முதன்மை பட்டியைத் திறக்கவும்

சோட்டா உதய்பூர் மாவட்டம்

குஜராத் மாநிலத்தின் மாவட்டங்கள்

சோட்டா உதய்பூர் மாவட்டம் (Chhota Udaipur district) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. 15 ஆகஸ்டு 2013இல் புதிதாக துவக்கப்பட்ட 7 மாவட்டங்களில் ஒன்று. [1]. சோட்டா உதய்பூர் மாவட்டம் அதிக ஆதிவாசிகள் கொண்ட மாவட்டம். இம்மாவட்ட தலைமையகம் சோட்டா உதய்பூர் நகராகும். [2]. வதோதரா மாவட்டத்தின் ஆறு வருவாய் வட்டங்களைக் கொண்டு இம்மாவட்டம் உருவானது.

வருவாய் வட்டங்கள்தொகு

சோட்டா உதய்பூர் மாவட்டம் ஆறு வருவாய் வட்டங்களை கொண்டது. [3]

  1. சோட்டா உதய்பூர்
  2. பவி ஜெட்பூர்
  3. கவந்த்
  4. நஸ்வாடி
  5. சங்கேடா
  6. பொதிலி

பொருளாதாரம்தொகு

இம்மாவட்டம் 75,704 ஹெக்டேர் காட்டுப்பரப்பு கொண்டுள்ளது. பெரிய பால் பண்ணை தொழிற்சாலைகள் மற்றும் கனிம வளம் கொண்டது.[4]

மாவட்ட எல்லைகள்தொகு

இம்மாவட்டத்தின் கிழக்கே மத்தியப்பிரதேசமும், தெற்கிலும், தென்கிழக்கிலும் நர்மதா மாவட்டம், வடக்கே பஞ்சமகால் மாவட்டம் மற்றும் தகோத் மாவட்டம், கிழக்கே வதோதரா மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளன.

மேற்கோள்கள்தொகு