இம்மத்நகர்
இம்மத்நகர் (Himatnagar) (હિંમતનગર), இந்தியா, குஜராத் மாநிலத்தின் சபர்கந்தா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் மாநகராட்சியாகும். இந்நகரம் அத்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இம்மத்நகர் என்பதற்கு வீரமான நகரம் என்று பொருளாகும்.
இம்மத்நகர்
હિંમતનગર | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | சபர்கந்தா |
Established | 1426 |
தோற்றுவித்தவர் | சுல்தான் அகமத் ஷா-1 |
அரசு | |
• நிர்வாகம் | ஹிம்மத்நகர் மாநகராட்சி |
• மேயர் | சங்கர்பாய் கஹர் |
ஏற்றம் | 127 m (417 ft) |
மக்கள்தொகை (2013) | |
• மொத்தம் | 3,25,669[1] |
மொழிகள் | |
• பேச்சு மொழிகள் | குஜராத்தி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 383001 |
தொலைபேசி குறியிடு எண் | +912772 |
வாகனப் பதிவு | GJ-9 |
இணையதளம் | http://himatnagarnagarpalika.org/ |
வரலாறு
தொகுஇம்மத்நகர், முதலில் 1426இல் சுல்தான் அகமது ஷா-I (1411–1443) என்பவரால் அகமத்நகர் என்ற பெயரால் நிறுவப்பட்டது. பின்னர் 1848இல் இப்பகுதி இம்மத்சிங் என்ற மன்னரால் ஆளப்பட்டதால், 1912இல் அகமத்நகர் என்ற பெயர் இம்மத்நகர் என மாறியது.
பொருளாதாரம்
தொகுபீங்கான் பொருட்கள் உற்பத்தியில் இந்நகரம் முன்னிலை வகிக்கிறது. சிட்டி மற்றும் ரீஜண்ட் என்ற தனியார் நிறுவனங்கள், கட்டிடங்களின் தளத்தில் பதிக்கும் பீங்கான் ஓடுகளை பெருமளவில் தயாரிக்கிறது. எடைத் தராசுகள் மற்றும் எடைக்கற்கள் உற்பத்தியிலும் 1960ஆம் ஆண்டு முதல் முன்னிலை வகிக்கிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகர மக்கள் தொகை 3,25,669 ஆகும்.[2].மக்கள் தொகையில் ஆண்கள் 52%; பெண்கள் 48%ஆக உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 77%ஆக உள்ளது. ஆறு வயதினருக்குக் குறைவாக உள்ளவர்கள், மொத்த மக்கள் தொகையில் 11%ஆக உள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.geohive.com/cntry/in-24.aspx
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.