பயனர் பேச்சு:Mayooranathan/தொகுப்பு 3
உங்கள் படம்
தொகுஉங்கள் படம் ஒன்று சற்று கோனலாக இருந்ததால், திருத்தி மீள்பதிவேற்றம் செய்துள்ளேன். பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.இப் படம்.--செல்வா 22:20, 2 ஜனவரி 2008 (UTC)
- நன்றி செல்வா. இப்பொழுது படம் சிறப்பாக உள்ளது. மயூரநாதன் 02:49, 3 ஜனவரி 2008 (UTC)
1000 கட்டுரைகள்! பாராட்டுகள்!!
தொகுநீங்கள் விரைவில் 1000 கட்டுரைகள், 1000 அருமையான கட்டுரைகள், 1000 அடிப்படையான கட்டுரைகள் எழுதி அரிசெயல் நிகழ்த்த உள்ளீர்கள்! என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள்! 13,000 கட்டுரை எட்டும் முன்னர் இது நிகழும் போல் தெரிகின்றது :) --செல்வா 15:23, 4 ஜனவரி 2008 (UTC)
செல்வா, இது 2006க்குப் பிறகு எழுதிய கட்டுரைகள் எண்ணிக்கையே. அதற்கு முன்பு எழுதியவை மட்டுமே பல நூறு கட்டுரைகள் இருக்கும். தமிழ் விக்கிபீடியாவுக்கு மயூரனாதன் ஒரு முன்மாதிரிப் பங்களிப்பாளர். என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். --ரவி 15:42, 4 ஜனவரி 2008 (UTC)
- செல்வா, ரவி, உங்களுக்கு எனது நன்றிகள். 1 பெப்ரவரி 2006 இல் எடுத்துக்கொண்ட இந்த 1000 கட்டுரைகள் என்ற இலக்கை முன்னரே எட்டிவிடலாம் என எண்ணியிருந்தேன். எனினும் இந்த மாத முடிவுக்குள் இந்த இலக்கை எட்டிவிடலாம் என்ற நம்பிக்கை உண்டு. மயூரநாதன் 16:54, 4 ஜனவரி 2008 (UTC)
தானுலாவி
தொகுஇன்று தைப்பொங்கற் திருநாளில் விக்கிபீடியாத் தானுலாவியைச் சோதனை முயற்சியாக பேச்சு:விக்கிபீடியா இல் மாற்றங்களை உண்டு பண்ணியுள்ளேன். நான் செய்தது தவறு என்றால் தயவுசெய்து மீள்வித்துவிடவும். ஏதாவது மேம்படுத்தவேண்டும் என்றாலும் தயங்காமற் குறிப்பிடவும். ஆட்சேபனை இல்லை என்றால் எனது தானியங்கிக்கு umapathybot இற்கு பாட் தகுதியளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். --உமாபதி \பேச்சு 19:41, 14 ஜனவரி 2008 (UTC)
வில்
தொகுவில் என்றால் நீர் உள்ள இடம் என்று நினைக்கின்றேன் (குளத்தைவிடச் சிறியதாக இருக்கவேண்டும் என நினைக்கின்றேன்) சரியா தெரியவில்லை. கொக்குவில், கோண்டாவில் போன்ற பகுதிகளை இலங்கை நில அளவைத் திணைக்களம் பிரசுரித்துள்ள படத்தில் இவ்வாறான ஒரு புவியியற் Feature எதனையும் காணவில்லை. இவை முன்னர் இருந்தனவா?. வவுனியாவில் அநேகமான இடங்கள் குளம் என்று முடிவடையும் அங்கு அநேகமாக ஒரு குளம் இருக்கும். அறியும் ஆர்வத்தில் கேட்கின்றேன். தெரிந்தால் நேரம் கிடைக்கும் போது தெரியப்படுத்தவும். நன்றி. --உமாபதி \பேச்சு 17:09, 30 ஜனவரி 2008 (UTC)
- சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் வில் என்பதற்கு pond என்னும் பொருள் தரப்பட்டுள்ளது ஆனால் அதன் அளவு குறித்து எதுவும் தரப்படவில்லை. இலங்கை இடப்பெயர் ஆய்வு என்னும் தலைப்பில் நூல் எழுதிய கலாநிதி இ. பாலசுந்தரம், வில் என்பது பெரிய குளத்தைக் குறிப்பதாக எழுதியுள்ளார். பெரிய அளவுத் திட்டத்திலான யாழ்ப்பாணத்தின் நிலப்படத்தில் பல குளங்களைப் பார்க்க முடியும். வன்னிப் பகுதியில் உள்ளவை போல் இவை பெரிய குளங்கள் அல்ல. மற்ற இடங்களைப்பற்றி உறுதியாகச் சொல்ல எனக்குத் தெரியவில்லை. ஆனால் கொக்குவிலில் இப்பொழுதும் குளம் உண்டு. முற்காலத்தில் இது மிகவும் பெரிதாக இருந்தது என்று கூறப்படுகின்றது. மயூரநாதன் 18:36, 30 ஜனவரி 2008 (UTC)
- நன்றி மயூரநாதன், நில அளவைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட படத்தில் ஏனைய நந்தாவில் இற்கு அருகே ஒரு குளம் போன்றGeographic Feature இருப்பதை அவதானித்துள்ளேன். மிருசுவில், உடுவில் போன்ற இடங்களையும் நாளை உற்றுப் பார்த்துவிட்டு மிகுதியை எழுதுகின்றேன். --உமாபதி \பேச்சு 18:44, 30 ஜனவரி 2008 (UTC)
- மேலும் உன்னிப்பாக அவதானித்ததில் வில் என முடைவடையும் பல இடங்களில் நீர்நிலைகள் போன்ற ஓர் புவியற் கூறு காணப்படுகின்றது. --உமாபதி \பேச்சு 15:45, 1 பெப்ரவரி 2008 (UTC)
உரும்பிராய்
தொகுஉங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் உரும்பராய் கட்டுரையை உரும்பிராய் ஆக வழிநடத்தவுள்ளேன் (Overdirect). ஆட்சேபனை இருப்பின் நேரம் கிடைக்கும் போது பேச்சு:உரும்பராய் இல் தெரிக்கவும். --உமாபதி \பேச்சு 15:45, 1 பெப்ரவரி 2008 (UTC)
VinodhBOT - மன்னிக்கவும்
தொகுஏதேனும் அசௌகரயங்கள் நேர்ந்திருப்பின் என்னை மன்னிக்கவும். இந்த காரணத்தினால் தான் checkimages python Scriptyஐ செயல்படுத்துவதை நிறுத்தி விட்டேன். இந்த Bot வார்ப்புரு:image source என்ற வார்ப்புருவை இடுகிறது.அந்த வார்ப்புருவை சுருக்கினால். பிரச்சினை தீரும் என நினைக்கிறேன். முடிந்தால் அந்த வார்ப்புருவை தகுந்த அளவுக்கு சுருக்குமாறு வேண்டுகிறேன் βινόδ வினோத் 16:25, 3 பெப்ரவரி 2008 (UTC)
ஆங்கில விக்கி இணைப்பு கொடுத்திருந்தாலும் Python Script அதை கண்டு கொள்ளாமல் போனதாலும்(பெரும்பாலானாவை நீங்கள் பதிவேற்றியவை) பயன்ர் பக்கத்தை Mess up செய்ததாலும் அந்த Scriptஐ செயல்படுத்துவதை இன்று மதியமே நிறுத்திவிட்டேன். ஆங்கில விக்கியின் வார்ப்புருவை அப்படியே மொழிப்பெயர்தது User Page Mess upக்கு ஒரு காரணம் என நினைக்கிறேன். முன்னர் கூறியது போல் வார்ப்புருவை சுருக்கினால் பாதி பிரச்சினை தீரும். அதே வேளையில், உமாபதி முன்பு கூறியது போல் delete image என்பதற்கு பதிலாக Defaultஆக fair useஐ இட்டால் மீதி பிரச்சினை தீர்ந்து விடும்.
ஆங்கில விக்கி இணைப்பு இருக்கும் படிமங்களில் அதே தானியங்கி மூலம் அந்த இணைப்பில் இருந்து தகுந்த வார்ப்புருவை தமிழ் விக்கிப்பீடியாவுக்கு தன்னியக்கமாக இட முடியுமா என முயன்று பார்க்கிறேன்.இப்படிச்செயதால், நாம் Fair Use ஆக Assume செய்த பல படிமங்களுக்கு தகுந்த வார்ப்புருக்கள் கிடைத்து விடும். மீதி படிமங்களுக்கு பதிவேற்றியவர்கள் தான Fair Useஐ நீக்கி விட்டு சரியான வார்ப்புருவை இட வேண்டும். நீண்ட காலம் ஆகியும் Fair-use ஐ Replace செய்யப்படவில்லை என்றால், Manual ஆக Review செய்து படிமத்தை நீக்கலாம்.
இது குறித்து தங்களுடைய கருத்துகளை தெரிவிக்கவும் நன்றி βινόδ வினோத் 16:47, 3 பெப்ரவரி 2008 (UTC)
மீண்டும் மன்னிக்கவும், இது Python Script கோளாறு, அது நீங்கள் கொடுத்த Commentஐ கவனிக்கவில்லை, இதை முன்னரே குறிப்பிட்டுவிட்டேன் அதன் Source Codeஐ ஆராய்ந்ததில் {{enwiki}} (மொழிப்பெயர்க்கப்படாதது) போன்ற வார்ப்புருக்களை மட்டும் தான் அது ஆங்கில விக்கி இணைப்பாக கருதி அதை ஏற்றுக்கொள்கிறது, உங்களுடையதை தவறுதலாக அது படிம வார்ப்புருவை இல்லாததாக தெரிவித்திருக்கிறது. அதை கவனித்த பின்னரே இதை நிறுத்தினேன். எனவே தயவு செய்து ஏதேனும் என்னால் தவறுகள் நேர்ந்திருப்பின் அருள் கூர்ந்து மன்னிக்க வேண்டுகிறேன். தானியங்கியில் தகுந்த மாற்றங்களை செய்த பிறகே மீண்டும் இயக்க உள்ளேன்.
தானியங்கியை பயன்படுத்தி தாங்கள் கொடுத்துள்ள Commentஆக கொடுத்துள்ளவற்றை {{enwiki}} வார்ப்புருவாக மாற்றிவிடுகிறேன். இனி நீங்கள் பதிவேற்றம் செய்யும் படிமங்களுக்கு இந்த வார்ப்புருவை இட்டால் போது தானாக ஆங்கில விக்கி இணைப்பு வந்து விடும். தானியங்கியை இதை ஏற்றுக்கொண்டு விடும். என்னால் நடந்த தவறுகளுக்கு மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் βινόδ வினோத் 17:04, 3 பெப்ரவரி 2008 (UTC)
I have Cleared up the Mess created my Bot removing the messages and replacing the comment by the {{enwiki}} . So if you are uploading any images from English Wiki, Please use the {{enwiki}} tag, as it would point to the English Image Automatically. Sorry Again, for messing up your user page with my bot.
I shall not run the Checkimages Script again hereafter. Thank you βινόδ வினோத் 17:37, 3 பெப்ரவரி 2008 (UTC)
BOT Changes
தொகுAs said above, I have Changed the வார்ப்புரு:image source, and drasatically reduced the amount of text. Also, Instead of placing the Delete tag, the fair use tage would be used(This was suggested by Umapathy). For the Images, which has the en wiki link in the comments, section shall be converted to {{enwiki}} i.e template:enwiki by using bot(Either AWB or Python) shortly and hencee will be spared by the bot. All others will receive Copyright warning with their images tagged with fair use temporarily, until the uploaders tag it with suitable templates. Then we can review it and remove the unnneeded pics given a fair amount of time. If you have any Objection please tell. βινόδ வினோத் 17:53, 3 பெப்ரவரி 2008 (UTC)
நன்றி. வினோத். மயூரநாதன் 02:54, 4 பெப்ரவரி 2008 (UTC)
- வினோத், மயூரதன் கூறியது போல, தானியங்கிகள் மூலம் படிமங்களை நீக்குவது சிறந்ததாக படவில்லை. தவியில் உள்ளப் படிமங்களில் பல ஆங்கில விக்கியில் இருந்து எடுக்கப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ளன. தொடக்கத்தில் காப்புரிமைப் பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை எனவே படிமங்களை மட்டும் காப்புரிமை தகவல் இன்றி பதிவேற்றினோம். பின்னர் படிப்படியாக படிமங்களுக்கு காப்புரிமை விபரங்களை இணைத்தோம். தற்போது பதிவேற்றும் போதே காப்புரிமைத் தகவலை கட்டாயப் படுத்துகிறேம். மயூரதன் உட்பட இப்போது அடிக்கடி இங்கே வராத தொடக்கக் கால பயனர்கள் தவிக்கு ஆற்றிய பணி அளப்பரியது. எனவே மயூரதன் போன்றப் பழைய பயனர்கள் 2007 டிசம்பர் மாததுக்கு முன்னர் பதிவேற்றிய படிமங்களின் காப்புரிமையை சரிபார்த்தல் சரியான வார்ப்ப்ருவை இடல், காப்புரிமை மீரப்பட்டிருந்தால் வேறு பொருத்தமான படிங்களை பதிவேற்றல் முதலிய படிமம் தொடர்பான எல்லா கடமைகளையும் நானே ஏற்றுச் செய்கிறேன். வினோத் பொறுமைக் காக்க வேண்டுகிறேன். படிமம் தொடர்பாக இறுக்கமான நடைமுறையை 2008 ஜனவரி 1 முதல் பதிவேற்றும் படிமங்களுக்கு மட்டும் கைக்கொள்ளலாம்.
- {{enwiki}}:காப்புரிமைக்காக ஆங்கில விக்கியை பார்க்கச் சொல்வது ஏன்? இதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.படிம வார்ர்புருவுக்கு ஆங்கில விக்கியை பார்க்கச் சொல்வதாக வைத்துக் கொள்வோம்.
- ஆங்கிலம் தெரியாத தவி பயனர்கள் (எ+கா:ஐரோப்பிய) அதனால் பயனடைய மாட்டார்கள்.
- அட்ரிபியுசன் படிமங்கள், நியாயாமான பயன்பாட்டுப் படிமங்கள் என்பவற்றில் படிமம் உள்ள இடத்தில் கட்டாயம் வார்ப்புரு இடப்படவேண்டும் என்பது காப்புரிமையின் ஒரு விதி?
முக்கியமான விடயமாதலால் அதிகம் எழுத வேண்டி வந்துவிட்டது, மயூரதன் என்னைப் பொறுக்க வேண்டும் ;).--Terrance \பேச்சு 03:12, 4 பெப்ரவரி 2008 (UTC)
திருகோணமலை பட்டினமும் சூழலும்
தொகுதிருகோணமலை பட்டினமும் சூழலும் கட்டுரையில் கருத்துக்களை வரவேற்கின்றேன். பயனர் பேச்சு:உமாபதி#திருகோணமலை பட்டினமும் சூழலும் இல் எழுத்துப் பிழைகள் இலக்கணப் பிழைகளைத் திருத்தி உதவ இயலுமா? வேறு தகவல்களைச் சேர்க்கவேண்டாம். இது முடிந்தவுடன் 30+ கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவில் வரும். அவை சரியென்றால் மேலும் தொடரலாம். --உமாபதி \பேச்சு 05:51, 10 பெப்ரவரி 2008 (UTC)
கருத்துக்களுக்கும் திருத்தங்களுக்கும் நன்றி. மாதிரிக் கட்டுரையை மாற்றியுள்ளேன் சரியென்றால் மிகுதியை மாற்றிவிடுவோம். இன்னமும் பல புதிய கட்டுரைகள் இதே பாணியில் வரவிருக்கின்றன. --உமாபதி \பேச்சு 20:22, 10 பெப்ரவரி 2008 (UTC)
:படிமம்:Thalassery-Fort.jpg இன் காப்புரிமை என்ன?
தொகுபடிமம்:Thalassery-Fort.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.
இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேவிகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 16:22, 18 பெப்ரவரி 2008 (UTC)
கட்டுரைகளை இணைத்தல்
தொகுஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம், திருக்கச்சியேகம்பம் இவையிரண்டும் ஒரே கோயில் போலிருக்கிறது. அவற்றை இணைக்கலாமா? கோபி 03:45, 13 மார்ச் 2008 (UTC)
- இணைக்கலாம். மயூரநாதன் 16:27, 13 மார்ச் 2008 (UTC)
கலைச்சொல் - திணைக்குடி
தொகுமயூரநாதன், Native என்பதற்கு எல்லா இடங்களிலும் பொருந்தி வரும் சொல் இருக்குமா என அறியேன். இச்சொல்லை மக்கள் இனத்தின் ஒருபகுதியைக் குறிக்கும்பொழுது பழங்குடி, தொல்குடி, ஆதிவாசி, முதற்குடிகள் முதலான சொற்களைக் கேட்டிருக்கின்றேன். திணைக்குடி என்பதும் பொருந்தும் சொல்லாகத்தான் தெரிகின்றது. ஆங்கிலத்தில் aborigines, native people, autochthonous, first nations people என்று பலவாறு கூறுகின்றனர். இவற்றுள் பொருள் வேறுபாடுகள் குறைவு என்றே நினைக்கிறேன், என்றாலும் துல்லியமாய் இது பற்றி எண்ணி, வேறுபாடுகள் இருப்பின், அதற்கேற்றார்போல தமிழில் ஆக்க வேண்டியிருக்கும். திணைக்குடி என்பது பொருந்தும் ஆனால் எத்தனைப் பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லை.--செல்வா 14:40, 14 மார்ச் 2008 (UTC)
இனங்கள் தொடர்பான கட்டுரைகள்
தொகுஇனங்கள் தொடர்பான பல கட்டுரைகளை எழுதி வருகிறீர்கள். மேற்கண்டவையும் கவனத்தில் கொண்டால் நன்று. இந்த இனங்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக தமிழர் கட்டுரையில் குறிபிடப்பட்டுள்ளது. அதைப் பற்றிய குறிப்புகளும் கட்டுரையில் சேர்த்தால் நன்று. நன்றி. --Natkeeran 19:36, 14 மார்ச் 2008 (UTC)
- எழுதலாம். தற்போது நான் இலங்கை, இந்தியாவுக்கு வெளியில் உள்ள இனங்களில் கவனம் செலுத்துகிறேன். இது நமது பகுதிகள் தொடர்பிலேயே ஏராளமான கட்டுரைகள் இருப்பதைச் சமப்படுத்த எடுக்கும் முயற்சியாகும். இவ்வகையில் 50 கட்டுரைகள் வரை எழுத எண்ணியுள்ளேன். அதன் பின்னர் நீங்கள் குறிப்பிட்டுள்ளவை பற்றியும் கவனிக்கிறேன். மயூரநாதன் 19:53, 14 மார்ச் 2008 (UTC)
கட்டிடவியல் கலைச்சொற்கள்
தொகு- கட்டிடவியல் கலைச்சொற்கள் தொகுத்து வைத்தால் நன்றாக இருக்கும். நன்றி. --Natkeeran 16:50, 15 மார்ச் 2008 (UTC)
ஆயிரவர் பட்டம்
தொகுமயூரநாதன், நீங்கள் இடையறாது தமிழ் விக்கிக்குப் பணியாற்றி 1000 கட்டுரைகளுக்கும் மேல் உருவாக்கி பேராக்கம் தத்துள்ளீர்கள். என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்! இங்குள்ளோர் யாவருக்கும், இனி வருவோருக்கும் மிகச் சிறந்த வழிகாட்டியாகவும், முன் சான்றாளராகவும் இருக்கின்றீர்கள். உங்களுக்கு உடன்பணியாளராகிய நான் ஆயிரவர் என்னும் பட்டம் தந்து என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். வாழ்க உங்கள் நல்லுள்ளம், நற்பணி!
