்பற்றப்பட்டால் நன்று!
பொதுவிலிருந்து...
On the technical side, we have focus, exposure, composition, movement control and depth of field.
On the graphic elements we have shape, volume, colour, texture, perspective, balance, proportion, noise, etc.
--Anton (பேச்சு) 13:42, 11 சூன் 2012 (UTC)
- விக்கிப்பொது வேறு விக்கிப்பீடியா வேறு. விக்கிப்பொது என்பது படிமங்களுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டது. விக்கிப்பீடியாவில் சிறப்புப் படங்கள் இங்குள்ள கட்டுரைகளில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது அவற்றோடு தொடர்புள்ளதாக இருக்க வேண்டும். எனவே மேல் நீங்கள் தந்துள்ள நடைமுறைகளைப் பின்பற்றுவது கடினமாக இருக்கும். ஆங்கில விக்கியில் இவ்வாறான விதிகள் உள்ளனவா எனப் பார்க்க வேண்டும்.--Kanags \உரையாடுக 14:07, 11 சூன் 2012 (UTC)
- உண்மைதான் இரண்டும் வெவ்வேறானவைதான். ஆனால் என்னுடைய கருத்து படத்தின் சிறப்புத் தகுதி பற்றியது. ஆங்கில விக்கியிலும் அதே கருத்துத்தான் உள்ளது. பார்க்க: en:Wikipedia:WIAFP --Anton (பேச்சு) 14:25, 11 சூன் 2012 (UTC)
- அனைத்து விக்கியிலுமே முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்கான சிறப்புப் படத் தகுதரம் உள்ளது. அவை கடினமான நடைமுறையும் அல்ல. மற்றும் சிறப்புப் படம், தரத்தின் அடிப்படையில் காட்சிப்படுத்தப்படும் போது தான் தரமான படங்கள் தமிழ் விக்கியில் பதிவேற்றப்படும். அது தமிழ் விக்கிக்கு பதிவேற்ற படம் எடுக்கும் பயனர்கள் தரமான படங்களாக எடுக்க முயற்சிசெய்யவும் வழிவகுக்கும். --HK Arun (பேச்சு) 17:07, 22 நவம்பர் 2012 (UTC)
பயனர் பேச்சுப் பக்கத்தில் சிறப்புப் பட அறிவிப்புகள்
தொகுபோன வாரமும் இந்த வாரமும் இடம்பெற்றுள்ள சிறப்புப் படங்கள் குறித்து நண்பர்களுக்குத் தெரிவித்த போது மிகவும் மகிழ்ந்தார்கள். உங்களுக்குத் தெரியுமா, முதற்பக்கக் கட்டுரைகள் ஆகியவற்றுக்குப் பயனர்களின் பேச்சுப் பக்கத்தில் அறிவிப்பு இடுவது போல் இதற்கும் செய்வது இன்னும் பல பயனர்களை ஊக்குவிக்கும்--இரவி (பேச்சு) 06:10, 27 ஆகத்து 2012 (UTC)
இன்றைய சிறப்புப் படம் - பரிந்துரைகள்
தொகுவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பரிந்துரைகள் இங்குள்ள பல படங்கள் விமரிசனத்துக்கு உள்ளாக வேண்டியிருப்பினும் சில படங்களுக்கு மாத்திரம் கருத்திட்டுள்ளேன். புதிய பயனர்களைக் கவர வேண்டியது முக்கியம் எனினும், தரமற்றவற்றை முதன்மைப்படுத்துவது ஓர் பிழையான அணுகுமுறை என்றே கருதுகின்றேன். மூன்று வரிக்குக் குறைந்த கட்டுரைகள் அழிக்கப்படுமாயின், ஒளிப்பட அடிப்படை விதிகளை மீறிய படங்கள் இடம்பெறுவது எவ்வளவு தூரம் பொருத்தமானது. --Anton (பேச்சு) 15:29, 15 செப்டெம்பர் 2012 (UTC)
சிறப்பு படத்திற்கான தகுதிகள்
தொகுவிக்கி பொது கோப்பகத்தில் மட்டுமல்ல, அனைத்து விக்கிகளிலுமே சிறப்புப் படமாக முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்கான வரையரைகளை கொண்டுள்ளன. ஆனால் நமது விக்கியில் ஏற்கெனவே காட்சிபடுத்தப்பட்டவற்றிலும் சரி, தற்போது பரிந்துரை செய்யப்பட்டிருப்பவற்றிலும் சரி சிறப்புப் படத்திற்கான எந்த தகுதரத்தையும் கொண்டிராதவைகள் பல உள்ளன. அவற்றில் சில வெறும் குப்பைகளாகவே பார்க்க முடிகிறது. எனவே பரிந்துரை செய்வது ஒருபுறம் இருக்க, பரிந்துரைக்கப்படுபவை சிறப்புப் படத்திற்கான தகுதரம் கொண்டுள்ளதா என்பதை கருத்தில் கொண்டே ஒரு படத்தை முன்பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்கு முடிவெடுத்தல் வேண்டும்.--HK Arun (பேச்சு) 16:51, 22 நவம்பர் 2012 (UTC)
ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்ட படங்களை சிறப்புப் படமாக முன்பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்கான தரப்படுத்தலை Anton போன்ற துறைசார் பயனர்களுக்கு வழங்குவதே சரியானது. அதேவேளை காட்சிப்படுத்த முடியாத படங்களாயின் நிராகரிப்பதற்கான காரணிகளை (ஏனைய விக்கிகள் போல்) தரப்படுத்துவோர் வழங்க வேண்டும். அதுவே ஒரு படம் சிறப்புப் படமாக இடம்பெற என்ன செய்யவேண்டும் என ஏனைய பயனர்கள் அறிந்துக்கொள்ளவும், நிழற்படத் துறை சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ளவும் உதவும். போட்டோசொப்பிற்கு இணையன கிம்ப் போன்ற மென்பொருள்கள் படங்களை எளிதாக மெருகேற்ற உதவும்.--HK Arun (பேச்சு) 18:12, 22 நவம்பர் 2012 (UTC)