அணு எரிபொருள்

அணு எரிபொருள் (Nuclear fuel) அணுவாற்றலை வெளிப்படுத்துமாறு அணுப்பிளவு அல்லது அணுச்சேர்ப்பு வினைகளில், 'நுகரக்கூடிய' ஓர் பொருளாகும். எரிப்பதன் மூலம் ஆற்றலைப் பெறக்கூடிய வேதி எரிபொருளுக்கு ஈடானது இது. அணு எரிபொருளானது கிடைக்கும் ஆற்றல் ஊற்றுகளிலேயே மிகவும் ஆற்றல் அடர்த்தி கொண்டதாகும். ஓர் அணு எரிபொருள் சுழற்சியில் அணு எரிபொருள் எனப்படுவது எரிபொருளைக் குறிக்கலாம் அல்லது எரிபொருளுடன் நியூத்திரன் மட்டுப்படுத்தும் அல்லது நியூத்திரன் எதிரொளிப்பு பொருளைக் கலந்துருவாக்கிய இயல்கூறுகளாக (காட்டாக, கட்டுக்கட்டாக உள்ள எரிபொருள் கோல்கள்) இருக்கலாம்.

அணு எரிபொருள் செய்முறை
திணிவெண்ணிற்கு எதிர் பிணைப்பு ஆற்றல்
Close-up of a replica of the core of the research reactor at the Institut Laue-Langevin

பெரும்பாலான அணு எரிபொருள்கள் ஓர் அணுக்கரு உலையில் அணுக்கருப் பிளவுத் தொடர் வினையாற்றலை ஆற்றக்கூடிய கனமான பிளவுறும் தனிமங்களாகும். பொதுவான பிளவுறு அணு எரிபொருள்களாக 235U-உம் 239Pu-உம் உள்ளன. இவற்றை அகழ்ந்தெடுத்தல், பிரித்துத் தூய்மையாக்கல், பயன்படுத்தல், அதன் பின்னர் பாதுகாப்பாக அப்புறப்படுத்தல் ஆகிய அனைத்துச் செயல்களையும் சேர்த்து அணு எரிபொருள் சுழற்சி என்பர்.[1][2][3]

அணு எரிபொருள்கள் அணு உலைகளில் அணுப்பிளவு வினைகளில் மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. கதிரியக்க ஓரகத்தனிம வெப்பமின்னாக்கிகள் மற்றும் அணு மின்கலங்கள் புளூடோனியம்-238 மற்றும் சில தனிமங்களின் கதிரியக்க அழிவினால் பெறக்கூடிய சிறிதளவு அணுவாற்றலைப் பயன்படுத்துகின்றன. இலகுவான ஓரிடத்தான்கள் சில,3H (திரைத்தியம்) போன்றவை அணுக்கரு இணைவு வினைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

வெளி இணைப்புகள்

தொகு

PWR எரிபொருள்

தொகு

BWRஎரிபொருள்

தொகு

CANDU எரிபொருள்

தொகு

TRISO எரிபொருள்

தொகு

QUADRISO எரிபொருள்

தொகு

CERMET எரிபொருள்

தொகு

Plate type fuel

தொகு

TRIGA எரிபொருள்

தொகு

அணுப்பிணைவு எரிபொருள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. R. Norris Shreve; Joseph Brink (1977). Chemical Process Industries (4th ed.). pp. 338–341. அமேசான் தர அடையாள எண் B000OFVCCG.
  2. https://www.nuclear-power.com/nuclear-power-plant/nuclear-fuel/nuclear-fuel-cycle/uranium-fuel-cycle/ வார்ப்புரு:Bare URL inline
  3. "Archived copy" (PDF). Archived (PDF) from the original on 2016-10-21. பார்க்கப்பட்ட நாள் 2016-06-04.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அணு_எரிபொருள்&oldid=3794220" இலிருந்து மீள்விக்கப்பட்டது