அன்புடன் --செல்வா 16:44, 18 மார்ச் 2008 (UTC)
- செல்வா உங்கள் ஊக்குவிப்புக்கு எனது நன்றிகள். கடந்த நான்கரை ஆண்டுகளாகத் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்புச் செய்வது மனதுக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் தரும் ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. இதற்கு எல்லா உடன் பங்களிப்பாளர்களினதும் ஊக்குவிப்பு முக்கியமான காரணம் ஆகும். இதற்காக எல்லோருக்கும் எனது நன்றிகள். மயூரநாதன் 17:09, 18 மார்ச் 2008 (UTC)
- மயூரநாதன் உங்கள் பணி மேன்மேலும் தொடர எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்--கலாநிதி 18:15, 18 மார்ச் 2008 (UTC)
7 கோடி தமிழ் மக்களில் உங்களைப் போன்றோரை கூகுள் கொண்டு தேடினாலும் கண்டுபிடிப்பது அரிது :) !! இலட்சாதிபதியும் ஆக வாழ்த்துகிறேன் !! --ரவி 20:48, 18 மார்ச் 2008 (UTC)
- மயூரநாதன், தமிழ் வளர்ச்சியின் காலக்கோடு என்ற கட்டுரை பின்னாளில் எழுதப்படும்போது உங்கள் பெயர் ஒரு முதன்மையான இடம் பெறும். -- சுந்தர் \பேச்சு 03:20, 19 மார்ச் 2008 (UTC)
உங்களது அயராத பங்களிப்பு ஏனையோர் இணையவும், பின்பற்றவும் முன்னுதாரணமாயிருக்கிறது. வாழ்த்துக்களும் நன்றிகளும். கோபி 09:59, 19 மார்ச் 2008 (UTC)
கருத்து தேவை
தொகுபார்க்கவும்: பேச்சு:இராச்சியம் (உயிரியல்) --செல்வா 20:11, 23 மார்ச் 2008 (UTC)
பறவைகளின் அலகுகள் பற்றி
தொகுமயூரநாதன், Flamingo என்பதை பி. எல். சாமி பூநாரை என்று கூறுவார். அத்தகு பறவைகள் நீரும் சேறுமாக உள்ள பகுதியில் அலகை உள்ளே விட்டு இங்கும் அங்குமாக அளைந்து தன் உணவை உண்ணுகின்றது. Filter என்பதை நேரடியாக மொழிபெயர்த்தால் வடிகட்டி அலகு என்று வரும். வேறுவிதமாகக் சொல்லுவதென்றால் சலி அலகு (சலித்தல் என்றாலும், இங்கும் அங்குமாக ஆட்டி வகைப்படி பிரித்து எடுப்பதைக் குறிக்கும்). இந்த சலித்தல் என்பதில் இருந்து சல்லடை (sieve) என்னும் சொலும் பெறுகின்றோம். வடிகட்டி, சல்லடை போன்ற சொற்கள் உண்மையிலேயே இங்கு பறவை அலகுகளுக்குப் பொருந்துமா என அறியேன். இன்னும் சற்று தீர எண்ணியபிறகே சொல்ல முடியும். --செல்வா 19:40, 31 மார்ச் 2008 (UTC)
மொழிபெயர்ப்பு
தொகுSpecial:Translate, அறிமுகம் மொழிபெயர்ப்புகளில் பல பிழைகள் இங்கே ஏற்கனவே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சிலவற்றைத் திருத்தியுள்ளேன். நான் செய்த மொழிபெயர்ப்புகள் இன்னமும் சரிபார்க்கப்படவில்லை.--Terrance \பேச்சு 04:17, 6 ஏப்ரல் 2008 (UTC)
மயூரநாதன், வணக்கம். சோதிடம் கட்டுரையின் வரலாற்றிலிருந்து, அக்கட்டுரையை நீங்கள் தொடங்கியதாக தெரிகின்றது. இக்கட்டுரையை மேலும் செம்மை படுத்தவும், வளர்க்கவும் விரும்புகிறேன். இக்கட்டுரையில் பணியாற்றுவதின் மூலம், சோதிடம் குறித்து மேலும் கற்றுக்கொள்ள இயலும் என்று எண்ணுகின்றேன். இக்கட்டுரை குறித்து உங்களிடம் மேலும் தகவல்கள் இருந்தால் அருள்கூர்ந்து எனக்கு தெரிவிக்கவும். நன்றி. பத்மன் 03:00, 7 ஏப்ரல் 2008 (UTC)
- இது குறித்து ஏப்ரல் 15 ஆம் தேதிக்குப் பின்னர் எழுதுகிறேன். மயூரநாதன் 13:22, 7 ஏப்ரல் 2008 (UTC)
நூலகத் திட்டம்
தொகுநீங்கள் நூலகத் திட்டம் பற்றி அறிவீர்கள். அதில் தற்போது ஏறத்தாழ 1600 நூற்கள் பதிவேற்றப்பட்டுவிட்டன. அடுத்த கட்ட செயற்திட்டமும் (+1000) தொடங்கி விட்டது. இந்த நூற்களை பரந்த வாசிப்பு அறிமுகப்படுத்தும் நோக்கில் ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அவ்வப்பொழுது சில இடுக்கைகள் (5-10 வரிகள்) எழுதி பங்களித்தால் நன்றாக இருக்கும். எ.கா நீங்கள் படித்த நூற்களின் அறிமுகங்கள் தரலாம். ஈழத்து இலக்கியம் பற்றியும் இடுக்கைகள் தரலாம்.
மயூரநாதன், உங்களின் கவனம் விக்கிப்பீடியாவுக்கு கட்டுரைகள் ஆக்குவதே என அறிவேன். இருப்பினும் உங்களுக்கு ஈழத்து படைப்புகள் நோக்கி நல்ல பரிச்சியம் இருக்கும். அத்தோடு சில ஆக்கங்கள் ஏற்கனவே உங்களிடம் இருக்கலாம். எனவே பங்களித்து உதவினால் நன்று. நன்றி.
--Natkeeran 16:35, 3 மே 2008 (UTC)
- நற்கீரன் நீங்கள் எனது கலந்துரையாடல் பக்கத்தில் விட்ட குறிப்பைப் பார்த்தேன். நூலகம் திட்டம் ஒரு பயனுள்ள நல்ல திட்டம். நிச்சயமாக என்னால் இயன்றதைச் செய்வதற்கு ஆர்வம் உண்டு. உடனடியாக ஏதும் செய்யமுடியுமா தெரியவில்லை. முயல்கிறேன். மயூரநாதன் 19:02, 3 மே 2008 (UTC)
- ஆர்வத்துக்கு நன்றி. பல்வேறு வழிகளில் பங்களிக்கலாம். காப்புருமை காலவதியான நூற்களை பெற்று தரலாம், அனுமதி பெற்று நூற்களை வழங்கலாம், நூற்களைப் பதிவெற்றுவதில், நூலகத்தை நிர்வாகிப்பதில் பங்கு கொள்ளலாம், வலைப்பதிவுக்கு ஆக்கங்களை தரலாம். அவசரப்படத்தேவையில்லை. இது ஒரு கூட்டு வலைப்பதிவே. இதன் நோக்கம் பயனர் வட்டத்தை விரிவாக்குவதே. தற்போதைக்கு விமர்சனங்கள் தவர்க்கப்படுகின்றன. நூல் அறிமுகம்கள், இலக்கிய கதையாடல்கள்/மதிப்பீடுகள், எழுத்தளார்கள் அறிமுகம் போன்றவற்றை தரலாம். --Natkeeran 19:13, 3 மே 2008 (UTC)
அரசாட்சி பொருளாதார முறைகள், முறைமைகள்
தொகுமுறைகள், முறைமைகள், ஒழுங்குகள், ஒழுங்கமைப்பு, கட்டமைப்புகள், ஏற்பாடு...எந்த சொல் கூடிய பொருத்தம். Political System, Economic System, Social System...என்பதற்கு அமைய... வார்ப்புரு:அரசாட்சி முறைகள்
--Natkeeran 18:54, 27 ஜூன் 2008 (UTC)
- நற்கீரன், கட்டமைப்பு, ஏற்பாடு, ஒழுங்கமைப்பு போன்றவை மேற்குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவதற்கு ஒத்துவராது என்பது எனது கருத்து. முறை, முறைமை, ஒழுங்கு போன்ற சொற்களை Political System, Economic System, Social System என்பன குறிக்கும் பொருள் அடிப்படையில் பார்க்கும்போது ஏறத்தாள ஒரே பொருள் தருவனபோல் படுகிறது. மதராஸ் பல்கலைக் கழக அகராதியிலிருந்து எடுத்த பகுதிகளைக் கீழே காண்க:
- முறை² muṟai
- , n. [T. mora, K. mure, M. mura.]
- 1. Order, manner, plan, arrangement, course; 2. Regularity, system, routine; 3. Turn by which work is done; 4. Time, as once, twice; 5. Birth;6. Manners; custom; approved course of conduct; 7. Relationship by blood or marriage;8. Term of relationship; 9. Justice; 10. Antiquity; 11. Fate; 12. Things gathered together;13. Treatise; 14. Nature; 15. See 16. Faithfulness, chastity;
- , n. [T. mora, K. mure, M. mura.]
- முறை² muṟai
- முறைமை muṟaimai
- , n. < முறை. 1. See முறை, 1, 6, 7, 9, 11, 14.; 2. Right, propriety
- முறைமை muṟaimai
- இதன்படி முறை என்பது கூடிய பொருத்தமுள்ளது போல் தெரிகிறது. ஆனாலும், கலைச்சொல் வட்டாரங்களில் முறைமை என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மயூரநாதன் 04:42, 28 ஜூன் 2008 (UTC)
- அரசாட்சி முறை என்றும் பொருளாதர முறைமை என்றும் சமூக ஒழுங்கு அல்லது சமூக கட்டமைப்பு என்றும் வழங்குகிறது. சரியா? --Natkeeran 14:41, 28 ஜூன் 2008 (UTC)
- அரசியல் முறைமை, பொருளாதார முறைமை, சமூக முறைமை என்றே வழங்கலாம் என்பது எனது கருத்து. சமூக ஒழுங்கு என்பது Social Order என்பதற்கே பொருந்தும். சமூகக் கட்டமைப்பு என்பது Social Structure. மயூரநாதன் 19:05, 28 ஜூன் 2008 (UTC)
- பொது வழக்கத்தின் படியும், ஒரே கருத்து கூறும் வகையிலும், உங்களின் பரிந்துரைப் படியும் முறைமை என்றே எடுத்தாளலாம். விரைவில் மாற்றி விடுகிறேன். நன்றி. --Natkeeran 19:10, 28 ஜூன் 2008 (UTC)
- கூகிள் பரிசோதனையில் முறை கூடிய பதிவுகளை தருகிறது. !!! அரசியல் முறை...பொருளாதார முறை போன்ற சொற்களுக்கு. அச்சில் முறைமை வழக்கத்தில் இருக்கின்றது என்று நினைக்கிறேன். அப்படியா? --Natkeeran 16:48, 29 ஜூன் 2008 (UTC)
- முறை என்பது பல பொருள்களில் பொது வழக்கில் உள்ளது. இதனால் system என்பதை வேறுபடுத்துவதற்காக முறைமை என்ற சொல் பயன்படுவதாக இருக்கலாம். இது தொடர்பாகப் பிற பயனர்களுடைய கருத்தும் பெறப்பட்டால் நல்லது. மயூரநாதன் 17:44, 29 ஜூன் 2008 (UTC)
Translations Requests...Thanks
தொகு- Cinematography
- Stunt Chreography
- Special Effects/Visual_effects
- Special Effects Technician
- Makeup Design
--Natkeeran 17:21, 30 ஜூன் 2008 (UTC)
Bot Request
தொகுகணினி → タチコマ robot
தொகுI own both accounts. This request is to unify all of my bot accounts for SUL. Thanks. -- Cat chi? 10:54, 11 ஜூலை 2008 (UTC)
Please let me know how to do enable these type of requests...Thanks. --Natkeeran 13:28, 11 ஜூலை 2008 (UTC)
தானியங்கிக் கட்டுரைகள்
தொகுதானியங்கிகள் மூலம் உருவாக்க கூடிய பல்வகைக் கட்டுரைகள், அதற்கு தேவையான அட்டவணைத் தகவல் சேகரிப்பு தொடர்பாக உங்கள் கருத்துக்களை பகிர்ந்தால் நன்றாக இருக்கும். தற்போது தானியங்கி மூலம் எப்படி கட்டுரைகள் உருவாக்கல்லாம் என்பது குறித்து நுட்ப புரிதல் சற்று பரந்து உண்டு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நன்றி. --Natkeeran 20:10, 24 ஜூலை 2008 (UTC)
ஈராயிரவர் பதக்கம்
தொகுமயூரநாதன், தமிழ் விக்கியில் இற்றைவரையில் 2000 கட்டுரைகள் எழுதி (2000வது: ஓவியத்தின் வரலாறு) ஒரு மாபெரும் சாதனை படைத்துள்ளீர்கள். எனது பாராட்டுக்கள். அத்துடன் அனைத்துத் தமிழ் விக்கிபீடியர்கள் சார்பிலும், குறிப்பாக செல்வா அவர்கள் சார்பில் இந்த ஈராயிரவர் என்னும் பட்டம் அளித்துக் கௌரவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் நற்பணி மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன். அன்புடன் --Kanags \பேச்சு 09:11, 3 ஆகஸ்ட் 2008 (UTC)
அளப்பரிய சாதனை, தொண்டு. உங்களைப் போல் இன்னும் 1000 மயூரனாதன்கள் வர வேண்டுகிறேன். நன்றி--ரவி 12:45, 3 ஆகஸ்ட் 2008 (UTC)
- கனகு, ரவி, உங்களுக்கு எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியா தமிழர்களுக்கான ஒரு சிறந்த அறிவு மூலமாக வளரவேண்டும். இதற்காக என்னால் இயன்றவரை தொடர்ந்தும் உழைக்கவேண்டும் என்பதே எனது விருப்பம். தமிழ் விக்கிப்பீடியர்களும், மற்றும் எனது குடும்பத்தினர் உட்பட என்னைச் சுற்றியுள்ள அனைவரும் என்னை உற்சாகப்படுத்தி ஆதரவு தருவதால்தான் ஏறத்தாழ ஐந்து வருடங்கள் இடைவிடாது பணியாற்றக்கூடியதாக இருந்தது. இது நிச்சயம் தொடரும். எல்லோருக்கும் மீண்டும் எனது நன்றிகள். மயூரநாதன் 16:12, 3 ஆகஸ்ட் 2008 (UTC)
மயூரநாதன், ஓவியத்தின் வரலாறு என்னும் உங்கள் கட்டுரை 2001 ஆவது கட்டுரை. ஈராயிரம் கட்டுரைகள் எழுதி அருஞ்செயல் நாட்டியதற்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்! உங்கள் அரும் தொண்டும், பயன்மிகு நல்லாக்கமும் உண்மையான புகழ். எல்லோருக்கும் நல்வழிகாட்டி. வாழ்க உங்கள் நல்லுள்ளம், நற்தொண்டு. அன்புடன் --செல்வா 16:33, 3 ஆகஸ்ட் 2008 (UTC)
- (ரவிக்கு: 1000 மயூரநாதன் வந்திருந்தால் இன்று நாம் ஆங்கிலத்துக்கு அடுத்தாற்போல 2 ஆவது இடத்தில் இரண்டு மில்லியன் கட்டுரைகளுடன் இருந்திருப்போம் - கட்டுரை எண்ணிக்கையில். இன்று ஆங்கிலத்தில் 2,487,701 கட்டுரைகள் உள்ளன, அடுத்து உள்ள 'டாய்ட்சு மொழி 783 890 கட்டுரைகள் கொண்டுள்ளது. நாம் முதல் 10 மொழிகளில் ஒன்றாக கட்டாயம் இருக்க முடியும். கட்டுரை எண்ணிக்கையில் மட்டுமல்ல, எல்லாத் தர அளவீடுகளிலும். நாம் இன்னும் விழிப்படையவில்லை. கூட்டுழைப்பின் பயனை உணரவில்லை. வெட்டிப்பேச்சிலேயே காலம் கழிக்கிறோம். நாம் 75 மில்லியம் மக்கள் என்று உணரவில்லை. நாம் படித்தவர்கள் என்றாலும், நம் மக்களோடு அறிவான, பயனுடைய ஆக்கங்கள் செய்ய வேண்டும் என்று உண்மையில் எண்ணவில்லை. ஆனால் இந்நிலைகள் மாறும் என்று உறுதியாக நம்புகிறேன். மயூரநாதன், கனகு மற்றும் இங்கு தொண்டாற்றும் பலரும் நல்ல முன்னெடுத்துக்காட்டுகள்) --செல்வா 16:45, 3 ஆகஸ்ட் 2008 (UTC)
விடுதலைப் புலிகள் தகவல்கள் பற்றி
