பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா

இந்திய அரசியல் கட்சி

பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (Bharatiya Janata Yuva Morcha) ( BJYM ) ( மொழிபெயர்ப்பு : இந்திய மக்கள் இளைஞர் முன்னணி) என்பது பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவாகும். பெங்களூரு தெற்கு மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா தற்போது இதன் தலைவராக இருக்கிறார். இது 1978இல் நிறுவப்பட்டது. தேசியத் தலைவர் கல்ராஜ் மிஸ்ரா இதன் முதல் தலைவராக இருந்தார்.

தலைவர்தேஜஸ்வி சூர்யா
தலைமையகம்6-ஏ, தீன் தயாள் உபாத்யாயா மார்க், மாதா சுந்தரி இரயில்வே குடியிருப்பு, மாண்டி இல்லம், புது தில்லி 110002
கொள்கைஒருங்கிணைந்த மனிதநேயம்
இந்து தேசியம்
சமூக பழமைவாதம்
பன்னாட்டு சார்புசர்வதேச இளைஞர் ஜனநாயக கூட்டமைப்பு (IYDU)
இணையதளம்
http://bjym.org/
இந்தியா அரசியல்

அமைப்புதொகு

பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பைப் போன்றே பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவும் ஒரு நிறுவன அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பின் மிக உயர்ந்த அதிகாரமாக அதன் தேசிய தலைவர் இருக்கிறார். 2020 முதல் தேஜஸ்வி சூர்யா தலைவராக இருக்கிறார்.[1] கல்ராஜ் மிஸ்ரா, பிரமோத் மகாஜன், ராஜ்நாத் சிங், ஜி. கிஷன் ரெட்டி, ஜெகத் பிரகாஷ் நட்டா, உமா பாரதி, சிவராஜ் சிங் சௌகான், தர்மேந்திர பிரதான், அனுராக் தாகூர் பூனம் மகாஜன் போன்ற முக்கிய தலைவர்கள் கடந்த காலங்களில் இதன் தேசியத் தலைவராக பணியாற்றியுள்ளனர்.[2]

பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தேசிய குழுவில் தலைவர், துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், செயலாளர்கள், சமூக ஊடகங்கள் & தகவல் தொழில்நுட்பப் பொறுப்பாளர்கள் ,தேசிய நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோர் உள்ளனர். [3]

பிரச்சாரங்கள்தொகு

கேலோ பாரத் [4]

மில்லினியம்[5]

விஜய் இலக்சயா 2019[6]

முந்தைய தலைவர்களின் பட்டியல்தொகு

வருடம் பெயர் உருவப்படம்
1978–1980 கல்ராஜ் மிஸ்ரா  
1980–1986 சத்திய தேவ் சிங்
1986–1988 பிரமோத் மகாஜன்
1988–1990 ராஜ்நாத் சிங்  
1990–1994 ஜெகத் பிரகாஷ் நட்டா  
1994–1997 உமா பாரதி  
1997–2000 இராமசிஷ் ராய்
2000–2002 சிவ்ராஜ் சிங் சௌஃகான்  
2002–2005 ஜி. கிஷன் ரெட்டி  
2005–2007 தர்மேந்திர பிரதான்  
2007–2010 அமித் தாக்கர்
2010–2016 அனுராக் தாகூர்  
2016–2020 பூனம் மகாஜன்
2020–தற்போது வரை தேஜஸ்வி சூர்யா  

மேற்கோள்கள்தொகு

  1. "President Profile | BJYM". www.bjym.org. 2020-02-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-07-31 அன்று பார்க்கப்பட்டது.
  2. "About Bharatiya Janata Yuva Morcha | BJYM". bjym.org. 2019-05-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-05-29 அன்று பார்க்கப்பட்டது.
  3. "National Executive Member | BJYM". bjym.org. 2019-05-29 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Khelo Bharat". BJYM. 2019-05-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-05-29 அன்று பார்க்கப்பட்டது.
  5. "BJYM drive to connect with millennium voters". India Today (ஆங்கிலம்). 2018-01-25. 2019-05-29 அன்று பார்க்கப்பட்டது.
  6. "BJP youth wing plans drive for 'NaMo 2019'". Hindustan Times (ஆங்கிலம்). 2018-12-19. 2019-05-29 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு