சிக்கிம் உயர் நீதிமன்றம்

சிக்கிம் உயர் நீதிமன்றம், 1975-ல் சிக்கிம் இந்தியாவின் பகுதியாக இணைந்தபொழுது சிக்கிம் மாநில உயர்நீதிமன்றமாக நிறுவப்பட்டது. மாநிலத் தலைநகரமான காங்டாக்கைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குகின்றது. இந்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் பணிபுரிகின்றனர்.

சிக்கிம் உயர் நீதிமன்றம்
सिक्किम उच्च न्यायालय
நிறுவப்பட்டது16 சூன் 1975; 48 ஆண்டுகள் முன்னர் (1975-06-16)
அதிகார எல்லைசிக்கிம்
அமைவிடம்கேங்டாக்
புவியியல் ஆள்கூற்று27°19′55″N 88°36′53″E / 27.3319°N 88.6146°E / 27.3319; 88.6146
நியமன முறைஇந்தியக் குடியரசுத் தலைவர், இந்தியத் தலைமை நீதிபதி & ஆளுநர் பரிந்துரையின்படி
அதிகாரமளிப்புஇந்திய அரசியலமைப்பு
தீர்ப்புகளுக்கானமேல் முறையீடுஇந்திய உச்ச நீதிமன்றம்
நீதியரசர் பதவிக்காலம்ஓய்வு வயது 62
இருக்கைகள் எண்ணிக்கை3
வலைத்தளம்hcs.gov.in/hcs/
தலைமை நீதிபதி
தற்போதையபிசுவநாத் சோமாதர்
பதவியில்12 அக்டோபர் 2021

வரலாறு தொகு

சிக்கிம் உயர் நீதிமன்றம் என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் உயர் நீதிமன்றமாகும். சிக்கிமீல் உயர் நீதிமன்றத்தை நிறுவுவதற்கு நீதித்துறை (அதிகாரம் மற்றும் அதிகாரங்கள்) பிரகடனம், 1955-ல் வெளியிடப்பட்டது. சட்டப்பிரிவு 371F இன் பிரிவு (i) இன் கீழ்,சிக்கிம் இந்தியாவுடன் இணைந்த தேதிக்கு முன் உயர் நீதிமன்றம், நாட்டில் உள்ள மற்ற உயர் நீதிமன்றங்களைப் போலவே அரசியலமைப்பின் கீழ் சிக்கிம் மாநிலத்திற்கான உயர் நீதிமன்றம் செயல்படத் துவங்கியது. இது 1975இல் நிறுவப்பட்டது. நீதிமன்றத்தின் இருக்கை மாநிலத்தின் நிர்வாகத் தலைநகரான காங்டாக்கில் உள்ளது. 3 நீதிபதிகள் கொண்ட அனுமதிக்கப்பட்ட நீதிமன்ற பலத்துடன் செயல்படும் சிக்கிம் உயர்நீதிமன்றம் இந்தியாவின் மிகச்சிறிய உயர்நீதிமன்றமாகும்.

தலைமை நீதிபதி தொகு

நீதியரசர் பிசுவநாத் சோமாதார் சிக்கிம் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 12 அக்டோபர் 2021 முதல் நியமிக்கப்பட்டார்.[1]

தலைமை நீதிபதி பட்டியல் தொகு

# தலைமை நீதிபதி முதல் வரை
1 மன் மோகன் சிங் குஜ்ரால் 7 மே 1976 14 மார்ச் 1983
2 மோகன் லால் ஸ்ரீமால் 17 டிசம்பர் 1983 3 ஜனவரி 1985
3 ஜுகல் கிஷோர் மொகந்தி 21 ஜனவரி 1986 4 ஜனவரி 1989
4 பிரஜா நாத் மிஸ்ரா 20 ஜனவரி 1990 8 நவம்பர் 1992
5 சுரேந்திர நாத் பார்கவா 20 ஜனவரி 1993 10 பிப்ரவரி 1996
6 கிருஷ்ணா முராரி அகர்வால் 15 பிப்ரவரி 1996 26 அக்டோபர் 1996
7 கன்னியப்பா ஆறுமுக தணிகாசலம் 27 ஆகஸ்ட் 1997 26 செப்டம்பர் 1997
8 ரெபுசுதன் தயாள் 3 பிப்ரவரி 1999 17 மே 2003
9 ராதா கிருஷ்ண பத்ரா 9 ஜூலை 2003 23 நவம்பர் 2004
10 பினோத் குமார் ராய் 30 செப்டம்பர் 2005 26 டிசம்பர் 2006
11 அஜய் நாத் ரே 27 ஜனவரி 2007 30 அக்டோபர் 2008
12 அஃப்தாப் ஹுசைன் சைகியா 7 மார்ச் 2009 7 ஏப்ரல் 2010
13 பேரின் கோஷ் 13 ஏப்ரல் 2010 8 ஆகஸ்ட் 2010
14 பி. டி. தினகரன் 9 ஆகஸ்ட் 2010 29 ஜூன் 2011
15 பெர்மோட் கோஹ்லி 12 டிசம்பர் 2011 மார்ச் 2013
16 பயஸ் சி. குரியகோஸ் 28 மார்ச் 2013 1 பிப்ரவரி 2013
17 என்.கே. ஜெயின் 7 ஜனவரி 2014 7 அக்டோபர் 2014
18 சுனில் குமார் சின்ஹா 8 அக்டோபர் 2014 6 ஜூலை 2016
19 சதீஷ் கே. அக்னிஹோத்ரி 22 செப்டம்பர் 2016 2018
20 விஜய் குமார் பிஸ்ட் 30 அக்டோபர் 2018 16 செப்டம்பர் 2019
21 அருப் குமார் கோஸ்வாமி 15 அக்டோபர் 2019 5 ஜனவரி 2021
22 ஜிதேந்திர குமார் மகேசுவரி 6 ஜனவரி 2021 31 ஆகத்து 2021
23 பிஸ்வநாத் சோமாதர் 12 அக்டோபர் 2021 பதவியில்

சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு