விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பரிந்துரைகள்


பாலாவின் படங்கள்

தொகு

பயனர்:Balurbala#எனது பங்களிப்புகள்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:44, 10 சூன் 2014 (UTC)[பதிலளி]


பரிந்துரைகள்

தொகு

 

சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422 முதல் 1463 வரை தென்காசியை தலைநகரமாகக் கொண்ட பாண்டியர்களுள் முதல் மன்னனாவான். இவனுக்க்கு பின் தென்காசியை ஆண்ட பாண்டியர்கள் தென்காசி பாண்டியர் என்று அழைக்கப்படுகின்றனர். தன் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட தென்காசி பெரிய கோவில் கோபுரத்தை கட்டுவிக்கும் பணியை முடிக்க முடியாது என்றறிந்தவுடன் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களும் அதற்கு உதவ வேண்டும் என்று எண்ணம் கொண்டான். அதன்படி இங்கு வரும் பக்தர்கள் அனைவரின் காணிக்கையையும் ஏற்று அவர்களின் பாதம் பற்றி வணங்குவேன் என்று தான் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக தன் உருவத்தை கோயிலின் வாசல் படிகளிலேயே பக்தர்கள் கால்கள் படும்படி பதித்துக் கொண்டான் சடைவர்மன் பராக்கிரம பாண்டியன். (படம்)


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

மேலுள்ள படத்துக்கு முந்திய பதிப்பின் போது தரம் சரி இல்லாதலால் நிராகரிக்கப்பட்டது. அப்டேட் செய்யப்பட்ட மேலுள்ள தற்போதைய படத்துக்கு இன்னும் கருத்து வரவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:51, 19 மே 2014 (UTC)[பதிலளி]

சிறிய திருத்தங்களைச் செய்துள்ளேன். தற்போதைய படம் தமிழ் விக்கிக்கு பொருத்தமானது. ஆதரவளிக்கிறேன்.   ஆதரவு--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:16, 20 மே 2014 (UTC)[பதிலளி]
விக்கிமீடியா காமன்சிலிருந்து சிறப்புப் படங்களை எடுப்பது நல்லது என்பது படங்களின் தெரிவுக்கான வரையறைகளில் ஒன்று. விடயத்தின் அடிப்படையினைத் தவிர்த்து ஒளிப்பட சிறப்பினை நோக்குமிடத்து இப்படம் சிறப்புப்படமாகாது என்பது என் கருத்து. அடிப்படை விதிகளுக்கப்பால், ஓர் படத்தினைப் பார்த்ததும் "ஆகா" என்ற உணர்வு ஏற்பட வேண்டும். இப்படம் சிறப்புப் படமா இல்லலையா என்பதை அறிய இங்கு பரிந்துரைத்துப் பாருங்கள். --AntonTalk 15:51, 20 மே 2014 (UTC)[பதிலளி]
வரையறைகள் உருவாக்க முதல் எங்கு உரையாடிநீர்கள்?? இணைப்பை தந்தால் உதவியாய் இருக்கும். நன்றி.--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 10:07, 21 மே 2014 (UTC)[பதிலளி]
கேள்விக்கு அர்த்தம் என்ன? தெளிவாக குறிப்பிடவும். மேலும், இக்கேள்வி இப்பட பரிந்துரை சாராதிருப்பின், குறித்திட இடத்தில் கேள்வி கேட்கவும். யாராகிலும் பதில் அளிக்கலாம். --AntonTalk 16:01, 21 மே 2014 (UTC)[பதிலளி]
--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:14, 21 மே 2014 (UTC)[பதிலளி]


ஜெய்சல்மேர் கோட்டை

தொகு

 

மஞ்சள் மணற்கற்களால் கட்டப்பட்ட ஜெய்சல்மேர் கோட்டைச் சுவர்கள் பகலில் பழுப்பு மஞ்சள் நிறத்திலும், மாலையில் தங்க நிறத்திலும் காட்சியளிக்கும். இக்கோட்டை மூன்றடுக்கு வரிசையில் அமைந்த சுவர்களால் கட்டப்பட்டது. இதன் வெளிப்புறச் சுவர் திடமான கற்களைக் கொண்டு கட்டப்பட்டது. கோட்டையின் இரண்டாவது அல்லது நடுவில் பாம்பு போன்று வளைந்து சுருண்ட சுவர்கள் உள்ளது. கோட்டையிலிருந்து நகரத்தைக் கண்காணிக்க இக்கோட்டையின் உச்சியில் 99 கண்காணிப்பு கோபுரங்கள் உள்ளது.

ஆம்பர் கோட்டை

தொகு
ஆம்பர் கோட்டையின் அகலப்பரப்புக் காட்சி

ஆம்பர் கோட்டை பல திரட்டப்பட்ட பாதைகளுடன் கூடிய நுழைவாயிற் கதவுகளுடனும் கூடியது. இக்கோட்டையில் பல அரண்மனைகளும், கோட்டையைச் சுற்றி ஏரியும் உள்ளது. கோட்டைக்குள் மணற்கற்களாலும், பளிங்குக் கற்களாலும் கட்டப்பட்ட அரண்மனை திவானி ஆம் எனப்படும் பொது மக்கள் கூடும் அரசவை, அரச குடும்பத்தினர் மட்டும் கூடும் திவானி காஸ் எனப்படும் அரண்மனை, கண்ணாடி மாளிகை எனப்படும் ஜெய் மந்திர் , செயற்கை நீரூற்றுகளுடன் கூடிய மாளிகை என நான்கு அழகியல் சுற்றுப்புறத்தைக் கொண்ட மாளிகைகளுடன் கூடியது என்பதால் இக்கோட்டையை ஆம்பர் கோட்டை எனப்பெயராயிற்று.

சூரிய குளத்தின் பெரிய செவ்வக வடிவில் பல அடுக்குகளுடன், நூற்றுக்கணக்கான படிக்கட்டுகளுடன் கூடிய ஆழமான குளம். இச்சூரிய குளம் 53.6 x 36.6 மீட்டர் நீள, அகலம் கொண்டது. சூரிய குளத்தின் நான்கு மூலைகளில், நான்கு முகப்பு மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. முகப்பு மேடைகளில் சிறு பிரமிடு வடிவத்தில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சூரிய குளம், நிலக் கணக்கியல் (Geometry) கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அழகிய வேலைப்பாடுகள் கொண்ட இந்துக் கடவுளர்களின் 108 சிற்பங்கள் படிக்கட்டுகளுக்கு இடையே செதுக்கப்பட்டுள்ளன.

 
இராணியின் கிணறு

இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் பதான் நகரத்தில், பல அடுக்குகளுடனும், நூற்றுக்கணக்கான படிகளுடன் கூடிய அழகிய, ஆழமான இக்கிணற்றை சோலாங்கி குல முதலாம் பீமதேவனின் நினைவாக, அவரது பட்டத்து இராணி நிறுவியதால் இக்கிணற்றுக்கு இராணியின் கிணறு பெயராயிற்று. இக்கிணற்றின் பக்கவாட்டுச் சுவர்களிலும், தூண்களிலும் 800க்கும் மேற்பட்ட அழகிய சிற்பங்கள் உள்ளது.

 
தராவர் கோட்டை

பாகிஸ்தானின், சோலிஸ்தான் பாலைவனத்திலுள்ள இக்கோட்டையின் சுற்றளவு 1500 மீட்டரும், உயரம் முப்பது மீட்டரும் கொண்டது. நீண்ட சதுர வடிவிலான இக்கோட்டையின் மீதுள்ள நாற்பது காவல் கோபுரங்களை (கொத்தளம்) பாலவனத்தின் பல கிலோ மீட்டர் தொலவிலிருந்தும் சாதராணமாக காணலாம். இக்கோட்டை இராஜபுத்திர மன்னர் இராய் சச்சா என்பவரால் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.