வாருங்கள்!

வாருங்கள், Amachu, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--மு.மயூரன் 03:07, 8 மார்ச் 2007 (UTC)

வாருங்கள் ஆமாச்சு தொகு

ஆமாச்சு,

உங்களை விக்கிப்பீடியாவில் காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

உங்களது மொழிபெயர்ப்பினை விக்கிப்பீடியா கட்டுரையாக இட்டிருக்கிறீர்கள். விக்கிப்பீடியாவின் நடைமுறைப்படி இந்த கட்டுரை ஒரு கலைக்களஞ்சியக்கட்டுரையாக அமைய முடியாது. விரைவில் விக்கிமூலங்கள் ஆரம்பிக்கப்பட்டால் அங்கே இதனை இடலாம். பெரும்பாலும் மற்றைய விக்கிபீடியர்கள் இந்த கட்டுரையை நீக்கப் பரிந்துரைத்து நீக்கிவிடுவார்கள்.

உங்கள் ஆர்வத்துக்கும், விக்கிப்பீடியாமீது நீங்கள் கொண்டுள்ள நன்மதிப்புக்கும் பாராட்டுக்கள். இந்த கட்டுரை நீக்கப்படுதல் உங்களை வருந்ந்தச்செய்யக்கூடாது. தொடர்ந்து விக்கிப்பீடியா உங்களிடமிருந்து பல பயன்மிக்க கட்டுரைகளை எதிர்பார்க்கிறது.

கலைக்களஞ்சியத்துக்குரிய நடையில் எழுதப்படும் கட்டுரைகளே விக்கிப்பீடியாவுக்கு பொருத்தமானவை. எடுத்துக்காட்டுக்கு பின்வரும் கட்டுரைகளை பார்க்கவும் ( உங்கள் பணிகளோடு தொடர்புடையவை என்பதால் இவற்றை மேம்படுத்துவதன்மூலம் உங்கள் விக்கிப்பீடியாவுக்கான பங்களிப்பை தொடங்கலாம்)

தொடர்ந்து பங்களிக்குமாறு வேண்டுகிறேன். தோழமையுடன்.

--மு.மயூரன் 03:25, 8 மார்ச் 2007 (UTC)

இட்ட கட்டுரையின் உள்ளடக்கதை வைத்து பல கட்டுரைகள் ஆக்கலாம் என்று நினைக்கின்றேன். மிக்க நன்றி. பொறுமையான, விரிவான மொழிபெயர்ப்பு. உங்களின் தொடர்ந்த பங்களிப்பால் த.வி மேலும் சிறப்புறும். --Natkeeran 03:38, 8 மார்ச் 2007 (UTC)
நீங்கள் விக்கிப்பீடியாவிற்கு வந்தது பெருமகிழ்ச்சி. உபுண்டு லினக்ஸ் இல் இடைவிடாது பங்களிப்பது போன்று இங்கும் பங்களிபீர்கள் என ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றேன். --Umapathy 04:11, 8 மார்ச் 2007 (UTC)

கட்டுரை நீக்கம் தொகு

அமாச்சு, விக்கிப்பீடியாவில் எவரும் தொகுக்க வல்ல கட்டுரைகளை மட்டுமே இடுகிறோம். ரிச்சர்டின் உரை காப்புரிமை பெற்றிருப்பதால் யாரும் தொகுக்கு முடியாது. தவிர, இது போன்ற உரைகளும் விக்கிப்பீடியா வரையறைகளுக்கு உட்படாதவை. எனவே நீங்கள் இட்ட கட்டுரையை நீக்கி இருக்கிறேன். இது போன்ற கட்டுரைகளை விக்கி மூலம் தளத்தில் இடலாம் என நினைக்கிறேன். பிறகு, சரி பார்த்து சொல்கிறேன். நன்றி--Ravidreams 20:33, 8 மார்ச் 2007 (UTC)

