ரசிகப்பிரியா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ரசிகப்பிரியா கருநாடக இசையின் 72வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு ரசமஞ்சரி என்று பெயர்.
இலக்கணம்
தொகுஆரோகணம்: | ஸ ரி3 க3 ம2 ப த3 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த3 ப ம2 க3 ரி3 ஸ |
- "ஆதித்ய" என்றழைக்கப்படும் 12ஆவது சக்கரத்தில் 6ஆவது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம் (த3), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- 36வது மேளமாகிய சலநாட்டையின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
- மூர்ச்சனாகாரக மேளம். இதன் காந்தார, நிஷாத மூர்ச்சனைகள் முறையே சிம்மேந்திரமத்திமம் (57), மாயாமாளவகௌளை (15) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கும்.
உருப்படிகள்
தொகு- கிருதி : சிருங்காரரச மஞ்சரீம் - ஏகம் - தியாகராஜர்.
- கிருதி : அருள் செய்ய வேணும் - ஆதி - கோடீஸ்வர ஐயர்.
- கிருதி : ஆடிப்பாடி அருளை - ரூபகம் - சுத்தானந்த பாரதியார்.
வெளியிணைப்புகள்
தொகு- Ragam Tanam Pallavi - Rasikapriya, வீணை சிட்டிபாபுவின் வீணையிசைக் காணொலி.