தொகுவிடுதலைப் புலிகளினைப் பற்றி தமிழ் விக்கி ந்டைக்கேற்ப அதாவது விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் பட்டியல் கட்டுரை போன்று நான் உருவாக்குவதன் காரணம் விடுதலைப் புலிகளின் வரலாற்றுத் தகவல்கள் என்றும் அழியாது இருப்பது அவசியம் பல இணையத்தளங்கள் உள்ளாதும் எனக்குத் தெரிந்ததே ஆனாலும் விக்கியில் எகழுதுபவை யாராலும் அழிக்கமுடியாத ஒரு சிறந்த இணையம் ஆகையாலேயே அனைத்துத் தகவல்களும் இங்கும் சேர்க்கப்படவேண்டும் என்பது எனது விருப்பம். விக்கிபீடியா என்பது யாரும் தனக்கு விரும்ப்யதற்கேற்றவாறு எழுத முடியுமான ஒரு இணையம் இது பாடசாலையோ அல்லது கல்லூரியோ அல்ல குறிப்பிட்ட தகவல்களை மட்டும் சேர்ப்பதற்கு. உங்களுக்கு இன்றைய அரசியல் பிடிக்காமல் போகலாம் ஆனால் எனக்குப் பிடித்துள்ளாது ஆகையால இத்தகவல்களை நான் அறிய விரும்புகின்றேன். இத்தகவல்களை சேர்ப்பதனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தினை நான் ஆதரிப்பதாக எண்ணினால் அது தவறு. நான் இலங்கையில் நடப்பவைகளாஇ இங்கு பதிகின்றேன் அவ்வளாவுதான். குமரிக்கண்டம் என்று ஒன்று பண்டைக்காலங்களினல் இருந்திருக்கலாம் என்பதனை நாம் அறிகின்றோம் அது போல நாளைய சந்ததிகள் விடுதலைப் புலிகளினைப் பற்றியும் அறிய வேண்டும் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பிறா இணையங்களில் இவ்வாறு ஒரு நீளமான விரிவான தகவல்கள் இல்லை அப்படி இருந்தும் இலகுவில் ஒரே இணையத்தில் அனைத்துத் தகவல்களும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகையால் ஒருவரது எழுத்துச் சுதந்திரத்தை இலங்கையில் தடை செய்வது போல் உங்கள் சொந்தக் காரணங்களினை மையமாக வைத்து இங்கும் தடை செய்ய முயற்சிக்கவேண்டாம். மேலும் இது ஒரு வரலாற்றுப் பதிவே. இங்கு பதிவதனால் அது தமிழ் விக்கிக்கு பிற பயனர்களை அழைத்து வரத் தடையாக உள்ளது எனக் கூறுவது எனக்கு வேடிக்கை. என்னைப் போன்றா தமிழ்ப் பற்று சிறிதேனும் உள்ளவர்கள் இங்கு வருவது எது உண்மை என்பதனை அறிவதற்கு பிற பயனர்களைக் கவர்வதற்காக மசாலாத் திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களாக என்னை எண்ணுவது தவறு. மேலும் தமிழ் விக்கியினை தமிழர்களுக்குப் பிடித்த வகையில் அவர்களது பண்பாட்டிற்கிணைய ஒரு வரையறை போட்டு கட்டுரைகள் எழுதுவதும் வேடிக்கை. ஆகையால் பயனர்களின் ஆர்வத்தினை இங்கு கோபி , மயூரனாதன் போன்றவர்கள் இந்திய பாடசாலை ஆசிரியர்கள் போல மாணவர்களின் ஆசையினைக் கட்டுப்படுத்தி அவர்களின் எதிர்காலக் கனவுகளினை உடைப்பது போன்று உள்ளதும் வேடிக்கை.--நிரோஜன் சக்திவேல் 15:39, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
சில குறிப்புகள்
தொகுஒரு சில கட்டுரைகள் தவிர அனேக கட்டுரைகளில் நான் அரசியலை முதன்மைப்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன். தமிழ் விக்கி பற்றி இரு பக்கத்திலும் விமர்சனங்கள் உண்டு. இங்கு ஒரு பத்திரிகையிலும் நாம் இலங்கை இலங்கை என்று எழுதுபதாக விமர்சித்து இருந்தார்கள். மேலும், பேராளிகள் பற்றிய தரமான படைப்புகளை விக்கி மூலங்களிலோ அல்லது நூல்களிலோ விரும்புவர்கள் சேர்க்க நாம் ஏதுவாக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். மற்றப்படி நாம் கணிதம், அறிவியல், தொழில்நுட்பம் துறைகளுக்கு முக்கியத்துவம் தரலாம். அவை சர்ச்சை குறைந்த துறைகள். --Natkeeran 21:16, 25 ஆகஸ்ட் 2008 (UTC)
- நற்கீரன், என்னுடைய கருத்துக்களை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. விமர்சனங்களுக்கு நாம் பயப்படவேண்டியது இல்லை. நியாயமான விமர்சனங்களுக்குச் செவி கொடுப்போம் அது எங்கள் வளர்ச்சிக்கு உரமாக அமையும். நியாயமற்ற விமர்சனங்களைக் கவனிக்காமல் விட்டு விடலாம். இலங்கையைப் பற்றியே அதிகம் எழுதிறோம் என்பது ஒரு குறைபாடு அல்ல. தற்போது இங்கே பங்களிப்பவர்களில் இலங்கையர்கள் அதிகம் அதனால் தான் இந்தநிலை. இது தற்காலிகமானது. ஆனால் தமிழ்நாட்டிலிருந்து பலர் வரும்போது இந்நிலை மாறிவிடும். ஆனால், நமது சில நடவடிக்கைகள் தமிழ் விக்கியின் இருப்புக்கே பாதகமாக அமையக்கூடியவை. இதுபற்றி சுந்தரும் ரவியும் மிக விளக்கமாகவே எடுத்துக்காட்டியுள்ளார்கள். முதலில் சுவரைக் காப்பாற்றிக் கொள்ளாவிட்டால் சித்திரத்தைப் பற்றிப் பேசிப் பயனில்லை. விக்கிப் பீடியாவில் எவரும் எதையும் எழுதலாம் என்பது ஓரளவுக்குத்தான் உண்மை. சில விடயங்கள் வெளிப்படையாகச் சட்டவிரோதமானவை, தடுக்கப்பட்டவை. ஆனால் இன்னும் சிலவோ அந்தமாதிரியானவை அல்ல எந்த நேரமும் வெடிக்கக்கூடிய குண்டுகள் போன்றவை. ஒவ்வொருவருக்கும் தனித்தனியான விருப்பு வெறுப்புகள் உண்டு ஆனாலும் குழுவாகச் செயற்படும்போது ஒட்டுமொத்தமான நலன்கள் பற்றிக் கவனம் தேவை. பலர் ஆண்டுக்கணக்கில் இங்கே உழைத்திருக்கிறார்கள். எதற்காக? தமிழ் மக்களுக்கு இதனால் நன்மை உண்டாகும் என்று எண்ணுவதனால்தான். நாம் நமது தனிப்பட்ட சுதந்திரத்தை 100% பயன்படுத்த முயன்றால் இந்த விலைமதிப்பற்ற உழைப்பெல்லாம் வீணாகிவிடும். எனவே தவியின் வளர்ச்சியில் அக்கறையுள்ளவர்கள் இது பற்றி எடுத்துக் காட்டத்தான் வேண்டும். மயூரநாதன் 02:58, 26 ஆகஸ்ட் 2008 (UTC)
- நன்றி மயூரநாதன். சில விடயங்களை குறித்து வைக்க வேண்டிய தூண்டல் எனக்கு இருந்துருக்கலாம். அதில் நடுநிலைமை மீறியீருக்கலாம். நடுநிலமை ஊடகங்க்கள் என்று மிக சிலவே உள்ளன. எ.கா பிபிசி. அப்படி இருந்தாலும் அவை நாம் எடுத்த தலைப்பில் தகவல்கள் கொண்டிருப்பது அரிது. சட்ட விரோதமானவை எல்லாம் தவர்க்கப் பட வேண்டியவை என்று கொள்ள முடியாது. நியாமற்ற சட்டங்களும் உண்டு. இருப்பினும் நீங்கள் சொல்ல முயல்வது புரிகிறது. நான் முன்னர் சுட்டியபடி சர்சை தவிர்ந்த துறைகளில் கவனம் தருவது நன்று. --Natkeeran 15:50, 27 ஆகஸ்ட் 2008 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவை தெளிவு படுத்தல் எளிமைப் படுத்தல்
தொகு- பகுப்பு:விக்கிப்பீடியா உதவி
- பகுப்பு:விக்கிப்பீடியா நிர்வாகம்
- பகுப்பு:விக்கிப்பீடியா கையேடுகள்
- பகுப்பு:விக்கிப்பீடியா கூறுகள்
- உதவி - help
- கையேடு - guide (or is it how to ?)
