Amachu
சென்னையில் வசித்து வரும் தகவல் தொழில் நுட்பக் பொறிஞர். உபுண்டு தமிழாக்கம் மற்றும் கேடீயீ தமிழாக்கத்திற்கு பங்களித்து வருகிறோம். கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின் அதிகார பூர்வ இணைய தள தமிழாக்கதிலும் பங்களித்து வருகின்றோம்.
முதலாவது சுதந்திர போர் என வர்ணிக்கப் படும் சிப்பாய்க் கலகத்தின் நூற்று ஐம்பதாவது ஆண்டு நடக்கிறது. இதற்கு முன்னரே எண்ணற்ற தமிழ் மறவர்கள் பரங்கியரை எதிர்த்து போரிட்டு வீர மரணம் அடைந்துள்ளார்கள். அவர்களைப் பற்றிய கட்டுரைகளை விகி பீடியாவில் முதற்கண் தொகுக்க உத்தேசம். அதற்கான தகுந்த நேரமும் இதுவாகத் தோன்றுகிறது. தமிழகத்தின் மாண்பினை உயர்த்திய பெரியோர்களைப் பற்றிய செய்திகளையும் தொடுக்க உத்தேசம்.
இதைத் தொடர்ந்து கட்டற்ற மென்பொருள் குறித்த கட்டுரைகளும், மென்பொருட்கள் குறித்த தகவல்களையும் கொடுக்க உத்தேசம். உபுண்டு உள்ளிட்ட பிற தமிழாக்கப் பணிகளிலும் பங்களித்து வருவதால் தொடச்சியாக அல்லாது சமச்சீரான கால அளவுகளில் தொடர்ந்து எமது பங்களிப்புகள் இருக்கும்.
பங்களித்துள்ள கட்டுரைகள் விவரம்: