கோகிமா இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் தலைநகரமாகும். இது கோகிமா மாவட்டத்தில் அமைந்துள்ளது.மியான்மரின் எல்லையில் அமைந்துள்ள இந்த மாநிலத்தின் மூன்று நகராட்சிகளில் இதுவும் ஒன்று. ஏனையவை திம்மாபூரும் மோகோக்சுங்கும் ஆகும்.

கோகிமா
—  தலைநகரம்  —
கோகிமா
அமைவிடம்: கோகிமா, நாகாலாந்து
ஆள்கூறு 25°40′N 94°07′E / 25.67°N 94.12°E / 25.67; 94.12
நாடு  இந்தியா
மாநிலம் நாகாலாந்து
மாவட்டம் கோகிமா
ஆளுநர் பத்பநாப ஆச்சார்யா
முதலமைச்சர் நைபியு ரியோ
கொள்கையாளர்
மக்களவைத் தொகுதி கோகிமா
மக்கள் தொகை

அடர்த்தி

115,283 (2001)

5,765/km2 (14,931/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


1,444 மீட்டர்கள் (4,738 அடி)

குறியீடுகள்
கோகிமா நகரக் காட்சி

பெயர்க்காரணம்

தொகு

கோஹிமா அங்காமி நாகர் பழங்குடியினரின் நிலப்பகுதி ஆகும். கோகிமா என்ற பெயர் ஆங்கிலேயர்களால் அங்காமிப் பெயரை உச்சரிக்க இயலாததால் அவர்களால் சூட்டப்பட்டதாகும். கியூ ஹி என்பது மலைப்பகுதிகளில் வளரும் ஒரு தாவரத்தின் பெயர் ஆகும். கியூ ஹி மா என்பது கியூ ஹி வளரும் நிலத்தினைச் சேர்ந்தவர்கள் என்று பொருள் தரும். இதற்கு முன் இந்நகரம் திகோமா என்றழைக்கப்பட்டது.

கோகிமா மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் கோகிமா நகரம் அமைந்துள்ளது. (25°40′N 94°07′E / 25.67°N 94.12°E / 25.67; 94.12)[1] இந்நகரின் சராசரி உயரம் கடல்மட்டத்திலிருந்து 1261 மீட்டர்கள் (4137 அடி) ஆகும்.[2] மலை உச்சியில் மற்ற நாகர் மலைகளைப் போலவே கோகிமாவும் அமைந்துள்ளது.

வரலாறு

தொகு

இந்தியாவின் எந்த ஆட்சியாளர்களாலும் வெல்ல முடியாத நாகர்கள் 1840களில் பிரித்தானியர்கள் வந்தபோதும் மிகவும் எதிர்த்தனர். பிரித்தானியர்களுக்கு இப்பகுதியில் 10,000 சதுர கிலோமீட்டர்களுக்கும் குறைவான நிலத்தைப் பிடிக்க நாற்பதாண்டுகள் பிடித்தன என்பதிலிருந்து இந்த எதிர்ப்பின் கடுமையை அறியலாம். 1879ஆம் ஆண்டு அப்போதைய அசாம் மாநிலத்தில் நாகா ஹில் மாவட்டத்தின் தலைநகராக கோகிமா நிறுவப்பட்டது. நாகாலாந்து திசம்பர் 1, 1963இல் முழு மாநிலமாக உருவாக்கப்பட்டபோது கோகிமா மாநிலத் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.

1944இல் இரண்டாம் உலகப் போரின் போது கோகிமா சண்டையும் இம்பால் சண்டையும் பர்மா போரில் முக்கியமான திருப்புமுனைகளாக அமைந்தன. முதன்முதலாக தென்கிழக்கு ஆசியாவில் சப்பானியர்கள் இங்குதான் நேசநாடுகளிடம் தோல்வி கண்டனர். இங்கு நடந்த நேருக்கு நேர் சண்டையும் படுகொலைகளும் சப்பானியர்களால் இந்த உயர்ந்த இடத்தைப் பிடித்து இந்தியச் சமவெளியில் எளிதாக வெற்றி பெற்றிருக்கக்கூடிய வாய்ப்பை தடுத்தது.[3]

 
காரிசன் குன்று சமர்க்களம் - கோகிமாவின் பிரித்தானிய தற்காப்புக்கான முதன்மை களம்.

கோகிமாவில் பொதுநலவாய போர்க் கல்லறைகள் ஆணையத்தின் பராமரிப்பில் நேசநாடுகளின் போர்வீரர்களுக்கான பெரிய கல்லறைத்தோட்டம் ஒன்று உள்ளது. காரிசன் குன்று சரிவுகளில் இது அமைந்துள்ளது. இந்த இடம் ஆட்சியரின் டென்னிசு மைதானமாக இருந்தது; இங்குதான் தீவிரமான டென்னிசு மைதானச் சண்டை நிகழ்ந்தது. இக்கல்லறையில் இரண்டாம் பிரித்தானியப் பிரிவினரின் நினைவாக எழுதப்பட்டுள்ள இறுதி வாசகம் கோகிமா கவிதை என உலகப் புகழ் பெற்றது:

இந்தக் கவிதை ஜான் மாக்ஸ்வெல் எட்மண்ட்சால் (1875–1958) எழுதப்பட்டது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Falling Rain Genomics, Inc - Kohima
  2. Kohima Home NIC
  3. Bert Sim, Mosstodloch, Aberdeenshire, Scotland: Pipe Major of the Gordon Highlanders at Kohima: his home is named "Kohima." -- RJWilliams, Slingerlands, NY/USA
  4. "The Kohima 2nd Division Memorial". Archived from the original on 2015-05-10. பார்க்கப்பட்ட நாள் 2012-05-01.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கோகிமா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகிமா&oldid=3551953" இலிருந்து மீள்விக்கப்பட்டது