வெட்டுமானக் கோயில்

தனிப் பாறை ஒன்றிலிருந்து தேவையற்ற பகுதிகளை வெட்டி எடுப்பதன் மூலம் அமைக்கப்படும் கோயில் வெட்டுமானக் கோயில் என்று அழைக்கப்படுகின்றது. கற்களை அடுக்கிக் கோயில்களைக் கட்டும் முறை அறிமுகமாவதற்கு முன்னர் வெட்டுமானக் கோயில்கள் அமைக்கப்பட்டன. கற்களை அடுக்கிக் கட்டும் கோயில் கட்டுமானக் கோயில் ஆகும். வெட்டுமானக் கோயில்களை அமைப்பது கடினமானதும், அமைப்பதற்கு அதிக காலம் எடுப்பதுமானதும் ஆகும். இக்கோயில்களை எல்லா இடங்களிலும் அமைக்க முடியாது. ஏற்ற பாறைகள் இருக்கும் இடங்களில் மட்டுமே அமைக்க முடியும். அமைத்துக்கொண்டிருக்கும்போது ஏதாவது பிழைகள் ஏற்பட்டால் முழுக் கோயிலுமே பயன்படாதது ஆகிவிடும்.

கழுகுமலை வெட்டுவான் கோயில் எனப்படும் வெட்டுமானக் கோயில்

எடுத்துக்காட்டுகள்

தொகு

கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோயில் வெட்டுமானக் கோயிலுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. ஒரு பகுதியில், 7.50 மீட்டர் ஆழத்துக்குச் சதுரமாக வெட்டி எடுத்து, அதன் நடுப்பகுதியைக் கோவிலாகச் செதுக்கி உள்ளனர்.[1] 8 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட இக் கோயில் முற்றுப் பெறாத நிலையிலேயே உள்ளது.[2]

குறிப்புகள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெட்டுமானக்_கோயில்&oldid=3393643" இலிருந்து மீள்விக்கப்பட்டது