இராமானுசன் தொகு

பார்க்க - இராமானுசன். ஏற்கனவே உள்ள இக்கட்டுரையில் நீங்கள் தொடர்ந்து பங்களிக்கலாம். நீங்கள் உருவாக்கிய புதுக் கட்டுரையை நீக்க வேண்டி வரும். புதுக்கட்டுரைகளை உருவாக்கும்முன் அக்கட்டுரை ஏற்கனவே இருக்கிறதா என்று தேடிப் பார்த்து விட்டு எழுத வேண்டுகிறேன். கட்டுரைத் தலைப்புகளில் கணித மேதை போன்ற அடைமொழிகள் தேவை இல்லை. நன்றி--ரவி 18:14, 20 மார்ச் 2007 (UTC)

முத்துலிங்கத் தேவர் தொகு

அமாச்சு!!! கட்டுரையில் அதி கூடிய தேவையேற்பட்டால் மட்டுமே அவரது சாதி பற்றி குறிபிடல் வேண்டும். இது தவியில் வழக்கமாக உள்ளது. எனவே உங்கள் கட்டுரையில் சில மாற்றங்களைச் செய்துள்ளேன்.--டெரன்ஸ் \பேச்சு 02:16, 21 மார்ச் 2007 (UTC) இந்திய சுதந்திரப் போராட்டம் ஒரு சாதியினரால் முக்குதோரோ என்னவோ எடுக்கப்பட்தாகவும் நிங்கள் கூறியுள்ள பகுதிகளுக்கு ஆதாரம் தர முடியுமா? என்னைப் பொருத்தவரை எவரது சாதனைகளையும் சாதிப் பெயரால் நீட்டிப்பார்ப்பதை தவியில் அனுமதிக்க முடியாது கூடாது. சாதி என்ற புற்றுநோயை அகற்றும் போது கசப்பாகத்தான் இருக்கும் ஆனால் தவியில் ஆதாரமற்று அதனை நீடிப்பது அனுமதிக்க முடியாது. மேலும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சாதி சாயம் பூச வேண்டாம். --டெரன்ஸ் \பேச்சு 14:53, 23 மார்ச் 2007 (UTC)

ஒரு வரலாறு எழுதும் போது ஆள்பவர்கள்தான் அதனை எழுவார்கள். இதன் போது மேலாதிக்க சாதியினர் தாம் செய்ததாக எழுதியதிலோ அல்லது அதனை சிலர் பிற்காலத்தில் ஒரு புத்தகமாக வெளியிடுவதிலோ நியாயப்படுத்த முடியாது. மேலும் நற்கீரன் கூறியது போல சாதி அடிக்குறிப்பை தேவர் குலத்தவர் அல்லது பிள்ளைக்கும் மட்டும் இட்டு ஏனைய சாதியினருக்கு இடாவிட்டால் அது சமச்சீரற்ற நிலையாகும். எனது கருத்து என்னவென்றால் தேவர் சாதியினர் சுதந்திரத்துக்காக ஏனையவரைவிட குறிப்பிடத்தக்கள்வு போரடியிருப்பின் அதை குறிக்க வேண்டிய இடம் இந்திய சுதந்திர போராட்ட்த்தில் தேவர் சாதியினரின் பங்கு போன்ற தனிக் கட்டுரையே தவிர, முத்துலிங்கம் தேவர் சாதியில் பிறந்தார் என்பது அல்ல. சாதியை surname போல பாவித்த சந்தர்ப்பங்கள் தவிர ஏனைய இடங்களில் இது தவிர்க்கப்பட வேண்டும்.--டெரன்ஸ் \பேச்சு 15:19, 23 மார்ச் 2007 (UTC)