- நிர்வாகம் - நாளாந்தம் செய்ய வேண்டிய பணிகள் (எ.கா இன்றைப்படுத்தல்)
- கூறுகள் - Wikipedia features ?? , elements
இந்த தகவல்களை சற்று இறுக்கமாக வரையறை செய்ய வேண்டும். பல பக்கங்களில் தகவல்களை சிதறடிக்காமல் இருப்பதும் நன்று. --Natkeeran 01:32, 20 செப்டெம்பர் 2008 (UTC)
தலைப்புக்களின் தெரிவு அருமை
தொகுநீங்கள் அண்ணையில் தேர்த தலைப்புக்கள் அவசியாம இருக்க வேண்டிய கட்டுரைகள். எளிதில் மொழி பெயர்க்க கூடியவையும் அல்ல. கருத்து புரிந்து எழுத வேண்டும். பாராட்டுக்கள். --Natkeeran 14:03, 26 செப்டெம்பர் 2008 (UTC)
- நன்றி நக்கீரன். மயூரநாதன் 14:43, 26 செப்டெம்பர் 2008 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா
தொகு- wikibooks:ta:தமிழ் விக்கிப்பீடியா
- மயூரநாதன், இந்த நூலை எழத உதவினால் நன்று. --Natkeeran 19:24, 3 நவம்பர் 2008 (UTC)
- நிச்சயமாக என்னுடைய பங்களிப்பு இருக்கும். மின்னஞ்சலில் இந்த எண்ணத்தை முதலில் வெளியிட்ட ரவியிடமிருந்து எதுவித தகவலையும் காணோமே. மயூரநாதன் 19:34, 3 நவம்பர் 2008 (UTC)
- அவர் பிசி (தமிழ்? பணிச்சுமை) ஆக இருக்கலாம். நாம் ஒரு பொதுப் பயன்பாட்டுக்காக இந்த நூலை ஆக்னால், ரவி அல்லது பிறர் அந்த தகவல்களை பயன்படுத்தி திருத்தி சுவையாக எழுதலாம். --Natkeeran 19:43, 3 நவம்பர் 2008 (UTC)
வேறு சில எண்ணங்கள்
தொகுமயூரநாதன், அடுத்த ஆண்டு, நாம் எமது ஆற்றலை தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப்படுத்தலுக்கு செலுத்த வேண்டும். குறைந்தது 20 நல்ல பங்களிப்பாளர்களை கவர வேண்டும். இதற்கு அடிப்படையாக, தமிழ் விக்கிப்பீடியா அறிமுக நூல், வலைப்பதிவு, மற்றுக் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகக் கட்டுரைகள் வேண்டும். இவறை நாம் ஊடகங்களுக்கு எடுத்து செல்ல வேண்டும். மேலும், தமிழ் வலைப்பதிவு, இணைய களங்களில் நபர்களை நாம் நேரடியாக அணுக வேண்டும். --Natkeeran 19:46, 3 நவம்பர் 2008 (UTC)
- செய்யலாம். உண்மையில், பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதமுடியுமானால் அது கூடிய பயனுள்ளதாக அமையும் என்பது எனது கருத்து. வலைப் பதிவாளர்களைத்தான் நாம் அணுக வேண்டும் என்பதில்லை. வலைப்பதிவுகளில் ஊறியவர்கள் பலருக்கு விக்கிப்பீடியா ஒத்துவரவில்லைப்போல் எனக்குத் தோன்றுகிறது. வலைப்பதிவுகளுக்குத் தொடர்ச்சியாக எழுதுவதே பெரிய வேலை. அதனால் வலைப் பதிவர்களுக்கு விக்கிப்பீடியாவில் அதிக நேரம் செலவுசெய்ய முடிவதில்லை என நினைக்கிறேன். இப்பொழுது தமிழ் விக்கிப்பீடியாவில் முனைப்பாகவும் தொடர்ச்சியாகவும் பங்களிப்பவர்களைக் கவனித்தால் இது புரியும். வலைப் பதிவுகளுக்கும் அப்பால் வெளியில் இருப்பவர்கள் மீதும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். முக்கியமாகப் பல்வேறு அறிவுத்துறையினரைக் கவர முயல வேண்டும். மயூரநாதன் 20:20, 3 நவம்பர் 2008 (UTC)
நலவியல், சுகாதாரம், உடல்நலம்
தொகு- Health என்பதற்கு தமிழ் என்ன?
- மருத்துவம் - medicine
- சுகாதாரம் என்றால் hygine போன்று பொருள் தருகிறதா.
- சுகம் + தாரம்??, சுகம் + தரம் ??
--Natkeeran 19:16, 5 நவம்பர் 2008 (UTC)
- Health என்பதற்கு "உடல்நலம்" என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்.
- hygine க்கு "நலவியல்", "நலச்சூழல்" ஆகிய சொற்கள் விக்சனரியில் கொடுக்கப்பட்டுள்ளன அவற்றைப் பயன்படுத்தலாம். "சுகாதாரம்" என்பதும் சரி. ஆனால் அது தமிழ் அல்ல.