டெரன்ஸ், நற்கீரன், அமாச்சு - இதை தேவர், முத்துஇராமலிங்கம் என்ற நோக்கில் உரையாடினால் விவாதம் எளிதாக திசை மாறும். பொதுவாக, 17-20 நூற்றாண்டுக் காலப் பகுதியில் தமிழகத்தில் சாதிப் பெயர்களுடன் இணைத்து அறியப்படும் வழக்கம் இருந்திருக்கிறது. அந்த சாதிப் பெயர்களை அப்படியே விக்கிப்பீடியா கட்டுரையில் தருவதா என்பது தான் விவாதமாக இருக்க முடியும். என்ன முடிவு எடுத்தாலும் அதை எல்லா சாதிப் பெயர்களுக்கும் எல்லாருக்கும் (அவர்கள் பின்புலம், வரலாற்று முக்கியத்துவம் தாண்டி)ஆன முடிவாக விக்கிப்பீடியா முழுக்க நடப்பில் கொண்டு வர வேண்டும். இந்த விவாதத்தை பயனர் பேச்சுப் பக்கங்களில் அல்லாமல் முத்துஇராமலிங்கம் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் உரையாடுமாறு கேட்டுக் கொள்கிறேன்--ரவி 15:21, 23 மார்ச் 2007 (UTC)

லினக்ஸ் கட்டுரை தொகு

லினக்ஸ் இற்கு தனிக்கட்டுரை தேவை என்ற உங்கள் கருத்து மிகச்சரியானது. ஆனால் தற்போது லினக்ஸ் கட்டுரை குனூ/லினக்ஸ் இற்கு வழிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழிப்படுத்தலை நீக்கும் வரைக்கும், லினக்ஸ் kernel குறித்த கட்டுரையை லினக்ஸ் கருனி என்ற தலைப்பில் உருவாக்கி மேம்படுத்துமாறு வேண்டுகிறேன்.

--மு.மயூரன் 15:32, 21 மார்ச் 2007 (UTC)

க்னோம் தொகு

க்னோம் கட்டுரையின் பகுப்புக்களை மாற்றியிருக்கிறேன். பகுப்பு மாற்றங்களை நீங்களே செய்யலாம். தேவை ஏற்படின். --மு.மயூரன் 02:05, 22 மார்ச் 2007 (UTC)

Tamil Language article is to be removed of its FA, even after the extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language

--Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC)

பதிவர் பட்டறை தொகு

சென்னையில் நம் விக்கிபீடியர் எவராவது இருக்கிறீர்களா? august 5 அன்று பதிவர் பட்டறை ஒன்று நடக்க இருக்கிறது. இதில் கலந்து கொண்டு பதிவர்களின் விக்கி குறித்த சந்தேகங்களை நேரடியாகத் தீர்க்க உதவலாம். இதற்கு ஒரு stall / desk ஏற்பாடு செய்யச் சொல்லி என்னால் கேட்கய இயலும்--ரவி 10:09, 31 ஜூலை 2007 (UTC)

ரவி, இயன்றவரை இதைச் செய்தால் நன்று. சென்னையில் த.வி பற்றி அறிமுகப்படுத்த இது ஒரு அரிய சந்தர்ப்பம். முயன்று பாருங்களேன். தமிழ்_வலைப்பதிவர்_பட்டறை இந்த விக்கியி த.வி பற்றி ஒரு சிறு குறிப்பு சேர்க்க முடியுமா? அத்தோடு, தமிழ் விக்கிப்பீடியா வலைப்பதிவிலும் இதைப் பற்றி ஒரு குறிப்பு இட்டால் நன்று. நன்றி.

  • ரவி, பயனர்:Amachu இடம் கேட்டுப் பாருங்கள். அவருக்கு ஈடுபாடு இருக்கலாம்.

--Natkeeran 00:00, 2 ஆகஸ்ட் 2007 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள் தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:53, 21 சூலை 2011 (UTC)Reply

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

 

வணக்கம் Amachu,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Amachu&oldid=3477514" இலிருந்து மீள்விக்கப்பட்டது