- சுக(ம்) + ஆதாரம் = சுகாதாரம் (சுகத்துக்கான அடிப்படை)
- மயூரநாதன் 02:47, 6 நவம்பர் 2008 (UTC)
- உடல்நலம் மட்டும் health இணையாகுமா? health உளநலத்தையும் சேர்த்தே குறிக்கிறது.
- சுகாதாரம் ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் நன்கு வழக்கத்தில் இருக்கு சொல். சகம் தமிழ், ஆதாரம் சமசுகிருதம்!
- hygine என்பது சிறப்பாக சுத்ததுடன் தொடர்புடையது. --Natkeeran 15:33, 6 நவம்பர் 2008 (UTC)
சுகம்,ஆதாரம் இரண்டுமே தமிழல்ல. ஆனால் தமிழில் வழக்கூன்றிய சொற்கள். மாற்றுச் சொற்கள் வேண்டும் என்றால், நலங்கோண்மை (நலம் கொள்ளும் முறைமை), தூய்நலம் (தூய்மை வழி நலம் பெறல்), நலம்பேணல், புறநீர்மை என்னும் சொல் திருவள்ளுவரால் ஆளப்பட்ட சொல். இதன் பொருள் உடல் புறத் தூய்மை பேணல். எனவே புறநீர்மை வேண்டும் என்று ஆளலாம். உடல்நலம், உளநலம் இரு சொற்கள். ஒரே சொல்லாக வேண்டின், உடல்-உள நலம் எனலாம். நலம் என்றாலே இரண்டும் ஏற்கும். Health என்னும் சொல்லின் உடல், ஊளம், சுற்றுச்சுழல், பணநலம் என்னும் கருத்துக்கள் ஏதும் இல்லை. சொற்கள் இடசார்ந்தே பொருள் கூர்மையுறும். எனவே வெறும் நலம் என்றே கூறலாம். நலத்துறை = Dept of health.--செல்வா 19:54, 30 நவம்பர் 2008 (UTC)
பெயர் மாற்றம்
தொகுநீங்கள் அன்மையில் எழுதிய யோகான் செபாஸ்தியன் பாக் என்னும் கட்டுரையின் தலைபை மாற்றி இருக்கின்றேன். டாய்ட்சு மொழியில் ஜ என்னும் ஒலிப்பு கிடையாது. மேலும் கடைசியில் உள்ள ch இன் ஒலிப்பு ஃக் என்பது போன்றதே. என்றாலும் பாக் என்று எழுதியுள்ளேன். யோஃகான் ˘செபா˘ச்ட்டியன் 'பாஃக் என்னும் ஒலிப்பு மிக நெருக்கமான ஒலிப்பாக இருக்கும். ஆனால் அத்தனை துல்லியம் பார்க்கத்தேவை இல்லை. மூல மொழி ஒலிப்பை IPA வடிவில் கொடுத்துவிட்டு, நம் மொழியில் இயலும் ஒலிப்பாக நாம் இட்டு வழங்கினால் போதும் என்பது என் கருத்து.--செல்வா 19:43, 30 நவம்பர் 2008 (UTC)
- பார்த்தேன். மெர்ரியம் வெப்ஸ்டர் அகரமுதலியில் "பாக்", "பாஃக்" இரண்டு ஒலிப்புகளுமே தரப்பட்டுள்ளன. ஜேர்மானியர்கள் மட்டுமன்றி சில கிழக்கு ஐரோப்பிய மொழியினரும் "J" என்பதை "ய" என்று ஒலிப்பதைக் கேட்டிருக்கிறேன். இங்கே நான் பணிபுரியும் அலுவலகத்திலேயே "மிர்யானா"க்களும் (Mirjana), "பில்யானா"க்களும் (Biljana) உள்ளனர். மயூரநாதன் 20:25, 30 நவம்பர் 2008 (UTC)
- நன்றி.--செல்வா 21:54, 1 டிசம்பர் 2008 (UTC)
உங்கள் பட்டியலில் இருந்த இந்த ஆங்கிலக் கட்டுரையை இழ்சாக் கார்ட்டியே என்னும் தமிழ்க்கட்டுரையாகத் துவக்கி உள்ளேன். இன்னும் கருத்துக்கள் சேர்க்க வேண்டும். --செல்வா 21:53, 1 டிசம்பர் 2008 (UTC)
- நல்லது செல்வா, அப்பட்டியல் மீட்டா விக்கியில் எல்லா விக்கிகளிலும் இருக்க வேண்டியவையாகத் தரப்பட்டுள்ள சுமார் 1000 கட்டுரைகளுள் தமிழில் இன்னும் எழுதவேண்டியிருப்பவை. செப்டெம்பர் நடுப்பகுதியில் 400 கட்டுரைகள் வரை எழுதவேண்டியிருந்தது. இப்பொழுது 85 கட்டுரைகள் தான் எழுதவேண்டியுள்ளது. இவ்வாண்டுக்குள் இதை நிறைவு செய்ய எண்ணம். மற்றப் பயனர்களும் முயன்றால் இலகுவில் முடித்துவிடலாம். முக்கியமாக "சிறப்புச் சார்புத் தத்துவம்", "Group Theory", "Algorithm" போன்ற கட்டுரைகளை எழுதுவதில் உங்களைப் போன்ற பயனர்களின் உதவி தேவை. மயூரநாதன் 05:18, 2 டிசம்பர் 2008 (UTC)
- ஆமாம் மயூரநாதன், முதலில் நற்கீரன் வலைவாசலில் இப்பட்டியலுக்கு சுட்டியைத் தந்தவுடனையே நினைத்தேன் அத்தலைப்புகள் எல்லாவற்றிலும் கட்டுரைகள் எழுதி முடித்தல் வேண்டும் என்று. ஆனால் நீங்கள் விறுவிறு என்று செயலில் இறங்கி பெரும்பான்மையானவற்றை முடித்துவிட்டீர்கள். குலக்கோட்பாடு, அல்காரிதம் பற்றி நான் கட்டாயம் எழுதுகின்றேன்.--செல்வா 13:42, 2 டிசம்பர் 2008 (UTC)
கணிதவியல் மற்றும் அறிவியல் இலக்கியங்கள் வரலாறு
தொகுஇதனைப் பார்க்க வேண்டுகிறேன் --செல்வா 16:58, 16 டிசம்பர் 2008 (UTC)
2009 தமிழ் விக்கிப்பீடியா வேலைத்திட்டம்
தொகுவணக்கம் மயூரநாதன்:
அப்பாடி. இந்த ஆண்டு நீங்கள் மிகவும் ஆழமாகவும் அகலமாகவும் பல நூறு கட்டுரைகளை ஆக்கியுள்ளீர்கள். நன்றி.
அடுத்த ஆண்டு நமது வேலைத்திட்டம் என்னவாக அமையவேண்டும் என்ற உங்கள் பரிந்துரைகளை இங்கு பகிர்தால் நன்றி. மூன்று முக்கிய துறைகள், மூன்று சந்தைப்படுத்தல் வழிகள் பற்றியும் குறிப்பிட்டால் நன்று. --Natkeeran 03:50, 24 டிசம்பர் 2008 (UTC)
தோல் படம்
தொகுpacinian (body) corpuscle - பசினீநுண்டுணிக்கை என்று விச்கனரி சொல்கிறது. மாற்றினால் சிறபாக இருக்கும். --Natkeeran 16:15, 28 டிசம்பர் 2008 (UTC)
- செய்கிறேன். மயூரநாதன் 17:34, 28 டிசம்பர் 2008 (UTC)